"பூமாலை நான் சூடவா"

 

 


"பூமாலை நான் சூடவா

பூவே தேன் குடிக்கவா?

பூத்து குலுங்கும் உன்னை

பூரித்து அழகு பார்க்கவா?"

 

"பூமி முழுவதும் காட்டவா

பூதங்கள் ஐந்தில் அடக்கவா?

பூசை மேடையில் உன்னை

பூணூல் அணிந்து பார்கவா?"

 

"சிந்து பைரவி பாடவா

சித்திரத்தில் உன்னை வரையவா?

சிவிகையில் தூக்கி உன்னை

சிறப்பு செய்து மகிழவா?"

 

"அழகினை அனுபவிக்கவா?

அதிகாரம் கொண்டு அணைக்கவா?

அன்ன நடையே உன்னை

அன்பு கொண்டு தழுவவா?"

 

"காதல் கணை எறியவா

காம உணர்வை ஊட்டவா?

கார்த்திகை பூவே உன்னை

காதலி ஆக்கி வாழவா?"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]

No comments:

Post a Comment