“தமிழர் சமயமும் அதன் வரலாறும்”- பகுதி: 26

 [ஒரு அலசல்- தமிழிலும் ஆங்கிலத்திலும்]



பெண்களின் குழந்தை பிறத்தல் மற்றும் கருவளத்தை கொண்டாடவும் அதே போல ஆண்களின் ஆண்மையை கொண்டாடவும் சிந்துவெளியில் கண்டு பிடிக்கப்பட்ட   சிறு உருவச் சிலைகள் அங்கு அதிகமாக பாவித்து இருக்கலாம். அத்துடன் அவை  கலாசார நிகழ்வுகளிலும் சடங்குகளிலும் கூட பாவிக்கப் பட்டு இருக்கலாம். எது எப்படியாயினும்இந்த சிறு உருவச்சிலைகள் முழுமையாக நல்ல நிலையில் சிந்து வெளியில் கண்டு பிடிப்பது மிகவும் அரிதாக உள்ளது. கொண்டாட்டங்களில் அல்லது சடங்குகளில் இவை பாவிக்கப் பட்டதும் சிறுவர்களுக்கு விளையாட  அதிகமாக கொடுக்கப் பட்டு இருக்கலாம்.அதன் பின் அவை கைவிடப்பட்டு இருக்கலாம் என நாம் ஊகிக்கக் கூடியதாக உள்ளது.

ஆனால், மெசொப்பொதாமியாவில் அப்படி அல்ல. அவை இறந்தவர்களை அடக்கம் செய்யும் பொழுது பாவிக்கப் பட்டதால், அங்கு நல்ல நிலையில் சிறு உருவச்  சிலைகள்  கிடைக்கக் கூடியதாக இருந்தன.

 

பொதுவாக, இப்படியான சிறு உருவச்சிலைகள், ஏதாவது ஒன்றின் அடையாளமாக அல்லது பிரதி பலிப்பாக ஏதாவது ஒரு நிகழ்வில் அதிகமாக பாவிக்கப் பட்டு இருப்பதுடன் அவைகள் ஏதாவது ஒரு முக்கிய குறிப் பிட்ட  கருத்துக்களையும் எமக்கு தருகின்றன. என்றாலும் சிந்து வெளி சிறு உருவச் சிலைகள் பற்றி அறிவது அவ்வளவு சுலபம் அல்ல, ஏனென்றால் அவை பற்றிய சூழ்நிலைகளோ அல்லது இலக்கிய தரவுகளோ அங்கு இது வரை கண்டு எடுக்கப் படவில்லை. எனவே அந்த சிறு உருவச் சிலைகளில் இருந்து நாம் பெரும் தகவல்களே, அவை பற்றிய, அல்லது அவை எமக்கு தரக் கூடிய செய்திகளாக இருக்கும். எனவே அந்த தொல் கைவினைப் பொருட்கள் செய்ய பாவிக்கப் பட்ட  பொருட்களின் சேர்க்கை, உற்பத்தி நுட்பங்கள், அலங்காரங்கள், உரு அமைப்பு, அது கண்டு பிடிக்கப்பட்ட இடம், மற்றும் பின்னர் வந்த புராணங்கள் அல்லது இலக்கியங்கள் போன்றவைகளே, எமக்கு அவை பற்றி ஆய்வு செய்ய உதவும். அந்த சிறு உருவச் சிலைகள் பாவிக்கப் பட்ட இடம் அல்லது கட்டிடம் பொறுத்து, அவை, அரசியல் தொடர்பானவையாக, மதம்தொடர்பானவையாக அல்லது அலங்காரம் தொடர்பானவையாக இருக்கலாம். சிலவேளை அவை எல்லாவித அம்சங்களையும் கொண்டிருக்கலாம். பின்னர் வந்த புராணங்கள் அல்லது இலக்கியத்தின் அடிப் படையில் ஆய்வு செய்யப் பட்டதற்கு, பிரபலமான உதாரணம் சர் ஜான் மார்ஷல் அடையாள படுத்திய பசுபதி முத்திரையாகும். இவர் இந்த

முத்திரையை, பண்டைய வரலாற்றை உடைய, பின்னர் வந்த புராணங்களில் பிரபலமாக கூறப் பட்ட, பல்லாயிரம் பக்தர்களை உடைய, சிவனின் முன்னைய வடிவமாக அல்லது சிவனின் தொடக்கக் கருத்துருவாக [முற்காலத்திய சிவனாக] எடுத்துக் காட்டுகிறார். மொகஞ்ச தாரோவில் கண்டெடுக்கப் பெற்ற அந்த குறிப் பிட்ட முத்திரையில், மூன்று தலையினையுடைய தாமரை மலரின் நிலையில் அல்லது பத்மாசன யோகாசனத்தில் [தியானத்தில்] உள்ள ஒரு வரைச் சுற்றி சில மிருகங்கள் காணப் படுவதால் மிருகங்களின் தலைவர் எனவும் யோகாசனம் சிவனுடன் மிகப் பழைய காலத்திலிருந்தே தொடர்பு படுத்தப்பட்டு வருவதால் பசுபதி என்ற சிவனுடைய பெயருக்கு இம் முத்திரை பொருத்தமான சித்திரம் எனவும் கருதுகோள் முன்வைக்கப் பட்டு, இது பசு என்பதன் முதலாவது பொருளிலே சிவபெருமானுடைய தோற்றுவாயை உணர்த்துவதாகலாம் என்ற விளக்கம் அவரால் முன்வைக்கப் பட்டது. மேலும்அத் தெய்வத்திற்கு திரிசூலம் போல கொம்புகள் இருப்பதும் அதை மேலும்  உறுதிப் படுத்துகிறது. அத்துடன் இவர் தன் ஆண் குறி தெரியுமாறும் அமர்ந்திருக்கிறார். மேலும் இந்த யோகியின் உடலில், ஒவ்வொரு கையிலும் பத்தும் மார்பில் பத்தும் ஆக, மொத்தம் முப்பது தனித்துவமான கோடுகள் வரையப் பட்டுள்ளன. இது ஒரு வகை சந்திர நாட்காட்டியாக ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் என்பதை எடுத்து காட்டி இருக்கலாம். ஒரு சித்திரம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பது, சிக்கலான மற்றும் கவனமாக வடிவமைக்கப் பட்ட, ஹரப்பா முத்திரைகளுக்கு முற்றிலும் சரியே. ஏனென்றால், சிந்து வெளி கைவினைப் பொருட்களுக்குள் புதைந்து இருக்கும் எல்லா செய்திகளையும், அங்கு பதியப் பட்ட எந்த ஒரு சுருக்கமான கல்வெட்டுகளையும் நாம் வாசிக்காமலே அறியக் கூடியதாக உள்ளது. அது மட்டும் அல்ல, சிந்து வெளி இடிபாடுகளுக் கிடையில், படைப்பாற்றல் சின்னங்களான, சிவ பக்தர்களால் இன்றும் பாவிக்கப்படும் வடிவம் ஒத்த, லிங்கம் மற்றும் யோனி வடிவ பெருங்கல்கள்  கிடைத்துள்ளன. விவசாய மற்றும் பழங்குடி மக்களுக் கிடையில் காணப் பட்ட, படைப்பாற்றல் சின்னங்களின் வழிபாட்டை ஒத்த வழிபாடு இங்கும் தொடர்வதை இது எமக்கு எடுத்துரைக்கிறது. இந்த தொடக்க நிலை சைவ சமயத்தின் அத்திவாரத்தில் இருந்தே இன்றைய சைவ சமயம் வளர்ந்தது எனலாம். இது மேலும் ஆரியர்களின் வருகைக்கு முன்பே, சிவனை வழிபடும் வழக்கம் இந்தியாவில்  இருந்துள்ளது என்பது இதனால் அறியப்படுகிறது. சிவா என்பது ஒரு திராவிட சொல். அது சிவந்த அல்லது கோபத்தை குறிக்கும். சிந்து வெளியில் கண்டு எடுக்கப் பட்ட சிவலிங்கங்கள், பின் வட வேதத்தில் தரங் குறைவாக சொல்லப்பட்டுள்ளன. சிந்து வெளி மக்கள் யோகாவை அறிந்திருந்தார்கள் என்பதையும் தாந்த்ரீக வழி பாட்டை கடைப் பிடித்தார்கள் என்பதற்கும் இந்த பசுபதி முத்திரையும் ஒரு முக்கிய சான்றாக, மற்றும் வேறு பல சான்றுகளுடன் சேர்த்து சுடிக் காட்டப் படுகிறது.

 

சிந்து வெளியின் இரண்டாவது முக்கிய கைவினை பொருள், மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப் பெற்ற நிர்வாணமான ஒரு  நர்த்தகி ஆகும். இந்த ஒய்யார வார்ப்பு, ஒரு கருத்த பழங்குடி பெண் ஒன்றை சித்தரிக்கிறது, அவள் உடையில்லாது தனது நீண்ட  தலை முடியை கொண்டை போட்டு உள்ளாள். இடது கையை வளையல்கள் முற்றாக அலங்கரிக்க,

வலது கையின் மேற் பகுதியை ஒரு காப்பும் ஒரு தாயத்தும் அலங்கரிக்கிறது. அவளது கழுத்தை சுற்றி ஒரு வகை சிப்பி அட்டிகை இருக்கிறது. எம் நாட்டில் இன்று உள்ள பல நாட்டிய கலைகளில் இந்த சிலையின் கம்பீரமான நிலையை காணலாம். வலது கையை இடுப்பிலும் இடது கையை இறுக்கமாக பிடித்திருப்பதும் இந்தியாவின் சம்பிரதாயமான நாட்டிய அபிநயத்தில் ஒன்றாகும். இந்த பண்டைய உலோக சிற்பம் சிறிதாக இருந்தாலும் பல தகவல்களை எமக்கு தெரிவிக்கிறது. பல சிறந்த கற்றறிவாளர்கள் இந்த உலோக வார்ப்பு ஒரு தேவதாசியை அல்லது ஒரு புனித பரத்தையை பிரதிநிதி படுத்துவதாக கருதுகிறார்கள். அந்த பெண் சிலை அம்மணமாக இருப்பதாலும், மருட்டுகின்ற ஒரு நாட்டிய தோரணையில் இடுப்பில் கையையும்  தளராத் தன்னம்பிக்கையை முகபாவத்தில் காட்டுவதாலும் ஒருவேளை அவர்கள் அப்படி கருதியிருக்கலாம் என கருதுகிறேன். ஆனால், இது மேலும் ஹரப்பா சமூகத்தின் மரியாதைக்குரிய மற்றும் நம்பிக்கை கொண்ட, ஒரு பெண்ணை காட்டுகிறது எனலாம். அங்கு இரண்டாவது நடன மாதுவும் கண்டு பிடிக்கப் பட்டது. தாந்த்ரீக வழி பாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த, பெண் சக்தியின் வடிவமான, பெண் [a deity etc. see தேவதை] மூர்த்திகளான, இளமையான ஆடையற்ற பெண் நடன கோலத்தில் உள்ள,

ஆரம்ப கால டாகினிகளை [Dakinis / டாகினிகள் இளமையான ஆடையற்ற பென் நடன கோலத்தில் ஒரு கையில் கபாலத்துடனும் இன்னொரு கையில் குறுவாள் உடனும் சித்தரிக்கப்படுகின்றனர். டாகினிகள் மனித மண்டை ஓடுகளால் ஆன மாலையை அணிந்து தோளில் திரிசூலம் சாய்ந்தவாறும் காட்சியளிக்கின்றனர். டாகினி கூந்தல் பெரும்பாலும் கரை புரண்டோடும் நிலையில் சவத்தின் மீது நடனமாடியவாறு இருப்பார். அறியாமை மற்றும் ஆணவத்தின் உருவகமாக சவம் கருதப்படுகிறது. டாகினியின் இந்த நடனம் ஆணவத்தையும் அறியாமையையும் ஆட்கொண்டதை காட்டுகிறது] பிரதி நிதித்துவப் படுத்துவதாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மூன்றாவது யோனி தெரியுமாறு குந்தி இருக்கும் பெண் ஆகும். மேலும் இந்த சிற்பம்,காணிக்கை, படையல் மூலம் புகை படிந்து இருப்பதும் குறிப்பிடத் தக்கது. அதிகமாக இது அவளுக்கு முன்னாள் தூபங் காட்டி யோனி வழிபாடு நடை பெற்றதை குறிக்கலாம். பொதுவாக, யோனி இயற்கையின் படைப்பையும்  தாய் தெய்வத்தையும் அல்லது சக்தியையும் பிரதிநிதிப்படுத்துகிறது. அவளின் இடது தோளை ஒரு சால்வை மறைக்கிறது. எனினும் வலது மார்பு உடையற்று இருக்கிறது. தலைமுடி பின்னுக்கு இழுத்து கட்டப் பட்டுள்ளது. இது தாய்வழி முறை சமுதாயத்தின் பிரதி பலிப்பாக இருக்கலாம். இவை எல்லாம் எமக்கு எடுத்துக் காட்டுவது ஆரியருக்கு முன்னைய இந்தியா தாந்த்ரீக வழி பாட்டினை கொண்டிருந்தனர் என்பதாகும். மேலும், சிந்து வெளி முத்திரைகள் இந்தியாவிற்கு வெளியே, உம்மா மற்றும் ஊர் [Umma and Ur]  போன்ற மெசொப்பொதாமியா நகரங்களிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அது மட்டும் அல்ல, சில இரண்டு நாகரிக முத்திரைகளிளும் நெருங்கிய ஒற்றுமையையும் காண முடிகிறது. இவை, இரு நாகரிக மதங்களுக்கும் பண்பாட்டிற்கும் இடையில் ஒரு தொடர்பை காட்டுகிறது.

உதாரணமாக இரு பக்கமும் சீறி எழுகிற, மூர்க்கமான புலிகளை கெட்டியாகப் பிடித்து நிற்கும் வீரனை காட்டும் மொகஞ்சதாரோ முத்திரையும் கில்கமெஷ் தனது இருகைகளாலும் இரு சிங்கங்களை பிடித்து நிற்கும் முத்திரையும் ஒரே மையாக கருத்தாக உள்ளது குறிப்பிடத் தக்கது.

:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி 27 தொடரும்

  ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக/Click to read from the beginning


*அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக/CLICK TO READ NEXT PART, 

[இணைத்த படங்கள்: கொதித்தெழுகிற புலிகளுடன் சண்டையிடும் மொஹஞ்சதாரோ முத்திரை, சிங்கங்களுடன் கில்கமெஷ், டாகினி, சிந்து வெளி நாகரிக சிறு உருவச்சிலைகள்

 ⇹⇹⇹⇹⇹⇹⇹⇹⇹⇹

An analysis of history of Tamil religion – PART:24

[In English and Tamil]

The figurines found in Indus valley civilisation may be used to primarily celebrate childbirth and fertility in the female and virility for the male and also may have been involved in a cultural or ceremonial event.  However, one reason why human figurines are often hard to find intact or in good condition in the Indus Valley is that the figurines were often given as toys to children after their ceremonial use, and then, likely discarded. This is in sharp contrast to Mesopotamia, where human figurines were often involved in the burial process only.

 

Generally these figurines have functions and meaning. They were used for something for some certain purpose. However, the great issue with studying the figurines of the Indus Valley Civilisation is there is no contextual or literary information about the figurines. Because of this, the only information available is that which comes from the figurines themselves. So any analysis of meaning is going to be based on some  combination of materials of artefacts, manufacturing techniques, decorations and shapes as well as the exact place, where it was found and any later mythology or literature. The figurines inside would have either a political function, religious function [such as offerings, shrine components, representations of deities, etc] or decorative function, depending on what the building was used for. It is also possible the same figurine could  have all three of those functions. One famous example of using literature to identify artefacts is the Pashupati seal [Proto -Siva seal]. When John Marshall studied the seals of the Indus Valley Civilisation,  he used later mythology to identify the people depicted in them. He proposed that the man in what is now known as the Proto - Śiva seal was Siva, a named god with a rich mythology, millions of followers and an  ancient history. Marshall came to this conclusion by identifying four attributes depicted in the seal, namely,

 

1] the man [male god] appears to be seated in a version of the cross -legged "lotus" posture and his hands are both shown placed on the knees, in a typical meditational gesture,  with his penis  is erect &  prominently visible,

 

2] the man has three faces,

3] the man is surrounded by animals [a rhino and a buffalo on the right, and an elephant and a tiger on the left,], and

 

4] the man has horns, as siva associated with the trident.

 

Pashupati means "lord of the animals".  Also, a total of thirty distinct stripes are drawn on the body of this Yogi; ten on each arm and ten over the chest. Some type of calendrical lunar - oriented notation seems to be  represented here, indicating days in a month. The saying that a "picture is worth a thousand words" is particularly true for the intricate and carefully designed these Harappan seals, which reveal most of their secrets  without the necessity of reading the brief inscriptions. Also found among the rubble of Indus Valley excavations was the prototype of the Shiva lingam — phallic - shaped rocks - symbolic representation of the phallus  (linga) and vulva (yoni), similar to those used today by Shiva’s devotees, which suggests that the then people might be worshipping these sexual organs as found among other agricultural and tribal peoples, the  primitive form of Saivism, the foundation on which the modern day Saivism grew up and also it proof that "worship of God Siva" was existed even before Aryans arrived to India. The word `Shiva' is of Dravidian  etymology, `civa' meaning `reddened' or `angry' in Tamil. Further, Siva lingas which are found in the Indus Valley Civilisation is later on degraded in the Vedas. This seal is often cited as evidence that people of the Indus Valley culture knew Yoga and practiced Tantra. It is, however, not the only known example of this subject from this culture. There are several others.

 

The second best known artefact from the Indus Valley culture is an approximately four inch high bronze figurine of a dancing girl. found in Mohenjo-Daro. this exquisite casting depicts a dark skinned  young tribal girl of "aboriginal" type. She is almost naked and her long hair is tied in a bun. Bangles entirely cover her left arm, a bracelet and an amulet or bangle on her upper right arm, and a cowry shell necklace is

around her neck. She is posed in a dance posture, her right hand on her hip, her left hand clasped in a traditional Indian dance gesture signifying a lotus bud, symbol of spirituality. Though small, this archaic metal

sculpture conveys a lot of information. Several eminent scholars have taken this casting to represent a temple dancer or sacred harlot of Mohenjo-Daro, perhaps because of her nakedness, the "come hither" dance -posture, with hand on hip, and the expression of self -assurance on her face, But, it also, represents a respected & confident woman of Harrapan society. A second metal casting of a dancing girl  was also  found at Mohenjo-Daro, These two ancient figurines of sacred dancers may be also the earliest known representations of Dakinis, images of female initiatory power, of paramount importance in Tantric tradition.  The third best known artifact is a large and unique wood - sculpture of a squatting female also found. she squats in birthing position lifting her dress to reveal her vagina, stained from offerings, may be a Yoni worship.

The yoni is the creative power of nature and represents the mother goddess / Shakti. It is concluded from this smoke stained figures that the people offered burnt incense before her. A shawl covers her left shoulder, her right breast bare, hair pulled back and tied. This extraordinary sculpture was likely passed down through a matriarchal tribe. All these confirm beyond any doubt that the archaic pre -Vedic Indians had tantric   adepts among them. Also, Indus Valley seals have been found as far afield as Mesopotamia (present -day Iraq) in the cities of Umma and Ur, in Central Asia as well as close resemblance between some  objects from the Indus Valley sites and those from ancient Sumeria, in Southern Iraq clearly proof the connection between Sumerian & Indus valley religions & culture. For example,  Mohenjo-Daro seal of  grappling rampant tigers. This motif is found on seals in Mesopotamia from story of Gilgamesh as well.

 

[Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]

 

Part 27 Will follow......

No comments:

Post a Comment