"தமிழர் சமயமும் அதன் வரலாறும்”/பகுதி: 18

[தமிழிலும் ஆங்கிலத்திலும் -ஒரு அலசல்]

 


ஞாயிற்றுக் கிழமையில் தேவாலயம் அல்லது வெள்ளிக் கிழமையில் ஆலயம் என்பது போல, சுமேரியர்களுக்கு சமயம் இருக்க வில்லை. அவர்கள் ஒவ்வொரு நாளும் எல்லா நேரமும் இறை வழிபாடு செய்தார்கள். அவர்களின் ஒவ் வொரு நடவடிக்கையையும் அல்லது செயலையும் அவர்களின் கடவுளே கட்டுப் படுத்தியது. இதனால் கடவுளுக்கு பணியாற்றுவதே இந்த உலகில் அவர்களின் பங்கு என சுமேரியர்கள் நம்பினார்கள். கடவுள் நல்லவராகவோ அல்லது கெட்டவராகவோ இருக்க வில்லை. கடவுள் வெறுமனே மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார். அத்துடன் அவரை இடைவிடாது சாந்தப் படுத்த வேண்டியும் இருந்தது. இதன் பொருட்டு, பண்டைய சுமேரியர், கடவுளின் கருணையை உறுதி செய்ய, தமது கூடிய நேரங்களை வழிபாட்டிற்கும், பிரார்த்தணைக்கும், தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுத்தலுக்கும் ஒதிக்கினார்கள். தெய்வங்களுக்கு உணவு படைத்தலும் மிருகங்கள் பலியிடுதலும் வழமையாக இருந்தன. பக்தர்கள் ஆலயத்திற்கு தானம் கொடுத்தார்கள். மத குருவே ஆண்டவனுடன் கதைத்து தமது கொடையை ஆண்டவனுக்கு வழங்குவார் என நம்பினர். அதனால் தானத்தை மத குருவிடம் கொடுத்தனர். "உருவ சிலைகள், தாயத்துக்கள், மந்திரங்கள்" [Idols, amulets and charms] அங்கு முக்கியமாக இருந்தன. பொது மக்களின் நாளாந்த பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பதை விட வேறு முக்கிய வேலைகள் தலைமை கடவுள்களுக்கு இருக்கிறது என் நம்பினர். ஆகவே தனிப் பட்ட கடவுள்கள் ஏற்படுத்தப் பட்டு அவரை தலைமை கடவுள்களுக்கும் மக்களுக்கும் இடையில் இடைத் தரகர்களாக பாவித்தார்கள். அதாவது தனிப்பட்ட கடவுள்கள் மக்களின் பிரார்த்தனையை கேட்டு அதை தலைமை கடவுள்களுக்கு அஞ்சல் செய்வதாக கருதினார்கள்.

 

வீடு, தாயகம் என்ற கோட்பாடு மேலும் வளர்ச்சி அடைய, முதன்மையான இயற்கை கடவுளை தவிர ஒவ்வொரு நகரமும் தமக்கு என சிறப்புமிக்க தனிப்பட்ட கடவுளை வைத்திருக்க தொடங்கினார்கள். இந்த சிறப்பு மிக்க கடவுள் தான் தமது நகரத்தை, தமது நிலத்தை, தமது மக்களை, ஆள்பவர் என நம்பினர். ஆகவே இவரே தம் தாயகத்தின் தலைவர் என போற்றினர். அங்கு இந்த கடவுளிற்கு பதிலாக உண்மையில் மத குருவே ஆட்சி நடத்தினார்.  இந்த சிறப்பு மிக்க கடவுளுக்கு மரியாதை கொடுக்கும் முகமாக அல்லது கௌரவப் படுத்த, மதகுரு மக்களை ஆலயம் கட்ட செய்தார். இது சுமேரியன் நகரத்தில் பெரியதாகவும் சிறப்பு மிக்கதாகவும் இருந்தது. இந்த கட்டிடம் குன்று மாதிரி அங்கு எழும்பியது. இந்த ஆலயம் சிகுரத் [ziggurat] என அழைக்கப் பட்டது. மெசொப்பொத்தேமியா சேற்று நிலமாகவும், தண்ணீரால் நிரந்த நிலமாகவும், மேலும் வறண்ட சம மட்டமான தரையாகவும் இருந்தது. இதனால், ஆண்டவனை வணங்குவதற்காக உயரமாக எழுப்பப் பட்ட சிகுரத் எமக்கு வியப்பை தரவில்லை. அது மட்டும் அல்ல, உலகம் முழுவதும் ஆண்டவன் உயரத்துடன் இணைக்கப் பட்டுள்ளார். ஆகவே மலை அல்லது குன்றுகள் இல்லாத இந்த மெசொப்பொத்தேமியாவில் இதைத் தவிர வேறு வழி அவர்களுக்கு இருக்க வில்லை.  நகரத்தின் சிறப்பு தெய்வத்தை விட அங்கு மற்ற தெய்வங்களும் சிறு உருவ சிலையில் இருந்தன. இந்த சிகுரத் கைவினைஞர்களின் [craftsmen] வேலைத் தலத்தையும் வழிபாட்டிற்கான ஆலயத்தையும் கொண்டிருந்தது. சிற்பம் வடிப்பவனும் மாணிக்க கல் வெட்டுபவனும் நெய்த கம்பளியை படுவேகமாக காலால் மிதித்து மென்மையாக்கிறவனும் [fullers] ஆயுதங்கள் செய்யும் உலோக தொழில் நிபுணர்களும் அங்கு இருந்தனர். பொதுவாக, சிகுரத் எவ்வளவு உயரமாக கட்ட முடியுமோ அவ்வளவு உயரத்திற்கு கட்டினார்கள். சொர்க்கத்திற்கு போக அல்லது அதை அடைய ஒரு முயற்சி போல் இது தெரிகிறது. உதாரணமாக, உருக் நகர "அனு" ஆலயம் 50 அடி உயரத்திற்கு எழுப்பப் பட்டிருந்தன. சிகுரத்தின் மேல் கடவுள் வாழ்வதாக சுமேரியர் நம்பினர். சுமேரிய ஆலயத்தில் அமைந்த முதன்மையான செவ்வக தேவஸ்தானம் 'செல்ல' [cella] என அழைக்கப் பட்டதுடன், ஆலயத்தின் முதன்மை தெய்வத்தின் முன் செங்கல்லால் கட்டப் பட்ட  பலி பீடம் அல்லது பிரசாதம் படைக்கும் மேசை இருந்தது. இந்த மேசை, விலங்கு அல்லது மரக்கறி நிவேதனத்திற்கு [அதாவது ஆண்டவனுக்குகாண்பிப்பதற்கு’] பாவிக்கப்பட்டது .  'செல்ல' [cella] வின் யாதேனும் ஒரு பக்கத்தில், கோயிலின் திருச்சிறை நெடுக [நடை பாதை நெடுக], மத குருமாருக்கான அறைகள் இருந்தன.

 

மேலும் சுமேரிய ஆலயத்திற்கு அருகில் அதிகமாக, தானிய கிடங்கும் [களஞ்சியம்] மற்றும் பண்டக சாலையும்  இருந்தன. பெரும் பாலும், மதகுரு, பெண் மதகுரு, பண்ணிசையுடன் பாடும் பாணர்கள் மற்றும் அடிமைகள் ஆலயத்தில் தொண்டு செய்தனர். பலதரப் படட உணவு படைத்தலும் பலியிடுதலும் மற்றும் எண்ணெய் அல்லது மதுபானம் கொட்டுவது போன்றவை [food sacrifices and libations - a drink poured out as an offering to a deity] உட்பட பல சடங்குகள் அங்கு ஒவ்வொரு நாளும் பொது மக்களுக்காக நடை பெற்றன. அதாவது அங்கு கடவுளுக்கு தினமும் உணவு, விலங்குகள் என நிவேதனம் [மது, பியர், பால், இறைச்சி போன்ற படையல்] செய்தார்கள். அது மட்டும் அல்ல பல நாட்கள் நீடிக்கும் திருவிழாக்களும் நடத்தினார்கள். அமாவாசை, 7ஆவது, 15 ஆவது நாள், மாதக் கடைசி போன்ற நாட்களில் சிறப்பு விருந்து படைத்தனர். எப்படி ஆயினும் மிக முக்கிய நாள் புது வருடப் பிறப்பாகும். புது வருட நாளில், அரசன் ஈனன்னா தெய்வத்தின் தலைமை பெண் மதகுருவை அல்லது ஈனன்னாவை பிரதிநிதி படுத்தும் பெண் மதகுருவை ஒரு அடையாள பூர்வமாக திருமணம் செய்து கொள்கிறார். வருடம் முழுவதும் நல்ல அறுவடை நடை பெறுவதையும் அங்கு வாழும் மக்கள் செல்வச் செழிப்பாக உணவிற்கு தட்டுப்பாடு இன்றி இருப்பதையும் உறுதிப் படுத்துவதே இதன் நோக்கம் ஆகும். ஒவ் வொரு வீட்டிலும் அவர்களின் மூதாதையர்கள் தெய்வமாக கருதப் பட்டார்கள். குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்ததும் அவர் வீட்டிற்கு அடியில் புதைக்கப் பட்டார். அவரை வணங்கி, அவரிடம் இருந்து தமக்கும், குடும்பத்திற்கும் அறிவுரை கோரினார்கள். சிலவேளை, அவருக்கு குழாய் மூலம் உணவும் ஊட்டினார்கள். ஒரு நாளில் மூன்று தரம் மத குரு ஆண்டவனுக்கு உணவும் பானமும் படைத்தார். கடவுள் இருக்கும் மூலத்தானத்திற்கு மதகுரு மட்டுமே அனுமதிக்கப் பட்டார். ஆலயத்தின் தலைமையை சங்க [sanga / சங்கம்?] என அழைத்தார்கள். ஆலயத்தின் கணக்கு வழக்குகள், கட்டிடங்கள், நாளாந்த நடவடிக்கைகள், போன்றவை எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்பதை இந்த "சங்க" கவனித்தது.

 

இங்கு, சுமேரியா ஆலயத்தின் ஆன்மிகத் தலைவரை என் ["en"] என அழைத்தனர். அத்துடன் அவர் பல முறை தெய்வம் ஆக்கப் பட்டார். இந்த "என்", அந்த நகரத்தின் முதன்மை கடவுளைப் பொறுத்து, ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம். இந்த "என்" இன் கீழ், வேறு பல மதகுரு நிலைகள் இருந்தன. உதாரணமாக, குட, மக, கல,  நின்டின்கிர், இஸ்ஹிப் [guda, mah, gala, nindingir, and ishib] போன்றவை ஆகும். இவர்களின் சரியான பங்கு தெரியவில்லை. என்றாலும் தெய்வத்துக்குப் படைக்கப் படும் பானத்திற்கு பொறுப்பாக "இஸ்ஹிப்" பும் ஆலய கவிஞர் அல்லது பாடகராக "கல" வும் இருந்தனர். அத்துடன் ஒவ்வொரு நகரமும் ஒரு ஆளுநரை அல்லது அரசனை கொண்டிருந்தது. ஆளுநரை என்சி (ensi) எனவும் அரசனை (lugal) எனவும் அழைத்தனர். இவர்களுக்கு ஆலயம் கட்டுதல், அதை பராமரித்தல் போன்ற பல மத கடமைகள் அடிக்கடி இருந்தன. அரசனின் மனைவியை அல்லது அரசியை நின் (nin) என அழைத்தனர். இந்த "நின்" அதிகமாக, ஆலய பெண் - கடவுளின் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்புகளை கையாண்டார். நகர முதன்மைத் தெய்வத்தை அல்லது முதமைத் காவல் தெய்வத்தை இன்பம் மூட்டி மகிழ்விப்பது அந்தந்த நகர தலைவர்களின் கடமையாகவும் இருந்தது. முதன்மை  கடவுள் உட்பட  எல்லா கடவுளினதும் நல்லெண்ணத்தையும்  அருளையும்  மற்றும் கருணையையும்  பெறுவதை, இது மேலும் உறுதிப் படுத்துகிறது. சுமேரியரின் ஆரம்ப காலத்தில், மதகுருவே இப்படியான, ஆண்டவனை மகிழ்விக்கும் செயல்களை செய்தார். என்றாலும் நாளடைவில், அரசன் அந்த மத அதிகாரங்களை தனதாக்கி கொண்டார். இதனால், பின்னர் வந்த சுமேரிய அரச குலத்தில், அரசனே இப்படியான ஆண்டவனை மகிழ்விக்கும் கௌரவிக்கும் செயல்களை முன்னின்று நடத்தினார். என்றாலும், மதகுரு இன்னும் பல அதிகாரங்களை தன்னகத்தே கொண்டிருந்தார். உதாரணமாக, சகுனம், கனவுகள் போன்றவற்றிற்கு பலன்கள் கூறும் நிபுணத்துவம் போன்றவைகள் இவர்கள் கையிலேயே இருந்தன.

 

ஒவ்வொரு குடும்பமும் தமக்கென சிறப்பு அல்லது விசேஷச ஆண் அல்லது பெண் தெய்வங்களை கொண்டிருந்தனர். பொதுவாக, நெஞ்சுக்கு முன் தங்கள் கைகளை இறுக்கமாக பற்றி கடவுளை வணங்கினர். சுமேரியர்கள் பொதுவாக தம் அந்தரங்க வாழ்க்கையிலும் ஆண்டவன் முழுமையான அதிகாரத்தை செலுத்துகிறார் என்று நம்பினார்கள். சுமேரியர்கள் பொதுவாக, ஆண்டவனே தீங்கையும் [கேடும்] மற்றும் இடரையும் [துரதிர்ஷ்டம்] தருவதாக அல்லது தோற்று வித்ததாக நம்புகிறார்கள். அதே போல எல்லா நற்செயல்களும் நன்மைகளுக்கும் ஆண்டவனே பொறுப்பு என கருதுகிறார்கள். கடவுள் இன்றி அணுவும் அசையாது என்று தீர்க்கமாக நம்புகிறார்கள் அல்லது அப்படி  நம்பவைத்திருக்கிறார்கள். அதிலே குறிப்பாக அடிமையாக்கப் படட மக்கள் இனம் தம் மீது திணிக்கப் பட்ட வேலைப் பளுவிக்கும் அல்லது அரசனுக்கும் மதகுருக்கும் தாம் செய்யும் தொண்டுகளுக்கும், தம் மீது அவர்கள் செலுத்தும் ஆதிக்கத்திற்கும், கடவுளே காரணம் என்றும், எல்லோருக்கும் பொதுவான, எல்லாம் அறிந்த, அவன் செய்வதால் அது சரியாகவே இருக்கும் எனவும் கருதினார்கள்.

 

 "தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன" அதாவது: நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை , அதே போல, துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகள் அவர்களுக்கு தெரியா? தனிப் படட மனிதனின் துன்பத்தை தீர்க்க, கடவுள் எந்நேரமும் துணை புரிவதில்லை.  வாழ்வில் நன்மையும் தீமையும் உண்டு என சுமேரியர் கருதினர். தாம் கடவுளின் அடிமைகளாகவே தோற்றுவிக்கப் பட்டதாகவும், தாம் இறந்ததும் பாதாள உலகத்திற்கு போவதாகவும், மேலும் நம்பினர். மேலும் சுமேரிய பொது மக்கள் தமது முன்னைய காலத்தையும் அது போல இனி வரும் காலத்தையும் கடவுளே கட்டுப் படுத்துகிறார் என நம்பினார்கள். எழுத்து உட்பட தாம் கையாளும் ஒவ்வொரு செயல் திறமையும் ஆண்டவனே தமக்கு வெளிப் படுத்திய தாகவும் தாம் அறிய வேண்டிய அனைத்தையும் கடவுளே தமக்கு வழங்கிய தாகவும் நம்பினர். தமது ஆற்றலாலும் திறமையாலுமே உலகின் முதலாவது நாகரிகம் மலர்ச்சியுற்றது என்ற அறிவு விளக்கம் அவர்களிடம் இருக்கவில்லை. தமது தொழில் நுட்ப, சமுக வளர்ச்சி பற்றிய ஒரு உள்ளறிவு அவர்களிடம் இல்லை. சுமேரிய மத குருமார் தாம் முன்பு கூறிய புராணக் கதையை, அதற்கு தக்கதாக திரித்து, இந்த தொழில் நுட்ப, சமுக மாற்றம் அல்லது இந்த புதிய எண்ணங்கள் மனிதனின் முயற்சியால் ஆற்றலால் அறிவால் ஏற்பட்ட மாற்றம் என்பதை மறைத்து, அதை ஆண்டவனின் தெய்விக வெளிப்பாடு ஆக மாற்றினர்.

 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி,யாழ்ப்பாணம்]

 

பகுதி 19 தொடரும்

  ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக/Click to read from the beginning

 *அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக/CLICK TO READ NEXT PART, 

[இணைத்த படங்கள்:

 

நிற்கும் பெண் இறை வழிபாட்டாளர் 

சுமேரிய ஆலயத்தில் அமைந்த முதன்மையான செவ்வக தேவஸ்தானம் 'செல்ல' [cella] & பலிபீடம்,

நிம்ருட்டில் தியாகம் செய்யும் காட்சி, 

 

கி மு 2450 ஆண்டு அளவில், லகாஷ் நகரத்தை ஆட்சி செய்த மன்னன் ஈன்னடுமின் பெருங் கழுகு கல் [The Stele of Vultures of Eannatum of Lagash],

ஆலயம் சிகுரத்தின் நடவடிக்கைகள்,

வேலை செய்யும் அடிமைகள்.]

 

An analysis of history of Tamil religion – PART:18

[In English and Tamil]

 

 

For Sumerians, religion wasn’t just a matter of church on Sunday or temple on Friday. They worshipped every day, all day. Their gods controlled every move they made, Sumerians believed that their role in the universe was to serve the gods who were neither good nor evil. They were simply powerful and required constant appeasement. To this end the ancient Sumerians devoted much of their time to ensuring their favour with the gods with worship, prayer, and sacrifice. Sacrificial offerings of food and animals were routine. The gifts were taken to the temple (called a ziggurat) and given to the priests. It was believed that the priests could speak to the gods and offer them the gifts from the people. Idols, amulets and charms were also important. The high gods, however, were believed to have more important things to do than to attend to the common man's every day prayers, and so personal gods were devised as intermediaries between man and the high gods. The personal gods listened to the prayers and relayed them to the high gods.

 

Due to the emergence of the Home & home land, each Sumerian city also had its own special gods, other than the prime or chief gods of nature. They believed that this one special god owned the city, the land and the people. The priests of the city ruled in place of this god. To honour this god the priests made the people build a temple. It was the largest and most important building in a Sumerian city. It rose above the city like a hill. This temple was known as a Ziggarat. Because the Mesopotamian world was a muddy, watery, sun-backed flat land, It is not surprising that its most characteristic major buildings would be Ziggarat, raised pyramid-platforms where god could be worshipped. All around the world people have associated gods with height and in this land of no mountains the only way to reach up was to build. Other than their patron god, also had small shrines dedicated to other gods. The ziggurats housed workshops for craftsmen as well as temples for worship. There were artisans who sculpted, cut gems, fullers who stomped on woven wools to soften cloth, and metal workers who crafted weapons as well as artistic creations.

 

In general, Ziggurats were built as tall as possible in an attempt to reach heaven. For example, The temple of Anu, in Uruk, rose 50 feet above the plain. The Sumerians believed that the god lived on the top of the Ziggarat. The rectangular central shrine of the temple, known as a 'cella', had a brick altar or offering table in front of a statue of the temple's deity. The offering table was intended for animal and vegetable sacrifices. There were aisles along either side of the 'cella', which were rooms for priests. Near the temples there were usually granaries and storehouses. The main people who worked at the temples were priests, priestesses, musicians, singers and slaves. Public rituals would take place in the temples each day. There were food sacrifices and libations (pouring oil or wine as an offering to a god). Usually, Daily sacrifices were made consisting of animals and foods, such as wine, beer, milk, and meats. Additionally special occasions called for spectacular festivities that would sometimes last for days. Special feasts took place on the day of the new moon, on the 7th, 15th, and last day of the month. However, The most important festival for ancient Sumerians was New Year's Day. On this day, the king had to symbolically marry a priestess who represented the goddess Inanna. The wedding ceremony between the king and Inanna was intended to ensure that the city would have a good harvest all year round and that people would be prosperous and well fed. Ancestors were treated as gods at home. The family’s dead were buried beneath the floors of the house, worshipped, consulted and, at times, “fed” through tubes set in the floor.  Three times a day the priests brought food & drink to the god. Only the priests were allowed to enter the room where the god lived. The head of the temple was called the "sanga". The "sanga" was responsible for ensuring the temple's finances, buildings, and day-to-day activities were all in good order. The spiritual leader of the temple or the ruler was called an 'en' and was often deified (made into a god). The "en" could be a man or woman depending upon the deity. Under the "en" were various priest classes, such as the 'guda', 'mah', 'gala', 'nindingir', and 'ishib'. The roles of all of these classes is not known, though the "ishib" was in charge of libations, and the "gala" was a poet or singer.

 

Each city had a governor (ensi) or a king (lugal) who often had religious duties, particularly to build and maintain temples. The wife of the king was called a lady or queen (nin). The queen might be in charge of important projects such as managing the affairs of a temple goddess. The city leaders had a duty to please the town's patron deity. Pleasing the god of the city ensured the goodwill of that god or goddess as well as the goodwill of the other deities in the council of gods. In the earlier dynasties of Ancient Sumer, the priests often had the job of pleasing the gods. In later dynasties, kings assumed religious power. The priests, however, still held great authority through the interpretation of omens and dreams. Families also had their own special gods or goddesses. People prayed by clasping their hands in front of their chests. Sumerians believed their gods had absolute authority over their private life. Sumerians also believed gods created evil and misfortune. The gods were also thought to be responsible for all the good things in human life. Sumerians believed that humans should accept that there was good and bad and that the gods could not always help a person to solve a personal tragedy. The Sumerians also believed that they had been created as a labour-saving tool for the gods to use. Sumerians believed at the end of their life they would go to the underworld.

 

Further, Ordinary Sumerians believed that the gods controlled the past and the future, that the gods had revealed to them the skills that they possessed, including writing, and that the gods had provided them with all they needed to know. They had no vision of their civilisation having developed by their own efforts. They had no vision of technological or social progress. Sumerian priests altered the stories that they told, creating a new twist to old tales – without acknowledging this as a human induced change, New ideas were simply revelations from the gods.

 

 

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

 

Part 19 Will follow

 

 

[Pictures attached:

Standing female worshiper,

The rectangular central shrine of the temple [cella] & altar,

Sacrificial scene in nimrud,

Victory stele (“Vulture Stele”) of Eannatum of Lagash,

Activities in ziggurat, 

Slaves at work.]

-

 

0 comments:

Post a Comment