[ஒரு அலசல்- தமிழிலும் ஆங்கிலத்திலும்]
லியோனாட் வூல்லே 1920 ஆண்டு ஊர் நகரத்தில் அகழ்வாராய்ச்சி செய்த போது, ஒரு கொடிய மர்மத்தை அம்பலப்படுத்தினார்.
ஊர் நகரத்தின் அரசனோ அல்லது இராணியோ
இறக்கும் போது, பல பணியாளர்கள் மறுமையிலும் அவர்களுக்கு பணி செய்யவென அவர்களை தொடர்ந்து அங்கு, அந்த கல்லறையில் விஷம் அருந்தி தமது உயிரை விடுகிறார்கள் என்பதே. [அரசி ஷுபாத் [Queen Shubad / Puabi] தனது 52 பணியாளருடன் அடக்கம் செய்யப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது]
என்றாலும் மனித பலியீடு அரியதாகவே நடந்துள்ளது என சுமேரிய அறிஞர்கள் நம்புகிறார்கள். இது அவர்கள் மறுமையை நம்புகிறார்கள் என்பதை திட்ட வட்டமாக எடுத்து
சொல்கிறது. மேலும் பொது மக்கள் கூட, மறுமையில் அவர்கள் பாவிப்பதற்காக அவர்களின் சொந்தமான பொருட்களில் சில, அவர்களுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டன. உதாரணமாக, கொல்லன் அவனது சில உபகரணங்களுடனும் ஒரு போர் வீரன் அவனது ஆயுதம், கவசம் உடனும் அடக்கம் செய்யப் பட்டனர். பயிர்கள் வளர்வது ஆண் தெய்வம் தனது மனைவியாகிய பெண் தெய்வத்துடன் கூடலால் ஆகும் என சுமேரியர்கள் நம்பினார்கள். சூடான உலர்ந்த கோடையில் புல்வெளிகளும் வயல்வெளிகளும் பழுப்பு நிறத்திற்கு
மாறுவதை இந்த தெய்வங்கள் இறக்கும் காலமாக பார்த்தார்கள். அவை மீண்டும் செழித்து வளர்கிற போது இந்த ஆண் பெண் தெய்வங்கள் புத்துயிர் பெறுவதாக நம்பினர். இதை
வருடப் பிறப்பாக / ஆண்டின் தொடக்கமாக குறிப்பிட்டு, அதை ஆலயத்தில் இசையுடனும் பாடலுடனும் கொண்டாடினார்கள். தமக்கு தேவையான அத்தனையையும் ஆண்டவன்
கொடுத்து உள்ளார் என சுமேரியர் நம்பினர். அதனால் ஆண்டவனின் நோக்கம் நல்லதே என கருதினர். மேலும் ஆண்டவன் மிக பலம் உள்ளவராகவும் உலகை கட்டுப்
படுத்துபவராகவும் உள்ளார் எனவும் நம்பினர். அப்படி ஆயின் தமக்கு ஏற்படும் துயரங்களுக்கும், இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் அவர்களுக்கு ஒரு விளக்கம் தேவைப் பட்டது. ஆண்டவனை கோப மூட்டும், சினங் கொள்ளுவிக்கும் மனிதனின் செயலே இதற்கு காரணம் என முடிவு எடுத்தனர். அதை மனிதனின் பாவச் செயல் என வர்ணித்தனர். எவராவது
ஆண்டவனை வெறுப்பூட்டினால், ஆண்டவன் பேயை அனுப்பி அந்த பாவச் செயல் செய்தவருக்கு தண்டனையாக உடல் நலமின்மை, நோய், இயற்கை அழிவு முதலியவற்றை
கொடுப்பதாக நம்பினர். பேய்கள் இரு வகையாக இருந்தன. ஒன்று நல்ல பேய் மற்றது தீய பேய். பாவச் செயலுக்கு தண்டனை அளிக்க, ஆண்டவன் கெட்ட பேய்களை அனுப்புகிறார் என எண்ணினர். உதாரணமாக, லமாஸ்டு [Lamastu] பேய்கள் புதிதாக பிறந்த குழந்தைகளின் மரணத்துடன் சம்பந்தப் பட்டது. அதே போல, கல [gala] பேய்கள் ஒருவரின் கனவுக்குள்
ஊடுருவக் கூடியது. ஆகவே ஒருவர் பாதிக்கப் பட்டால், ஆண்டவனை திட்டுவதால் ஒரு பயனும் இல்லை. ஆண்டவனை பெருமைபடுத்தி, அவருக்கு முறையீடு செய்து பொறுமையாக ஆண்டவன் அந்த பாதிப்பில் இருந்து மீட்கும் வரை காத்து இருக்க வேண்டும் என சுமேரியர் எழுதினார்கள் .அங்கு எண்ணிறந்த பிரார்த்தனைகள் மற்றும் துதிப் பாடல்கள் கண்டு
எடுத்துள்ளார்கள். இந்த மதம் சார்ந்த நூல்கள் எமக்கு அவர்களின் உணர்வுகள், நம்பிக்கைகள் மற்றும் அச்ச உணர்வுகளை எமக்கு தெளிவு படுத்துகின்றன. உலகளாவிய
கேள்வியான, ஏன் சில மனிதர்கள் மற்றவர்களை விட கூடுதலாக துன்பப் படுகிறார்கள் என்பதற்கு அவை ஒரு விடையை தர முயல்கின்றன. இதை அவர்கள் தெய்வீக தண்டனைகள் என ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படியான ஒரு பபிலோனியன் நூல் ஒன்றில்:
தெய்வத்திற்கு எதிராக பாவம் செய்தாரா?
மூத்தோருக்கு எதிராக தீங்கு செய்தாரா ?
பொய் சொன்னாரா?
பிழையான தராசு பாவித்தாரா?
பிழையான கணக்கு வழக்கை ஏற்றுக் கொண்டாரா ?
பிழையான காணி எல்லைகளை ஏற்படுத்தினாரா?
அயலவர் வீட்டிற்குள் அத்து மீறி புகுந்தாரா?
அயலவரின் மனைவியை தீண்டினாரா?
இப்படி பல கேள்விகள் கேட்கப்படுகின்றன.
[Leonard W. King, Babylonian Religion and Mythology (London,
1899), pp. 218, 219.]
பண்டைய சுமேரியர்கள் எது சரி, எது பிழை என்பதை தெரிந்து இருந்தார்கள் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. உண்மையில், மேசொப்பொத்தேமியர்கள் தமது பாவ சுபாவத்தை அறிந்து இருந்தார்கள். ஆகவே, மன்னிப்பு அளிக்கும் படி தமது பிரார்த்தனைகளில் பாடினார்கள். அப்படியான பண்டைய சுமேரிய பிரார்த்தனை ஒன்றை கீழே தருகிறோம்.
"கடவுளே எனது வரம்பு கடந்த செயல் பல பல, பாவம் பெரிது,
"பெண் தேவதையே, எனது வரம்பு கடந்த செயல் பல பல, பாவம் பெரிது,
"நான் புரிந்த அக்கிரமம், உண்மையில் எனக்கு தெரியா,
நான் செய்த பாவம், உண்மையில் எனக்கு தெரியா,. . . .
"நான் செய்த குற்றத்தை, காற்று எடுத்து செல்ல அனுமதி,
"உடை போல், நான் செய்த தவறுகள் கிழிந்து போகட்டும்,
"கடவுளே, எனது வரம்பு மீறிய செயல்கள் ஏழு தரம் ஏழு, அதை அகற்றி விடு,
பெண் தேவதையே, எனது வரம்பு மீறிய செயல்கள் ஏழு தரம் ஏழு, அதை அகற்றி விடு,."
[Ferris J. Stephens in J. B. Pritchard, ed., Ancient Near
Eastern Texts Relating to the Old Testament (Princeton, 1950), pp. 391, 392.]
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி 23 தொடரும்...
{இணைத்த படங்கள்:
ஈனன்னா & "துமுழி" (Dumu Zi /அல்லது "தம்முசி" [ஆண் தெய்வம் தனது மனைவியாகிய பெண் தெய்வத்துடன்] ,
அரசி ஷுபாத்தினது [Queen Shubad's /
Puabi's] மரண ஊர்வலம்,
அரசி ஷுபாத்தினது [Queen Shubad's /
Puabi's] கல்லறை,
சுமேரிய நகரம் ஊரில் ஒரு தெரு காட்சி}
An analysis of history
of Tamil religion – PART:22
[ In English and Tamil]
One of the mysteries and controversies about Sumerian
religion is the question of human sacrifice. When the tombs of several kings
and queens of Ur were excavated in the 1920s by Sir Leonard Woolley, the
British archaeologist Besides gold,
Jewellery, and various art objects, He uncovered a grim secret; whenever a king
or queen died in Ur, dozens of servants followed the royal person into the
grave and drank poison so they could
serve in the next life as well. [found that
Queen Shubad [or Puabi] was buried with 52 attendants]
However, Scholars believe that human sacrifice in Sumeria was
rare. This seem to tell us that the Sumerians definitely believed in life after
death. The servants may very well have
taken their own life to join and serve the Sumerian royalty in the
afterlife. Even everyday people were probably buried with some of their
belongings to use in the afterlife. For instance, a metal smith might be
buried with some of his tools, or a soldier with his weapons
and Armour. The Sumerians believed that crops grew because of a male god mating
with his goddess wife. They saw the hot and dry months of summer when their
meadows and fields turned brown as a time of death of these gods. When their
fields bloomed again, they believed their gods were resurrected. They marked
this as the beginning of their year, which
they celebrated at their temples with music and singing. Believing that
the gods had given them all they had, the Sumerians saw the intentions of their
gods as good. Believing that their gods had great powers and controlled
their world, they needed an explanation for their hardships and
misfortunes. They concluded that these were the result of human deeds that
displeased the gods – in a word, sin.
They believed that when someone displeased their gods, these
gods let demons punish the offender with sickness, disease or environmental
disasters. Demons were viewed as being either good or evil. Evil demons
were thought to be agents of the gods sent to carry out
divine orders, often as punishment for sins. For example, Lamastu - demons were
associated with the death of newborn babies; gala - demons could enter one’s dreams. Therefore, Sumerian wrote that,
when one suffered it was best not to curse the gods but to glorify them, to
appeal to them, and to wait patiently for their deliverance. Numerous prayers,
hymns, and texts of admonition have come to light during the last century and a
half among literally thousands of cuneiform tablets written by the ancient
people of the Mesopotamian valley. These
religious texts give us a rather
comprehensive insight into their feelings, hopes, and fears. They tried to find
answers to such universal questions as why some men suffer more than others
from misfortunes or calamities,
considered by them to be divine punishments. In one such Babylonian text the
following questions are raised:
"Has he committed a sin against a god or against a
goddess?
"Has he done violence to one older than himself?
"Has he said yes for no, or no for yes?
"Has he used false scales?
"Has he accepted a wrong account?
"Has he set up a false landmark?
"Has he broken into his neighbor's house?
"Has he come near his neighbor's wife?
"Has he shed his neighbor's blood?"
[ Leonard W. King, Babylonian Religion and Mythology (London,
1899), pp. 218, 219.]
These questions indicate that the ancient Babylonians
considered not only that sins committed against gods produced punishment in
this life, but also that sins against society called for divine retribution.
This text shows clearly that the ancient Babylonians knew what was morally
right and wrong. In fact, the ancient people of Mesopotamia were so conscious
of their sinful nature and the need for forgiveness that they frequently included in their prayers Urgent requests for
pardon. An old Sumerian prayer, for example, includes even pleas for
forgiveness of sins committed in ignorance:
"O god whom I know or do not know, (my) transgressions
are many; great are (my) sins.
"O goddess whom I know or do not know, (my)
transgressions are many; great are (my) sins.
"The transgressions which I have committed, indeed I do
not know; "
The sins which I have done, indeed I do not know. . . .
"The transgressions which I have committed, let the wind
carry away;
"My many misdeeds strip off like a garment.
"O my god, (my) transgressions are seven times seven;
remove my transgress ions;
"O my goddess, (my) transgressions are seven times
seven; remove my transgress ions."
[Ferris J. Stephens in J. B. Pritchard, ed., Ancient Near
Eastern Texts Relating to the Old Testament (Princeton, 1950), pp. 391, 392.]
[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]
Part 23 Will follow
{Pictures
attached:
inanna & dumuzi [a male god with his
goddess wife],
The funeral procession of Queen Pu-abi,
Pu-abi's gravesite,
A street scene at UR}
0 comments:
Post a Comment