சிரிக்க... சில நிமிடம்...


நகைச்சுவை=ஜோக்ஸ் 

🏍இரண்டு சக்கர வாகனத்தில் சர்தார்ஜி

 இரண்டு சக்கர வாகனத்தில் 3 சாரதாஜிகள் போய்க்கொண்டிருந்தார்கள். வழியில் டிராபிக் போலீஸ் கைகாட்டி, அவர்களை நிறுத்தினார். வாகனத்தில் இருந்தவர்களில் ஒருவர் ''ஏற்கனவே நாங்கள் மூன்று பேர் இருக்கோம்,இடமில்லை சார்!" என்றாராம்.

 

🦁எதுக்கு ஓடணும்?

 ஒரு காட்டில் இரண்டு சர்தார்கள்  சென்று கொண்டிருக்கும்போது எதிரில் ஒரு சிங்கம் வந்து விட்டது.

 ஒருத்தர் தைரியமாக மணலை அள்ளி அதன் கண்களில் போட்டு விட்டு ஓடினார். இரண்டாம் அவர் மெதுவாக நடந்தது சென்றார்.

 ஏன் ஓடாமல் நடந்து வருவதாக இன்னொருவர் கேட்டதற்கு "அது கண்ணில் மண்ணை போட்டது நான் இல்லை.பின்ன  நான் எதுக்கு ஓடணும்?" என்றாராம்.

 

 

👂தொந்தரவு செய்யாத….

இரவில் சர்தார்ஜியின்  அறையின் வெளியே குரல் கேட்டது....

 "புரிஞ்சிக்கோ.... என்னைத்  தொந்தரவு செய்யாத... நேத்து ராத்திரியே நல்லா தூங்க முடியல.... என் வாழ்க்கையோட விளையாடாத...."

 காலையில் ஒருவர்:  ஜீ....  ராத்திரி முழுக்க யாரோட பேசிக் கொண்டிருந்தீர்கள்."

 சர்தார்ஜி: பேசிட்டா...? புலம்பிக்கிட்டு இருந்தேன். கொசுத் தொல்லை தாங்க முடியல...

 

 

🐄மாட்டு கொம்பு

 சர்தார்ஜி ஒருநாள் மிருக வைத்தியசாலைக்கு சென்றார்.

 ஒரு கிராமத்து ஆளிடம் கேட்டார், "ஏன் இந்த மாட்டுக்கு கொம்பு இல்லை...."

 கிராமத்து ஆள் சொன்னார், "சில மாடுகளுக்கு கொம்பை அறுத்து விடுவோம்,  சில மாடுகளுக்கு கொம்பு தானாகவே உடைந்து போய்விடும். சில மாடுகளுக்கு கொம்பு வளராது. ஆனால் இதற்கு ஏன் கொம்பு இல்லையென்றால்  -இது மாடு இல்லை.....குதிரை"

 

 

✇ஸ்டார்டிங் சலரி

கம்பெனியில் கார் டிரைவர் வேலைக்கு தெரிவாகிய சர்தாஜியிடம் முதலாளி:"உனக்கு ஸ்டார்டிங் சலரி 2000 ரூபாய்."

சர்தாஜி:(தனக்குள்-" ,கார் ஸ்டார்ற் பண்ண 2000",பின் முதலாளியிடம்) ரொம்ப,ரொம்ப சந்தோசம். அப்போ கார் ஓடுவதற்கு எவ்வளவு சலறியுங்க?

 

👄இன்டர்வியூ

வேலைக்கான இன்டர்வியூவில்  சர்தார்ஜியிடம்   ஒரு கேள்வி கேட்கப்பட்டது

 "கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் 15 வது மாடியில் இருக்கும் போது தீ பிடித்து விட்டது. எல்லோரும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்."

 சர்தாஜி: கற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன்.

 

 

🚗விற்க முடியாத கார்

டெல்லியில் இருந்த சர்தார்ஜி தனது பழைய காரை விற்க முயற்சி பண்ணினார். ஒரு லட்சம் கிலோ மீட்டர் ஓடி இருந்ததால் யாரும் அதை வாங்கவில்லை. எனவே சென்னையில் உள்ள நண்பரிடம் யோசனை கேட்க, அந்த நண்பர் ஒரு மெக்கானிக்கை அனுப்பி வைத்தார். அந்த மெக்கானிக்கும் 30,000 கிலோமீட்டர் மட்டும் ஓடி இருப்பது போல மாற்றிக் கொடுத்துவிட்டார். சில மாதம் கழித்து சென்னை நண்பர்  சர்தார்ஜிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, "ஏன் இன்னும் அந்த காரை விற்கவில்லை” என்று கேட்டதற்கு சர்தார்ஜி: " அது வெறும்  30 ஆயிரம் கிலோமீட்டர் தானே ஓடியிருக்கு.என்ன அவசரம்?" என்று பதில் சொன்னாராம்.

 

 

🛫சென்னை எயர்போட்

சென்னை எயர்போட்டில் பயணசீட்டு வழங்கும் இடத்தில்...

சர்தார்ஜி: மேடம்!....சென்னையிலிருந்து மும்பை செல்ல எவ்வளவு நேரம் செல்லும்.

பணிப்பெண்: "ஒரு நிமிடம்" (என்று கூறிவிட்டு கணனியில் அவள் நேரத்தை தேடிக்கொண்டிருக்கையில்..)

சர்தார்ஜி: (-ஒரு நிமிடம்- என்றதை பதிலாக எடுத்துக்கொண்டு) "மிக்க நன்றி" (என்று கூறிக்கொண்டு அவசரமாக மகிழ்ச்சியுடன் அவ்விடத்தை விட்டு அகன்றார்.  

 

தொகுப்பு: செ.மனுவேந்தன்


No comments:

Post a Comment