01.👨அழகியைத் தேடிய குடும்பஸ்தர்
கூட்டம் திமிரி கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணை தேடிப் பிடித்து பேசினார் ஒரு குடும்பஸ்தர்.
அவர்: மேடம், இந்த கல்யாண கலாட்டா விலை என் பொண்டாட்டிய தொலைச்சிட்டேன். கொஞ்ச நேரம் என் கூட பேசிக்கிட்டு பேசிக்கிட்டு இருக்க முடியுமா? என்று கேட்டார்.
அழகிக்கு கோவம் வந்துவிட்டது
அழகி: நான் எதுக்கு உங்க கூட பேச வேண்டும்? என்றாள் சீற்றத்தோடு.
அவர்: ஸாறி, மேடம்.... தப்பா நினைச்சுக்காதீங்க!! அழகான ஒரு பெண்ணோடு நான் பேசிக்கிட்டு இருக்கிறப்ப எல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஓடி வந்து என் முன்னால் ஆஜராகிடுவார் என் பொண்டாட்டி, அதற்காகத்தான் சொன்னேன்.
என்று பணிவாகச் சொன்னார் இவர்.
2.👴அனுப்பிய செய்தி தபாலில் என்று வந்து சேரும்
ஒரு வீட்டில்....
ஒருவர்: உன் கல்யாண பத்திரிகை நேற்று தான் கிடைத்தது. விசாரிக்கலாம் என்று உடனே புறப்பட்டு வந்தால் பொண்டாட்டிய டெலிவரிக்கு ஆஸ்பத்திரியில சேர்த்து விட்டேன் என்று சொல்லுகிறாய்.
பள்ளியில்.....
ஆசிரியர்: எல்.கே.ஜி. அட்மிஷன் தபால் உங்கள் பையனுக்கு லேட்டா வந்தா... நான் என்ன பண்ணுறது. இவ்வளவு வயதான பையனை எல்கேஜிகளை எல்லாம் சேர்த்துக்க முடியாது.
வீட்டில் கணவனும் மனைவியும்...
மனைவி: என்னங்க மார்ச் மூன்றாம் தேதி உங்க அக்கா பொண்ணுக்கு கல்யாணம் என்று பத்திரிகை வந்துதே. திருச்சிக்கு டிக்கெட் வாங்கிட்டீங்களா.
கணவன். அடி பைத்தியம்... அது அடுத்த வருஷம் கல்யாணமாம். கொஞ்சம் அட்வான்ஸ் ஆகவே பத்திரிகை போஸ்ட் பண்ணி இருக்கிறாங்க.
03. 👦முட்டாள்கள் எழுந்து நிற்கலாம்
புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுத்து நுழைந்தார் மாணவர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக.. ஆசிரியை: ‘’இந்த வகுப்பில் யார் முட்டாள்களோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நானொன்றும் கோபித்துக் கொள்ள மாட்டேன்,’’ என்றார்.
மாணவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன் நாற்காலியின் மீது ஏறி நின்றான்.
ஆசிரியை : ‘’பரவாயில்லையே! தைரியமாக எழுந்து நிற்கின்றாயே! ‘’என்றார்.
அதற்கு அந்த மாணவன்
மாணவன்: ‘’இல்லை டீச்சர், நீங்க மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கின்றேன்.’’ என்றான்.
04.👳முட்டாள் பணக்காரர்
ஒரு ஊரில் முட்டாள் பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். தன் வேலைக்காரனை எப்பொழுதும் சந்தேகத்துடன் விசாரித்து வருவது அவரது வழக்கம். ஒருநாள் தன் வேலைக்காரனிடம் 500 ரூபாய் கொடுத்து சமையல் செய்வதற்கு தேவையான எண்ணையை வாங்கி வரச் சொன்னார். வேலைக்காரனும் கடைவீதிக்குச் சென்று 500 ரூபாய்க்கு பெறுமானம் உள்ள எண்ணெய் டின் ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தான். வீட்டுக்குள் நுழைந்த அவனை சந்தேகத்துடன் பார்த்த பணக்காரர்,
''ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய்?'' என்று கேட்டு, எண்ணெய் டின் ஐப் பார்த்தார். எண்ணெய் சிறிது குறைவாக இருந்தது. ஏன்? என்று கேட்டார்.
அதற்கு வேலைக்காரன், 'டின் அடியில் ஓட்டை இருந்தது, அதனால் கீழே வழிந்து விட்டது.' என்று கூறினான். அதற்கு பணக்காரர், '' கீழே ஓட்டை என்றால் கீழே தானே குறைந்திருக்க வேண்டும். எப்படி மேலே குறைந்தது?'' என்று கத்து கத்துண்ணு கத்தினார்.
05.💂முட்டாள் பணக்காரர் கட்டிய பங்களா
ஒரு ஊரில் ஒரு முட்டாள் பணக்காரர் இருந்தார் அவர் பெரிய பங்களா ஒன்றை கட்டினார். அதனை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாகப் பாராட்டினர். பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர். அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தன. அனைவரும் ஆச்சரியத்துடன்
''எதற்காக மூன்று நீச்சல் குளங்கள்''
என்று கேட்டனர் அதற்கு எந்த பணக்காரர், ''ஒன்று குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக'' என்றார்.
அனைவரும்
''வெந்நீர் சரி. தண்ணீர் சரி.காலியாக ஒரு நீச்சல் குளம் இருக்கிறது. அது எதற்கு?'' என்று கேட்டனர். அது வந்து
''நீச்சல் தெரியாதவர்களுக்காக'' என்று கூறினார்.
தொகுப்பு செல்லத்துரை மனுவேந்தன்
No comments:
Post a Comment