முதுகெலும்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும்…

6 தவறான தோரணைகள்

காலப்போக்கில் ஏராளமான விஷயங்களை நாம் மறந்துவிட்டோம்.

 

வயது அதிகரிக்க அதிகரிக்க, மனிதர்களின் பெயர்கள், நேற்று என்ன செய்தோம், எதற்காக சமையலறைக்கு வந்தோம் ஆகியவை நினைவில் இல்லாததை உணரத் தொடங்குகிறோம். மேலும், இது குறித்து கவலைப்படவும் செய்கிறோம்.

 

ஆனால், இதற்கெல்லாம் முன்பே நம் உணர்விற்கே எட்டாமல் உடல் தோரணை குறித்த நினைவுகளை நாம் இழந்து விட்டோம்.

 

குழந்தைகளை நீங்கள் கவனித்தால், அவர்களின் முதுகில் அழகான 'S' வளைவு இருப்பதையும், அவர்களின் அசைவுகள் எளிமையாக இருப்பதையும் பார்க்கலாம்.

 

மோசமான தோரணையால் ஏற்படும் சிக்கல்கள் பல உள்ளன. அவை வலி மிகுந்ததாகவும் இருக்கலாம். ஆனால் நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் அவற்றை மேம்படுத்தலாம்.

 

பிரிட்டிஷ் ஹெல்த் சர்வீஸ் இணையதளத்தில் நம்மிடம் பரவலாக உள்ள சில தவறான தோரணைகள் குறித்து பிசியோதெரபிஸ்ட் நிக் சின்ஃபீல்ட் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றைப் பார்ப்போம்.

 

தலையையும் தோள்களையும் தொய்வாக வைத்திருத்தல்


ஆனால் காலப்போக்கில் இந்த நிலை, தசைகள் மீது அழுத்தம் மற்றும் வலியை ஏற்படுத்தும்.

 

எனவே சரியாக அமரும் பழக்கத்தை உருவாக்குங்கள்.

 

முதலில், உங்கள் தசைகளால் உங்களை நீண்ட நேரம் சரியான நிலையில் வைத்திருக்க முடியாது என்பதால் நீங்கள் அசௌகரியமாக உணரலாம். ஆனால் விரைவில் அதற்குப் பழக்கப்படுவீர்கள்.


தோள்பட்டைகளை வளைக்காதீர்கள்

மேசையில் அமர்ந்து கணினியில் வேலை செய்யும் போது, உங்கள் தலை முன்னோக்கி சாய்வது கைபோசிஸ் எனும் முதுகெலும்பு கோளாறுக்கு வழிவகுக்கும்.

 

மேலும், உங்கள் கைபேசியைப் பயன்படுத்தும் போதும் கழுத்து வலி, விறைப்பு, முதுகு வலி மற்றும் தலைவலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

 

உங்கள் தோரணையை சரிசெய்வதில் கவனம் செலுத்துவதுடன், மேல் முதுகு, கழுத்து, தோள்களின் பின்புறம், மார்பு மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளை வலுப்படுத்தும் பயிற்சிகளையும் செய்யலாம்.

 

நாடியை வெளியே கொண்டு வராதீர்கள்

நீங்கள் வேலை செய்ய அமரும்போது உங்கள் தலை முன்னோக்கி சாய்வது போல, உங்கள் கழுத்து எதிர் திசையில் வளையலாம்.

 

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

 

உங்கள் நாடியை உள்ளிழுக்கும் போது உங்கள் கழுத்தை மெதுவாக உயர்த்தவும்.

 

தோள்பட்டைகளை கீழே மற்றும் முதுகெலும்பை நோக்கி இழுக்கவும்.

 

கீழ் முதுகில் உள்ள இயற்கையான வளைவை பராமரிக்க அடிவயிற்றின் தசைகளை சுருக்கவும்.

 

உங்கள் நாற்காலியின் உயரம் குறைவாக இல்லை என்பதையும் உங்கள் கணிணி திரையின் உயரம் அதிகமாக இல்லை என்பதையும் உறுதிசெய்யவும்.

 

ஒரு காலில் சாய்ந்து நிற்பதை தவிர்க்கவும்

நீண்ட நேரம் அசையாமல் நிற்கும் போது சற்று ஓய்வெடுப்பதற்காக நாம் இவ்வாறு செய்வதுண்டு.

 

ஆனால், இவ்வாறு செய்யும் போது உங்கள் கீழ் முதுகு மற்றும் இடுப்பின் ஒரு பக்கத்தில் அதிக அழுத்தம் கொடுக்கப்படும்.

 

அது காலப்போக்கில் உங்கள் இடுப்புப் பகுதியைச் சுற்றி தசை ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கலாம்.

 

எப்போதும் உங்கள் எடையை இரு கால்களிலும் சமமாகப் பரப்பி நிற்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

 

பிட்டத்தை வெளியே கொண்டுவராதீர்கள்

கீல்ஸ் எனப்படும் குதிகால் காலணி அணிவது மற்றும் வயிற்றில் அதிக எடையை சுமப்பதுடொனால்ட் டக்எனப்படும் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் தோரணையை உங்களுக்கு ஏற்படுத்தும்.

 

அதை சரிசெய்ய, உங்கள் தலையில் ஒரு கயிறு கட்டி, அதை மேலே இழுப்பது போல என்று கற்பனை செய்து பாருங்கள்.

 

இது, முதுகெலும்பின் இயற்கையான வளைவு, நேரான கழுத்து மற்றும் இடுப்புக்கு இணையாக தோள்பட்டையுடன் உங்கள் உடலை சரியான அமைப்பில் வைத்திருக்க உதவும்.

 

எளிய பயிற்சிகள் கைகொடுக்கும்

உங்கள் இடுப்பு முன்னோக்கி இழுக்கப்படும் போதும், உங்கள் முதுகு தட்டையாக இருக்கும் போதும் உங்கள் உடல் முன்னோக்கி சாய்கிறது.

 

இந்த தோரணை பெரும்பாலும் தசை ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படுகிறது. ஆனால், நீண்ட நேரம் அமர்ந்திருப்பது தட்டையான முதுகு ஏற்பட காரணமாகும்.

 

இதை மேம்படுத்த, முதுகெலும்பு அல்லது இடுப்புடன் இணைக்கப்பட்டுள்ள அடிவயிற்று மற்றும் பின்புறத்தில் உள்ள தசைகள், கழுத்து மற்றும் தோள்களின் பின்புறம் உள்ள தசைகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளை சின்ஃபீல்ட் பரிந்துரைக்கிறார்.

 

நேராக நிற்பதற்கான வழிகள்

உங்கள் தோள்களை பின்னோக்கி தளர்வாக வைத்திருங்கள் உங்கள் வயிறு வெளியே தள்ளாமல் இருக்க வேண்டும் உங்கள் கால்களை இடுப்பு அகலத்தில் வைத்திருங்கள் உங்கள் எடையை இரு கால்களிலும் சமநிலைப்படுத்துங்கள் உங்கள் தலையை முன்னோக்கி, பின்னோக்கி அல்லது பக்கவாட்டில் சாய்க்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள உங்கள் கால்களை நேராக வைத்திருங்கள். ஆனால் உங்கள் முழங்கால்கள் தளர்வாக இருக்க வேண்டும்.

 

நன்றி:பிபிசி தமிழ்

No comments:

Post a Comment