"தமிழர் சமயமும் அதன் வரலாறும்’’- பகுதி: 14

[ஒரு அலசல்-தமிழிலும், ஆங்கிலத்திலும்]

 

நினைவுக்கு எட்டாத பழங் காலத்தில் இருந்து, உலகம் எப்படி தோன்றியது போன்ற தலையாய கேள்வி மனிதனை துளைத்துக் கொண்டிருந்தது. அவன் ஒவ்வொரு முறையும் வானை நோக்கும் போது, தனது பூமி, சூரியன் மற்றும் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது, தோன்றியதிலிருந்து எப்போதும் இதே நிலையில் இருந்து கொண்டிருக்கிறதா அல்லது எப்படி இயங்குகிறது போன்ற பல கேள்விகள் அவன் மனதில் கட்டாயம் தோன்றியிருக்கும். அதற்கான தனது தேடலை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இந்த பண்டைய மனிதன் பலவாறாக முன்னெடுத்திருக்கிறான். இந்த மர்மத்தை அவிழ்த்து விட, இன்று வரை பல்வேறுபட்ட ஆன் மீகம் சார்ந்த, சமய நூல் சார்ந்த, தத்துவ ஞானம் சார்ந்த, விஞ்ஞான அறிவு சார்ந்த, விளக்கம் முன்வைக்கப்பட்டுள்ளன.ஆயினும் இது தான் விடை என்று அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எவராலும் இன்னும் உறுதிப்படக் கூறப்பட வில்லை.



எப்படியாயினும் இக் கேள்விகளுக்கு தமது பதிலாக கிறித்துவ, யூத மதம், ஆதியிலே தேவன் உலகத்தை படைத்தார் என்றும், அதில் வானம், நிலம், கடல், நிலா உள்ளிட்ட இயற்கை பொருட்களைப் படைத்து இறுதியாக பூமி வெறுமையாக இருப்பதைக் கண்டு பூமியில் மண்ணெடுத்து அதில் முதல் மனிதனை தன் சாயலாகப் படைத்தார் என்று கூறுகிறது. அதே போல இசுலாமும் அந்தப் படைப்புக் கொள்கையை சிறு மாற்றங்களுடன் ஏற்றுக் கொண்டது. எனினும் இந்த மூன்று மதங்களின் படைப்புப் கொள்கைகளும் அசலானவை அல்ல. இவை, யூப்ரடிஸ் டைக்ரிஸ் ஆறுகளுக் கிடையே இருந்த நிலப்பரப்பில் நிலவிய மெசொப்பொத்தேமியா நாகரிகத்தின் பழங்குடிகளிடையே நிலவியத் தொண்மக் கதையைத் தான் இந்த மேற் கண்ட மதங்கள் உள்வாங்கிக் கொண்டன. இந்த மெசொப்பொத்தேமியா மக்களே [சுமேரியர்], உலகின் முதல் எழுதப்பட்ட படைத்தல் கதையை எமக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு தந்தவர்கள் ஆகும். இது உலகம் எப்படி, யாரால் படைக்கப் பட்டது என்பதை விபரமாக சொல்கிறது. இந்த படை த்தல் புராணங்களின் நோக்கம் என்வென்றால், உலகம் மற்றும் மனிதன் போன்றவற்றின் தோற்றுவாயை தருவதுடன், மற்றும் கடவுள்கள், மனிதர்கள் இடையேயான உறவுகளை வரையறுப்பதும் ஆகும். மேலும் இதன் மூலம் ஒரு சமூக ஒழுங்கிற்கான அடிப்படையை வழங்குவதும் ஆகும். சுமேரியர்கள் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் கி மு 3600 ஆண்டளவில் குடியேறி அங்கு விவசாயத்தில் அபிவிருத்தி யடைந்து, இருபதிற்கு மேற்பட்ட நகர அரசுகளை அமைத்தவர்கள் ஆவார்கள். இவர்களின் புராண இலக்கியம் தான் இன்று வரை எமக்கு கிடைத்த வற்றில் மிகவும் பழைய எழுதப் பட்ட நூலாகும். இவை, இவர்களிற்கு பின் தோன்றிய நாகரிகங்களின் புராணக் கதைகளிலும் செல்வாக்கு செலுத்தின என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டும் அல்ல, இவர்கள் தமிழர்களின் மூதாதையர்கள் என்றும் இன்று பல கீழத்தேச ஆய்வாளர்கள் வாதாடுகிறார்கள். ஆகவே அவர்களின் நம்பிக்கை பற்றி அறிவது தமிழராகிய எமக்கு முக்கியமாகும்.

மெசொப்பொத்தேமியர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் தமக்குள் சுமேரியர், பாபிலோனியர் என பல இனங்களை கொண்டிருந்தனர். இவர்கள் எல்லோரும் அகிலத்தைப் பற்றிய  ஒரு பொதுவான கருத்தையே கொண்டிருந்தார்கள். முதலாவதாக இவர்களின் படைப்பு கதைகள் ஆதியிலிருந்து இருந்த பொருளான நீரை அடிப் படையாக கொண்டிருந்தன. உதாரணமாக - பண்டைய எகிப்தியர்கள் கூட கடலிலிருந்துதான் தலைமைக் கடவுள் பிறந்ததாக நம்பினார்கள். இந்துக்களின் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி கூறும் சமஸ்கிருத விஷ்ணு புராணமும், விஷ்ணு பாற்கடலில் பாம்புப் படுக்கையில் உறங்குபவன் என்று கூறுகிறது. அப்படியே, அமெரிக்காவிலுள்ள சீப்வா இந்தியர்கள் (Chippewa Indians) இவ்வுலகம் முழுதும் முதலில் ஒரு நீர்க்கோளமாக இருந்த தென்று நம்புகிறார்கள். உலகம் வெறுமையில் அல்லது சூனியத்தில் இருந்து பிறந்தது என்பதை ஆதியில் இருந்து இன்று வரை இருக்கும் எல்லா தத்துவஞானிகளாலும் ஏற்பது கடினமாக இருந்தது. இதனால், பழங்காலத்திய நாகரிக மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட உருவம் அற்ற, எங்கும் பரவக்கூடிய ஒரு பொருளில் இருந்து படைத்தல் கதையை ஆரம்பிப்பதில் திருப்தியடைந்தார்கள் போல் தோன்று கிறது. அது சரி, எதற்க்காக நீரை தேர்ந்து எடுத்தார்கள்? வேறு திரவங்கள் இல்லையா? நீர் ஓர் அர்த்த முள்ள தேர்வு. ஏனென்றால், நீர் உயிர் வாழ்வதற்கு மிக மிக  முக்கியமான தொன்று. நீரின்றி அமையாது உலகுஎன்றார் திருவள்ளுவர். சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" என்றார். மேலும் எல்லா முன்னைய நாகரிகங்களும் ஆறுகளின் ஓரமாக அல்லது பெரிய ஆறுகளின் வெள்ளச் சமவெளியில் அமைந்து இருந்தன. இவை எல்லாம் நீரின் இன்றியமையாமையையும் சிறப்பினையும் எடுத்துக் காட்டுகின்றன. இரண்டாவதாக, முன்னைய மக்களுக்கு நன்றாக தெரிந்த, திரவம், திண்மம், வாயு ஆகிய மூன்று நிலையிலும் இருக்கக் கூடிய பதார்த்தம் நீர் மட்டுமே. நீர் ஆவி நிலையில் இருப்பதை தெரிந்து இருக்க அன்று அவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றாலும், கொதிக்கும் நீரில் இருந்து நீர் ஆவி மேலெழுந்து போவதை கட்டாயம் அவர்கள் கவனித்து இருக்கலாம். அதே போல நீர் குளிர்ந்த மேற்பரப்பில் பனியாய் உறைவதையும் அவதானித்து இருப்பார்கள். மூன்றாவதாக, நீர் நிலத்தில் இருந்து வருகிறது, அதே போல நீர் ஆகாயத்தில் இருந்து மழையாக கொட்டுகிறது. ஆகவே, மனிதர்கள் வாழும் பூமியை சுற்றி நீர் உள்ளது என அவர்கள் இயல்பாக கருதினார்கள். ஆனால்,  நீரினால் தாம் வாழும் உலகம் சுற்றியிருந்தாலும், பூமி அந்த நீரில் மிதக்க வில்லை என உணர்ந்தார்கள். ஆகவே வான மண்டலம் அல்லது ஆகாயம் [firmament, or vault of heaven] பூமியின் மேல் ஒரு உலர் விண்வெளியை தோற்று விக்கிறது என்பது மெசொப்பொத்தேமியர்களின் உலகியல் அல்லது அண்டவியலின் [cosmology] அடிப்படை அம்சம் ஆகும். பூமி ஒரு தட்டையாகவும், வானமண்டலம் பூமியின் விளிம்பச் சுற்றி அதற்கு மேல் தங்கியிருப் பதாகவும் கருதினார்கள். அத்துடன் பூமியின் அடியில் பாதாள தண்ணீர் இருப்பதாகவும் நம்பினார்கள். பூமியை தோண்டலாம் என்பதாலும் அங்கு குகைகள் இருப்பதாலும், பூமி தட்டுக்கு சில தடிப்பு கட்டாயம் இருக்கும் எனவும், அந்த தடிப்புகளிற்கு இடையில் பாதாள உலகம் [underworld] இருப்பதாகவும் மேலும் நம்பினார்கள். வெவ்வேறான மெசொப்பொத்தேமியா நாகரிகங்கள் அடிப்படை அண்டவியலில் ஒன்றுக்கு ஒன்று உடன் பட்டாலும், உலகம் எப்படி தோன்றியது என்பதன் விபரங்களில் ஒன்றுக்கு ஒன்று மாறுபடுகின்றன

சுமேரிய நாகரிகம் ... பாபிலோனிய நாகரிகம் போன்ற உலகின் தலை சிறந்த நாகரிகங்கள் செழித்து விளங்கிய ஒரு இடம் தான் மெசொப்பொத்தேமியா ஆகும். எனவே தான் மேற்க்கத்திய ஆராய்ச்சியாளர்கள் முதலில் மெசொப் பொத்தேமியாவினை 'மனித நாகரிகத்தின் தொட்டில்' என்று கூறினர். முதலில் சுமேரியர்  ... பின்னர் பாபிலோனியர் என்று பலர் அங்கே ஆதிக்கம் செலுத்தி இருந்தனர். உலகின் தோற்றத்தினைப் பற்றிய சுமேரியர், பாபிலோனியர்களின் இரு  நூல்கள் இன்று கிடைத்துள்ளன. கில்கமேஷும்  பாதாள உலகமும் [“Gilgamesh and the Netherworld”], மற்றும் மண்வெட்டியின் அல்லது குந்தாலியின் பாட்டு [ “The Song of the Hoe.”] போன்ற சுமேரிய இலக்கியமும்  ...1,091 வரிகளைக் கொண்ட எழு முத்திரைகளில் பதியப்பட்ட எனும எலிஷ் [ஈனும் -மா - எல் - இசு / Enuma - Elish], மற்றும் மர்டுக், உலக படைப் பாளர் [“Marduk, Creator of the World”] எனப்படும் பாபிலோனிய இலக்கியமும் தான் அவை. இந்த நூல்கள் தான் இது வரைக் கிடைக்கப் பெற்ற நூல்களிலேயே உலகின் தொடக்கம் பற்றிக் கூறும் தொன்மையான நூல்கள் ஆகும். இவைகளில் மிகவும் பழையதும் உலகின் முதல் பதியப் பட்ட பழங்கதை சுமேரியர்களின் படைத்தல் புராண மாகும். உதாரணமாக, கில்கமேஷும்  பாதாள உலகமும் என்ற காப்பியம் புராண முன்னுரையுடன் தொடங்குகிறது. அந்த முன்னுரையில் , கடவுள்கள் அண்டம் போன்றவை ஆதியிலேயே இருந்தன என்றும் மேலும் நீண்ட காலத்திற்கு முன்பு வானும் பூமியும் ஒன்றாக இணைந்து இருந்து, பின் அவை பிரிக்கப்பட்டன போன்ற ஊகங்களை காண முடிகிறது. மண் வெட்டியின் அல்லது குந்தாலியின் பாட்டில், மற்ற சுமேரிய கதைகள் போல, என்லில்லே வானையும் பூமியையும் பிரித்தார் என்கிறது. 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

பகுதி 15 தொடரும்..

 ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக/Click to read from the beginning

 

*அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக/CLICK TO READ NEXT PART, 

An analysis of history of Tamil religion – PART:14

 [ In English and Tamil]

The creation of the world has been one of the fundamental questions that the humans have been seeking an answer for, since time immemorial. Various spiritual, theological, philosophical, and scientific explanations have been put forth till date, in attempts to unravel the mystery of the world's creation. The first written tales of creation or myths were recorded by the Sumerians and It tells who & how created the world?  the purpose of myth was to provide accounts of the origins of the universe and of mankind in the ancient world, and also the Myths defined the relationships between the gods and humanity and provided the basis of social order. The Sumerians settled in southern Mesopotamia around 3500 B.C. They established over 20 city-states and had thriving agriculture. Sumerian mythology is found in the world’s oldest surviving written works and influenced the mythologies of later civilisation. There are researchers from several eastern countries who today refer to Sumerians as the ancestors of Tamils. Therefore, it is important for us, as a Tamil to know about their beliefs.

 

The Mesopotamian civilisations of Sumer, Babylon, and others, all had a common concept of the cosmos. First, it was based on water as the fundamental primordial substance. All philosophers, down to the present, have had difficulty with the idea of the world arising from nothing. So, the ancients seemed content to start with a formless pervasive substance. But why water? Water was a reasoned choice. First, water was essential to life. Second, water was the only substance known to the ancients that existed in all three phases; liquid, solid, and vapour. Of course they did not really know of the existence of water vapour as a gas, but they must have observed that boiling water produced rising steam, that water evaporated, and also that water condensed on cool surfaces as dew. It probably never snowed or froze in Sumeria, but from the mountains of northern and eastern Mesopotamia people would have known of snow and ice and how it changed into water. Third, water came both up from under the ground and down as rain. So it was natural to conceive of water as surrounding the Earth (i.e. that part of the world where men dwelt). But the Earth was not flooded, even though it was surrounded by water. So the basic feature of Mesopotamian cosmology was the firmament, or vault of heaven, that created a dry space above the Earth. The Earth was a disk, and the firmament rested on the Earth around its edge as was obvious to any Mesopotamian scanning the horizon. Beneath the Earth were the waters of the abyss. The Earth had some thickness as was obvious from digging and from caves. Within the thickness of the Earth - disk, was the underworld. Although they agreed on this basic cosmology, the various Mesopotamian cultures differed as to details and accounts of how it came to be.

 

A Sumerian myth known today as “Gilgamesh and the Netherworld”, Sumerian poem, “The Song of the Hoe.” , the Babylonian myth “Enuma Elish” and The short Babylonian narrative [tale] “Marduk, Creator of the World” are prominent creation stories from Mesopotamia. Out of these the oldest written myth is the Sumerian creation story. For example, “Gilgamesh and the Netherworld” opens with a mythological prologue. It assumes that the gods and the universe already exist and that once a long time ago the heavens and earth were united, only later to be split apart. Similarly, Sumerian poem, “The Song of the Hoe”, as in many other Sumerian stories, the god Enlil is described as the deity who separates heavens and earth.

 

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

 

Part 15 Will follow

No comments:

Post a Comment