"தமிழர் சமயமும் அதன் வரலாறும்” பகுதி: 20

 [தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு அலசல்]   தாயத்து ஒரு காலத்தில் தாலி அல்லது ஐம்படைதாலி என்று அழைக்கப் பட்டது. சிறுவர்களுக்கும் மணமான பெண்ணுக்கும் தாலி கொடுக்கப் பட்டது. குறிஞ்சி நிலக் குறவர்கள்  மற்றும் காடுகளில் வாழ்வோர் புலிப் பல், புலி நகம் ஆகியவற்றால் ஆன தாலிகளை அணிந்தனர். பெண்கள் மங்களச் சின்னங்கள் அல்லது கடவுளரின் திருவுருவங்கள் பொறித்த தாலிகளை அணிந்தனர். பழைய காலத்தில் அணிந்த தாயத்துக்களே இப்படி தாலி போன்ற வடிவங்களில் இன்று...