வாய் துர்நாற்றம் வீசுவது ஏன்?

உண்மையும் கட்டுக்கதைகளும்

பல ஆண்டுகளுக்கு முன், நான் வானொலியில் பணியாற்றத் தொடங்கிய சமயம் அது. அன்று எனக்கான பணி என்ன என்பதை அறிந்துகொள்ள செய்தியறைக்குச் சென்றேன். அப்போது, வாய் துர்நாற்றம் தொடர்பாக சிகிச்சையளிக்கும் கிளினிக் ஒன்றுக்கு சென்று எனக்கு பரிசோதனை செய்துகொண்டு அந்த மருத்துவரை நேர்காணல் செய்யச் சொல்லிப் பணிக்கப்பட்டேன்.

செல்லும் வழியில், இது என்ன நேர்காணல் எடுப்பதற்கான தந்திரமா? அல்லது என் சக பணியாளர்கள் என்னிடம் சொல்லத் தயங்கிய விஷயமா என்று ஆச்சரியப்பட்டேன். அதிர்ஷ்டவசமாக நான் நன்றாகத்தான் இருந்தேன்.

வாய்துர்நாற்றம் என்பது மிகவும் பொதுவானதுதான். ஆனால், அதை சரிசெய்ய நம்மைச் சுற்றியிருக்கும் சில கட்டுக்கதைகள் உதவுவதில்லை.அவ்வளவுதான். அப்படி என்ன கட்டுக்கதைகள் அவை?

கட்டுக்கதை1: உங்களுக்கு வாய்துர்நாற்றம் இருக்கிறதா என்பதை கைகளில் சுவாசித்து கண்டறிய முடியும்.

உண்மை: இந்த முறையில் உண்மையைக் கண்டறிய முடியாது. நீங்கள் பேசும்போது காற்று வெளிப்படுவதைப்போல, இப்படி கையில் சுவாசிக்கும்போது வெளிப்படாது. எனவே, கைகளில் சுவாசம் விடும்போது, உண்மையிலேயே துர்சுவாசத்துக்கு காரணமான வாயுக்களிலிருந்து உருவாகும் வாசம் (நாக்கின் பின்புறத்தில் உருவாகும் வாயுக்கள்) வராது.

தனக்கு துர்சுவாசப் பிரச்னை இருக்கிறது என்று எண்ணும் அனைவருக்கும் அப்படியில்லை. மக்கள் அவர்களிடம் நடந்துகொள்வதை வைத்து அப்படி தவறாக புரிந்துகொள்கிறார்கள்.

சொல்லப்போனால், அப்படி நினைப்பவர்களில் வெறும் 27% பேருக்குதான் உண்மையிலேயே பிரச்னை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல, இந்த விகிதாசாரத்திலும் முழு உண்மை என்று ஏதுமில்லை. அதுவும் 22 முதல் 50க்கு இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

கட்டுக்கதை 2: துர்சுவாசம் உள்ளவர்களுக்கு அடிப்படையில் வேறு ஏதாவது நோயை கொண்டிருக்கலாம்.

பெரும்பாலும் துர்மணமானது சல்பர் அடங்கிய பொருட்களில் இருந்துதான் வரும். அழுகிய முட்டையின் மணமுடைய ஹைட்ரஜன் சல்ஃபைடு இவற்றில் முதன்மையானது. ஆனால், இதனினும் மோசமானது எத்தில் மெர்காப்டன் தான். இது அழுகும் முட்டைக்கோஸின் வாசமுடையது. இதுதான் தண்ணீர்விட்டான் உள்ளிட்ட சில உணவுப்பொருட்களை உண்டபிறகு, சிறுநீரை உறுத்தும் நெடியுடையதாக மாற்றுகிறது.

உடலின் பிற பகுதிகளான காது, மூக்கு, தொண்டை, சிறுநீரகம், நுரையீரல் அல்லது குடல் பகுதிகளில் இருக்கும் பிரச்னைகள் காரணமாக துர்சுவாசப் பிரச்னை வருகிறது என்பது உண்மைதான். ஆனால், மிக மிகக் குறைந்த அளவே அது.

கட்டுக்கதை 3: வாய் கொப்பளித்தல் துர்சுவாசத்தை சரிசெய்யும்.

வாயில் துர்சுவாசம் இருப்பதாக உணர்ந்தவுடன் மக்கள் செய்யும் முதல் வேலை வாய் கொப்பளிப்பதாக இருக்கிறது. ஆனால், புதினா அல்லது கிராம்பு ஆகியவற்றை மெல்வது, ஆண்டிசெப்டிக் அடங்கிய வாய் கொப்பளிப்பு திரவங்கள் உட்பட இவையெல்லாம் மிகமிக சொற்ப நேரத்துக்கே உதவும். குறிப்பாக வாயிலிருந்து வாசம் கிளப்பும் பாக்டீரியாக்களை தற்காலிகமாக நீக்க மட்டுமே இது உதவும்.

ஆனால், வறண்ட வாயிலிருந்து துர்சுவாசம் வீசும். எனவே, நிறைய நீர் பருகுவது இதில் உதவும். வாய் வறட்சியை தடுப்பதோடு உணவு செயல் முறைக்கும் உதவும்.

பிரிட்டன் உடல்நல ஆராய்ச்சி அமைப்பான கொக்ரேன் நூலகம் துர்சுவாசம் தொடர்பான ஆய்வுகளை ஆய்வு செய்யும் அமர்வு ஒன்றைக் கூட்டியுள்ளது. முன்னதாக 2008ஆம் ஆண்டு இந்த அமைப்பு நடத்திய அமர்வின்படி, வாய் சுத்தம் செய்யும் திரவங்களில் குளோரோ ஹெக்சிடைன், சிடைல்பைரிடினியம், குளொரின் டையாக்ஸடு உள்ளிட்ட ஆண்டிபாக்டீரியாக்கள் இருந்தால், விரும்பத்தகாத வாசம் வருவதை அவை தவிர்க்கின்றன என்று தெரியவந்தது. அடுத்த அமர்வின் முடிவுகளுக்குப் பிறகு என்னவகையான வாய் கொப்பளிப்பான்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் இன்னும் கூடுதல் தகவல்கள் தெரியவரலாம்.

கட்டுக்கதை 4 : வாயில் பாக்டீரியாக்கள் இருப்பது கெட்டது

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வாயிலிருக்கும் நுண்ணுயிர்களின் அளவைப் பொறுத்து சிறு அளாவிலாவது வேறுபாடு இருக்கும். மனித உடலுக்கு ஏராளமான நன்மைகளை விளைவிக்கும் நுண்ணுயிர்கள் உள்ளன. வாயிலிருந்து மொத்த பாக்டீரியாக்களையும் நீக்குவது என்பதற்கு பதிலாக, குறிப்பிட்ட தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை மட்டும் நீக்கிவிட்டு தேவையான பாக்டீரியாக்களை வாயிலேயே வைத்திருப்பது எப்படி என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

மொத்ததில் இவை நான்கும் கட்டுக்கதைகள் என்று தெளிவுபெறுவதோடு முறையாக மிருதுவான பிரஷ் கொண்டு பல்துலக்குதல், நிறைய நீர் பருகுதல், புகைபிடிப்பதை தவிர்த்தல், சரிவிகித உணவு உண்னுதல் ஆகியவற்றையும் கடைபிடிக்க வேண்டும். அத்துடன், ஈறுகளில் பிரச்னை என்றால் பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

நன்றி:பிபிசி தமிழ்

No comments:

Post a Comment