அறிவியல் விஞ்ஞானம்
🟌கோளை உண்ணும் நட்சத்திரம்...
நம்முடைய பூமி சூரியனை சுற்றுகிறது. ஏதேனும் ஒரு நட்சத்திரத்தை சுற்றும். நட்சத்திரங்கள் தங்கள் அழிவு காலத்தை எட்டும்போது வீங்கி, வெடிக்கும் இவ்வாறு வீங்கும்போது தன்னை சுற்றி வரும் கோள்களை உள்ளே ஈர்க்கும். அப்போது பல மடங்கு ஒளி வெளியிடப்படும்.
இவ்வாறான ஒரு நிகழ்வை முதல் முறையாக விஞ்ஞானிகள் தொலைநோக்கி மூலம் கண்டுள்ளனர்.
இதற்கு முன் 2020 ஆம் ஆண்டு பல ஒளியாண்டுகள் தள்ளியுள்ள நட்சத்திர மண்டலத்தில் இரு நட்சத்திரங்கள் மோதி கலந்த நிகழ்வை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
அப்போது அந்த நட்சத்திரம் வழக்கத்தைவிட 100 மடங்கு ஒளி மிகுந்ததாக மாறியது. ஆனால் இப்போதைய நிகழ்வின் போது வழிபட்ட ஒளியானது அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை.
இந்த இரு நிகழ்வுகளின் போது ஏற்பட்ட ஒளி அளவின் வேறுபாட்டை கொண்டு இப்போது நடந்துள்ளது இரு நட்சத்திரங்களின் மோதல் அல்ல என்று விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.
பூமியிலிருந்து பத்தாயிரம் ஒளியாண்டு தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரம் நம்முடைய வியாழன் கிரகத்தை விட, 10 மடங்கு பெரிய கிரகத்தை தன்னில் ஈர்த்துள்ளது.
இந்த நிகழ்வின் போது ஏற்பட்ட ஒளியத்தான் தொலைநோக்கி பதிவு செய்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதே போல் இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியன் பெரிய அளவில் வீங்கிப் பூமியை தன்னுள் ஈர்த்துக் கொள்ளும்.
இதுபோன்ற நிகழ்வுகள் பிரபஞ்சத்தில் நடந்து கொண்டே தான் இருக்கும் என்றாலும் ஈர்க்கப்படும் கிரகத்தின் அளவைப் பொறுத்து ஒளியின் அளவு இருக்கும்.
🌤சூரிய ஒளி இனி தேவையில்லையா?...
இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா திட்டமிட்டுள்ளது. அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் விண்கலத்திலேயே தங்க வேண்டி இருக்கும்.
அப்போது தேவையான உணவை பூமியிலிருந்து அவர்கள் செல்லும்போது உடன் அனுப்ப முடியாது. காரணம் உணவை கெடாமல் பாதுகாக்கும் தற்போதைய வழிமுறைகள் போதுமானவை அல்ல. ஆகவே இப்போது அதற்கான தீர்வை தேடத் தொடங்கியுள்ளனர் ஆய்வாளர்கள்.
விண்வெளி வீரர்கள் தமக்கு தேவையான உணவை விண்வெளியிலும் செவ்வாய் கிரகத்திலும் உற்பத்தி செய்து கொள்ள அங்குள்ள சூரிய வெளிச்சம் போதுமானதாக இருக்காது. ஆதலால் சூரிய வெளிச்சம் குறைவாக உள்ள சூழலில் கூட வளரும் வகையிலான தாவரங்களை தேர்வு செய்து வருகின்றனர்.
சர்க்கரையை சுலபமாக செயற்கை முறையில் விண்வெளியிலேயே உருவாக்க முடியும். விண்வெளியில் மட்டுமின்றி பூமியில் சூரிய வெளிச்சம் குறைவாக உள்ள துருவப் பகுதிகளில் கூட இந்த முறையில் விவசாயம் செய்ய முடியும் மாறக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இம்முறையில் உள்ள சில சவால்களை முறையாக சரி செய்தால், விவசாய துறையே அடியோடு மாறக்கூடும் என்று, விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
👴ஆயுளைக் கூட்டுமா அமினோ அமிலங்கள்?...
நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு விதமான சத்துக்கள் இன்றி அமையாதவை. அவற்றுள் முக்கியமானது ஒன்று ''டாரின்'' எனும் ஒரு வகை அமினோ அமிலம்.
இவை நம் உடலிலேயே இருக்கும். நாம் உண்ணும் உணவின் மூலமும் கிடைக்கும். ஊட்டச்சத்து பானங்களில் ''டாரின்'' சேர்க்கப்படுகிறது.
இது உடலில் உள்ள செல்களின் நீர்ச்சத்தை சம நிலையில் வைக்கும். பித்தநீர் சுரப்பையை தூண்டி செரிமானத்தை மேம்படுத்தும்.
கொலம்பியா பல்கலை கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், 'டாரினை' எலிகள் மீது செலுத்தி சோதனை செய்த போது, அவை 10/ 12 சதவீதம் அதிக ஆயுளோடு வாழ்கின்றன என்று தெரிய வந்தது
'டாரின்' அமிலம் எலிகளின் எலும்பு தசைகளை வலுவாக்கி சர்க்கரையை அளவுக்கு கட்டுக்குள் வைத்திருந்தது.
குரங்குகள் மீது சோதிக்கப்பட்ட போதும் இதே போன்ற நல்ல முடிவுகள் கிடைத்தன.
இதனைத் தொடர்ந்து பன்னிரண்டாயிரம் மனிதர்கள் மீதும் 'டாரின்' செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டபோது, அவர்களின் சர்க்கரை ,கொழுப்பு, உடல் பருமன் ஆகியவை கட்டுப்பாட்டில் இருந்தன.
குறிப்பாக 55-70 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 'டாரின்' செலுத்தப்பட்ட போது அவர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்து இருப்பது தெரிய வந்தது.
''டாரினை'' அதிகமாக எடுத்துக் கொண்டால் என்ன பக்க விளைவு ஏற்படும் என்றும், எவ்வாறு பாதுகாப்பான முறையில் உட்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
🌊கடலுக்குக் கீழே குடிநீர்!...
நமது பூமி முக்கால் பங்கு நீரால் சூழப்பட்டது என்றாலும் கூட உலகில் உள்ள மொத்த நீரில் வரும் 2.5 சதவீதம் மட்டுமே நம்மால் பயன்படுத்த தக்க நன்நீர். மீதம் 97.5% உப்பு நீர் தான்.
பல நாடுகளில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இந்த சூழலில் தான் கடலுக்கு கீழே நன்னீர் இருப்பதனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நன்னீரின் அளவு ஓராண்டில் சூரியனால் ஆவியாகும் பூமியின் மொத்த நீரை விட அதிகம்.
அமெரிக்காவில் உள்ள 'வூட்ஸ் ஹோல்' கடலாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள் இங்கிலாந்தின் கண்டத்தட்டை ஆய்வு செய்தபோது, கடலுக்கு கீழ் நன்னீர் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
நன்னீரை கண்டுபிடிக்க கடல் மீது செல்லும் கப்பல்களில் இருந்து மின்காந்த அலைகளை கடல் தரை நோக்கி செலுத்துவர். மின்காந்த அலைகளை உப்பு நீர் நன்றாக கடத்தும். நன்னீர் கடத்தாது. இதைக் கொண்டு எது நன்னீர், எது உப்புநீர் என்பதனை எளிதில் அறிய முடியும்.
பனிக்காலத்தில் கடல் மட்டம் குறைவாக இருந்தது. அப்போது தரையில் இருந்த நன்னீர் பனியாறு கடல் மட்டம் உயர்ந்த போது கடற்கரையின் கீழே தங்கி இருந்திருக்க வேண்டும். இதுவே இப்பொழுது கடற்கரைக்கு கீழே நன்னீர் கிடைக்க காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடலடி நீரைக் கொண்டு கச்சா எண்ணையை வெளியே எடுக்க முடியுமா என்று எண்ணெய் நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.
உலகின் பல்வேறு கடற்பகுதிகளில் உள்ள நன்னீரை எவ்வாறு கண்டுபிடிப்பது, கண்டுபிடித்த பின் அந்த நீரை எவ்வாறு வெளியே பயன்பாட்டுக்கு எடுப்பது, அவ்வாறு எடுப்பதினால் என்னென்ன சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று கடல் சார்ந்த விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
தொகுப்பு: செல்லத்துரை மனுவேந்தன்
No comments:
Post a Comment