மருத்துவத் துறையில் நுழையும் இயந்திர மனித யுகம்



இப்பொழுது மருத்துவ உலகையும் இயந்திர மனிதன் எடுத்துக் கொள்ளப் போகிறான்.  வரும்காலம், மனிதனின் தேக பராமரிப்பு என்னமாதிரி இருக்கப்போகிறதோ என்று கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.

10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வேட்டை ஆடிய மனிதன், 'நாகரிகம்' அடைந்து, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நவீன மனிதன் உணவை உற்பத்தி செய்யவான் என்று எதிர்பார்த்திருக்க மாட்டான். இன்று நாம் நிமிர்ந்து, வளர்ந்து, உயர்ந்து, அறிவு பெருகி, நீண்ட காலம் வாழக்கூடிய தொழில் நுட்பத்  புத்திசாலியாகிகளாக மாறி விட்டோம். இம் முன்னேற்றத்தை, வெறும் 100 வருடத்திற்கு முன்பிருந்த, ஆக 45 வருடங்களே சராசரி ஆயுட்காலமாக இருந்த மனிதர்களே நினைத்திருக்க மாட்டார்கள்.

தற்பொழுது ஏற்கனவே 'ரோபோ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு மனிதன் பல துறைகளிலும் புகுந்துவிட்டான். எதிர்காலத்தில், இவனின் அறிவு, மனித மூளை சிந்திக்கும் திறனுடன் ஒத்துப்போகும் என்றும், அதற்கு மேலேயும், நாம் சிந்தித்துப் பார்க்க முடியாத உயரத்துக்குப் போகும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

இதன் வரவு, மருத்துவத் துறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு செல்ல இருக்கிறது.

இவற்றின் பங்களிப்பு மருத்துவத் துறையை மிகவும் எளிமையாக்க இருக்கிறது.

ரோபோக்கள், தற்போதுள்ள அறுவை சிகிச்சைகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில், உடலுக்கு ஒரு வெட்டுக் காயம் இல்லாமலேயே, குறைந்தபட்ச ஊடுருவலுடன் எலும்பியல், நரம்பியல், முழங்கால், இடுப்பு நாரி மற்றும் உடல் பருமன் சம்பந்தமான  அறுவை சிகிச்சைகள் அடங்கும்.

மேலும், பக்கவாதம், மூளைக் காயம், அவயங்கள் செயலற்றுப் போகுதல், உடைந்த எலும்புக்கூடு, நரம்புகளில் உள்ள குறைபாடுகள், உணவுச் சமிபாட்டுப் பிரச்சினை, ஆகியவற்றுடன் தொடர்புடைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், மறுவாழ்வு கொடுக்கவும் உதவுகின்றன.

எதிர்காலத்தில், மனிதர்களின் உடல்களின் உள்ளே அனுப்பப்பட்டிருக்கும்  'நனோபோட்' எனப்படும் நுண்ணுய இயந்திர மனிதக் குறுணிகள் உடல் உறுப்புகள் எங்கும் சுற்றி நீந்தித் திரியும். இவை மனிதனின்  இயற்கையான திறன்களை மேம்படுத்தும். நம் உடல்களால் இவற்றை மட்டும்தான் செய்யமுடியும் என்ற கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் உடைத்தெறியும். அதாவது, வருங்கால மனிதர்கள் ஓர் இயந்திர மனிதர்களாகவே மாறி விடுவார்கள்.

 

த்தோடு, ஒவ்வொருவருக்குமான 'சொந்த வைத்தியர்' (GP) ஆக ரோபோக்கள் இருக்கும்இது, தனது வாடிக்கையாளரை 24/7 நேரமும், அவரின் உடலின் உள்ளே இருக்கும் 'நானோபோட்' வைத்தியர் ஊடாக  கண்காணித்துக் கொண்டு இருக்கும். உடலுக்குள் எந்தவித குறைபாடும் வராமல் பாதுகாக்கும். மீறி வந்தால் அதற்கான குறைபாடுகளைக் கண்டுபிடித்து மாற வைத்துவிடும்.

 

உதாரணமாக, புற்றுநோய்க் கலன்களைத் தேடி அழிக்க, DNA ரோபோக்கள் இரத்த ஓட்டத்தின் வழியாக நகர்ந்து, கட்டிகளைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களில் இரத்தம் உறைதல் மருந்துகளை செலுத்தி, அவற்றின் இரத்த விநியோகத்தை துண்டித்து கட்டியை வளர விடாமல் நிறுத்தும்.

இதை விட, இந்த நானோபோட்டுகள் எதிர்கால மருத்துவத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும். விரைவில் மனிதர்களின் நோய்களுக்கான மருந்துகளை அதிக துல்லியத்துடன் மருந்துகளை வழங்கும். அத்தோடு,  இது நோயாளிக்கு எந்தப் பாகத்திற்கு தேவைப்படும் என்று பார்த்து, அந்த இடத்தில் மட்டும்  தேவையான அளவு சொட்டு மருந்தைச் செலுத்தும். இதனால், தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளைத் தடுக்க உதவும்.

இவை, தொலைவில் இருக்கும் நோயாளியையே சத்திர சிகிச்சை செய்து காப்பாற்ற உதவும்.

2019 ஆம் ஆண்டில், சீனாவின் சான்யாவில் உள்ள மருத்துவர்கள், பெய்ஜிங்கில் கிட்டத்தட்ட 1,900 மைல் தொலைவில் அமைந்துள்ள பார்கின்சன் நோயாளியின் மூளையில் தூண்டுதல் சாதனத்தைச் செருக, ரோபோடிக் உதவி மற்றும் 5G இணைப்பைப் பயன்படுத்தி வெற்றிகரமான செய்து காட்டினார்கள்.

சொல்லிக்கொண்டே போகலாம் ........

இயந்திர மனிதன் நடத்தப போகும் விந்தைகள் இன்னும் பல!

ஆக்கம்:செ.சந்திரகாசன்

No comments:

Post a Comment