😁பாஸ் இருக்கே!
பஸ் கண்டக்டரிடம் …
சர்தார்:இரண்டு டிக்கெட் தாங்க.
பஸ் கண்டக்டர்:ஒரு ஆளுக்கு எதுக்கு 2 டிக்கெட்?
சர்தார்:ஒன்று தொலைந்து போன இன்னொன்று இருக்குமே அதுக்குத்தான்.
பஸ் கண்டக்டர்: இரண்டுமே தொலைஞ்சு போச்சுன்னா?
சர்தார்: மந்த்லி பாஸ் (monthly
pass) என்கிட்ட இருக்கே!!
😁18+
தியேட்டரில டிக்கெட் கிழிப்பவரிடம் திரும்ப திரும்பச் சொன்னார்
சர்தார்: நாங்க 19 பேரு....! கவனி, நாங்க 19 பேரு.
டிக்கெட் கிழிப்பவர்: இன்னொருத்தர் வந்திருந்தா .....20 ஆகியிருக்குமே!
சர்தார்: 19 பேரைச் சேர்க்கிறதுக்கே ரொம்ப ரொம்பக் கஷ்டமா போச்சுது.இதில நீங்க வேற....இது 18+படம்தானே.19 பேர் போதும் தானே.
😁சர்தார்ஜியிடம் ஒரு பெண்
பெண்: நான் உன்னை காதலிக்கிறேன் கல்யாணம் பண்ணிக்க விரும்புகிறேன்
சர்தார்: அது முடியாது. ஏனெனில், எங்க வீட்டிலே எல்லோரும் சொந்தத்தில் தான் கல்யாணம் பண்ணிக்குவாங்கள்.
எங்க தாத்தா எங்க பாட்டியை தாங்கள் கல்யாணம் செய்தார்.
எங்க மாமா எங்க அத்தையத் தான் கல்யாணம் பண்ணினார்.
எங்க அப்பா எங்க அம்மாவை தான் கல்யாணம் பண்ணினார்.
அதனால உன்னை என்னால கல்யாணம் பண்ண முடியாது மன்னிச்சிடு.
😁சர்தாருக்குக் கல்யாணம்
மார்ச் 2-ம் தேதி சர்தாருக்குக் கல்யாணம் முடிவாகி இருந்தது. இந்தி, தமிழ் தெரியாதவர்களிடம், இன்விற்ரேஷன்
கொடுத்துவிட்டு சர்தார்(முதலாம் திகதி இரவு அவர்களை வரச்சொல்ல) இப்படிச் சொன்னார்.
“ப்ளீஸ் கம் இன் ஃபர்ஸ்ட் நைற் (first night)”
😁கையும் மெய்யுமாக பிடிபட்ட ரிலாக்ஸிங்
வெளிநாடு சென்ற சர்தார் பீச்சில் குளித்துவிட்டு ஹாயாக குடையின்கீழ் படுத்துக் கிடந்தார்.
வெள்ளைக்கார பெண் அவரை கடந்து செல்லும்போது, "ஆர் யூ ரிலாக்ஸிங்" என்று கேட்டார்.
அதற்கு அவர், "நோ, நோ ஐ ஆம் பாண்டாசிங்க்" என்கிறார்.
திரும்பவும் இன்னொரு பெண்ணும் இதே கேள்விய கேட்க, இந்த இடம் சரிப்படாது என்று இடத்தை மாற்றினார்.
அங்கே ஒரு சர்தாஜி இருக்க, இவர்தன் இங்கிலீஷ் புலமையை காட்ட அதே கேள்வியை அவரிடம் கேட்டார்.
படித்த சர்தாஜி அவர் சிரித்துக் கொண்டு, "யா... ஐ ஆம் ரிலாக்சிங்" என்று கூறினார்.
"படார்" என்று அவரை அடித்த சர்தாஜி " உன்னைத்தான் அங்க எல்லோரும் தேடிக்கிட்டு வந்து என்ன கேட்கிறாங்கள், கொய்யால, நீ இங்க இருக்க"
😁எகிப்தில் சர்தாஜிகள்
எகிப்து கேலரியில் மம்மியை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு சர்தாஜிகளில்...
ஒருவர்: பெரிய ஆக்சிடென்ட் போலப்பா.... உடம்பு முழுவதும் கட்டு போட்டு இருக்கு.!!!
மற்றவர்: இருக்கும்,இருக்கும்... வண்டி நம்பர்கூட எழுதி இருக்கே...
BC1827.
😁ப்ளட் டெஸ்ட்(BLOOD TEST)
நண்பர்: ஏன் சம்பந்தமில்லாமல் மெடிக்கல் புக் எடுத்து BLOOD பத்தின கட்டுரை எல்லாம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
சர்தார்ஜி:தொந்தரவு பண்ணாதீங்க நாளைக்கு ப்ளட் டெஸ்ட் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார்.
😁வைத்தியர் சர்தார்ஜி
டாக்டர் படித்துமுடித்துவிட்டு முதல் முறையாக ஒரு நோயாளிக்கு வைத்தியம் பார்த்தார் சர்தார்ஜி. டார்ச் லைட் அடிச்சு நோயாளியின் கண்கள் காதுகள், நாக்கை நீட்ட சொல்லி பார்த்துவிட்டு
சர்தார்ஜி: (low)லோவா இருக்கே.
நோயாளி: டாக்டர் நீங்கள் பிரஷர் பார்க்கவே இல்லையே.
சர்தார்ஜி: டார்ச் பற்றரி..... லோவா இருக்கே.
😁சைட் எஃபெக்ட்
மருந்து கடையில் மாத்திரைகளை வாங்கி வந்த சர்தார் ஒவ்வொன்றாய் எடுத்து அதன் ஓரங்களை நறுக்கி மட்டமாக்கினர்.
நண்பர் "ஏன்" என்று கேட்டார்.
அதுக்கு சர்தார்ஜி
"சைட் எஃபெக்ட் வராமல் இருக்க வேண்டுமே அதுதான்"என்றாரே பாருங்கோ!
தொகுப்பு: செல்லத்துரை மனுவேந்தன்
😁😁😁😁😁😁😁😁😁😁
No comments:
Post a Comment