காதல் என்பது...../சிறுவர்களே..../பேசிப்பேசி.....



"காதல் என்பது மாய வலையோ..?"

"காதல் என்பது மாய வலையோ

காமம் சேரும் அன்பு பொறியோ

காலம் போக்கும் களி ஆட்டமோ

கானல் நீரின் ஒரு வடிவமோ

காரணம் புரியா நட்பின் பிணைப்போ?"

"கண்ணும் கண்ணும் சேர்ந்த பின்

மண்ணும் மழையும் கலந்தது போல

எண்ணமும் கனவும் பின்னிப் பிணைந்து

உண்மை ஆசைகள் நெஞ்சில் சுமந்து

பெண் பேசும் கண்ணீர் கதையோ?"

 

 

"சிறுவர்களே"


"கைபேசியில்

 விளையாடி மகிழும் சிறுவர்களே!

கைகால் ஓய்ந்து உடலெடையை ஏற்றதே!

உலகம் சுருங்கி கையில் இருக்குது

உண்மையைத் தேடி உயரப் பாரு!"

 

"இளமை உன்னை சுண்டி இழுக்கும்

இதயத்தை என்றும் நீ இழக்காதே!

நல்லதை இணையத்தில் நன்கு தேடி

நன்மை பெற்றிடு நலமாய் வாழ்ந்திடு!"

 

 

 

"ஆசைவார்த்தை பேசிப்பேசி அயித்தானை மசக்குறியே!" 

"மடியில்சாய்ந்து மனதை பறிக்கும் மங்கையே

கூடிக்குலாவி கொஞ்சி சிணுங்கும் மரகதமே

ஆடிப்பாடி அழகு கொட்டும் மயிலே

தேடியென்னை வந்து அணைத்தது எனோ?

நொடிப்பொழுதில் என்னை கவர்ந்தது எதற்கோ?" 

"மீசைதொட்டு கண்கள் இரண்டாலும் காதல்சொல்லி

ஓசையில்லாமல் செவ்விதழால் முத்தம் பதித்து

இசையும்தோற்கும் இனிய குரலால் அழைத்து

அசையாநெஞ்சை உருக வைத்த பெண்ணே!

ஆசைவார்த்தை பேசிப்பேசி அயித்தானை மசக்குறியே!" 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்]


0 comments:

Post a Comment