"உறங்கிக் கிடந்த மனது ஒன்று
உறக்கம் இன்றி தவிப்பது ஏனோ?
உறவு தந்து உள்ளம் கவர்ந்து
உலகம் துறந்து போனது ஏனோ?"
"கண்கள் மூடி கனவு கண்டால்
கலங்கிய ஒளியில் மிதப்பது ஏனோ?
கருத்த வெள்ளை உருவம் தோன்றி
கண்ணீர் துடைத்து மறைவது ஏனோ?"
"காற்றில் நெஞ்சில் குரல் கேட்க
காத்திருந்து விழித்திருந்து ஏங்குவது ஏனோ?
காலம் போனாலும் கோலம் மாறினாலும்
காமாட்சி நினைவு வருத்துவது ஏனோ?"
"தனிமை தந்து விலகி சென்று
தண்டனை தந்து ஒதுங்கியது ஏனோ?
தழுவல் பெற்ற தோளும் வாடி
தளர்ந்து மனமும் ஒடிந்தது ஏனோ?"
"இன்பம் என்பது அன்பில் விளைவது
இச்சை என்பது காமத்தில் விளைவது
இனிமை ஆக எடுத்து கூறினாய்
இன்றும் நெஞ்சில் நீடித்து வாழ்கிறாய்!"
"காதல் கொஞ்சமும் இன்னும் குறையல
காந்தமாய் என்னை இன்னும் இழுக்குது!
காதில் சொன்ன வார்த்தைகள் எல்லாம்
காலம் கடந்தும் அமைதி தருகுது!"
[கந்தையாதில்லைவிநாயகலிங்கம்-அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment