திருக்குறள்/17/- அழுக்காறாமை

முகவுரை-16- சமூகத்தின் வரவேற்பு இயற்றப்பட்ட காலம் முதலாக குறள் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்டு வந்துள்ளது. சங்கம் மருவிய காலத்துப் புலவர்களும் இடைக்காலப் புலவர்களும் பலவாறு குறளையும் வள்ளுவரையும் புகழ்ந்து பாடியுள்ளனர். "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்று ஒளவையார் குறளின் நுண்மையைப் போற்றுகிறார். "திருவள்ளுவமாலை" என்ற பெயரில் தனிப் புலவர்கள் பலரால் போற்றி எழுதப்பட்டுத் தொகுக்கப்பட்ட பாக்களால் பாடப்பெற்ற ஒரே தமிழ்...