எந்த உணவுப்பழக்கம் நல்லது?
நினைவுகள் மற்றும் உணவு குறித்து சிந்திக்கும்போது, பிரான்ஸ் எழுத்தாளர் மார்செல் ப்ரூஸ்ட் எழுதிய இழந்த நேரத்தைத் தேடி (In Search of Lost Time) என்ற நாவல் நினைவுக்கு வருகிறது. இந்த எழுத்தாளர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1922 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி உயிரிழந்தார்.
ஸ்வான்ஸ் வே என்ற முதலாவது அத்தியாயத்தில், மேட்லீனில் (கடற்பாசியால் செய்யப்பட்ட கேக்) தோய்க்கப்பட்ட தேநீர் அருந்தியதும் உடனடியாக கதாநாயகனுக்கு தனது சிறுவயது நினைவுகள் தூண்டப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.
அப்போது முதல், நாம் அனைவருக்கும் இது போன்ற அனுபவம் நேருவது பிரஸ்டியன் தருணம் அல்லது மேடலின் டி ப்ரூஸ்ட் என்று அறியப்படுகிறது.
"இந்த நினைவுகள் உணவோடு தொடர்புடையதாக இருக்கின்றன. அவை எந்த உள்ளுணர்வின் முன்னெடுப்பு இல்லாமல் உருவானவை," என மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியர் சூசன் க்ராஸ் விட்போர்ன் பிபிசியிடம் கூறினார்.
"அவை, மூளையின் சொல்லற்ற பகுதியோடு மிகவும் அடிப்படையான தொடர்புடையவை. அவை உங்கள் விழிப்புணர்வில் இருந்து விலகிச்செல்ல முடியும்," என்றும் அவர் விவரிக்கிறார்.
நீங்கள் உண்ணும் உணவு உங்களின் ஆழ்மனது நினைவுகளை தூண்டக்கூடியவை என்பதால்தான் அந்த வகையான உணவை உட்கொள்ளும்போது வலுவான உணர்ச்சி எதிர்வினைகள் நேரிடுகின்றன.
"இந்த நினைவுகளை நீங்கள் வார்த்தைகளாக சேமித்து வைக்காவிட்டாலும் கூட, உணவு உங்களது கடந்த கால நினைவுகளை தூண்டும் வகையில் அதில் ஏதோ இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால், உணவு மற்றும் நினைவுகளுக்கு இடையேயான இந்த தொடர்பில் சில அதனை மேம்படுத்த உதவி செய்வதை கொண்டிருப்பது சாத்தியமா?
நுண்ணூட்ட சத்து குறித்த படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றுள்ள உளவியலாளர் கிம்பர்லி வில்சன் கூற்றின்படி, நினைவகங்களில் சாதகமான, பாதகமான விளைவுகளை வியக்கத்தக்க வகையில் ஏற்படுத்தும் வகையில் உணவுகள், பானங்கள் உள்ளன.
இது குறித்து அவர் பிபிசியிடம் பகிர்ந்துள்ளார்.
அண்மையில் அல்லது நீண்டநாட்களுக்கு முந்தைய கடந்த காலத்தோடு தொடர்புடைய தகவல்களை மீண்டும் நினைவு கூர்வது நமது நினைவகத்தின் திறனாகும்.
நம்மிடம் உடனடி நினைவுகள், வேலை தொடர்பான நினைவுகள், நீண்டகால நினைவுகள் ஆகிய மூன்று வகையான நினைவகங்கள் உள்ளன.
உடனடியான நினைவகம், நீங்கள் குறுகிய காலத்துக்கு யூகிப்பது தொடர்புடைய தகவல்களை வைத்திருக்கும். யாரேனும் ஒருவர் உங்களுக்கு ஒரு மொபைல் எண்ணை எழுதிக் கொடுக்காமல், வெறுமனே உங்களிடம் சொல்லும்போது அதனை நினைவுபடுத்தி உபயோகிக்க முடியும்.
செயல்பாடுகளை சிந்தனையுடன் மேற்கொள்ளும்போது நாம் வேலை நினைவகத்தை உபயோகிக்கின்றோம். சான்றாக ஓர் உரையாடலின்போது, நம்மோடு உரையாடிய நபர் என்ன சொன்னார் என்பதை நினைவுப்படுத்த இது உதவுகிறது.
அவர் சொன்னதின் பொருள், முந்தைய உரையாடலுடன் அதனை தொடர்பு படுத்துவதும், பின்னர் நமது சொந்த சிந்தனையை பகிர்தல் ஆகியவை இதில் நடக்கின்றன.
நமது நீண்டகால நினைவகங்களில், நாள் கணக்கிலான அல்லது ஆண்டு கணக்கிலான கடந்தகால தகவல்களை நாம் நினைவில் கொள்கின்றோம்.
நினைவுகள் சேமிக்கப்பட்டதில் இருந்து, நமது நினைவுகள் உடனடி நினைவகத்துக்கு நகரும் செயல்பாடு ஒருங்கிணைத்தல் என்று அழைக்கப்படுகிறது.
இதன் மூலம் நாம் என்ன உணவு உண்டால், நமது நினைவகம் எவ்வாறு நன்றாக செயல்படும் என்பது தெளிவாகிறது.
இது தொடர்பாக நினைவாற்றல் பிரச்னை கொண்ட பெரியவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நாளொன்றுக்கு 500 மில்லி பன்னீர் திராட்சை ஜூஸ் 12 வாரங்களுக்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அது போன்று எடுத்துக் கொள்ளாத குழுவினருடன் ஒப்பிடும்போது திராட்சை ஜூஸ் குடித்தவர்கள் மேலும் பல வார்த்தைகளை கற்றுக்கொள்ள முடிந்தது.
இன்னொரு ஆய்வில், குழந்தைகள் 240 கிராம் ப்ளூபெரி பழங்களை உட்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். மேலும் பல வார்த்தைகளை நினைவில் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி பழங்கள் உண்ட இரண்டு மணி நேரம் கழித்து பல வார்த்தைகளை துல்லியமாக அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
பன்னீர் திராட்சை, ப்ளூ பெர்ரி பழங்கள் சிறப்பு வாய்ந்தவையா?
அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இவற்றில் அந்தோசயினின்கள் (anthocyanin) உள்ளன. தாவரத்தின் ஒரு வகையான ரசாயனமே பாலிபினால்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை ஆழமான வண்ணத்தை கொடுக்கின்றன. இந்த பாலிபினால் கலவைகள், இதர பெர்ரி பழங்களிலும் காணப்படுகின்றன.
உடலில் வளர்சிதை மாற்றம் நடக்கும்போது , நமது மூளையில் ரத்தத்தின் ஓட்டத்தையும் , ரத்த குழாய்களின் நெகிழ்வு தன்மையையும் அவை மேம்படுத்துகின்றன. நமது அறிவாற்றல் திறன் மேம்படுவதற்கான ஆக்சிஜன் மற்றும் மேலும் ஆற்றல் கொண்ட நுண்ணூட்ட சத்துகளை அவை அளிக்கின்றன.
கிரீன் டீ நீண்டகாலத்துக்கு அருந்துதல் என்பது குறுகியகால நினைவகத்தை மேம்படுத்துவதுதல், வேலை நினைவகம் மீது கவனம் செலுத்துதல், அறிவாற்றல் குறைபாடு அபாயத்தை குறைத்தல் ஆகியவற்றோடு தொடர்புடையதாகும்.
கோகோ, பெருமூளை ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, உரிய பலன்களைப் பெறுவதற்கு 70%க்கும் அதிகமான கோகோ திடப்பொருட்களைக் கொண்ட டார்க் சாக்லேட் உட்கொள்ள வேண்டும். எனவே இது சாக்லேட் விரும்புவர்களுக்கு நல்ல செய்தியாகும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்பதன் பொதுவான விதியாக, அதிக அளவு பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் எண்ணைய் மிகுந்த மீன், ஆகியவை இருக்கின்றன. அப்போது, மூளையின் நினைவக மையம் பெரியதாக இருக்கும், நினைவக செயல்திறன் சிறப்பாக இருக்கும்.
சுத்திகரிக்கப்பட்ட உணவு வகைகள்
சாக்லேட்,பெர்ரி பழங்கள், கிரீன் டீ ஆகியவை நமது நினைவகங்களுக்கு சிறந்ததாக இருக்கின்றன.
எந்த வகை உணவு நினைவகங்களுக்கு ஏற்றதல்ல?
பல தசாப்தங்களாக தொடரும் விலங்குகள் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அதிக அளவிலான பரிசோதனைகள் அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை உண்ணும் பழக்கம் கற்றல் மற்றும் நினைவுதிறனுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன.
ஆய்வு ஒன்றில், வழக்கமாக நுண்ணூட்ட சத்து உணவுகளை உண்ணும் பழக்கம் கொண்ட 110 ஆரோக்கியமான நபர்களிடம் அதிகம் சுத்திகரிக்கப்பட்ட உணவுப்பழக்கத்தை ஒரு வாரத்துக்கு மேற்கொள்ளும்படி கூறப்பட்டது.
நான்கு நாட்களுக்கு காலை உணவாக இரண்டு பெல்ஜிய வாஃபிள்ஸ் உணவு தரப்பட்டது. அந்த ஒரு வாரத்தில் ஏதேனும் ஒரு நேரத்தில் இரண்டு துரித உணவுகள் என்ற சில மெனுவிவரங்களை உங்களுக்கு தருகின்றோம்.
அதீத சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பழக்கம் மேற்கொண்ட சில நாட்களுக்குள் கற்றல் நினைவக பிரச்னைகள் மற்றும் மோசமான பசி கட்டுப்பாடு ஏற்படுத்துவதை நோக்கி அது இட்டுச்செல்லும்.
அதிகம் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை கொண்ட உணவுகள், குறைந்த அளவு பழங்கள், காய்கறிகள், குறைந்த நார் சத்து கொண்ட உணவுகள் கொண்ட உணவுப் பழக்கமானது அல்சைமர் போன்ற நரம்பியக் கடத்தல் நோய்கள் ஏற்படுவதற்கு அதிக ஆபத்துகளைக் கொண்டதாகும்.
காலை உணவுடன் கூடுதல் பழம், இரவு உணவில் கூடுதல் காய்கறிகள் என நமது உணவுப் பழக்கங்களை மிகவும் சத்தான திசையில் கொண்டு செல்ல சிறிய நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்றைய நமது நினைவுகளை மேம்படுத்தவும் எதிர்காலத்திற்காக அவற்றைப் பாதுகாக்கவும் உதவும் என்று ஆய்வுகள் அறிவுறுத்துகின்றன.
நன்றி: பிபிசி தமிழ்-
0 comments:
Post a Comment