எம்மை நோக்கி வரும் புதுமைகள்

அறிவியல்=விஞ்ஞானம் 

🤶ம்மாக்களின் ஆரோக்கியத்திற்கு..


ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு பல்கலைக்கழகம், பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில், குழந்தை பிறந்து 6 முதல் 12 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது அம்மாக்களின் ஆரோக்கியத்திற்குப் நன்மைகளைத் தருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், கெட்ட கொழுப்பு, வகை 2 நீரிழிவு, இன்சுலின் குறைபாடு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவது குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

🪐புதிதாக உருவாகும் கோளில் தண்ணீர்!...

பூமியில் தண்ணீர் எப்படி வந்தது என்ற கேள்விக்கு, இதுவரை முடிவான பதில் எட்டப்படவில்லை. அதுபோல் பூமிக்கு வெளியே எங்கெங்கெல்லாம் தண்ணீர் உள்ளது என்ற தேடலும் நிறைவடையவில்லை. ஆனால், இந்த இரண்டு விஷயங்களுக்கும் பயனுள்ள வகையில், ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பூமியிலிருந்து 370 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பி.டி.எஸ்., 70 என்ற நட்சத்திரத்தையும், அதைச் சுற்றி வரும் இரு கோள்க ளையும் சமீபத்தில் கண்டுபிடித்தது. நட்சத்திரத்தில் இருந்து 16 கோடி கி.மீ., தூரத்தில் சுற்றி வரும் இரு கோள்களையும் சமீபத்தில் கண்டுபிடித்தது. நட்சத்திரத்தில் இருந்து 16 கோடி கி.மீ., தூரத்தில் சுற்றி வரும் இவ்விரு கோள்களும், ஒரே வட்டப்பாதையில் சுற்றுவதாக கணிக்கப்பட்டிருந்தது. இந்த ஆச்சரியமே இன்னும் குறையாத நிலையில், இக்கோள்களுக்கு அருகே மூன்றாவதாக பூமியைப் போன்ற பாறைக் கோள் ஒன்று உருவாகிக் கொண்டு இருப்பதும், இதில் தண்ணீர் உள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தண்ணீர், பனிக்கட்டிக ளின் வடிவிலோ, ஹைட்ரஜன், ஆக்சிஜன் இணைந்து உருவாகிக் கொண்டிருக்கும் மூலக்கூறு வடிவிலோ இருக்க வேண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் வியாகி விடாமல் இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது. இதற்குத் தண்ணீர் அமைந்துள்ள பகுதி, தூசுகளா ல் அல்லது நீராவியால் மூடப்பட்டிருப்பது காரணமாக இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

 

🔥காட்டுத்தீ கேமரா

காட்டுத்தீ ஏற்பட்டவுடன் அதைப் பரவாமல் கட்டுப்படுத்த, முதன்முறையாக பானோ ஏஐ (Pano AI) எனும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது அமெரிக்காவின் 6.2 ஏக்கர் காடுகளைக் கேமராக்களின் துணையோடு கண்காணிக்கிறது.

 

🛄புதிய ப்ளாஸ்டிக்-பை

ஹாங்காங்கில் உள்ள சீனப் பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பாக்டீரிய செல்லுலோஸைப் பயன்படுத்தி ப்ளாஸ்டிக் தயாரித்துள்ளனர். இவை மிருதுவாக இருந்தாலும் லேசில் கிழியாது, ஆனால், எளிதில் மக்கும். சுற்றுச்சூழலைப் பாதிக்காது. ஒருமுறை பயன்படுத்தித் துாக்கி எரியும் பைகளுக்கு இவற்றைப் பயன்படுத்த முடியும்.

 

🌳கெட்ட கொழுப்புகளை அழிக்க...

சீனாவின் ஹைனான் தீவை பூர்விகமாகக் கொண்ட மல்லோடஸ் புரெடியானஸ் தாவரத்தில், கெட்ட கொழுப்புகளை அழிக்கும் பண்பு உள்ளதை ஜப்பானின் ஒசாகா பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலிகளிடையேயான சோதனையில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதை அடுத்து, மனிதர்களில் உடல் பருமன், கொழுப்பு கல்லீரல் நோயைச் சரி செய்ய இத்தாவரத்தைப் பயன்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

👗மறுசுழற்சியாகும் பாலியெஸ்டர் துணிகள்!

பாலியெஸ்டர் துணிகள் நீண்ட காலம் நீடிப்பவை, இலகுவானவை, விரைவாக உலர்பவை, சுத்தம் செய்ய எளிதானவை. அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்தே நல்ல வரவேற்பைப் பெற்றவை. ஆனால், இவற்றை உற்பத்தியில் செய்யும்போது அதிகளவு புதைபடிவ எரிபொருட்கள் செலவாகின்றன. அதோடு நிறைய கரியமில வாயுவையும் உருவாக்குகின்றன. தேவை மு டித்தவுடன், மறுசுழற்சி செய்யப்படாமல் குப்பைக் கிடங்கில் போடப்படுகின்றன. இதனால் கடுமையான சுற்றுச்சூழ ல் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கோபன்ஹேகன் பல்கலை ஆய்வாளர்கள் பாலியெ யெஸ்டர் துணிகளை மறுசுழற்சி செய்வதற்கான எளிய வழிமுறையை உருவாக்கி உள்ளனர். பாலியெஸ்டர் உடைகளைச் சிறிய துண்டுகளாக வெட்டி, அதோடு கரைப்பான், அமோனியம் கார்பனேட் உப்பு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றை 160 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்கி, 24 மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். இப்படிச் செய் தால், பிளாஸ்டிக்கும் பருத்தி இழைகளும் வெவ்வேறு அடுக்குகளாகப் பிரிந்து தங்கிவிடும். பிரிக்கப்பட்ட இழை களை மறுசுழற்சி செய்வது சுலபம். இது ஓர் எளிய, செலவு குறைந்த செயல்முறை. இதை வணிக ரீதியாக பெரியளவில் செய்வதற்கு முன்னெடுப்புகள் இனி துவங்கும்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment