01.
மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி கொடுங்க.
அப்பா: கடவுள் நமக்கு 2 கால் எதுக்கு கொடுத்திருக்காரு?
மகன்: ஒண்ணு கியர் போட.. இன்னொண்னு பிரேக் போட ..
02.
ஆசிரியர்: இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.
மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா????
ஆசிரியர்: ?????
03.
ஒரு ஈ என்னையே சுத்தி சுத்தி வந்துச்சு, என்னோட பழைய காதலியா இருக்குமோ''ன்னு மனைவியிடம் சொன்னேன்,
-மிதிச்சே கொண்ணுட்டா…
04.
"விளையாட்டு வினையாகிடும்ங்கறது சரியா போச்சு"!
"எப்படி சொல்ற?"
"விளையாட்டா அவ பின்னாடி சுத்தினேன். அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க"..!
05.
இளைஞன்: பெண்ணே என் இதயத்துக்குள் வா!👨
யுவதி: செருப்ப கழட்டவா..?🙎
இளைஞன்: லூசு.. லூசு.. என் இதயம் என்ன கோயிலா? சும்மா செருப்போடவே வா..!
06.
பேஷண்ட்: காதுவலின்னா டாக்டர் ஏன் கன்னத்துல டார்ச் லைட் அடிச்சு, கையால தடவிப் பாக்குறார்?
நர்ஸ்: உங்க மனைவியோட கைவிரல் பதிவு இருக்கான்னு பார்த்திருப்பார்.
07.
ஒரு வழுக்கை தலை ஆள்: கொஞ்சம் ஏமாந்ததாலே எல்லாரும் என் தலை மேல ஏறி உட்கார்ந்துட்டாங்க!
மற்றவர்:அப்புறம் என்ன ஆச்சு!
வழுக்கை தலை ஆள்:வழுக்கி விழுந்துட்டாங்க!
08.
ராமு: தூங்கும்போது அலாரம் அடிக்கிற சத்தத்தை கேட்டாலே எனக்கு அலர்ஜி.
சோமு: அதனால...?
ராமு: அலாரம் செட் பண்ணிட்டு, அது அடிக்கிறதுக்கு முந்தியே டாண் என்று எழுந்து அதை ஓfவ் பண்ணி விடுவேன்|!
09.
தொண்டர்01: நம்ம தலைவருக்கு ஆஸ்பத்திரியில் உடனடியா ரத்தம் கொடுக்கணும்னு சொல்லுறாங்க... ஆனால் அவர் குரூப் ரத்தம் கிடைக்கவில்லை. தொண்டர்02: அவர் ரத்தம் என்ன குரூப்பாம்?
தொண்டர்01: ஊழல் குரூப்பாம்!
10.
கமலா:வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிகிட்டு இருக்காருடீ...!
விமலா:ஏன் குடிச்சிட்டு வந்து ரொம்ப சண்டை போடுகிறாரா?
கமலா:இல்லை... டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட, கடிக்க மீன் பொரியல் இருந்தா தான் குடிப்பேன் என்று அடம் பிடிக்கிறார்டீ!
தொகுப்பு:செ- மனுவேந்தன்
No comments:
Post a Comment