"தமிழர் சமயமும் அதன் வரலாறும்” பகுதி: 20

 [தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு அலசல்]

 


தாயத்து ஒரு காலத்தில் தாலி அல்லது ஐம்படைதாலி என்று அழைக்கப் பட்டது. சிறுவர்களுக்கும் மணமான பெண்ணுக்கும் தாலி கொடுக்கப் பட்டது. குறிஞ்சி நிலக் குறவர்கள்  மற்றும் காடுகளில் வாழ்வோர் புலிப் பல், புலி நகம் ஆகியவற்றால் ஆன தாலிகளை அணிந்தனர். பெண்கள் மங்களச் சின்னங்கள் அல்லது கடவுளரின் திருவுருவங்கள் பொறித்த

தாலிகளை அணிந்தனர். பழைய காலத்தில் அணிந்த தாயத்துக்களே இப்படி தாலி போன்ற வடிவங்களில் இன்று பயன்படுத்தப் படுகின்றன என எண்கிறேன். உதாரணமாக

அகநானூறு 54:-  'பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி வருகுவை ஆயின் தருகு வென் பால்.' என கூறுகிறது.மற்றும் புறநானூறு 77 உம் :-  'தாலி களைந்தன்றும் இலனே பால் விட்டு

அயினியும் இன்று அயின்றனே' ,என்று இதை உறுதிப்படுத்துகிறது. மேலும் சங்கத் தமிழ் பெண்கள் மணம் முடிக்கும் போது தாயத்து [தாலி] அணிந்தனர் என்பதை புறநானுறும் 127 ம், மற்றும் சிலப்பதிகாரமும் [1-47 & 4-50] உறுதிப் படுத்துகின்றன. உதாரணமாக, சங்கப் புலவன் முடமோசியார் தனது புறம் 127 பாடலில், ‘’ உன் மனைவி கழுத்தில் உள்ள தாலி  ("ஈகை அரிய இழையணி மகளிரொடு") மட்டுமே கொடுக்க இயலாது. மற்ற எல்லாவற்றையும் நீ பரிசிலர்க்கு வழங்கி விட்டாய் என்கிறார். அத்துடன், ஐங்குறுநூறு 247, நோய்க்கி

மருந்தாக, தாயத்து கட்டுவதை எடுத்துக் காட்டுகிறது. காதல் வசப்பட்டு வாடும் மங்கையவள் உடல் உருகி, நிறம் மாறி தவிக்கும் நிலை கண்டு, அவளின் தாய் குறிஞ்சி நிலத்

தெய்வமான முருகனின் கோபத்தால் இந்த நிலையோ என எண்ணி விடுகின்றாள். அதற்குப் பரிகாரமாக சடங்குகள் செய்து தாயத்து கட்டுவிக்கிறாள் என்கிறது ஐங்குறுநூறு 247.

 

"அன்னை தந்தது ஆகுவது அறிவென்:

பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி,

'முருகு' என மொழியும் ஆயின்,

அரு வரை நாடன் பெயர்கொலோ, அதுவே?"

 

உன்னுடைய அழகிய இல்லத்தில் புது மணல் பரப்பி, உன் கையில் தாயத்தைக் கட்டி, முருகனின் கோபத்தை தணிப்பதற்கான சடங்குகளைச் செய்ய உன் தாய் ஏன் வேலனை

அழைத்தாள் என்று புரிகின்றது. ஒரு வேளை உன்னுடைய மலை நாட்டுக் காதலனின் பெயர் முருகனோ? என்கிறது இந்த பாடல். பண்டைய மெசொப்பொத்தேமியாவிலும்,  நோயில் இருந்து தம்மை விடுவிக்க, தாயத்தாக, கல் வைத்த கழுத்து மாலை அணிந்தனர். அப்படியான ஒன்று ஓமானில் [Dibba, Oman] கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதில் உள்ள கண்

வடிவ கல்லில் 'டே' 'ஜோ' '' ['De'  'Jo'  'La'] என குறிக்கப் பட்டுள்ளது.

 

மேலும் சங்க தமிழர்களிடம் காணப் பட்ட அல்லது எதிர்பார்க்கப் பட்ட சமூகம், பண்பாடு [கலாச்சாரம்], சமயம், தத்துவம் சார்ந்த முக்கிய அம்சங்களை புறநானுறு 192 மிக அழகாக  எடுத்துரைக்கிறது.

 

"யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே,

வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே

முனிவின் இன்னா தென்றலும் இலமே

மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது

திறவோர் காட்சியில் தெளிந்தனம்

ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"

 

[புறநானூறு 192]

 

எல்லா ஊரும் எம் ஊர், எல்லா மக்களும் எம் உறவினரே என உலகப் பொது மானிடக் கருத்தை, சமத்துவத்தின் ஆணிவேரான பிரேரணையை முன்வைக்கிறது. அதாவது யாதும் ஊரே என்பது பொதுவுடைமைக் கருத்து, யாவரும் கேளிர் என்பது சமதர்மக் கருத்து. இதை விட வேறு என்ன சொல்லி விட முடியும் ஒருவனால்? ஆனால் இன்னும் சொல்லப் பட்டிருக்கிறது அந்தப் பாடலில். உதாரணமாக:

 

ஒருவனுக்கு நேரும் தீங்கோ, நன்மையோ பிறர் தந்து வந்தது அன்று. ஒருவன் வருந்துவதும், வருத்தம் நீங்கித் தணிவதும்  அப்படிப் பட்டது தான். நமக்கு ஏற்படும் நன்மைக்கும்

தீமைக்கும் நாமே காரணமும் பொறுப்புமாவோம். தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். புறக்காரணிகளை குறை கூறுவதில் பயனில்லை. நாம் என்ன செய்தோமோ, அதைப் போறுத்தே இன்பமோ, துன்பமோ நம்மை சேரும், அல்லது அற்றுப் போகும். சாதல் புதுமை யில்லை; வாழ்தல் இன்ப மென்று மகிழ்ந்தது இல்லை. வெறுத்து வாழ்வு துன்ப மென ஒதுங்கியது மில்லை. எனவே துன்பம் வரும் போது வருந்துவதோ, இன்பம் வரும் போது மகிழ்வதோ

இங்கில்லை. வானம் மின்னி மழை பொழிந்து கல்லை உருட்டிக் கொண்டு இரைச்சலுடன் பாயும் வெள்ளத்தில் மிதந்தோடும் தெப்பம் போல நம் உயிர் மிதந்து ஓடும் என்பதையும்

நாம் மிக நன்றாக அறிவோம். எனவே பெருமைமிக்கவர்களாகவுள்ள பெரியோரை பார்த்து நாம் வியப்பதுவும் இல்லை, அதை விட, சிறியோரைப் பார்த்து நாம்  இகழ்வதுமில்லை.  எல்லாமே ஊர்தான், எல்லோருமே நமக்கு உறவினர்தான்! இப்படித்தான் தமிழர்கள் அன்று வாழ்ந்தார்கள்!!

[கந்தையாதில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

பகுதி 21 தொடரும்

  ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக/Click to read from the beginning


*அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக/CLICK TO READ NEXT PART, 

[இணைத்த படங்கள்:தாயத்து, கணியன் பூங்குன்றனார், தாலி]

 

An analysis of history of Tamil religion - PART:-20

 [In English and Tamil]

 

 

A Talisman is an inscribed ring or stone, supposed to be endowed with magic powers, especially averting evil from or bringing good luck to its holder. It is also a charm or amulet which is capable of working wonders.  Ancient Tamils used talismans from young age. Tamil children were given talismans made up of tiger nails or tiger tooth. That gave them courage to fight the evil. Tamils called it Aimpatai Thali or simply Thayathu. Tamil

Women wore talismans in yellow thread (Purananuru 127 ("ஈகை அரிய இழையணி மகளி ரொடு" ) and Tamil epic Silappathikaram says woman wore talismans  when they got married. [1-47:  அகலுள் மங்கல அணி எழுந்தது”] Even in ancient Mesopotamia, It is understood that people worn necklace with stone chiefly as a talisman against diseases. One of such Amulet discovered in Dibba, Oman,  which contains letters 'De' 'Jo' 'La' and were found engraved on an eye-shaped stone. Talismans are are found in the Vedas and in the Indus Valley Civilisation too.  Sangam literature is also replete with references to various religious rituals and beliefs of the ancient Tamils including the Talisman. Here in Ainkurunuru 247 it clearly says:

 

"I understand why mother brought

the vēlan to our rich house to

perform the veriyāttam ritual and

lift a talisman to tie on your arm.

 

If he says Murukan is the reason for

your distress, is that the name of your

lover from the country with mountains

that are difficult to scale?"

 

 

We find Purananuru 192 clearly reject division of mankind into various categories and emphasized the universality of all men. The Tamil bards and intellectualists of the time of Kaniyan Pungunranar and those preceding his age considered that all men, whatever their rank or station in life, were alike. Further Pungunranar states that the wooden log is carried by the water in its direction and similarly postulates that everything in life will

also follow Natural law. This he calls 'Way of Order'. Four of such 'Way of Order' [முறை வழி] is given below : Every human of every town is of the same value because they are கேளிர் (related). Hence, all people

should be bound by one, same moral and legal code. good (நன்று) and evil (தீது) do not come from others. Hence, humans are liable for both the pleasure and suffering they feel. Death is a natural part of the cycle of life, it is not new. Hence, this life must be made use of to its full potential. Yet, life should neither be full of pleasure (மகிழ்ச்சி), nor full of storms (புயல்) [of suffering]. Hence, life should be full of plenitude. He further

goes onto explain these principles with an example of a raft. He compares birth to lightning, suggesting it can happen spontaneously anywhere. He gives an example of a raft which is allegorical to human life going

downstream a steep hill, having a perilous journey through boulders and faces its climax just as Wiseman's vision [means fate], which is death. He concludes that since everyone's life is like the raft's journey,  it is irrational to magnify the accomplished people [பெரியோர்] and even worse to diminish less accomplished people [சிறியோர்],because everyone goes through similar tribulations whatever their social estate might be.

 

"All towns are ours.  Everyone is our kin.

Evil and goodness do not come to us from

others.

Nor do suffering and the ending of suffering.

Death is nothing new.  We do not rejoice

when living is sweet.  We do not say that living

is miserable in hatred.

Through the vision of those who have understood,

we know that precious life makes its way like a raft

riding a powerful huge river that roars endlessly,

fed by cold rains with bolts of lightning as it crashes

against rocks.

We are not awed by those who are great.  More

than that, we do not despise those who are weak!"

 

(Purananuru-192)

 

[Any village, we can live in. All people are relatives. Harm and happiness will never come from others. Likewise, sorrow and relief cannot attain from others. To die is not new. So, I do not say ‘the gift of living’ is sweet. On the same time I do not confess it sorrowful. The life in which we are enjoying is float that is moving, floating on the flood that flow dashing on rocks with sound after the rain-fall. I infer the truth after the living of energetic men (of struggling).So, I do not wonder the Man of Great by famous. Again I do not humiliate the Man of Littleness by virtue.]

 

The above verse sums up effectively the important aspects of the social, cultural, religious, and philosophical traditions of Tamils.

 

 

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

 

Part 21 Will follow

 

Pictures attached:

 

talisman [Thayathu],

Kaniyan Poongunranar

marriage badge, Thaali / தாலி

 

 

 

No comments:

Post a Comment