"தமிழர் சமயமும் அதன் வரலாறும்” பகுதி: 23

 [ஒரு அலசல்- தமிழிலும் ஆங்கிலத்திலும்]

 


மரணம் ஒரு பெரிய மர்மமாகவே உள்ளது. கால காலமாக ஒவ்வொரு முக்கிய சமயங்களும் தத்துவங்களும், ஆன்மீக கருத்துகளும், இந்த மர்மத்தை கண்டு பிடிக்க முயன்றன. ஒவ்வொரு ஆணினதும் பெண்ணினதும் வாழ்வை தொட்டு, முழு மானிட சாதியையும்  "தவிர்க்க முடியாத மாள்வு" என்ற ஒன்றின் கீழ் இது இணைத்தது. இங்கு பணக்காரனோ ஏழையோ ஒரே மாதிரியான முடிவை மரணத்தில் அடைகிறார்கள். கருப்பனோ வெள்ளையனோ இருவரும் எந்த வேறு பாடும் இன்றி பிணக்குழிக்குள் போகிறார்கள். பெருஞ் செல்வாக்கும் சக்திமிக்கவர்களும், எளிய அடக்கமுள்ளவர்களும் இந்த உலகத்தை கடைசியில் விட்டே போகிறார்கள். மரணத்தில் இருந்து எவருமே தப்ப முடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கையை கொடுத்துள்ளது. இது, இந்த எண்ணம், தமது அன்புக்கு உரியவர்களை இழந்த பலருக்கும், மரணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும் ஒரு ஆறுதல் கொடுப்பதுடன், ஆனால் மற்றவர்களுக்கு: "ஏன், எதற்கு மரணம் இருக்கிறது?" "எல்லாம் வல்ல கடவுளால் மரணத்தை இல்லாமல் செய்ய முடியாதா?"  "எல்லா உயிர்களும் இயற்கையாக ஏன் சதாகாலமும் வாழ முடியாது?" போன்ற கேள்விகளுடன் ஆச்சரியமடைய வைக்கிறது. ஒரு இனத்தின் வரலாற்றுப் பதிவு இலக்கியம் ஆகும். இவ்விலக்கியம் அந்த இனத்தின் பண்பாடு, பழக்கவழக்கம், கலாச்சாரம் ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடி என்று கூறலாம். அவ்வகையில் அக்காலத்து மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளை விளக்கும் பெட்டகமாக சங்க இலக்கியத்தினைக் குறிப்பிடலாம். இதில் பல வரலாற்றுச் செய்திகளும் வாழ்வியல் செய்திகளும் குறிப்பிடப் பட்டுள்ளன. இம்மை, மறுமை போன்ற எண்ணங்களை சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். இங்கு சங்க கால மகளிர் இம்மை மட்டு மின்றி மறுமையிலும், அதாவது அடுத்த பிறவியிலும் தத்தம் கணவருடனேயே உடனுறைந்து வாழ விரும்பினர் என்ற மனநிலையை குறுந்தொகை - 49 போன்றவற்றால் காண்கிறோம்.

 

"அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து

மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப

இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவனை

யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே."

 

(அம்மூவனார்,குறுந்தொகை-49.)

 

காண்பதற்கு அணிலின் பல்லினை ஒத்திருக்கின்ற தாது முதிர்ந்த முள்ளிச் செடி இருக்கின்ற நிலத்தினை உடையவனும் நீலமணியின் நிறத்தினை ஒத்திருக்கின்ற கடல்நீரினைக் கொண்ட கடற்கரைக்கு உரிமையுடையவனுமாகிய தலைவனே! இந்த பிறவி போய், மறுபிறவி வந்தாலும், நீயே என் கணவராக வர வேண்டும், நானே,உன் மனதில் இருப்பவளே என்கிறது இந்த பாடல். மேலும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில், ஆனால் குறிப்பாக தமிழகத்தில் மண் பானையில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், இறந்தவரை அடக்கம் செய்வது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அப்படியான பண்டைய பெரிய இடுகாடு ஒன்று தமிழகத்தில், திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூர் பகுதியில் காணலாம். ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து விடுவது அங்கு வழக்கமாக இருந்து உள்ளது. அது மட்டும் அல்ல, ஈமத் தாழியில் / முதுமக்கள் தாழியில் சிறு மண் பாத்திரத்தில் தானியம் உணவு முதலியன வைத்து அடக்கம் செய்வது பொதுவாக இருந்து உள்ளதும் தெரிய வருகிறது. இந்த பண்டைய பழக்கம், ஆதி தமிழரிடம் மறுமை பற்றிய ஒரு வலுவான நம்பிக்கை இருந்ததை காட்டுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கப்பாடல்கள் - புறநானுறு 228, 256 -போன்றவை, இதை மேலும் உறுதிபடுத்துகிறது. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி ஐயூர் முடவனார் பாடிய புறநானூற்றுப் பாடல் (புறம் 228) முதுமக்கள் தாழி பற்றி குறிப்பிடுகிறது..

 

"கலம் செய் கோவே! கலம் செய் கோவே!

..........................................................................

......................................................... ஆதலின்,

அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி

வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம்

இரு நிலம் திகிரியா, பெரு மலை

மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?"

 

(புறநானுறு  228)

 

கிள்ளிவளவன் பூத உடலை அடக்கம் செய்வதற்கு உன்னால் தாழி செய்ய முடியும். ஆனால், அவன் புகழுடம்பு மிகப் பெரியது. அதை அடக்கம் செய்வதற்கு ஏற்ற பெரிய தாழியை உன்னால் செய்ய முடியுமா?” என்று குயவன் ஒருவனைப் பார்த்து ஐயூர் முடவனார் கேட்பது போல் இப் பாடல் அமைந்துள்ளது. புறநானூறு 4 , இறப்பின் தெய்வம், கூற்றுவனை /காலனை கூறுகிறது. அதாவது, யானைகள், மதிற் கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள் உயிரைக் கொல்லும் கூற்றுவனைப் போல் காட்சி அளிக்கின்றன என்கிறது இந்த பாடல்.

 

"களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்

நுதி மழுங்கிய வெண் கோட்டான்

உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;"

 

அது மட்டும் அல்ல புறநானூறு 214 இல், நல்வினைகள் செய்வதால் விண்ணுலகம் செல்லலாம்; விண்ணுலகத்தில் இன்பம் நுகர்வது மட்டு மல்லாமல், வீடு பேறும் பெறலாம்; அத்தகைய வீடு பேறு பெற்றால் மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலையை [மறுபிறவி இல்லாத பேறாவது] அடையலாம். ஒருவேளை நல்ல பிறவி கிட்டாமல் போனாலும், இமயத்தில் பறக்கும் கொடி போல அனைவருக்கும் தெரியும் புகழோடு இந்த உலகில் வாழும் பேறு பெறுதல் உறுதி. எனவே நல்லனவற்றை உறுதிப்பாட்டோடு செய்தல் வேண்டும்.” என்ற கருத்துகளை கோப்பெருஞ்சோழன் கூறுகிறான்.

 

"செய்குவம் கொல்லோ நல்வினை!எனவே

ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி

நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;

யானை வேட்டுவன் யானையும் பெறுமே;

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;

 

அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்,

செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;

செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்,

மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

பகுதி 24 தொடரும்

  ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக/Click to read from the beginning

 *அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக/CLICK TO READ NEXT PART, 

[இணைத்த படங்கள்:

மரண ஊர்வலம்,

தமிழர்களின் வரலாற்றுக்கு முந்தைய புதைகுழி வழக்கம்,

பத்தாம் நூற்றாண்டு நடுக்கல்,

வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சி,

தகனம்,

இந்து மத மரண கடவுள்.]

 

 

An analysis of history of Tamil religion – PART:23

[ In English and Tamil]

 

Every man is terribly afraid of his death & what will happen after death. All religions tried to provide some answers to these and other of life's big questions in order to comfort people in these desperate circumstances. Death is a grand mystery. Throughout time, It is a subject that touches the life of every man and woman, uniting the entire human race under a cloud of inevitable mortality. The rich and the poor alike meet the same end; the black and the white both go to the grave; the powerful and the humble all leave this planet eventually. Many lines of religious thought simply accept the inevitability of death and instead try to offer better alternatives that await the faithful in the afterlife. These ideas bring comfort to many people who have lost loved ones or are facing death themselves, but they leave others wondering, “Why must death exist? Wouldn’t an all - powerful God eradicate death? Shouldn’t all life inherently live forever?”  Sangam literature too have full of references to various rituals and beliefs of the ancient Tamils, including numerous references to the after life, showing that the early Tamils believed in a life after death, especially for their warriors slain in battle. So, we can simply assumed that ancient Tamils also, had Similar thoughts about afterlife like Sumerians, one of such Sangam poem, kurunthogai 49 is given below:

 

"May you be my husband

and me be your wife, in our

next life, as we are in this one.

 

May I be the one

most agreeable to your heart."

 

Evidence of a prehistoric burial custom of interring dead persons in earthen pots has been found in various parts of India, mostly in Tamil Nadu. Such Stone Age pieces of evidence were also found as part of a large burial ground at Adichanallur, near Tirunelveli, also in Tamil Nadu. Archaeology department officials say it was common for “burial urns” to contain smaller earthen pots of grain and food kept there when the dead were interred and this practice of burying the dead along with burial goods indicates strong belief in life after death and possibly rebirth among megalithic people. The respect accorded to the buried individual ensured that the grave and the goods contained within were not subjected to vandalism and theft. Paddy husk has been found in burial sites, further proof of the megalithic peoples’ commitment towards ensuring their dead a comfortable afterlife. Sangam poems, Purananuru 228 & 256 & others also says about this “burial urns” / ஈமத் தாழி / முதுமக்கள் தாழி .

 

 "O potter who makes pots!  O potter who

makes pots  .................

........................................................

If you desire to make a wide-mouthed urn to enclose

him, will you be able to make that vessel with a huge

mountain as your clay and the big land as your wheel?"

 

[Purananuru 228]

 

Also Purananuru 4 says  about Tamil Deity of Death as:

 

"and looking like the necks of prey gripped by tigers, and

elephants assaulting gates in rage, have blunted the tips

of their white tusks, and are like Kootruvan who kills."

 

Not only that, In Purananuru 214, Chozha country’s king Koperumchozhan advise  that

 

'Those who have no strength, whose views are

greatly flawed, will have doubts about their

actions.  A hunter who hunts for an elephant will

find it.  A hunter who hunts for a quail will return

with empty hands.

So for noble men with high aspirations,

who because of their own actions, achieve what

they want, there will be pleasures in the upper

world.  Even if they do not attain the pleasures

of the upper world, they might not have to be born

again.  If they are never to be born again, it would

be great to die with a faultless body,

 

with one’s fame as high as the tall Himalayas!"

 

 

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

 

Part 24 Will follow

 

[Pictures attached:

Funeral  procession,a prehistoric burial custom of Tamils,

Tenth century Hero Stone, cycle of life and death, cremation and Hindu God of death]

=

No comments:

Post a Comment