அறிவியல்=விஞ்ஞானம்
👀ஆரம்பத்தில் கண்டறிய..
பல், ஈறுகளில் நோய்களை ஏற்படுத்தும் 'பார்ஃபைரோமோனஸ் ஜின்ஜிவாலிஸ்' பாக்டீரியா, இதய நோய்களையும் உரு வாக்குகிறது. ஆகவே, ஆரம்பத்திலேயே இது நம் வாயில் உள்ளதா என்று அறிவது அவசியம். இக்கிருமியைக் கண்டறிய அ மெரிக்காவின் சின்சினாட்டி பல்கலை ஆய்வாளர்கள் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளனர். இக்கருவி இந்த பாக்டீரியா வின் செல் சுவரில் இருந்து வெளிப்படும் வேதிப் பொருளைக் கொண்டு கிருமி இருப்பதை உறுதி செய்யும்.
👍👍👍👍👍👍👍
👀உடல் எடையையும் கட்டுப்படுத்தும்
நண்டு, வண்டு, சிலந்தி ஆகிய உயிரினங்களின் உடலின் மீது ஓடாக அமைந்துள்ள வெளி எலும்புகள் சிடின் (Chit in) என்று அழைக்கப்படுகின்றன. இதிலிருந்து எடுக்கப்பட்ட சில வேதிப் பொருட்கள் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. அந்த வகையில் உடல் எடை அதிகரிப்பையும் இது கட்டுப்படுத்தும் என்று அமெரிக்காவின் வாஷிங்ட ன் மருத்துவ பல்கலை கண்டறிந்துள்ளது.
👀நெஞ்சு எரிச்சலுக்கு மஞ்சள் மருந்து
மஞ்சள், நெஞ்சு எரிச்சலுக்குக் காரணமான அமில எதுக்கல் நோயைக் கட்டுப்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சூலாலோங்கோர்ன் பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
ஆய்வின் இறுதியில் ஏனைய மருந்துகளை விட மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்பட்டது, எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. மஞ்சளை எந்த வடிவில் பயன்படுத்தினால் நோயைச் சுலபமாகக் கட்டுப்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
👀பறவைகளை காக்க புது முயற்சி
காற்றாலை மூலம் மின்சாரம் அமைந்த பகுதிகளில் உள்ள பறவைகள், சுழலும் விசிறிகள் மீது மோதி இறக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் ஓர் ஆண்டில் 10 லட்சம் பறவைகள் இவ்வாறு இறக்கின்றன என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
பறவைகளைக் காப்பாற்ற ஐரோப்பாவின் எஸ்.ஐ.என்.டி.இ.எப். ஆய்வு மையமும், நார்வே நாட்டைச் சேர்ந்த சுற்றுச்
சூழல் அமைப்பும் சேர்ந்து தீர்வு கண்டுள்ளன.
இனி கற்றாலைகளில் கேமராக்கள் பொருத்தப்படும். பறவைகள் அருகே வருகின்றன என்றால், உடனே அவை வருகின்ற திசை, வேகம் ஆகியவற்றைக் கேமரா மூலம் அறிந்துகொண்டு விசிறியின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சுழலும் விசிறிகளால் பறவைகள் இறப்பதை 80 சதவீதம் வரை குறைக்கலாம்.
இறப்பை 100 சதவீதம் குறைக்கும் வகையில் மென்பொருள் மேம்படுத்த குறைந்தது 5 ஆண்டுகள் ஆகலாம்.
👀நெகிழி (பிளாஸ்டிக் Plastic)
நெகிழிக் (பிளாஸ்டிக்) கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஹைட்ரஜன் வாயுவைத் தயாரிக்கும் முறையை அமெரிக்காவின் ரைஸ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஹைட்ரஜன் வாயு மிகச் சிறந்த எரிபொருள்.
நெகிழிக் கழிவுகளைச் சுத்தம் செய்ய வேண்டியதில்லை. அதை நேரடியாக 2826 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்திற்குச் சூடாக்குவர். இந்தக் கடும் வெப்பத்தில் நெகிழியில் உள்ள ஹைட்ரஜன் முழுதும் ஆவியாகிவிடும். அதைத் தனியாகச் சேகரித்து விடுவர். கிராப்பின் மட்டும் மிஞ்சி இருக்கும். இது மின்னணுக் கருவிகளில் பயன்படும் ஒரு முக்கியப் பொருள். இந்த முறையில் ஹைட்ரஜன் தயாரித்தால் நெகிழியால் உருவாகும் சுற்றுச்சூழல் கேட்டைத் த டுக்க முடியும். விரைவில் இம்முறை மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வர உள்ளது.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment