[தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு அலசல்]
மெசொப்பொத்தேமியா மக்களின் இலக்கியமான கில்கமெஷ் காப்பியம் [Epic of Gilgamesh] மரணம் பற்றிய அவர்களின் பார்வையையும் மறுமை [after life] பற்றிய விபரங்களையும் காட்டுகிறது. அது மட்டும் அல்ல, அவர்களிடம் மரணத்திற்கான கடவுள் ஒருவரும் இருந்தார். அங்கே ஈனன்னாவின் சகோதரி, எரேஸ் கி கல் [Ereshkigal] மரண
தேவதையாகவும் பாதாள உலகின் ராணியாகவும் இருக்கிறார். களி மண்ணையும் இல்லு-வே அல்லது வே-இல்லு [Illu-we or We-ilu] என்ற ஒரு கலகக்கார தெய்வத்தினை கொலை செய்து, அவரின் இரத்தத்தையும் கலந்து மனிதன் தோற்று விக்கப்பட்டிருந்தாலும், இதனால், மனிதன் ஒரு பூவுலக மற்றும் ஒரு தெய்வீக கூறுகளை கொண்டிருந்தாலும், மெசொப்பொத்தேமியா தொன்மவியல் மூலம் மனிதன் சாவில்லாதவர் அல்ல என்பதை அறிகிறோம். அது மட்டும் அல்ல, உடல் உயிர்த்தெழுதல் அல்லது உயிர் கூடு விட்டுக் கூடு
பாய்தல் போன்ற எந்த கொள்கையையும் அல்லது கருத்துக்களையும் அது கொண்டிருக்கவில்லை. என்கி மனிதனை படைக்கும் போதே, மனிதனுக்கு சாவை கொடுத்து விடடார்
அல்லது விதித்து விடடார். ஆகவே, பொதுவாக, மெசொப்பொத்தேமியா நூல்களில் சாவை,'விதி வழி போதல்' [“to go to one’s fate”] என மறை முகமாக சொல்கிறார்கள். மனித உடல்
மரண மில்லாமை, என்றும் நிலைத்திருக்கும் தன்மையை அடைய தேடும் முயற்சி பயனற்றது என்பதை மெசொப்பொத்தேமியரின் கில்கமெஷ் காப்பியம் எமக்கு எடுத்துக்
காட்டுகிறது. இந்த இதி காசத்தில், ஒரு கட்டத்தில், என்கிடு சாவைப் பற்றிய தனது கவலையை கில்கமெஷிடம் தெரிவிக்கிறான். அதற்கு கில்கமெஷ் இவ்வுலகில் எவருமே
நிரந்தரமாக இருப்பதில்லை, நம் வாழ்வு குறுகியது, முகில் போலக் கலைந்து போகும்; என சிரித்து அதை நிராகரிக்கிறேன். என்றாலும், என்கிடு இறந்ததும், கில்கமெஷ் மிகவும்
கலக்கம் அடைந்து, குழப்பம் அடைந்து, நிலைவாழ்வை பெறுவதற்க்காக உட்னபிசிதிம் (Utnapishtim) என்ற கடவுளை நாடிச் சென்றான். உட்னபிசிதிம் ஊழிவெள்ளம் பற்றிய கதையை சொல்லி, கில்கமெஷிற்றுக்கு சாவற்ற வரத்தை பெற முயற்சிக்கும் வேட்கை வீணானது, ஏனென்றால், மனிதனின் படைப்பில் இறப்பு என்ற விதையும் புதைக்கப் பட்டுள்ளது. அதனால், இறப்பில் இருந்து எவராலும் தப்ப முடியாது, கடவுள் வேண்டு மென்றே இப்படி செய்தார் என விவரித்தார். கில்கமெஷின் மரணமில்லாமை பற்றிய ரகசியத்தை அறியும் பயணத்தை இந்த நூல் கூறியது. என்றாலும், அவர் உருக் நகருக்கு இறுதியாக திரும்பும் போது, ஒரு உண்மையை கண்டு பிடித்தார். அதாவது, அவரும் மற்ற மனிதர்கள் போல் ஒரு நாள் கட்டாயம் இறப்பார். ஒருவன் செல்வந்தனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அழகாக இருந்தாலும் சரி, அழகற்றவனாக இருந்தாலும் சரி- அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். இது இயற்கையின் நியதி. ஆக மரணம் என்பது யாருக்கும் பிடிக்காத ஒரு விடயம் [சம்பவம்]. ஆனால் யாரும்
அதிலிருந்து எப்பவும் தப்பிக்கவே முடியாது என்பதை அவர் உணர்ந்தார். எனவே, மனித சாதனைகள் ஒன்று தான் இவ் உலகில் எமக்கு உண்டு. அது ஒன்று தான் மரணமில்லாமல்,
மனித இனம் வாழும் மட்டும் இவ் பூவுலகில் நிலைத்திருக்கும். ஆகவே, சிறந்த மனிதர்கள், இந்த பூவுலகில், தமது செயல்களாலும் சாதனைகளாலும், நிலையான புகழை அடைவதே சிறந்த வழி என்பதை, கில்கமெஷ் காப்பியம் சுட்டிக் காட்டுகிறது எனலாம். ஆகவே, மெசொப்பொத்தேமியா சமயத்தில், மரண மில்லாமை என்பது, உண்மையில்,
எதிர்கால தலைமுறையினரின் நினைவுகளில் குடியிருப்பதே ஆகும்.
மேலும் இறந்த உடலை அல்லது காலியான பிணத்தை [அக்காடியர்கள் மொழியில் :pagaru], மெசொப்பொத்தேமியா இலக்கியத்தில் ஆழ்ந்த உறக்கத்துடன் ஒப்பிடுகிறார்கள். மேலும் பூமியில் அடக்கம் செய்தவுடன், களி மண்ணில் இருந்து வடிவமைக்கப் பட்ட உடல் மீண்டும் களி மண்ணுக்கு திரும்புகிறது என நம்புகிறார்கள். மெசொப்பொத்தேமியர்கள் சாவை
ஒரு முடிந்த முடிவாக கருதவில்லை.
இறந்தவர்கள் ஆவி அல்லது பேயாக வாழ்கிறார்கள் என நம்புகிறார்கள். சுமேரிய மொழியில் அதை gidim என்றும் அக்காடியர்கள் மொழியில் eṭemmu என்றும் அழைக்கின்றனர்.
என்றாலும் இந்த ஆவி [eṭemmu], இறப்பதற்கு முன்பே மனித உடலில் இருந்ததா அல்லது இறக்கும் போது மட்டுமே அங்கு வந்ததா என்பது தெரியா? ஆகவே இறப்பு என்பது ஒரு நிலைமாறுபடுகின்ற, இடைக்கால நிலையாகும். எனவே, எகிப்தியர், இந்தியர் உட்பட மற்ற நாகரிகங்கள் போல் சுமேரியனும் மரணத்தின் பின்னர் மனித உயிருக்கு வாழ்க்கை / மறுமை
உண்டு என நம்பினார்கள். என்றாலும் மற்றவர்களை போல் இல்லாமல் சுமேரியர் தாம் மரணமானதும் கொடிய, இரக்கமற்ற பாதாள உலகத்திற்கு [underworld] / இருண்ட உலகொன்றுக்குச் செல்வதாகவும், அதன் பின் அங்கிருந்து தமக்கு என்றும் விடுதலை இல்லை என்றும் நம்புகிறார்கள். அது மட்டும் அல்ல தமது நாளாந்த வாழ்வில் என்றும் வியாபித்து இருந்த
கடும் உழைப்பில் இருந்தும் போரில் இருந்தும் ஒரு முழுதான ஓய்வு பெரும் இடமாக மறுமையை பார்த்தார்கள். மேலும், இந்த ஆவி, மனித உடல் சார்ந்த தேவைகளை, அதாவது பசி, தாகம் போன்றவற்றை கொண்டிருந்தன. ஆகவே, இந்த அச்சந்தருகிற, மிக மோசமான இடத்தில் மனிதர்களின் ஆவி [கூளி, குறளி] புழுதியை [தூசியை] சாப்பிடுவதாகவும்
வயிற்றினால் தவழ்ந்து செல்வதாகவும் நம்பினர். இந்த மிகக் கொடிய பயங்கரமான இடத்தை புழுதி வீடு ["house of dust"] என அழைத்தனர். இந்த பேய்த் தோற்றத்தில் ஒரு சில ஆண்டுகள் கழிந்த பின் அல்லது உயிர்கள் அங்கு துன்பமனுபவித்து சில காலத்தின் பின்னர், இறந்தவரின் ஆவி படிப் படியாகத் தேய்வுற்று மறக்கப் பட்ட நிலைக்கு மாறுகிறது. மேலும்
வெள்ளங்களைப் பற்றியும் உலகை மூழ்கடித்த ஏழுநாள் பெரு வெள்ளம் பற்றியும் பல நம்பிக்கைகள் அவர்களிடம் நிலவின. அவர்கள் பொதுவாக இறந்தவர்களை எரியூட்டுவதற்கு
பதிலாக அடக்கம் செய்தார்கள். இறந்தவர்களுக்கு சொந்தமான சில பொருட்களும் அவர்களுடன் சேர்ந்து அடக்கம் செய்யப்பட்டன. சடலங்களைப் புதைக்கும் போது சடலங்களுக்கு அருகில் சவக் குழியுள் உணவும் நீரும் வைக்கப் பட்டன. இதனால் ஆவி பசி கொள்ளாது என கருதினர். காலஞ் சென்றவர் மேல் ஆண்டவன் அன்பாக ஆதரவாக நடவடிக்கை மேற்
கொள்ள அவரை தூண்டும் முகமாக சிலவேளை அடக்கத்தின் பின் மாதம் ஒரு முறை நினைவுக் கொண்டாட்டம் கடைப் பிடித்தனர். இது அரச குடும்பத்தனரின் வழக்கமா அல்லது
எல்லோருக்கும் பொதுவானதா என்பது புரியவில்லை. அது மட்டும் அல்ல, உணவும் பானமும் படைப்பது இம்மைக்குரிய பாக்கியம் எனவும் கருதினர். இஷ்தாரின் பாதாள உலக வருகை ["The Descent of Ishtar to the Underworld"] என்ற காவியம் மூலம் இறந்தவருக்கு ஏன் சுமேரியர்கள் படைக்கிறார்கள் என்பதை நாம் அறியமுடிகிறது. இறந்தவர்கள் இருட்டில், களி மண்ணை சாப்பிட்டு, பறவைகள் போல சிறகுகளுடன் உடுத்து வாழும், "kur-nu-gi-a" என்று அழைக்கப்படும் திரும்பி வர முடியாத நாடு ஒன்றிற்கு போக ஒரு முறை இஷ்தார் [ஈனன்னா] எண்ணினார். இஷ்தார் பாதாள உலகின் முதலாவது வாசலிற்கு போனதும், அவர் காவலாளியை கூப்பிட்டு, "ஏ காவலாளியே, தயவு செய்து கதவை திறந்து என்னை உள்ளே போக விடு" என்று கேட்டார். ஆனால்,அவன் ஒன்றும் சொல்லாமல், கதவையும் திறக்காமல், அவளை கதவிற்கு மேலால் உற்றுப்பார்த்தான். எனவே அவள் காவலாளியை அச்சுறுத்தினால்.
"காவலாளியே, நீ இந்த வாசலை எனக்கு திறக்கா விட்டால், நான் இந்த வாசலை உடைத்து திறப்பேன், அது மட்டும் அல்ல, பயங்கரமான இருண்ட இடத்தில், வாழும் ஆவிகளை
பாதாள உலகில் இருந்து விடுவிப்பேன். உன் இரக்கமற்ற அரசியின் கைப்பிடியில் இருந்து விடுவித்து அந்த ஆவிகளை மனிதர்கள் வாழும் பூமிக்கு எடுத்து செல்வேன்!. இதனால்
ஆவிகள் அங்கு நிறைந்து, பெருகி உயிர் இனங்களை சாப்பிடும்" என எச்சரித்தாள். இதில் இருந்து இறந்தவருக்கு படைத்தலை ஒரு பயத்தின் அடிப் படையிலேயே கடைப்
பிடிக்கிறார்கள் என்பது எமக்கு புலன்படுகிறது. அப்படி சாந்தப்படுத்தா விட்டால், ஆவிகள் திரும்பி வந்து பல பல துன்பங்களை, சேதங்களை இவ் உலகிற்கு தரும். எனவே, இறந்த உடலுக்கு சரியான அடக்கமும், துயருறுதலும் தேவை. அப்ப தான் பிணம் அடுத்த உலகிற்கு நிலைமாற்றம் அடைந்து, அது [ஆவி] மீண்டும் திரும்பி இவ் உலகிற்கு வருவதை தடுக்கும். மேலும் கில்கமெஷ் காப்பியத்தின் 12 ஆவது முத்திரையும் மற்றும் சில நூல்களும், இருந்தவரின் ஆவியின் நல் வாழ்வு, அவர் எப்படி இறந்தார் என்பதிலும், அவரின் உடல் ஒழுங்காக அடக்கம் செய்யப் பட்டதா என்பதிலும், அவரின் உற்றார் உறவினர்கள் தொடர்ந்து அவருக்கு குறிப்பிட்ட திவசம் செய்கிறார்களா என்பதிலும் பொறுத்து உள்ளது என்கிறது. என்றாலும் ஒரு நேர்மையான, நியாயமான, தர்மம் கடைப் பிடித்தவரின் விதியும் [நிலையும்] மற்றும் ஒரு குற்றவாளி, சட்டத்தை மீறியவரின் விதியும் ஒன்றா அல்லது வெவ்வேறா என்பது புரியவில்லை. ஆனால், பாதாள உலகிலும், சமூக படிநிலை பேய்களுக்கு இடையிலும் கடைப்பிடிக்கப் பட்டது. அவர்களின் பாதாள உலக சமூக படிநிலை இரண்டு காரணியில் தங்கி இருந்தன. அவர் உயிருடன் இருந்த போது - இருந்த அவரின் சமூக நிலை மற்றும் அவர் இறந்த பின் - அவரின் உடலும் கல்லறையும் பெற்ற பராமரிப்பும், மரியாதையும் ஆகும்.
உதாரணமாக, சுமேரிய ஊரின் அரசனான ஊர் நம்முவின் இறப்பு [Death of Ur-Namma (Ur-Nammu)] பற்றிய நூல் இதை தெளிவாக சொல்கிறது. “பாதாள உலகின் உணவு கசப்பாகவும் நீர் உவர் நீராகவும் உள்ளது." எனவே, பேய்கள் தாம் வாழ்வதற்கு, படையல்கள் மூலம் கொடுக்கப்படும் உணவிலும் பானத்திலும் தங்கி இருந்தன. இப்படியான படையல்கள் இல்லாத இடத்து, அவை, பாதாள உலகில் பிச்சைக்காரனாக இருக்க வேண்டி இருந்தது. இப்படி திவசம் செய்து படைப்பது மூத்த ஆண் மகனின் பொறுப்பாக இருந்தது. இது தவறாமல், ஒழுங்காக தொடரும் மட்டும் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆவிகள் அமைதியாக பாதாள உலகில் இருந்தன. சாந்தப்படுத்தப்பட்ட பேய்கள் நண்பனாகவும் அவைகளை பூவுலகில்
வாழ்பவர்களுக்கு உதவ தூண்டக் கூடியதாகவும் இருந்தது. அது மட்டும் அல்ல, மனிதர்களை தீங்கு படுத்துவதில் இருந்து தடுக்கக் கூடியதாகவும் இருந்தது. ஆனால், ஒருவர் அப்படியான சரியான கல்லறை சடங்குகள் பெறாத இடத்து, அவர், அமைதியற்ற பேயாக அல்லது தீய பேயாக மாறுகிறார். வேறு சில வேளைகளிலும் இப்படி நடை பெறுகிறது.
உதாரணமாக, அடக்கம் செய்யாதவர்கள், வன்முறை அல்லது அகால மரணம் அடைந்தவர்கள், அல்லது கல்யாணம் ஆகாதவர்கள், இப்படி அமைதியற்ற பேயாக அலைகிறார்கள் என அறிய முடிகிறது. தம்மை இந்த நிலைக்கு உள்ளாக்கியவர்களை இப்படியான கொடூரமான, தீய பேய்கள் துரத்துகின்றன, பிடிக்கின்றன, துன்புறுத்துகின்றன. அது மட்டும் அல்ல, காதின் ஊடாக உள் நுழைந்து பற்றிக் கொள்கிறது. இப்படியான பேய்களின் கோபம் மக்களை பல விதத்தில் வறுத்துகின்றன. உதாரணமாக, Ludlul bēl nēmeqi என்ற பபிலோனியன் பாடல் ஒன்று, வேலைக்காரன் ஒருவனின் துன்பத்தை, வேதனையை இப்படி கூறுகிறது:
"உருக்குலைக்கும் நோய் என்னை வாட்டுகிறது,
அடிவானத்தில் இருந்து தீய காற்று வீசுகிறது,
பாதாளத்தில் இருந்து தொல்லை முளைக்கிறது,
எதிர்க்க முடியாத வலிமை போய் விட்டது,
மலையில் இருந்து லமாஸ்டு [Lamashtu] பேய் இறங்கி விட்டது"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி 22 தொடரும்
இணைத்த படங்கள்:
கில்கமெஷ் காப்பியம்,
திரும்ப வரமுடியாத நிலம் / நாடு,
ஈனன்னாவின் [இஷ்தாரின்] பாதாள உலக வருகை,
சிங்கத் தலை லமாஸ்டு [Lamashtu] பூதம் [பேய்].
மெசொப்பொத்தேமியரின் அடக்கம்
An
analysis of history of Tamil religion - PART: 21
[In English and Tamil]
The Epic of Gilgamesh, a literary of Mesopotamian people,
shows us several important pieces of information such as their views on death,
and their description of the after life. Also the Mesopotamian people had
gods for death. Ereshkigal (pronounced ay-RESH-kee-gal), sister of
Inanna, is the Sumerian Goddess of death and Queen of the Underworld. Though,
the gods created humans by mixing clay with the blood of a rebellious deity named Illu-we or We-ilu, Though, Humans
automatically contained both an earthly and a divine component due to this
action, Yet we find from the Mesopotamian mythology that the divine
element did not mean that humans were
immortal. The Mesopotamians had no concept of either physical resurrection or
metempsychosis. Rather, Enki (Akkadian 'Ea'), the Sumerian deity of wisdom and
magic, ordained death for humans from
their very inception. The most common
euphemism for dying in Mesopotamian texts is “to go to one’s fate”. The Epic of
Gilgamesh also suggests that the quest for physical immortality, was
futile. For example, In one stage,
Enkidu expresses his concerns about death, which Gilgamesh laughs off, telling
Enkidu that no one lives forever and that life is short. However, when Enkidu dies,
Gilgamesh is so distraught that he seeks
out Utnapishtim to learn the secret of immortality. Despite his hopes,
Utnapishtim tells Gilgamesh the story of the flood. He explains to Gilgamesh
that the quest for immortality is a futile one, as creation itself also contains the seed of death, making
it inescapable. The Gods, he explains, intentionally did this. Gilgamesh went
on his journey to find out the secret of immortality, and now's he found it:
that he will die like other humans.
Every one must die in one day, whether he is rich or poor, whether he is man or
woman, or whether he is handsome or ugly. It is the rule of the nature. Though
no one wants to die, They can't
escape from the very jaws of the death. So he realizes that human
accomplishments on earth are all we've got. Therefore, The Epic of Gilgamesh,
tells us that the best humans could strive for was enduring fame through their deeds and accomplishments on
earth. So, Immortality means in the Mesopotamian religion, was actualized in
the memory of future generations.
Also, Dead body [or empty cadavers, Akkadian equivalent,
pagaru] is compared to deep sleep in Mesopotamian literature and, upon burial
in the ground, they believe the body fashioned from clay “returned to
clay”. The Mesopotamians did not view
physical death as the ultimate end of life. The dead continued an animated
existence in the form of a spirit or ghost [Sumerian term gidim and its
Akkadian equivalent, eṭemmu]. It also
unclear whether the eṭemmu existed within the living body
prior to death, or whether it only came into existence at the moment of
physical death. Death was therefore a transitionary stage during which humans
were transformed from one state of
existence to another, Hence, Like most of other civilisations. such as the
Egyptians & Indians, We can assume that the Sumerians also believed, in an
afterlife. But in contrast to others, Sumerians believed that when they
died, they were descended into a grim underworld from which there was no
release. The Mesopotamians saw the afterlife as a resting place where they
would sit in all eternity doing nothing
and forgetting about the work and the wars that pervaded their everyday life.
Further, they believe that the eṭemmu retained corporeal needs such as hunger
and thirst. So, the Sumerians believed that in this awful place the spirits of
men ate dust and crawled on their bellies. This hellish place was known as the
"house of dust". After a years time of ghostly existence, the soul of
the deceased would fade away into oblivion.
They mainly buried their dead instead of cremating. Some treasured
belongings of them might go in the grave. Vessels filled with food and drink
were place near the body so the spirit wouldn't be hungry and return for food. sometimes in monthly memorials
thereafter in order to influence the gods to deal kindly with the departed.
Also, the offerings to the dead could be understand from the myth called
"The Descent of Ishtar to the
Underworld". Here, the fertility goddess decides to visit
kur-nu-gi-a ("the land of no return"), where the dead "live in darkness, eat clay, and are
clothed like birds with wings". When she got to the first gate of the Underworld, Ishtar [inanna] called out to the
watchman: “Yo watchman, please open this gate and let me enter!” The watchman’s
faced peered at her from over the gate. He didn’t say anything, but he didn’t
open the gate either. So She threatens the doorkeeper: “Watchman,
if you don’t open this gate for me I will force it open, I will break it down,
and I will set free all the dead that reside in this dreadful dark place. I
will set them free from their gloom and the rule of your merciless
mistress and take them to the land of the living! The dead will be so plentiful
on earth that they may eat the living". Given this background, it is not
surprising that offerings to the dead
were made in a spirit of fear; if not propitiated they would return and cause
all kinds of damage. So, proper burial and mourning of the corpse was essential
for the eṭemmu's transition to the next
world and preventing them to return to the living world, earth.
Further, providing food and drink was seen to give temporal blessings to the
giver while he was alive.
The twelfth tablet of the Gilgamesh Epic, which unfortunately
is preserved only in fragments, as well
as certain other texts, contains hints that the wellbeing of the dead person in
the hereafter was thought to depend on
the way he died, whether his body received a decent burial, and whether his
surviving relatives continued to offer the prescribed mortuary sacrifices for
him. Whether the fate of the righteous dead was considered to be the same as that of a criminal is never
clearly stated. Just as social hierarchies existed within living communities,
so too did a hierarchy between ghosts exist in the “great city” of the dead.
The status of an eṭemmu in the
netherworld was determined by two factors: the social status of the deceased
while alive, and the postmortem care its body and grave. For Example, As the Death of Urnamma
articulates, “The food of the
netherworld is bitter and the water is
brackish”. The ghost was therefore dependent on the living for
subsistence, which was provided through offerings of food and beverage. Absence
of offerings reduced the eṭemmu to a
beggar’s existence in the netherworld. The primary responsibility for
performing these offerings fell to the eldest son of the deceased. As long as
offerings continued regularly, the eṭemmu
remained at peace in the
netherworld. Pacified ghosts were friendly and could be induced to aid the
living, or at least were prevented from harming them. A person who did not
receive proper burial rites or cultic
offerings, however, became a restless ghost or vicious demon. Some cases
where this could occur included people who were left unburied, suffered a
violent death or other unnatural end, or died
unmarried. Vicious ghosts
pursued, seized, bound, or even physically abused their victims, and could also
possess victims by entering into them via their ears. They could also haunt the
dreams of the living. Sickness, both
physical and psychological, and misfortune were often believed to be caused by
the anger of a restless eṭemmu. For example, the suffering servant of the
Babylonian poem Ludlul bēl nēmeqi, also sometimes known in English as The Poem of the Righteous
Sufferer, deplores his fate:
"Debilitating Disease is let loose upon me:
An Evil Wind has blown [from the] horizon,
Headache has sprung up from the surface of the underworld….
The irresistible [Ghost] left Ekur
[The Lamastu - demon came] down from the mountain."
(Lines 50-55, Poem of the Righteous Sufferer)
[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]
Part 22 Will follow
[ Pictures attached:
The Epic of Gilgamesh,
"the land of no return",
Inanna's Descent to the Underworld,
Lion-headed Lamashtu demon,
Mesopotamian's burial]
No comments:
Post a Comment