சிரிக்க... சில நிமிடம்

நகைச்சுவை- ஜோக்ஸ்


அலாவுதீன் பூதம்

ஒருமுறை சர்தார்ஜிடம் அலாவுதீன் பூதம் மாட்டிக் கொண்டது

 அது சர்தார்ஜியி டம், "சரி உனக்கு ஒரே ஒரு வாய்ப்பு இருக்கிறது.உனக்கு வேண்டிய வரத்தினைக் கேள்" என்றது.

சர்தாஜியும் நிறைய யோசித்துவிட்டு  "எனது அறிவை 100 மடங்கு அதிகமாக ஆக்கு" என்று கேட்டார்.

 பூதம் சிரித்துக்கொண்டே சொன்னது "பூஜ்ஜியத்தை எவ்வளவு தரம் பெருக்கினாலும் பூஜ்யம் தான்" என்று சொல்லிவிட்டு மறைந்தது.

 

 

வித்தியாசமான கார்

ஒரு பெண்மணியின் கார் தொலைந்து விட்டது. புகார் கொடுக்க சர்தார்ஜி ஆகிய  ஒரு போலீசிடம் அவள்  வந்தாள்.

 சர்தார்ஜி  அவளிடம் கேட்டார்  "உங்கள் காரின் பெயர் என்ன?" அவள், "  பெயரினை  மறந்து விட்டேன். T யில  ஸ்டார்ட் ஆகும்."என்று சொன்னாள்.

அப்பொழுது சர்தார்ஜி "சரி எனக்குப்  பெட்ரோல்ல ஸ்டார்ட் ஆகுற கார் தான் தெரியும்” என்று கூறினாரே பார்க்கலாம்.

 

சர்தார் எஸ் எம் எஸ்

மாசமாய் இருக்கும் தன் மனைவிக்கு சர்தார்ஜி  SMS  அனுப்பினார்.

 சில வினாடியில்  ரிப்போர்ட் வந்தது.

 பலே பலே என்று குதிக்க ஆரம்பித்தார் சர்தார்ஜி.

  ஏன் என்று கேட்டதற்கு சர்தாஜியின் SMS ற்கு போன் கொடுத்த மெசேஜ் (மனைவியின் பதில் என எண்ணி)- பதிலை காட்டினார். அதில் டெலிவரி என்று இருந்தது.

 

ஆறாவது மாதம்

 இன்டர்வியூ எடுப்பவர்: வேலைக்கு சேரும்போது மாதம் 5000 ரூபாய் சம்பளம் தரப்படும். ஆறாவது மாதத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்  ஆக அதிகரிக்கப்படும்.

சர்தார்ஜி: அப்ப நான் ஆறாவது மாதமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.

 

ரேட் ஜாஸ்திமா

சர்தாஜியும் மனைவியும் ஒரு காபி ஷாப்புக்கு போனாங்கள். சர்வரை கூப்பிட்டு

 "தம்பி ஹொட் காபி கொடு, ஒரு எக்ஸ்ட்ரா டம்ளர் கொடுப்பா" என்று கேட்டார்.

 மனைவி கடிந்து கொண்டார், "நான் கோல்ட் காப்பி தானே கேட்டேன்""

 சர்தாஜி: அதுக்குத்தான் நான் ஒரு எக்ஸ்ரா டம்ளர் கேட்டிருக்கிறேனே. உனக்கு நான் ஆத்தித் தரேன். அவங்களே ஆத்திக் கொடுத்தால் ரேட் ஜாஸ்திமா! புரிஞ்சுக்கோ!

 

2400 கிலோமீட்டர்

 உடல் எடையை குறைப்பதற்காக சர்தார்ஜி  ஒரு டாக்டரிடம் போனார்.

"தினமும் 8 கிலோமீட்டர் நடந்தால் 300 நாட்களில் 34 கிலோ குறைஞ்சிடும்" என்று டாக்டர் சொன்னார்.

 300 நாட்கள் கடந்துவிட்டது.  டாக்டருக்கு போன் செய்த சர்தார்ஜி, "நீங்கள் சொன்ன மாதிரியே உடல் உழைச்சு போச்சு டொக்டர். என் வீட்டிலிருந்து நான் இப்பொழுது 2400 கிலோமீட்டர் தாண்டி வந்திருக்கேன். இனி நான்  என்ன செய்யட்டும் டொக்டர்."

 

பீட்ஸா ஓடர்

சர்தாஜி ஒரு பீட் ஸா  கடைக்குப் போய் பீட் ஸா ஓடர் செய்தார்.

கடைக்காரர்:பீட்ஸாவை 6 துண்டுகளாக வெட்டித்தரவா அல்லது 12 துண்டுகளாக வெட்டித் தரவா?

சர்தாஜி: 6 துண்டுகளாக வெட்டுங்க,என்னால 12 துண்டுகள் எல்லாம் சாப்பிட முடியாது.

 

பாண்டா சிங் என் தம்பி

சர்தார்ஜி  ஒருவர் ரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இன்டர்வியூவில் கலந்து கொண்டார்.

 "இரண்டு இரயில்கள்  அதி வேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால், நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள்" என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி  இவ்வாறு பதில் சொன்னாராம், "நான் முதலில் திரு பாண்டா சிங் அவர்களுக்கு தகவல் தெரிவிப்பேன்"

 "யார் அந்த பாண்டா சிங்" என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், "பாண்டா சிங் என் தம்பி. அவன் இதுவரை ஒரு இரயில் விபத்தை கூட நேரில் பார்த்ததே இல்லை."

தொகுப்பு : செல்லத்துரை மனுவேந்தன்

 

No comments:

Post a Comment