[தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு அலசல்]
தென் இந்தியாவின் ஆரம்ப கால அல்லது தொடக்க கால தமிழர் பண்பாடு மற்றும் இலக்கிய மரபு, அதிகமாக சங்க இலக்கியத்துடன் தொடர்புடையது. பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து, செய்யுட்கள் இயற்றிய அவையைச் ‘புணர்கூட்டு’ [சங்கம்] என்று கூறினர். தொல்லாணை நல்லா சிரியர்கள் பலரின் கூட்டமைப்பு அது
ஆகும் என சிறுபாணாற்றுப் படை, அடிகள் 761 - 763 இதை உறுதிப்படுத்துகிறது. சங்கம் என்பது கூட்டம். பொதுமைப்பட்ட எவற்றையும் செய்வதற்கு முன், கூடிப் பேசி
முடிவெடுத்தல் என்பது இனக் குழுத் தமிழரின் தொல் வழக்கம். அதனால் தான் செய்யுளைப் கூடிப் பேசி ஒப்புக் கொள்வதை புணர் கூட்டு என சுட்டிக் காட்டினார். தமிழ் நாட்டைத் தமிழர்களே ஆண்ட காலம் சங்ககாலம். அக்கால அரசில் தமிழொன்றே ஆட்சி மொழியாய் இருந்தது. இதை வரலாற்றாசிரியர்கள் பொற்காலம் என்றனர். பரிபாடல்,
திரு முருகாற்றுப் படை தவிர, இது ஒரு ஆண்டவனை துதி பாடும் மத பாடல்கள் அல்ல. ஆனால், சங்க கால மதத்தை, முக்கிய தொன்மையான அல்லது தொடக்க காலத்தைச் சேர்ந்த கடவுள்களையும் மற்றும் வழிபாட்டு அமைப்புகளையும் அல்லது முறைகளையும் இது எமக்கு தருகிறது. இதை மிகவும் நுணுக்கமாக ஆய்வு செய்யும் போது, அங்கு பல பாடல்கள்
மத சடங்குகளுடன் அல்லது குறிப்பிட்ட சில வழி பாட்டு மரபின் மூலத்துடன் தொடர்புடையது தெரிய வருகிறது. அங்கு ஒரு புனிதம் என்ற எண்ணமும் புலப்படுகிறது. பண்டைய
காலத்தை சேர்ந்த முக்கிய மூன்று தெய்வங்களாக முருகன், திருமால் மற்றும் கொற்றவையை சங்க பாடல்களில் காண முடிகிறது. மேலும் சங்க கால மக்கள் பேய் ஆவி ஆகியவற்றிலும் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
சிலப்பதிகாரத்தில் இயற்கைப் பிறழ்ந்த நிகழ்வுகளாக மோகினி, இடாகினிப் பேய், சதுக்க பூதம் என்றெல்லாம் பல நிகழ்வுகள் சுட்டிக் காட்டப் படுகின்றன. உதாரணமாக, “கழல்கண் கூளி”, எனவும் ‘இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய்’ எனவும் பேயைப் பற்றிக் கூறுகிறது சிலம்பு. மேலும் ஊர் கோட்டம், வேற் கோட்டம், வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம் எனக் காவல் தெய்வக் கோவில்கள் பற்றியும் சிலம்பு கூறுகின்றது. ஐயை கோட்டம் என கொற்றவை வழிபாடு பற்றியும், சாமியாடுதல் பற்றியும் இளங்கோ வடிகள் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தெய்வம் ஏறப்பெற்ற சாலினி கண்ணகியைப் புகழ்ந்து கூறுவதாக வரும் காட்சி மிகச் சிறப்பானது. பொதுவாக பேய் மரத்தில், போர்க் களத்தில், எரியும் சுடு காட்டில் இருப்பதாக பலர் நம்புகிறார்கள்.
சிலப்பதிகாரம் - மதுரை, புகார் காவல் தெய்வங்களையும் குறிப்பிடுகிறது. அவர்கள் கிராம தேவதைகளையும் நம்பினர். சங்க இலக்கியத்தில் பிந்திய நூலான
மணிமேகலையிலேயே- 'இறைவன் ஈசன்' என நின்ற சைவ வாதி நேர்படுதலும் [27 - 86/87] - என்ற வரிகளில் "சைவவாதி" [சைவசமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன்] என்ற சொல்லை காண்கிறோம். என்றாலும் சிவனை ஒரு தெய்வமாக மற்ற சங்க நூல்களில் கூறா விட்டாலும் அவரின் பண்புகளை, குறிப்புகளை குறிப்பிட்டுள்ளார்கள். உதாரணமாக, ' ஈர்ஞ்சடை யந்தணன்' என்று கலித் தொகை,38 இலும், 'முக்கண்ணான் மூவெயிலும்' என கலித் தொகை, 2 இலும், 'பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீலமணிமிடற் றொருவன்
[நீலமணி போலும் கரிய கழுத்தினை] போல' என புறம்:91 இலும், 'நன்றாய்ந்த நீணிமிர்சடை முது முதல்வன் [முழுமுதற் கடவுள்]' என புறம் 166 இலும், 'நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் [ஆலமர் செல்வன்]' என சிறுபாணாற்றுப்படை, 96-97 இலும் குறிக்கப்படுகிறார்.
ஆதி காலத்தில் மக்கள் பயத்தின் காரணமாக, விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்ப, இரவு நேரத்தில் மரங்களிலேயே குடியிருந்தனர். மரங்களில் பெருமரங்களே முதல்
மனிதர்கள் குடியிருந்த இடங்களாதலால், அப்பெருமரங்களிலேயே சிவனும் குடியிருப்பதாக எண்ணினர். ஆலமரம் மற்ற மரங்களைக் காட்டிலும் பெரிதாகவும், விரிந்து படர்ந்து விழுதுகளை இறக்கி நிலைப் பெற்றிருந்ததால், முதல் மனிதர்கள் தாங்கள் குடியிருந்த ஆலமரதிலேயே சிவனும் குடியிருப்பதாக எண்ணி ஆலமரத்தையே சிவனுக்குரிய
மரமாக கருதினர். "ஆலமர் செல்வன்" என்பதில் இருந்து மனித இனத்தின் முதல் கடவுள் சிவனே என்பது புலனாகிறது. முக்கண்ணனாகிய சிவனது கோயில் ஒன்றும் "முக்கட் செல்வர் நகர்" எனப் புறநானூற்றின் 6ம் பாடல் குறிக்கிறது. ஆகவே சைவ சமயம், பெயர் குறிப்பிடப்படாமல், கொள்கையளவில் பண்டைய காலத்தில் தமிழர் மத்தியில் இருந்துள்ளது.
அத்துடன், சங்க கால மக்கள் கனவு, கிரகங்கள் போன்றவை மனித வாழ்வில் செல்வாக்கு செலுத்துகின்றன எனவும் நம்பினர். மேலும் சில வற்றை, வரும் பேரிடரை அல்லது ஒரு செய்தியை முன் காட்டுகிற குறியாக கருதினர். உதாரணமாக, காக்கையின் கரைவு, விருந்தினர் வருவதை தெரிவிப்பதாக கருதினர். அங்கு ஆலயத்தில் கடவுள்கள் வழிபடப்பட்டனர். சக்கரவாளக் கோட்டத்தில் தூணில் வாழும் காவல் தெய்வம் பற்றி மணிமேகலை கூறுகிறது. என்றாலும் பொதுவாக, இன்று வரை தெய்வம் மரத்தின் கீழ் வைத்து வழிபடப்படுகிறது. பிணங்களைச் எரித்து அல்லது அதை வாளா இட்டும் [பிணத்தை அங்கு அழுகிக் கெட அல்லது கழுகுகள் மற்றும் நரிகளுக்கு எறிந்து விட்டு போதல்], அங்கு அடக்கம் செய்வதற்காக பிரத்யேகமாக தோண்டப் பட்ட குழியில் பிணத்தை இட்டும் சங்க கால தமிழர்கள் அடக்கம் செய்தார்கள். மேலும் சிலவேளை தாழ்ந்த இடங்களில் அடைத்து வைத்தும் அல்லது தாழியில் வைத்து மூடியும் [பிணத்தை நறுமணமூட்டி இறந்தோரை அடக்கஞ் செய்துவைக்கும் பானையுள் வைத்து அதன் வாயை மூடியும்] பல்வேறுவகையாக இறுதிச்சடங்குகள் செய்தார்கள். உதாரணமாக மணிமேகலை (6-11-66-69) இதை ஒரு வரிசை கிரமத்தில், கீழ் சுட்டிக் காட்டியவாறு, சொல்கிறது.
"சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர்
தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் றரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்"
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கம் இலக்கியம், தமிழரின் செல்வாக்கு நிறைந்த புகழ் பெற்ற தெய்வம், முருகன் கூட, சுமேரியர்கள் போலவே, மலையில், உயரத்தில் வாழ்வதாகவும், மக்கள் தமது நோயை, குறைகளை போக்க அவருக்கு காணிக்கை, படையல் செய்வதாகவும் கூறுகிறது. அப்படியான பாடல் ஒன்றை, அகநானூறு 22 - கிழே தருகிறோம்.
"அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
.................................................................
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,
முருகு ஆற்றுப்படுத்த ..............................."
[அகநானூறு 22]
தெய்வமுடைய நீண்ட மலையுச்சியினின்று விழும் கூட்டமாய அருவிகளையுடைய காடு பொருந்திய நாட்டையுடைய நம் தலைவனது .......... ... வேலனும் (மலை நாட்டுப் பூசாரி)
வெறியாடும் களத்தை நன்கு அமைத்து முருகனுடைய வேலுக்கு மாலை சூடினான். சத்தமாகப் பாடிப் பலி கொடுத்தான். அழகிய சிவந்த தினையினை குருதியுடன் கலந்து தூவி
முருகனை வருமாறு அழைத்தான் என்கிறது.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி 20 தொடரும்
[இணைத்த படங்கள்:
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்கள்,
கொற்றவை,வேலன் வெறியாட்டு, மரத்தின் கீழ் சிவன்]
An analysis of history of Tamil religion – PART:19
[ In English
and Tamil]
The initial stage of Tamil
cultural and literary tradition in south India is connected with the so-called
Sangam, a poetic academy held by kings of the Paṇdiya dynasty, in which the
word Sangam signifies a congregation of
monks, scholars, or disciples. Historians regard the Sangam period as the
‘classical age’ of the Tamils analogous to the age of the classics in Greece
and Rome and to that of the Renaissance of later period in Europe. Some even
consider the Sangam age as the ‘Golden age’ of the Tamils, which marked a
unique epoch in the history of the Tamilakam. It is not a religious poetry (in
the sense of praising gods), with the exception of the anthology Paripadal and
the poem Tirumurukaṟṟupadai, but the religion of the age, the main mythological
figures, and the forms of worship are reflected by it. On close inspection,
many poems can be
associated with religious
rituals or have roots in a certain cultic activity. A notion of the sacred is
also present. Three mythological persons stand out prominently in the poetry:
Murukaṉ, Tirumal, and (much less) the
goddess Koṟṟavai. The people
of Sangam age also believed in ghosts and spirits. There is the mention of the
“Pootham” [Chathukka Bootham / பூதம் / goblins] in Silappathikaram. Many believed in demons residing on
tress, battle -fields and burning ghats
“drinking blood and combing their hair with hands soaked in blood.” The same text also refers to minor deities
like guardian deities of Mathurai and Puhar.
They also believed in the village gods.
The term Saivism
[Saivavaathi / "சைவவாதி" - One who argues for Saivism] is mentioned only in Manimekalai.
Though Siva as a deity is not mentioned in other texts, However, he is referred
to by his attributes like – “the ancient first Lord”, “the Lord with the blue
beautiful throat” and “the god under the
banyan tree”. So, in early times Saivism seem to have existed in the Tamil
region only in principle and not by name. The Sangam
age people also believed in
dreams and influence of planets on human life. Certain ominous signs were
popularly observed. For example, the cawing of the crow was considered as an
omen of the coming guest, who
was eagerly waited.
Kurunthogai mentions that the crow was considered a good harbinger and was fed
with rice and ghee. Sneezing was held inauspicious. The sophisticated aspect of
the Sangam religion was the
worship of gods and
goddesses in temples. Manimekalai refers to a very big brick called Chakravalak
kottam [சக்கரவாளக் கோட்டம்]. However, in many cases, as till today, the deities were often set up
under
trees. The method of worship
generally consisted of dancing and offering flowers, rice and meat to the gods.
Dead were disposed either by
cremation, burial or by being left in open to vultures or jackals. Tamil
literature ‘Manimekalai,' one of the twin epics of post Sangam period‘ mentions
about the methodology and burial
practices followed by Tamils in ancient Tamilakam in
order, When, Sutamati asked to know the reason why the goddess called the place
by that name.'Sudukattu Kottam', The
goddess said along with the other things
that, this place, a cemetery or graveyard, where, A small space is set apart
for burning corpses; another where the corpses are simply thrown; a third where
the corpses are actually buried in graves dug in the
earth; others where corpses
are set in small chambers made in the earth, their mouths being closed
afterwards; and lastly another part where corpses are left covered over by huge
earthern pots.
"சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர்
தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர்"
i.e, cremators (suduvor சுடுவோர்), leave dead body to decay (iduvor இடுவோர்), entomb the dead body in small low
lying chambers (Thazhvayin - Adaippor தாழ்வாயின் அடைப்போர்) and embalm the dead body in burial urn and cover mouth (Thazhiyir -
Kavippor தாழியிர் கவிப்போர்)
[Manimekala / (6 -11 - 66 -
69)
We also learned from Sangam
literature that the popular god of Tamil living in mountain as in Sumeria,
where, temple at the very top of the Ziggurats & people worshipped him with
offerings to cure their distresses. One
such poem- Akananuru 22
- is given below:
"He’s from the country
where gods live
in tall mountains and
forests abound
with waterfalls.
..........................
A pavilion is well erected,
a spear is
garlanded, and our big house
reverberates
with loud music. Ritualistic offerings of
beautiful red millet mixed
with blood are
given to Murukan, to appease
him, in the
middle of the fierce night,
.................... "
[Kandiah
Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
Part 20 Will follow…..
[Pictures attached:
Pandya kings who patronage Tamil Sangam ,
Korravai, Velan Veriyattu, Siva under the banyan tree]
0 comments:
Post a Comment