"வாழ்வின் விளிம்பில் ஞானம் பிறக்குது!"

 


"நாற்பது வயது தொப்பை விழுகுது

கருத்த முடி நரை விழுகுது

ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது

குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது

சோர்வான உடல் எதோ கேட்குது

ஐம்பதில் எறியதில் மகிழ்ச்சி அடையுது!"

 

"ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது

அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது

வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது

மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது

தலைமுதல் கால் விரல்கள் வரை

படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!"

 

"கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது

பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்]

பகலும் இரவும் சாப்பிட வைக்குது

விரலை குத்தி சீனி பார்க்குது

நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது

கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!"

 

"சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது

கோலம் மாறும் காலம் அதுவென

அறுபத்தி ஐந்து ஓய்வை சொல்லுது

பேரப் பிள்ளை தோளில் ஏறுது

எழுபது  தாண்டி எண்பது வரவோ

ஞானம் பிறந்து சவக்குழி தேடுது!"

💓 💓💓

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]

No comments:

Post a Comment