"தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01

 'அறிமுகம்' [தமிழிலும் ஆங்கிலத்திலும்]




 

 இத் தொடர் திராவிடர்களின், குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி, முடிந்த அளவு மனிதனின் ஆரம்ப காலத்தில் இருந்து, சுமேரிய, ஹரப்பா - மொகெஞ்சதாரோ, சங்க கால, மத்திய கால அல்லது பக்தி காலத்தின் ஊடாக ஆய்வு செய்யவுள்ளது. பெரும்பாலான திராவிடர்கள் வாழும் தென் இந்தியா மிளகு, கிராம்பு, ஏலம், இலவங்கம் [கருவா] போன்ற பல வகையான வாசனைத் திரவியங்களின் உற்பத்தி இடமும் ஆகும். உண்மையில், மிளகு போன்றவை இங்கு தான் முதலில் வளர்ந்தனதிராவிடர்களின் முக்கிய உணவு, பல ஆயிரம் ஆண்டுகளாக, இன்று வரையும் - அரிசி, அவல், பொரி, மா, இப்படி பல வகையான வேறுபாடுகள் கொண்ட - நெல் அரிசி உணவை அடிப்படையாக கொண்டது. அது மட்டு அல்ல, காலப் போக்கில் , தென் கிழக்கு ஆசியாவினது சமயலும், சில இஸ்லாமிய ஐதராபாத் நவாப் காலத்து சமயலும் திராவிடர்களின் உணவு பழக்கங்களில் சில, சில தாக்கங்களை உண்டாக்கின. என்றாலும் பொதுவாக, திராவிடர்களின் சமையலறை தனித்துவமாகவும் கலப்பு அற்றதாகவும் கடந்த 6000 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

 

இன்றைய நவீன கால திராவிடர்களின் உணவை இரு வகையாக பிரிக்கலாம். அவை சைவம், அசைவம் ஆகும். புலால் உணவு / மிருக பகுதிகள் தவிர்த்த அனைத்தும் சைவ உணவாகும். தாவரங்கள் சார்ந்த, செடிகளில் இருந்து கிடைக்கும் தாணியங்கள், காய் கறிகள், பழங்கள், மர வகை உணவுகள், பால், வெண்ணை, நெய் அனைத்தும் சைவ உணவுகள் ஆகப் கருதப் படுகின்றன. என்றாலும் இங்கு பால், வெண்ணை, நெய் என்பன தாவர உணவு அல்ல.

 

சுருக்கமாக, மரக்கறி உண்பதை சைவம் என்றும், மச்சம் [" மச்சம் " - "மாமிசம்"] உண்பதை அசைவம் என்றும் பொதுவாக கருதப் படுகிறது. என்றாலும் இறைச்சியும் மீனும் கிட்டத்தட்ட எல்லோராலும் குறைந்த அளவிலேயே சாப்பிடப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விலை அதிகமாக இருப்பதும், அதே நேரம் மரக்கறிகள் ஒவ் வொரு தோட்டத்திலும் வளர்வதும் ஆகும். அரிசி முக்கிய உணவாக இருப்பதுடன் தென் இந்தியா, இலங்கை கரையோர பகுதி மக்களின் உணவில் மீனும் முக்கிய இடத்தை வகிக்கிறது. மேலும் பல விதமான கடல் உணவுடன், ஒரு முக்கிய உணவு சமைப்பதற்குப் பயன்படும் கூட்டுப்பொருளாக, தேங்காயும் கேரளம், கடலோர கர்நாடகம், இலங்கை போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. அதே நேரம் இன்சுவை மிகுந்த ஊறுகாய், காரமான நறுமண கறிகள், மிளகாய் தூள் தாராளமாக பயன்படுத்துதல் போன்றவை ஆந்திர உணவு வகைகளில் அதிகமாக காணலாம். பொதுவாக ஆந்திரா சாப்பாடு என்று சொன்னாலே பலருக்கு கண் எரியும். தென் இந்தியா முழுவதும் தோசை, இட்லி (இட்டளி), ஊத்தப்பம் போன்றவை மிகவும் பிர பல மானவை.

 

உதாரணமாக, தமிழ் நாட்டில் இட்லி, தோசை, பொங்கல், சாம்பார், வடை போன்றவை பொதுவான காலை உணவாக உள்ளது, அதே நேரத்தில் - தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளிற்கு இடையிலான வேறுபாடுகளுடன் - இலங்கை தமிழ் உணவுகள், இந்தியா தமிழ் உணவில் இருந்து பலவகையில் தனித்துவமாக உள்ளது. மதிய உணவிற்கு சோறும் கறியும் பரவலாக இருப்பதுடன், காலை உணவிற்கும், இரவு உணவிற்கும் அரிசி மாவினால் அதிகமாக 12 சதம மீட்டர் விட்ட, வட்ட வடிவில் தயாரிக்கப்பட்ட இடியப்பமும் தக்காளி சொதியும் கறியும் இலங்கையில் [கேரள மாநிலத்திலும்], அதிக அளவில் காணப்படுகிறது. அத்துடன் மூங்கிலால் செய்யப்படும் பிட்டுக் குழலில் அல்லது பனையோலையினால் செய்யப்பட்ட கூம்பு வடிவான நீற்றுப் பெட்டியில் அவித்த அரிசி மாவு, தேங்காய்த் துருவல் கொண்ட பிட்டும் [புட்டும்], வெள்ளையப்பம், பாலப்பம், முட்டையப்பம் என பல வகைகளில் சுடப்படும் அரிசி மா அப்பமும் இலங்கை தமிழர்களிடம் பிரபலமானவை. மேலும் தேங்காய் பாலும் உறைப்பு ["உறைப்பு " -  "காரம் "] கூடிய மிளகாய் தூளும் பெரும் பாலும் அங்கு சமையலுக்கு பாவிக்கப்படுவதுடன், பல தரப்பட்ட ஊறுகாய் [அச்சாறு], வடகம் மற்றும் மாவுடன், பணை வெல்லம், எள், தேங்காய், நல் லெண்ணெய் போன்றவைகளை முதன்மையாக பாவித்து வீட்டில் செய்யப்பட்ட பயத்தம் பணியாரம், மோதகம் / கொழுக்கட்டை, பால்ரொட்டி, முறுக்கு, அரியதரம், அவல் போன்ற  இனிப்பு வகைகள், வேறு பிற சிற்றுண்டிகள் தனித்துவான மண் வாசனையை அவர்களுக்கு கொடுக்கிறது. இலங்கை மக்களால் மிக மிக விரும்பி உண்ணப்படும் இனிப்பு  சீனி அரியதரம் அல்லது அரியதரம் ஆகும். இது திருமணம் போன்ற கலாச்சார வைபவங்களில் மிகமிக முக்கிய இடத்தை வகிக்கிறது.

 

நான் 'திராவிடம்' என்னும் வார்த்தையை இங்கு தமிழ் / தமிழம் என்பதற்கான மாற்றுச்சொல் - தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு - போன்ற கருத்துக்களில் மட்டுமே பாவிக்க உள்ளேன் ,அதாவது திராவிடம் என்பது, தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடும்  அம்மக்களின் மொழியும் ஆகும் என்ற ஒரு பொது கருத்தில் மட்டுமே பாவிக்க உள்ளேன் . உதாரணமாக திராவிடம் என்னும் சொல், தமிழ் மொழியை ஆரியர்கள் ஒலியிலே மாறுபாட்டுடன் குறித்த சொல். சமற்கிருதம் இல்லாமல் திராவிடம் இல்லை, திராவிடரும் இல்லை. ஆனால் சமற்கிருதம் நீக்கினால் ஏனைய திராவிட மொழிகள் அனைத்தும் தமிழ் மொழியே". அதேபோல  "ஆரியர் வருகைக்கு முன்பாகத் திராவிடர் என்று யாரும் குறிக்கப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குப் பின்பாகவே தமிழர்கள் 'த்ரமிளர்' என்றழைக்கப்பட்டு 'த்ரவிடர்' என்று மருவித் திராவிடர் என்பதாக உருப்பெற்று ள்ளது" என்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அதே போல கி.பி 17ம் நூற்றாண்டில், தாயுமானவர் "கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்" என்று படித்தவர்களின் போலியை நகைக்கிறார். அதில், "வடிமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந் [வடமொழியிலே வல்லவனான ஒருத்தன் வந்தால்] த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் [திராவிடத்திலே சிறப்பனைத்தும் முன்னமே வந்துவிட்டது என்று விவரமாக சொல்லுவேன்] வல்ல தமிழறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன்" என்று கூறுகிறார்.'தமிழ் மொழியும் தெரியும்' என்று சொல்வதற்கு பதிலாக 'திராவிடமும்' தெரியும் என்று தான் பயன்படுத்துகிறார் என்பதையும் கவனிக்க. அதாவது ராபர்ட் கால்ட்வெலுக்கு குறைந்தது 100 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி கூறுகிறார். இதிலிருந்து 'தமிழம்' / 'தமிழ்' என்ற சொல்லே வட மொழியில் 'திராவிடம்' என்றானது. திராவிடம் என்ற தனித்த மொழியோ, இனமோ இல்லை. 'தமிழ்' தான் 'திராவிடம்'. 'திராவிடம்' தான் 'தமிழ்' - 'தமிழரை'த் தான் 'திராவிடர்' என்று குறித்தார்கள் என்று அறிய முடிகிறது என்பது என் கருத்து.

[-நன்றி:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி :02 'அறிமுகம் தொடர்கிறது' தொடரும்...


அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக... 

 👉😋😋😋😋😋😋😋😋😋👈

 

"FOOD HABITS OF TAMILS" / PART 01 'Introduction'

This thread is aimed to show you the food habits of Dravidians, mainly Tamil people  - from first man, through Sumerian, Harappa-Mohenjo daro, Sangam period, Medieval or Bhakti period. South India, where majority of Dravidians live, is the home of all kind of spices, in fact spices like black pepper grew originally only in this region. Staple Food in Dravidians is mostly based on rice in all kind of variations. There has been influences from South East Asia, but also in some parts by the Islamite kitchen during the time of Hyderabad Nawabs. But all in all the Dravidian kitchen has been independent and pure for the last 6000 years or so.

 

Modern Dravidian food could be divided in two categories. Veg and Non-Veg. Meat and fish is eaten by virtually all people to a lesser extent, because these items are costly, while Veg food grows in every garden. Rice is the staple diet, with fish being an integral component of coastal South Indian and Srilankan meals, along with various kind of seafoods. Coconut is an important ingredient in Kerala and costal part of Karnataka of South India as well as sri lanka, whereas the cuisine in Andhra Pradesh is characterized by the delicious pickles, spicy aromatic curries and the generous use of chili powder. Dosa, Idli, Uttapam etc. are popular throughout the South Indian region. Tamil Nadu is well known for its idli, dosai, pongal, sambhar [a lentil-based vegetable stew], vadai which is the common breakfast in Tamil families, But in Sri Lanka, Tamil dishes distinct from Indian Tamil cuisine, with regional variations between the island's northern and eastern areas. While rice with curries is the most popular lunch menu, String hoppers, which are made of rice flour and look like knitted vermicelli neatly laid out in circular pieces about 12 centimetres (4.7 in) in diameter, are frequently combined with tomato sothi (a soup) and curries for breakfast and dinner.  Another two common items among the sri lankan Tamils is puttu, a granular, dry, but soft steamed rice powder cooked in a bamboo cylinder with the base wrapped in cloth so that the bamboo flute can be set upright over a clay pot of boiling water. and  Appam, a thin crusty pancake made with rice flour, with a round soft crust in the middle. It has variations such as egg or milk Appam, Coconut milk and hot chilli powder are also frequently used by sri lankan Tamils along with a range of achars (pickles) and vadakams. as well as Snacks and sweets are generally of the homemade "rustic" variety, relying on jaggery, sesame seed, coconut, and gingelly oil, to give them their distinct regional flavour.

Here the term  term "DRAVIDIAM" OR "DRAVIDIAN" is only used in the following sense: Robert Caldwell used the term Dravidian (from the Sanskrit word for "southern") to separate the languages spoken in South India from other, more Sanskrit - affiliated languages of India. Also, here Dravidian denotes the peninsular South and not just Tamizh Nadu. (It is only geographic indicator and not racial). For example: Shankaracharya in Soundarya Lahiri, uses "Dravida Sisu". He was from present day kerala. Though the word "Dravidian" is seemly used incorrectly, My understanding here is Robert Caldwell found Tamil Language Group in south India, but he don’t wanted to call it Tamilian Language group. Since Tamilian means Tamil People (people who speak Tamil language). So he marked this group of Languages as “Dravidian Languages.” In the ancient India, the term Dravidian was loosely used to refer to all Southern people, but not their languages. It was the 19th century British scholar, Bishop Robert Caldwell (1875), who originally coined the name “Dravidian”. According to him;

"The word I have chosen is 'Dravidian' from Dravida, the adjective form of Dravida. The term is still sometimes used as that of Tamil itself. …. On the whole it is the best term I can find, I admit that it is not perfectly free from ambiguity. It is a term which has been used more or less distinctively by Sanskrit philologists (grammarians), as a generic appellation for the South Indian people and their languages, and it is the only the single term they seem to have used in this manner. I have, therefore, no doubt of the propriety of adopting it. A Comparative Grammar of the Dravidian Or South-Indian Family of Languages, Page-4" There is no clear etymology for the word Dravidam. Robert Caldwell a Christian missionary who learnt Thamizh and many other languages,wrote a book called "Dravida mozhigalin oppilakkanam" (A comparative Grammar of the Dravidian or the South Indian family of Languages) where he used the word Dravidam to mean a group of languages, which are related to Tamil. Previously such languages were used to be called as “Tamulic” languages. All my articles, I used the term 'Dravidiam' or "Dravidian" only in this sense,.though true sense It is a misleading and incorrect word!

[Thanks]

 

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

 

PART :02 'Introduction continuing' WILL FOLLOW…


No comments:

Post a Comment