சிரிக்க ...சில...நிமிடம்

 சர்தாஜி ஜோக்ஸ் 


லீக்கை அடைக்கணும்

கல்லூரியில் பியோனை அழைத்த தலைமையாசிரியரான சர்தார், அவசரமாக ஒரு பிளமரை அழைத்து வரச்செய்தார்.

பிளமாரிடம்

தலைமையாசிரியரான சர்தார்: 'உன்னை ஏன் வரச்சொன்னேன் தெரியுமா?'

தலையைச் சொறிந்து கொண்டே பிளமார்:'தெரியலையே சேர்!!'

தலைமையாசிரியரான சர்தார்: 'எக்ஸாமுக்கு முன்னாடி க்குவெஸ்ற்ரன் பேப்பர் லீக்காயிடுச்சாம், சீக்கிரம் கண்டுபிடிச்சு அடைக்கணும்.

 

வெட்கமாக இல்லையா?

ஜட்ஜ்: உனக்கு வெட்கமாக இல்லையா, இதோடு மூன்றாவது தடவையா  நீ கோர்ட்டுக்கு வருகிறாய்?

சர்தார்ஜி: நீங்கள் தினமும் கோர்ட்டுக்கு வருகிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

 

போக்குவரத்து காவலர்

நம்ம சர்வர் போக்குவரத்து காவலர். வேகமாக வந்த இரு மோட்டார் சைக்கிள்களை மடக்கினார். ஒருவன் மட்டும் பைக்கை போட்டுவிட்டு ஓட்டம் எடுத்தான். விடுவாரா சர்தார் துரத்தி பிடித்து, ''எங்கே உரிமம்'' எனக்கேட்டார். அவனும் அப்பாவியாக எல்லா ஆவணங்களையும் எடுத்துக்காட்டினான். சர்தார்: ''அடப்பாவி எல்லாம் சரியா தானே இருக்கு. அப்புறம் ஏன்டா என்னை இவ்வளவு தூரம் துரத்த வச்சாய்?

அவன்: ''அங்க நிற்கிற என் பிரண்டு கிட்ட ஒண்ணும்  இல்லையே. அதுதான்!!

சர்தார்:???????????

 

இன்ரவியூ

நேர்முக தேர்வுக்கு சென்றிருந்த சர்தார்ஜிடம், மானேஜர் இன்ரவியூ செய்தார்.

மானேஜர்: ஒரு எலெக்ரிக் கார் எப்படி ஓடும்?

சர்தார்ஜி: ''உர் ..உர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர்ர் ர் ர் ர்......''

மானேஜர்: (கோபமாக)''Stop  ,I say.

சர்தார்ஜி:''டப் ...டப் ...டப்...''

 

நீதிமன்றில் சர்தார்..

ஜட்ஜ்: ஆர்டர்...ஆர்டர்....ஆர்டர்...

சர்தார்:பிட்ஷா, 2 இட்டலி, 3தோசை, 4பூரி, 5வடை, ஒரு கூல் றிங்க்.

ஜட்ஜ்: ஷட் அப்.

சர்தார்:இல்ல...இல்ல...எனக்கு செவன் அப்.

ஜட்ஜ்:??????????..

 

வ்பானையாவது போடு

சர்தார் 1:டேய்... எதுக்குடா மெழுகுவர்த்தி கொழுத்தி வைச்சிருக்கிறாய்?

சர்தார் 2:கரண்ட் இல்லைடா...

சர்தார் 1: சரி,சரி.. வ்பானையாவது போடு.ரொம்ப வெக்கையாயிருக்கு.

சர்தாஜி 2:லூசாடா நீ... வ்பான் சுற்றினா மெழுகுவர்த்தி அணைஞ்சிடாது?

 

பதிலுக்குப் பதில்

நீண்ட நாள் சந்தித்திராத ஒரு நண்பியிடமிருந்து சர்தார்ஜிக்கு  ஒரு குறுந்தகவல் வந்தது.

''I miss  you''

அதற்குச் சர்தார்ஜியின் பதில்,

''I Mr you''

 

ஹொட்டல் சாப்பாடு

ஹொட்டல் ஓனர்: சேர், தினமும் சாப்பாடு வாங்கிக்கிட்டுப் போறிங்களே, அதை இங்கேயே சாப்பிட வேண்டியது தானே!!

சர்தார்:மன்னிக்கணும் சேர்.... டொக்டர் என்னை ஹொட்டலிலை சாப்பிடக் கூடாது என்று சொல்லி இருக்காரு...அதுதான்...!!!

 

திருமண நாள்

நண்பர் ஒருவரிடம் தனது 50 ஆவது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார்

நண்பர் :''25 ஆவது திருமண நாளின் போது என்ன செய்தீர்கள்''

 சர்தார்: ''என் மனைவியை அந்தமான் தீவுக்கு அழைத்துப் போனேன்.''

நண்பர்: ''வரப்போகும் 50 வது திருமண நாளின் போது என்ன செய்யப் போகிறீர்கள்'' சர்தார்ஜி: "அவளை திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்"

 

அலாவுதீன் பூதம்

ஒரு முறை சர்தார்ஜிடம் அலாவுதீன் பூதம் மாட்டிக் கொண்டது. "சரி  உனக்கு ஒரே ஒரு வாய்ப்பு உள்ளது.விரும்பியதைக் கேள்" என்றது.

 கடுமையாக சிந்தித்த சர்தார் "தன் அறிவை 100 மடங்கு அதிகமாக்கி விடு" என்று கேட்டார்.

 பூதம் சிரித்துக்கொண்டே சொன்னது "பூஜ்ஜியத்தை எவ்வளவு பெருக்கல் செய்தாலும் பூஜ்ஜியம் தான்" என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டது.

தொகுப்பு :மனுவேந்தன் செல்லதுரை

No comments:

Post a Comment