நம்மை நோக்கி வரும் புதுமைகள்

அறிவியல்=விஞ்ஞானம்



🍂வைட்டமின் கே குறைபாடு

கீரைகள், தாவர எண்ணெய், தானியங்களில் காணப்படும் வைட்டமின் கே சத்து ரத்த உறைவு, எலும்பு கட்டமைப்புக்கு தேவையான புரதங்களை உருவாக்குகிறது. இருப்பினும் நுரையீரல் ஆரோக்கியத்தில் வைட்டமின் கே வகிக்கும் பங்கு தெளிவாக அறியப்படாமல் இருந்தது. த😋ற்போது டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் புதிய ஆய்வு, வைட்டமின் கே குறைபாடு ஆஸ்துமா, மூச்சு திணறல் உள்ளிட்ட நுரையீரல் நோய்களை ஏற்படுத்தும் என்று கண்டுபிடித்துள்ளது.

 

 🕬ஒலியையும் வெப்பத்தையும் உறிஞ்சாதது

ஷென்சென் மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒலியையும் வெப்பத்தையும் உறிஞ்சாத ஒரு படலத்தை உருவாக்கி உள்ளனர். இது கட்டடங்கள் வாகனங்கள் புறப்பொருட்கள் மிகவும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இதனால் குளிர்சாதனத்தின் செலவு குறையும். டைட்டானியம் டை ஆக்சைடு, அலுமினியம் டை ஆக்சைடு, கண்ணாடி தூயவெள்ளி ஆகியவற்றை கொண்டு இதை உருவாக்கி உள்ளனர்.

 

𑜿பூஞ்சை தொற்று நோய் மருந்து

 வைரஸ்கள் பாக்டீரியாவுக்கு பின் பூஞ்சைகள் மிகவும் ஆபத்தான நோய் கிருமிகளாகும் இவை பாக்டீரியாவை போலவே தற்போதைய மருந்துகளை எதிர்ப்பதற்கு ஏற்ப வேகமாக தங்களை தகவமைத்துக் கொள்கின்றன.ஓக்லஹோமா பல்கலை விஞ்ஞானிகள், அல்லிப்பூவில் பெர்செபாசின் (Persephacin) எனும்  ஒரு மூலக்கூறை  உள்ளதை கண்டறிந்துள்ளனர். எதிர்காலத்தில் பூஞ்சை தொற்று நோயை எதிர்த்து போராடக்கூடிய மருந்தாக இது பயன்படும் என்கின்றனர்.

 

👩விளைவு மறதிநோய்

வயிற்றில் உணவை செரிக்க வைக்க உருவாகும் அமிலம் உணவு குழாயில் ஏறுவதால் நெஞ்செரிச்சல் உருவாகும். இது தொடர்வது வயிறு உணவுக்குழாயில் பல நோய்களை உருவாக்கலாம். இதை சரி செய்ய தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் மருந்துகள் மறதி நோயை உருவாக்க கூடும் என்று அமெரிக்க நரம்பியல் ஆய்வு கூடத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

🔥மூளை நோய்களை ஏற்படுத்தும் காட்டுத் தீ!

காட்டுத் தீ என்பது இயற்கையாக ஏற்படும் ஒரு காற்று மாசு. மாறிவரும் பருவ சூழ்நிலைகளால் அடிக்கடி ஏற்படு ம் காட்டுத் தீ, காற்றில் மிக அதிகமான துகள்மப் பொருட்களை வெளியிடுகிறது. இவற்றில் சல்பேட்கள், கார்பன், நைட்ரேட்கள், பிற கனிமத் துாசுகள் இருக்கும். 2.5 மைக்ரோ மீட்டர்கள் அல்லது அதற்கும் குறைவான விட்டத்தை உடைய நுண் துகள்மப் பொருட்கள் (PM2.5) மிக ஆபத்தானவை. இவை நம்முடைய ஒரு முடியின் விட்டத்தை விட 30 மடங்கு சிறியவை. அதனால், இவற்றை சுவாசிக்கும் போது மிகச் சுலபமாக நுரையீரல் திசுக்களிலும், மூளையிலும் சென் று படிந்துவிடும். இதுகுறித்து அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலை, 27,857 பேரைக் கொண்டு ஆய்வு செய்தது. இதில் நுண் துகள்மப் பொருட்களால் காற்று மாசு அதிகம் இருந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் பலருக்கு மூளை தொ டர்பான 'டீமென்ஷியா' நோய் ஏற்பட்டுள்ளதுகண்டுபிடிக்கப்பட்டது. 'டிமென்ஷியா' என்பது நம்முடைய அன்றாட செ செயல்பாடுகளை பாதிக்கக்கூடிய பல்வேறு விதமான மூளை தொடர்பான நோய்களின் பொதுப் பெயர். மிகவும் பொதுவான 'டிமென்ஷியா' நோய் என்றால், 'அல்சைமரைச்' சொல்லலாம். காட்டுத் தீயால் ஏற்படும் புகை பொதுவாக கண்களையும், தொண்டையையும் பாதிக்கும் என்பது தெரிந்த விஷயம் தான். என்றாலும், இது மூளை நோய்களை ஏற்படுத்தும் என் பது புதுச் செய்தியாகும். சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உருவாகும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவது மனிதர்களின் கையில் தான் உள்ளது.

 

🐕நோய்களை கண்டுபிடிக்க நாய்.

நாய்களுக்கு நம்மை விட பத்தாயிரம் மடங்கு அதிகமான மோப்ப சக்தி உண்டு. நாம் நோயுற்றிருக்கும்போது நம் உடலில் இருந்து சில வகையான ஆவியாக கூடிய கனிமச் சேர்மங்கள் வெளிப்படுகின்றன. இவை ஏற்படுத்தும் மணத்தைக்  கொண்டு பழக்கப்படுத்தப்பட்ட நாய்களால் புற்றுநோய், நீரிழிவு, மைக்ரான், மலேரியா, கோவிட் உள்ளிட்ட எட்டு நோய்களை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

🌏கட்டிடங்களுக்குப்  பாதிப்பு

அமெரிக்காவின்  நார்த் வெஸ்டர்ன் மேற்கொண்ட ஆய்வில் நகரங்களில் பல்வேறு காரணங்களினால் நிலத்திற்கு அடியில் வெப்பநிலை கூடிக் கொண்டு வருவதும், இதனால் நிலம் மேல் நோக்கி விரிவடைவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக நிலத்தின் மீது இருக்கும் கட்டிடங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொகுப்பு :செல்லத்துரை மனுவேந்தன்

0 comments:

Post a Comment