அறிமுகம் தொடர்கிறது / [ஆங்கிலத்திலும் தமிழிலும்]
பண்டைய காலத்தில் இலைகளே உணவு பரிமாற பயன்படும் பிரதான தட்டுகள் ஆகும். மனிதர்கள் காடுகளில் வாழ்ந்த காலத்திலிருந்தே, இலைகளில் சாப்பிடுவது பல காரணங்களால் வழமையாக இருந்து உள்ளது. பல பண்பாடுகளில் இன்றும் இலைகளில் உணவைச் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. தமிழர்கள் முக்கியமாக வாழை இலைகளைப் பயன்படுத்தினார்கள், அதற்குப் பண்டைய இலக்கியங்களிலிருந்தும் சான்றுகள் உள்ளன. அவ்வகையில், வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டதை இரண்டாம் அல்லது மூன்றாம் நுற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், 6] கொலைக்களக் காதை, 41-43, இல்
"தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு அமுத முண்க அடிக ளீங்கென"
என்று குறிக்கிறது.அதாவது, தனது கையினால் குளிர்ந்த நீரைத் தெளித்து மெழுகி, ஈனாத வாழையின் [குமரி வாழையின்] குருத்தினை விரித்து அதன்கண் உணவினைப் படைத்து அடிகாள் இவ்விடத்து உண்டருள்க என்று சொல்ல, என்கிறது இந்த வரிகள். அது மட்டும் அல்ல, சிலப்பதிகாரத்திற்கு முன்பே எழுதப் பட்ட புறநானுறு - 168[11-12] கூட,
"கூதளங் கவினிய குளவி முன்றில் செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்"
என்று கூறுகிறது. அதாவது, - காட்டு மல்லிகை மணக்கும் முற்றத்தில் வளமான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்ணும் - என்கிறது. இவை அனைத்தும் வாழை இலை நீண்ட காலமாக உணவு சாப்பிட ஒரு தட்டுப் போல் பாவிக்கப் பட்டதை சுட்டிக்காட்டுகிறது.
இன்றைய வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பாடல், வாழை இலை விருந்து ஒன்றை வர்ணிக்கிறது. இதை "இந்திரா ரெங்கநாதன்" என்ற ஒரு பெண்மணி
"PoemHunter.com" என்ற வலைத் தளத்தில் ஆங்கிலத்தில் பதித்துள்ளார்.
"நேர்த்தியாக வெட்டப்பட்டு பளிச்சிடும்
வாலில்லா பச்சைமீன் வாழையிலையில்
மாணிக்க நீரைத் தெளித்து பிரகாசிக்க
தமிழர் கண்ட புதுமைப் பண்பாடு!"
"இனிப்பு நறுமணம் ஒன்றாய்ச் சேர
வாய்க்கு முதல் பாயாசம் கொடுத்து
சுவையான பச்சடி சர்க்கரை உப்பு
உலர்ந்த அரை திடமான கறிகள்!"
பப்படம், பொரியல் ஊறுகாய் வாய்க்கு
மென்மையான இனிப்புத் திண்பண்டம்
சூடான சோறு மத்தியில் சாம்பார்
துண்டுகளுக்கு இடையே வரிசையாகக் கறிகள்"
"சூடாக சோறும் இரசமும் சேர
இனிய இடைவேளைக்கு பாயாசம்
உள்ளத்தைக் கொள்ளைகொள்ள
வாய்க்கு என்றும் சொர்க்கமே!"
"தொட்டு சுவைக்க ஊறுகாய்
சாதம் தயிருடன் மனது நிரப்ப
விரும்பிய வகையில் சமைத்து வந்து
விருந்தளித்ததே சொல்லெண்ணா உணவு!"
"வாழையிலையின் விளக்கமுடியாத சுவை
தெய்வீக சொர்க்கம் அள்ளித் தர
அனுபவித்த வயிற்றின் எண்ணம்
மகிழ்ந்து ஒரு ஏப்பம் விடுகுதே!
[மொழிபெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
"Gleaming,
green and live
Like a tailless fish
alive
Neatly cut and
placed
Gemming sheen of
water sprinkled...
Wished varieties
cooked and brought on
Dished up with many
a pattern
Items sweetened and
savoured
The Tamilian way
innovated
Served on sweetly
first paayasam
Of course hand to
mouth a culinary mannerism
Delightful pachdis
sugar and salt varied next
Delicious curries
dry and semi-solid next
Incoming pappads,
crisp vegetable chips and pickle
Following fudges and
ladoos and like many to tickle
Spooned in the
centre hot rice
Mixed with sambar so
spice
Rowed up curries
in-between morsels
Put into mouth,
divine and dainty handsels
Next helping…rice
and rasam too hot
Second
helping…vegies to fill the heart
Sweet break...
Paayasam, much more
to take
On and on...' No' to
brake
Ending with rice and
curd
Touchy pickles
dotted and tasted
A meal of regale
admired
A menu of plethoric
choices
The banana leaf's
magic flavours
The stomach's cliche
Yeaaaave...belch"
[-By Indira
Renganathan/ poemhunter.com-]
தமிழர்களால், சைவம் அசைவம் எந்த உணவாக இருந்தாலும் அவை பொதுவாக, இரண்டு விதமாக சூடு, குளிர்ச் சாப்பாடுகள் என பிரிக்கப்படுகின்றன. உதாரணமாக, தயிர், வெண்டைக்காய், தக்காளி போன்றவை குளிர்ச் சாப்பாடுகள் ஆகும். தமிழர்களின் உணவுகள் இன்னும் பெரும்பாலும் இந்த அடிப்படையை கொண்டவை ஆகும். தமிழர்களின் நாட்டு வைத்தியமும் அதிகமாக இப்படியே அமைகிறது. அதனால் சுகையீனமும் சூடு, குளிர் என வகைப்படுத்தப் படுகிறது. உணவு வழி சிகிச்சை [diet therapy], சூட்டை உண்டாக்கும் நோய்களுக்கு குளிர் உணவு வழியாகவும், குளிரை உண்டாக்கும் நோய்களுக்கு சூட்டு உணவு வழியாகவும் சிகிச்சை அளிக்கிறது. இந்த நம்பிக்கை இன்னும் தமிழரிடம் காணப்படுகிறது. உதாரணமாக, உடலில் சூட்டை உண்டாக்கும் சின்னம்மை நோய்க்கு, சூட்டை தணிக்கும் குளிர்ச் சாப்பாடுகளான பழங்கள், மோர், இளநீர் போன்றவை கொடுக்கப்படுகின்றன. மேலும் தமது பாரம்பரிய உணவு வகைகளை பேணிக் காக்கும் முகமாகவும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் முகமாகவும் ஒவ்வொரு விழாவிலும் சடங்கிலும் பாரம் பரிய உணவுகள் பெரும்பாலும் இன்னும் வழங்கப்படுகின்றன.
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி :04 'அறிமுகம் தொடர்கிறது' தொடரும்
Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்": பகுதி: 04:
ஆரம்பத்திலிருந்து வாசிக்க...
Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01:
"FOOD HABITS OF TAMILS" / PART 03
'Introduction continuing'
Leaves are the prime
plates used for serving food. Since the time humans lived in forests, leaves
have been used for various reasons, such as eating food off leaves. Many nature
reserve even now serve food on leaves. In this case , we found that Tamils used
Banana leaves. For example, Silappatikaram, which was written in the 2nd or 3rd
century AD has references to serving food in banana leaf as:
"தண்ணீர் தெளித்துத் தன்கை யால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு அமுத முண்க அடிக ளீங்கென" .
These lines describe
how the wife is serving food to her husband and it explicitly says that she
sprinkle water, clean the banana leaf and spreads it and serves food on it.
Another old Tamil work, Purananuru 168, which was written well before Silappatikaram, also, has the following
lines,
"front yard where wild jasmine grows
beautifully along with koothalam [Convolvulus]. They share their food on wide
leaves of plantain trees."
"கூதளங் கவினிய குளவி முன்றில் செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்",
So there are enough
evidences that banana leaf has been in use to serve food for a very, very long
time. Even A song from PoemHunter.com, a poetry site of today, where you can
find poems from all around the world, praise the tamilian traditional foods
served on banana leaf as below:
"Gleaming,
green and live
Like a tailless fish
alive
Neatly cut and
placed
Gemming sheen of
water sprinkled...
Wished varieties
cooked and brought on
Dished up with many
a pattern
Items sweetened and
savoured
The Tamilian way innovated
Served on sweetly
first paayasam
Of course hand to
mouth a culinary mannerism
Delightful pachdis
sugar and salt varied next
Delicious curries
dry and semi-solid next
Incoming pappads,
crisp vegetable chips and pickle
Following fudges and
ladoos and like many to tickle
Spooned in the
centre hot rice
Mixed with sambar so
spice
Rowed up curries
in-between morsels
Put into mouth,
divine and dainty handsels
Next helping…rice
and rasam too hot
Second
helping…vegies to fill the heart
Sweet break...
Paayasam, much more
to take
On and on...' No' to
brake
Ending with rice and
curd
Touchy pickles
dotted and tasted
A meal of regale
admired
A menu of plethoric
choices
The banana leaf's
magic flavours
The stomach's cliche
Yeaaaave...belch"
[-By Indira
Renganathan / poemhunter.com]
Whether it is
vegetarian or non-vegetarian food, all food commodities were divided into two
broad categories, hot and cold. The whole of Tamil cuisine is still largely
based on this classification which also influenced indigenous medicinal
practices: Illnesses were classified as hot and cold and the diet therapy was
based on treating with cold food those caused by heat and with hot food those
caused by cold. This belief still persists. Chicken pox, for example, is
believed to be a manifestation of body heat and the foods permitted are those
that are supposed to counter this heat - fruit, butter milk and tender coconut.
Also Every festival and ceremony has a traditional menu.
Thanks
[Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
PART :04 'Introduction continuing' WILL FOLLOW
No comments:
Post a Comment