"தமிழரின் உணவு பழக்கங்கள்": பகுதி: 04

[அறிமுகம் தொடர்கிறது" / தமிழிலும்  ஆங்கிலத்திலும்/] In Tamiand English  ]

பொதுவாக தமிழர்களின் பாரம்பரிய உணவாக, பிறந்த பிள்ளைக்கு [குழந்தைக்கு] முதன் முதலாக ஆறாம் அல்லது ஏழாவது மாதத்தில் சக்கரைப் பொங்கல் அல்லது தேனும், தயிரும் நெய்யும் கலந்த சோறு ஊட்டப்படும். அதே போல குழந்தைகளுக்கு முதல் பல் முளைத்ததும், பல்லுக்கொழுக்கட்டை என்ற பெயரில் கொழுக் கட்டை அவித்து, அவர்களின் தலையில் கொட்டி கொண்டாடுவார்கள். முதலாவது மாதவிடாய் வெளியேற்றமானது சாமத்தி அடைதல் [சாமத்திய சடங்கு], பூப்பெய்தல், பருவடைதல், பெரிய பிள்ளையாதல், மஞ்சள் நீராட்டு விழா எனும் பெயர்களால் இன்னும் பாரம்பரியமாக தமிழர்களும் வேறு பிரிவினரும் [ஆப்பிரிக்கா] கொண்டாடு கிறார்கள். உளுந்தக் களி, நல்லெண்ணெய் என உணவே மருந்தாக, உடல்நலத்தை மையமாகக் கொண்டு, உணவு அங்கு கொடுக்கப்படுகின்றன. முதல் முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு, ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு என்ற சடங்கு நிகழ்த்தப் பெறுகின்றது. அங்கு பல வித சாதம் / பொங்கல் [புளி சாதம், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், ...] இடம் பெறுகின்றன. இதே போல வெயில் காலத்தில் உழவர்களும் மற்றும் வெயிலில் நெடுநேரம் வேலை செய்ய வேண்டியுள்ள தொழிலாளிகளும் ஒடியல், கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அரைத்து தயிர் சேர்த்துத் தயாரிக்கப்படும் கூழ்ம நிலையிலுள்ள உணவான 'கூழ்'  உணவை விரும்பி உண்கின்றனர். அண்மைக் காலங்களில் உடல் நலம் கருதி பல்வேறு பிரிவு மக்களும் இவ்வுணவை உண்ணத் துவங்கியுள்ளனர். யாழ்ப்பாணம் இலங்கையில் கூழ் தயாரிப்பிற்கு பெயர் போன இடமாகும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

தமிழர் வாழும் இடங்களில், உணவு பழக்கங்கள் மிக மந்தமாகவே மாற்றம் அடைகின்றன. என்றாலும் மாற்றத்தின் சில அறி குறிகள் இப்ப தெளிவாகக் தென்படு கின்றன. பொதுவாக கோதுமை மா, தாராளமாக நகர்ப்புற பகுதிகளில் பாவிக்கப்படுகின்றன, அவர்கள், கோதுமை மாவில் சூடுபடுத்தி தயாரிக்கப்படும் சப்பாத்தியை பெரும்பாலும் இரவு சாப்பாட்டாகவும், கோதுமை மாவில் பொறித்து தயாரிக்கப்படும் பூரியையும், அதனுடன் உருளைக்கிழங்கையும் காலை சாப்பாட்டாகவும் அரிசிக்கு பதிலாக பாவிக்கிறார்கள். இன்றைய நவீனமயமாக்கல், தமிழரின் சமையல் அறையிலும் மெல்ல மெல்ல மாற்றங்களை கொண்டு வருகின்றன. விட்டுக் கொடுப்பும் இணக்கமும் கண்டு மாற்றி அமைக்கப் படுகின்றன. விரிவாக மிகுந்த அக்கறையுடன் நிதானமாக சமைக்க வேண்டிய பாரம்பரிய உணவு செய்முறை மறைந்து வருகின்றன. முன்னமே தயாரிக்கப்பட்ட  [ரெடிமேட்] இட்டலி கலவை, தயார் செய்து பெட்டியில் அடைக்கப்பட்ட கறித்தூள், போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் இப்ப நகர்ப்புற சமையல் அறைகளை ஆட்டிப்படைக்கின்றன. அது மட்டும் அல்ல மின்னாற்றலால் இயங்கும் மேசை மேலான ஈரமாவு அரவைப் பொறி, இப்ப ஆட்டுக்கல்லிற்குப் பதிலாக இட்லி, தோசை, வடை போன்றவை தயாரிக்கப் பயன்படு கின்றன. கூட்டுக் குடும்பம் மறைந்து இன்று தனிக் குடும்பம் எங்கும் பரவலாகக் காணப் படுவதும், தொழில் புரியும் பெண்கள் அதிகரித்து இருப்பதும், இப்படியான தவிர்க்க முடியாத இன்றைய சூழ்நிலை, தமிழர்களின் சில உணவு பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துள்ளது. அவர்கள் இன்று இலகுவான சில உணவு வகைகளை நாடு கின்றனர். எனினும் தமிழர் உணவு நடைமுறைகள், அவர்களின் பண்பாட்டு தாக்கங்கள், ஈடுபாடுகள் இன்னும் அவைகளின் அடிப்படை இயல்புகளை கொண்டுள்ளன. முதலாம் நூற்றாண்டு சில உணவு செய்முறைகளை இன்னும் அப்படியே அவ்வளவு பெரிய மாற்றம் இன்றி இன்னும் பின்பற்றுகிறார்கள்.

"பெரு மனிதக் குரங்குகள்" என அழைக்கப்படும் சிம்ப்பன்சிகள், அண்மைக் காலம் வரை குறள சிம்ப்பன்சி அல்லது குட்டிச் சிம்ப்பன்சி (Pygmy Chimpanzee) என்று அழைக்கப்பட்ட, பொனொபோ, இவைகளின்  பரம்பரையில் ஹோமோ சப்பியென்ஸ் ஆகிய மனிதனின் பொது முதாதையர் தொடக்கம் இன்றுவரை உணவு பழக்க வழக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் அடைந்துள்ளன. இந்த தொடர் கட்டுரையில் , குறிப்பாக திராவிடர் முதாதையர்களிடம் எப்படி உணவு பழக்கங்கள் வளர்ச்சி அடைந்தன, அவை எப்படி இன்றைய திராவிடர்களின், குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களை வடிவமைத்தன என அலச உள்ளோம். மனுவேந்தனின், தீபம்.கொம் [Theebam.com] இலும், என் வலைத்தளம் "A DROP IN THE OCEAN / கடலில் ஒரு துளி" By Kandiah Thillaivinayagalingam, இலும், 82 பகுதிகளாக  "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" என்ற எமது தொடரில் நாம் விரிவாக ஏற்கனவே விளக்கியவாறு, மெசொப்பொதாமியா சுமேரியர்கள், ஹரப்பா - மொகெஞ்சதாரோ போன்ற பகுதிகளை சேர்ந்த சிந்து சம வெளி மக்கள், தமிழக சங்கம் மக்கள், தமிழக மத்திய கால அல்லது பக்தி கால மக்கள் - இவர்கள் எல்லோரும் இன்று திராவிடர்களிடம் / தமிழர்களிடம் காணப்படும் உணவு பழக்க வழக்கங் களுக்கும், அவைகளை வடிவமைப் பதற்கும் காரணமாக இருந்து உள்ளனர். ஆகவே இந்த தொடரை ஆரம்பத்தில் இருந்து எல்லா கால கட்டங்களிற்கும் ஊடாக  நகர்த்தவுள்ளோம். அநேகமாகக் 'கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் ...’ என்ற திரைப் பாடல்  தமிழர்களின் இன்றைய அறுசுவை விருந்து உணவு ஒன்றை கட்டாயம் படம் பிடித்து காட்டுகிறது. அதனால் அந்த பாடலை இந்த அறிமுகத்தின் முடிவாக இங்கு பதிக்கிறோம்.

"கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம்

அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்

அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே

சந்தோஷ மீறிப் பொங்க  இதுவே எனக்குத் திங்க

புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு

பூரி கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு

ஜோரான சேனி லட்டு சுவையான சீனி புட்டு

ஏராளமான தட்டு இனி இஷ்டம் போல வெட்டு"

 

[திரைப்படம்: மாயா பஜார் / 1957]

 

நன்றி

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

பகுதி: 05 தொடரும்…

📃அடுத்த பகுதியை வாசிக்க... அழுத்துக... 

Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்" -பகுதி: 05:

ஆரம்பத்திலிருந்து வாசிக்க...

 Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01:

 

 

 

"FOOD HABITS OF TAMILS": PART-04

 [Introduction-continuing]

 

Generally as a traditional food of Tamils, The first rice meal given to a baby in the seventh month is 'sarkarai pongal', a combination of rice-milk, sugar and ghee. The teething of a child calls for 'pal kozhukattai' (tiny rice flakes resembling teeth, cooked in milk with sugar). The coming of age of a daughter is an important family event, as it is in all traditional communities. A kind of pasty pottage made with urad dal [ulutham kali / Black gram porridge] & gingelly oil are the main part of the food. Ulutham kali is usually made with black urad dal with skin as it is supposed to be more healthy and this used to give to the teen age girls, at the time of puberty to make the bones strong. 'Valaikappu' ['Bangle Ceremony'] or 'Seemandam', celebrated in the seventh or ninth month of pregnancy to bless a pregnant woman, calls for a variety of rice preparations such as 'Puli Sadham' ['Puliyodharai' or 'Tamarind Rice'], 'sakkarai pongal' ['Sweet Rice dish'], 'ven pongal' [Rice and Lentil Pudding]. Also during hot summer, among the Tamils mainly from south India and Sri Lanka, a porridge called Koozh made from millet such as 'Kezhvaragu' [finger millet, also known as ragi] or 'Cumbu' [Pearl millet] flour and broken rice is very popular and farmers and other workers who worked under the burning sun enjoy this tasty cool food with curd.  Also it is served on special occasions and family gatherings too. But the traditional 'koozl' recipe from the North of Sri Lanka is mainly made from a palmyrah product called 'Odiyal' [a healthy and nutritious root of the palmyrah]. It almost tastes like a spicy seafood soup but the varieties of ingredients give an extra taste which you never get from an ordinary spicy seafood soup. It combines tamarind - based broth [குழம்பு] with seafood such as cuttlefish, prawns, crayfish, crabs, as well as different types of fish. Apart from seafood, the dish also incorporates various spices and vegetables, and it is traditionally thickened with odiyal — the flour made from palmyra tuber.

Change in food habits is slow in coming to Tamil lands, but some signs of it can be seen. Wheat is being increasingly used in urban areas. 'Chappathi' (wheat flour pancake) may be substituted for rice, especially for dinner, and poori (a deep - fried wheat pancake) and potato be served as breakfast. Modernization is also slowly bringing changes to the culinary scene. Compromises and adaptations are being made. Traditional recipes that call for elaborate and leisurely cooking are disappearing. Processed foods such as ready - made idli - mix and pre - packed curry powders have invaded urban kitchens. Mechanical aids such as motorized idli - grinders are also being used in traditional cooking. The break - up of the joint family and the increase in the number of career women have inevitably changes some Tamil Eating habits. A movement towards a simpler cuisine can be sensed. However, Tamil food practices and their cultural implications still retain their basic character. Some of the recipes that were in use in the first century AD are still being followed today, pretty much unchanged.

 

Since the last common ancestor shared by modern humans, chimpanzees and bonobos, the lineage leading to Homo sapiens has undergone a substantial change in food habits. In this article, we try to review the evolutionary changes that occurred in the food habit of human beings, mainly on dravidian ancestors & how it shaped up the food habits of the present Dravidians, particularly Tamils. As we have already explained in detail in our former article, "Origins of Tamils? [Where are Tamil people from?]", published in 82 parts in Theebam.com as well as "A DROP IN THE OCEAN / கடலில் ஒரு துளி" By Kandiah Thillaivinayagalingam, Sumerians of Mesopotamia, Indus valley people of Harappa, Mohenjo-Daro. Sangam people of South India, Medieval period people of south India are all found linked with the shaping up of present Dravidians / Tamils as we seen today. Hence we will present this article in serials covering all these periods starting from the first Human. The Tamil movie song from "Maya Bajar", which describe the present day Tamilians six taste wedding feasts, starting line with

"wedding cooking rice and vegetable curries are amazing, That honor offering is enough for me ... " is given below as a conclusion of this introduction:

 

"kalyaaNa samaiyal saadham kaai kaRikaLum pramaadham andha kowravaprasaadham idhuvE enakkup pOdhum

andhaara pajji angE sundhaara sojji ingE

sandhOsha meeRip ponga  idhuvE enakkuth thinga

puLiyOdharaiyin sORu veku poruththamaai saampaaru

poori kizhangu paaru idhuvE enakku jOru

jOraana sEni lattu suvaiyaana seeni puttu

EraaLamaana thattu ini ishtam pOla vettu"

 

"கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம்

அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்

அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே

சந்தோஷ மீறிப் பொங்க  இதுவே எனக்குத் திங்க

புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு

பூரி கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு

ஜோரான சேனி லட்டு சுவையான சீனி புட்டு

ஏராளமான தட்டு இனி இஷ்டம் போல வெட்டு"

 

[Movie:MAYA BAJAR 1957-Songs about Wedding Feast]

 

Thanks

 

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

 

PART : 05 WILL FOLLOW….



No comments:

Post a Comment