நகைச்சுவை=ஜோக்ஸ்
01.படுகாயமடைந்த சர்தார்ஜி
சர்தார்ஜி 01: விமானத்தில் ஆபத்து என்று எல்லோருக்கும்தான் பாராசூட் பலூன் கொடுத்துக் குதிக்க வைச்சாங்க. எல்லோரும் பாதுகாப்பாய் இறங்க,உனக்குமட்டும் ஏன் அடிபட்டது?
சர்தார்ஜி02: பலூன்ல ஃபுல்லா காத்து இருக்கா என்னு, ஊக்கால குத்திப் பார்த்தனோய்! அதென்னவோ இப்படியாயிற்று.
சர்தார்ஜி 01: ...?????
02.மூணுன்னு இல்லே சொன்னான்.
தன் நண்பனுடன், வீட்டில் தன் மகனுக்கு கணக்குச் சொல்லிக் கொடுக்கிறார் சர்தார்ஜி.
சர்தார்ஜி:பத்திலிருந்து ஐஞ்சு போனா எவ்வளவு?
மகன்:நாலு!
சர்தார்ஜி: சபாஷ்!(என்று கூறி ஒரு இனிப்பைப் பரிசளிக்கிறார்)
நண்பன்:(சற்றே அதிர்ந்து)நாலு தப்பான விடையாச்சே.... அதுக்கேன் பரிசளிக்கிறீங்க?
சர்தாஜி:இன்னைக்குப் பரவால்லே!! நேற்று இவன் மூணுன்னு இல்லே சொன்னான்!!
03.பொய் சொல்பவர்களைச் சுட்டுவிடும்
ஒரு சர்தார், ஒரு அமெரிக்கன், ஒரு பிரிட்டிஷ்காரன் ஆகியோர் ஒவ்வொருவராக ஒரு கருவியின் முன் நிறுத்தப் படுகிறார்கள்.அக்கருவி பொய் சொல்பவர்களைச் சுட்டுவிடும்.
முதலில்...
அமெரிக்கர்:நான் நினைக்கிறேன், என்னால் 100 சிகரெட்டுகள் ஒரு நாளில் புகைத்திட முடியும்.
கருவி:டுமீல்...
அடுத்து....
பிரிட்டிஷ்காரன்: நான் நினைக்கிறேன், என்னால் 20 கோழிகளை ஒரு நாளில் சாப்பிட முடியும்.
கருவி:டுமீல்...
அடுத்து....
சர்தார்:நான் நினைக்கிறேன்,
கருவி:டுமீல்...
04.புத்திசாலிகள்
சர்தாஜிகள் தங்களைப் புத்திசாலிகள் என்று நிரூபிப்பதற்காக, ஒரு பிரதிநிதியைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்பியிருந்தார்கள்.மற்ற சர்தாஜிகள் சுற்றிநின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தேர்வாளர்:உங்க பெயர் என்ன?
சர்தார்ஜி:(மிகவும் ஜோசித்து)ஜஸ்வந்த் சிங்!
தேர்வாளர்:உங்க தந்தை பெயர் என்ன?
சர்தார்ஜி:(வியர்த்து விறுவிறுத்து)ம...ம...மணிந்தர் சிங்
(சுற்றியிருந்த சர்தாஜிகள் ஒரே குரலில் தேர்வாளரிடம்)
சர்தாஜிகள்: கடினமான கேள்விகள் வேண்டாம்!! எளிதாக இருக்கட்டும்.!!
தேர்வாளர்:(தலையில் அடித்துக்கொண்டே) இரண்டும் இரண்டும் எவ்வளவு?
சர்தார்ஜி:(காகிதத்தில் எதையோ பெருக்கிப் பார்த்துவிட்டு) ஒன்று!!
(தேர்வாளர் இல்லை என்று தலையாட்டவே)
சர்தாஜிகள்:(ஒரே குரலில்)அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தரவேண்டும்!
சர்தார்ஜி:இரண்டு!!
சர்தாஜிகள்:(ஒரே குரலில்)அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தரவேண்டும்!
சர்தார்ஜி:மூன்று
சர்தாஜிகள்:(ஒரே குரலில்)அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தரவேண்டும்!
சர்தார்ஜி:நாலு
சர்தாஜிகள்:(ஒரே குரலில்)அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தரவேண்டும்!!
(தேர்வாளர் மயக்கமடைந்து வீழ்ந்துவிட்டார்)
05.சர்தாரின் ரேடியோ
ஒருமுறை சர்தாரின் ரேடியோ பாடுவதை நிறுத்திவிட்டது. என்ன பிழை நடந்தது என அறிய ரேடியோவை திறந்து பார்த்தார்.உள்ளே ஒரு எலி செத்துக் கிடந்தது.உடனே…
சர்தார்:"அடக் கடவுளே!... இத்தனை நாளா பாடிக்கிட்டு இருந்தவன், பொசுக்கென்று போயிற்றானே...!!
06.நல்ல வேளை
சர்தார் ஒருமுறை வீதியில் நடந்து போகும்போது கீழே கருப்பாக எதோ இருக்க, குனிந்து அதை தன் கையால் தொட்டு நக்கிப் பார்த்துவிட்டுச் சொன்னார்..
"சீ..சீய்...சாணி.நல்ல வேளை மிதிக்கலை"
07. பிரதமர் மோடி
சர்தார்ஜி01:"நம்ம பிரதமர் மிஸ்டர் மோடி ஏன் பின்னேரம் மட்டும் வாக்கிங் போறார்.காலையில போறதில்லை."
சர்தார்ஜி02:"ஹரே பாய் ,உனக்கு இதுகூடத் தெரியாதா? அவர் எமக்கு PM தானே.AM இல்லை."
சர்தார்ஜி
01:"??????"
08.பாடசாலையில்....மாணவனாக
ஆசிரியர்:தண்ணீரின் கெமிக்கல் ப்வொமிலா என்ன?
சர்தார்ஜி: H I J K L M N O
ஆசிரியர்:என்னது?
சர்தார்ஜி:நேற்று நீங்கதானே "H" TO
"O" என்று சொல்லிக் கொடுத்தீர்கள்.
09.''பி சைலண்ட்ஸ்''
அன்று வகுப்பறை மாணவர்களின் பெரும் அமளியாக இருந்தது.அறையில் நுழையும் போது வழக்கமாக ஆசிரியர் ''பி சைலண்ட்ஸ்'' என்று கூறிக்கொண்டு கதிரையில் இருக்கப் போக,
மாணவன் சர்தார்ஜி: "ம்ம்.... ம்ம்... ம்ம்ம்" என்று கத்தினான்.
ஆசிரியர்:"அப்புறம் என்னடா ம்ம்" என்று சர்தாஜியை பிரம்பால் அடித்துவிட்டு கதிரையில் போய் உட்கார, கதிரையில் இருந்த சிறிய 'பாம்' வெடித்து, காயங்களுடன் வைத்தியசாலையில் படுக்கையில் இருந்த ஆசிரியரை பார்க்கப் போனான் மாணவன் சர்தார்ஜி.
சர்தார்ஜி: ஏன் சார்?சொல்ல சொல்ல அப்புறம் போய் கதிரையில இருந்திங்க!
ஆசிரியர்:"எங்கடா சொன்னாய்? எதோ 'ம்ம்' 'ம்ம்' எண்டெல்லா கத்தினாய். அதென்னடா "ம்ம்" ?
சர்தார்ஜி:என்ன சேர்! நீங்கதானே வரும்போது "பி சைலென்ஸ" எண்டு சொல்லிக் கொண்டு வந்தீங்கள்.அப்புறம் எப்பிடி "பாம்" எண்டு சொல்லுறது?
10. எப்படித்தான் பெயிண்ட் அடிக்கிறாங்களோ?
சர்தார்ஜி01:''ஆகாய விமானம் இவ்வளவு பெரிசாய் இருக்கே,எப்படித்தான் இதுக்குப் பெயிண்ட் அடிக்கிறாங்களோ?
சர்தார்ஜீ02: "இது என்ன கஷ்டம் ஒய், அது உயரத்தில பறக்கும்போது சின்னதாய் தெரியும் அல்லா , அந்த நேரம் பார்த்து டக்குனு பெயிண்ட் அடிச்சுடுவாங்க!
சர்தார்ஜி01:(ஆச்சரியத்துடன் மேலே பார்க்கிறார்)
தொகுப்பு:செமனுவேந்தன்
0 comments:
Post a Comment