01.
தமிழரசி: ஹே.. நான் உங்க வீட்டுக்கு காலையில போயிருந்தேன்.. உங்க அம்மா பேசுனது மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு
கார்த்திகா: அப்டியா.. என்ன சொன்னாங்க? ஏதாவது தப்பா சொல்லி இருந்தா சாரி டி.
தமிழரசி: என்ன எதுவும் சொல்லல... உன்ன பத்திதான் சொன்னாங்க! நீ எங்க இருக்கன்னு கேட்டேன். அதுக்கு உங்க அம்மா, அந்த மாடு எங்கயாவது மேய போயிருக்கும்னு சொல்றாங்க..
கார்த்திகா: இவ்ளோதான் மேட்டரா... இது எப்போதும் சொல்றதுதான்.. இதுக்கே நீ மனசு கஷ்டப்படுறியே.. நான் வெளிய போயிட்டு வீட்டு வந்ததுக்கு அப்றம் எங்க அம்மா சொன்னத கேட்டா என்ன சொல்லுவியோ..
தமிழரசி: ஏன் உன்ன ஓவரா திட்டிட்டாங்களா?
கார்த்திகா: என்ன இல்ல உன்ன; அந்த எருமை கார்த்திகா உன்ன தேடி வந்துட்டு போகுதுன்னு சொல்லிட்டாங்க...
தமிழரசி: ????
02.
நீதிபதி: நீ செய்த குற்றத்துக்காக உனக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன்.
குற்றவாளி: சரிங்க ஐயா, எவ்வளவு வெயிட்டை தூக்கணும்.
03.
மகன்: அப்பா 30 + 40 எவ்வளவு பா?
அப்பா: அட தடி மாடு, மாங்கா மடையா, மாடு மாதிரி வளந்திருக்கியே இது கூடவா தெரியல. போ போய் கால்குலேட்டர் எடுத்துட்டு வா.
04.
பெண் 1: காலையிலே ரசம் வச்சேன், மாமியார் தான் இன்னைக்கு வெள்ளிக்கிழமை சாம்பார் வையின்னு சொன்னாங்க..
பெண் 2: அப்புறம் என்னடி செஞ்ச!
பெண் 1: அதுல 4 கத்திரிக்காயை வெட்டிபோட்டேன். சாம்பார் ரெடி ஆகிருச்ச்சு,
05.
மனைவி: என்னங்க.. எங்க ஆபிஸ்ல இன்னைக்கு உங்களை விசாரிச்சாங்க..
கணவன்: என்னனு விசாரிச்சங்க மா
மனைவி: தினமும் ஒரு வயசானவர் கொண்டு வந்து விடுறாரே அவர்தான் உங்க அப்பாவான்னு..
06.
மருத்துவர்: உன் பொண்டாட்டிக்கு எல்லா டெஸ்டும் எடுத்து பார்த்ததுல கொழுப்பு அதிகமாக இருக்கிறது தெரிஞ்சுருக்கு
கணவன்: ஏன் டாக்டர் இதுக்கா ஐயாயிரம் பீஸ் அதை எங்கிட்ட கேட்டிருந்தா சொல்லியிருப்பேனே!
07.
ஆசிரியர் : அந்த பொண்ணு 98 மார்க் எடுத்துட்டு 2 மார்க் எப்படி போச்சுன்னு அழுதுகிட்டு இருக்கு.. நீ 12 மார்க் எடுத்துட்டு எப்படி டா சிரிச்சுகிட்டு இருக்க?
மாணவன்: எப்படி அந்த 12 மார்க் வந்ததுன்னு பார்த்துகிட்டு இருக்கேன் சார்.
08.
அப்பா: ஏன் சார் என் பையனை அடிச்சீங்க?
ஆசிரியர்: ட்ராக்ல ரெண்டு தண்டவாளம் இருக்கே எதுக்குன்னு கேட்டா.. ஒண்ணு ஊருக்கு போக, இன்னொன்னு திரும்பி வரன்னு சொல்றான்ங்க.
09.
டாக்டர்: காலையில என்னம்மா சப்பிட்ட?
பெண்: பர்கர், பீட்சா, சாண்ட்வெஜ் சாப்பிட்டேன்
டாக்டர்: இங்க பாருமா இது வாட்ஸப்போ, இன்ஸ்டகிராமோ இல்லை. இது ஹாஸ்பிடல். உண்மையை சொல்லு.
பெண்: சாரி டாக்டர்..பழைய சோறும் கருவாட்டு குழம்பும் சார்..
10.
ராமு: தற்காப்புக்காக என்னென்ன வித்தைகள் தெரிஞ்சு வச்சுருக்கீங்க?
சோமு: மாவு ஆட்டுறது, தோசை சுடுறது.. அடிக்க வந்தா ஓடுறது..
11.
அவன்: எங்க அம்மா அப்பவே சொல்லுச்சு.. நான் தான் கேக்கல..
இவன்: என்ன சொன்னாங்க
அவன்: நான் தான் கேக்கலையே!
12.
டாக்டர்: நம்ம ஆஸ்பிட்டல் விளம்பரத்துக்கு நச்சுன்னு ஒரு பஞ்ச் சொல்லுங்க
நர்ஸ்: கூட்டிட்டு வாங்க, தூக்கிட்டு போங்க.. பணம் எங்களுக்கு, பொணம் உங்களுக்கு..
13.
டீச்சர்: இந்த பீரியடு முழுக்க வெளியே நில்லு, அப்பதான் உனக்கு அறிவு வரும்
ஸ்டூடண்ட்: அப்பொ நீங்க பாடம் எடுத்தா, அறிவு வராதா டீச்சர்?
14.
டீச்சர்: ஏன் டா நோட்டுல பால் கணக்கு, மளிகை கணக்கு எல்லாம் எழுதி வச்சிருக்க?
ஸ்டூடண்ட்: நீங்க தான சார் வீட்டு கணக்கு எழுதிட்டு வரச் சொன்னீங்க!
15.
கல்யாணவீட்டில் செந்தில்...
செந்தில்:அண்ணை , கல்யாணவீடுக்கு ஏன் மாடுகளைக் கூட்டிக் கொண்டு வரமாட்டாங்க தெரியுமா?
கவுண்டன்: அதுகள் யாரையும் முட்டிவிடுமோ என்ற பயமாக்கும்....
செந்தில்: என்ன அண்ணை ,இது விளங்காம இருக்கீங்க! கல்யாணம் என்டது ஆயிரம் காலத்துப் பயிராம். அதை மாடுகள் மேய்ந்துவிடும் என்ற பயத்தில தானாம் கூட்டி வர மாட்டாங்கள்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment