நம்மை நெருங்கும் புதுமைகள்

 அறிவியல்=விஞ்ஞானம் 



🛢சத்தாகும் கழிவு!

ஒலிவ்  எண்ணெய் சமையலிலும் அழகு சாதன பொருட்களிலும் இன்னும் பிறவற்றிலும் பயன்படுகிறது. ஆனால் எண்ணெய்  எடுத்தபின் வீணாகின்ற ஒலிவ்  சக்கை பெரும்பாலும் பயன்படாமல் அப்படியே குப்பைக்குப் போகிறது.

 

 அதிலிருந்து மருத்துவ குணமுள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் உருவாக் கும் வழியை சுவிஷ்லாந்தின் இடிஹெச் சுரிச்...

பல்கலைக்கலை மாணவர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

 

இந்த முறைப்படி கழிவு  நீரையும்,   ஒலிவ்  சக்கையையும் பிரிப்பதற்காக மைய விலக்கு சுழற்சிக்  கருவி உடைய இயந்திரத்துக்குள் செலுத்துகின்றனர். இதில் கழிவு  நீரும் ஒலிவ் சக்கையும் வேகமாக சுற்றப்படும். இதனால் இவை இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்படும். இதிலிருந்து பிரியும் தண்ணீரை மட்டும் ஒரு உறிஞ்சக்கூடிய வடிகட்டி வழியாக அனுப்புவர். இது ஆண்டிஆக்சிடென்ட் அடங்கிய திரவத்தை மட்டும் தனியாக பிரித்தெடுக்கும். இந்த உறிஞ்சு  வடிகட்டி முழுக்கவே இயற்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

 

 இவ்வாறு கிடைக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் திரவம் அடர் பழுப்பு நிறத்தில், கசப்பான சுவையுடன் இருக்கும். இதை மீண்டும் சுத்திகரித்து தோலுக்கான அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்த முடியும்.

 

 ஒரு போத்தில் ஒலிவ் எண்ணெய்  தயாரிக்கும் போது நான்கு போத்தில் எண்ணைக்  கழிவு உற்பத்தியாகிறது. ஆகவே இதை முறையாக பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவதோடு பல பயனுள்ள பொருட்களும் கிடைக்கும்.

 

 

💻திறன்கள் பாதிப்பு

ஜப்பானைச் சேர்ந்த டோஹோகு பல்கலை., 7,097 குழந்தைகளை வைத்து ஓர் ஆய்வை நடத்தியது. ஒரு வயதில் அதிக நேரம் போன், கணினி, டிவி உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கு 4 வயதாகும் போது அவர்களின் பேச்சாற்றல், பிரச்னையைத் தீர்த்தல், சமூகத்துடன் பழகுதல் ஆகிய திறன்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

🏔படியும் பனிக்கு விடை

 குளிர் பிரதேசங்களில் கடும் பனி  காலத்தில் சாலைகள். விமான நிலையங்கள் கட்டடங்கள், வாகனங்கள் ஆகிய அனைத்து மீதும் பனி கொட்டும். ஒரு பெரும் படலமாக பனி உருவாகும் போது இது ஒரு முக்கிய பிரச்சனை ஆகிறது.

 

 இதற்கு தீர்வாக வாகனங்களில் உள்ளிட்ட பொருட்கள் மீது வேதிப்பொருட்களை புசுவது உள்ளிட்ட சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் இவற்றுக்கு செலவு அதிகம். மின்சார தேவையும் அதிகம்.

 

 தற்போது சீனாவில் உள்ள டேலியன் பல்கலைக்கலை இதற்கான தீர்வை வழங்கியுள்ளது. இதன்  ஆய்வாளர்கள் நானோ மீட்டர் அளவுள்ள தாமிர நுண்கம்பிகளை வைத்து ஒரு படலத்தை உருவாக்கியுள்ளனர்.

 

 கம்பிகள் இரண்டு முதல் மூன்று மைக்ரோ மீட்டர் இடைவெளியில் வைக்கப்படுவதால், அவற்றின் மீது விழும் சூரிய ஒளியின்  வெப்பத்தில்  95 சதவீதத்தை அப்படியே உறிஞ்சிக் கொள்ள முடியும்.

 

  இயற்கையிலேயே தாமிரத்துக்கு வெப்பத்தை கடத்து ஆற்றல்  சிறப்பாக உண்டு. அதனால் படலத்தில் குறிப்பிட்ட ஓர் இடத்தில் ,சூரிய வெப்பம் பட்டாலும் எல்லா பக்கமும் வெப்பம் சமமாக பரவும். இதனால் பனி  படிந்த உடன் உருகிவிடும்.

 

 இதற்கு எந்த மின் ஆற்றலும் தேவையில்லை. இந்த புது முறை மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும் கூட தாமிரபடலத்தை தயாரித்து, தயாரித்த பின் பனி படரும் பொருட்கள் மீது பொருத்துவது ஆகியவை சற்று சவாலான விடயங்களாக இருக்கின்றன.

 

 இதனால் இதை எவ்வாறு மேம்படுத்துவது என்று விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள்.

 

 

👄வைட்டமின் சி, ஈ-புற்றுநோய்

சுவீடன் நாட்டின் கரோலின்ஸ்கா பல்கலையைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் புற்றுநோய்க்கட்டிகள் செழித்து வளர்வதற்கு வைட்டமின் சி, ஆகிய சத்துகள் முக்கியப் பங்காற்றுவது தெரிய வந்துள்ளது. ஆகவே, அளவுக்கு அதிகமான அல்லது தேவைப்படாத காலங்களில் இந்த வைட்டமின்களை எடுத்துக்கொள்வது ஆபத்தாகும் என்று அறிவித்துள்ளனர்.

 

👀கண்களுக்குப் பகையாகும் புகை

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளன .மின் சிகரெட்டுகளை பயன்படுத்துவதால்  வரும் கேடுகள் இப்போதுதான் ஆய்வு செய்யப்படுகின்றன.

 

 கனடா நாட்டில் மெத்தில் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் சிகரெட் மட்டும்ற்றும் --சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் ...

 13 முதல் 24 வயதுக்கு உட்பட்ட 4351 இளம் பருவத்தினரை தேர்வு செய்தனர். பங்கேற்பாளர்கள் சிகரெட் மின் சிகரெட்டுக்கள் அல்லது இரண்டின் பயன்பாட்டின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டனர்.

 

பங்கேற்பாளர்களின் கண்பார்வை மதிப்பிடப்பட்டது. அதில்  கண் வலி, எரிச்சல், நீர் கொட்டுதல், அரிப்பு, சிவத்தல் வரட்சி, கூச்சம், மங்கலான பார்வை, சோர்வு, தலைவலி உள்ளிட்ட 10 அறிகுறிகள் தெரிய வந்துள்ளன.

 

 சிகரெட், மின் சிகரெட்டுக்கள் இரண்டையும் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் கடுமையான கண் நோய் அறிகுறிகள் இருந்தன. மற்ற பங்கேற்பாடுகளுடன் ஒப்பிடும்போது இவர்களுக்கு மிகவும் கடுமையான வரட்சி, கடுமையான வலி, மங்கலான பார்வை ஏற்பட்டிருந்தன.

 

 சிகரெட் மற்றும் மின் சிகரட் பயன்படுத்துபவர்களில்  கண் பிரச்சனை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படுகிறது. இது கண்ணில் உள்ள ரத்த நாளங்களில் சுருக்கத்தை உருவாக்கும்.

 

இக்  கண்டுபிடிப்புகளை சரிபார்க்க மேலும் நீண்ட கால ஆய்வுகள் அவசியமென்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த கண்டுபிடிப்புகள் புகைப்பவர்களிடையே கண் நோய்கள் குறித்து  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும்.

 

 அனைத்து புகையிலை பயனர்களையும் பரிசோதிக்கவும், ஆலோசனை வழங்கவும் சிகிச்சை அளிக்கவும் வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு உணர்த்தியுள்ளது.

 

தொகுப்பு:செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment