நம்மை நோக்கிவரும் புதுமைகள்

விஞ்ஞானம்=அறிவியல்


📡சனிக்கு எத்தனை நிலவுகள்?...


நமது சூரியக்  குடும்பத்தில் அதிக நிலவுகளைக் கொண்ட கோளாக வியாழன் இருந்தது. கண்டுபிடிப்பின்படி சனிக்கிரகத்துக்கு 62 புதிய நிலவுகள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே முந்தைய கணக்கையும் சேர்த்தால் சனி கோளுக்கு இப்போது 147 நிலவுகளை தொட்டுள்ளது.
 சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளாக சனிக்கோள் பயணிக்கும் பாதையில் தொடர்ந்து படங்களை எடுத்து கணனியில் அவற்றை ஒன்றின் மீது ஒன்றாக அடக்கிப் பார்த்தபோது, இத்தனை புதிய நிலவுகள் இருப்பது தெரிய வந்தது.
  இந்த எண்ணிக்கையும் கூட அடுத்த அடுத்த  ஆய்வுகளில் மாறக்கூடும் என விஞ்ஞான விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
一一一一一一一一一

📡மின்ணணுத் தோல் வந்துவிட்டது...



எலக்ட்ரானிக் ஸ்கின் எனப்படும் மின்னணு தோலை உருவாக்கும் ஆராய்ச்சி வேகமெடுத்துள்ளது. இந்த செயற்கைத் தோல், 'தொடு உணர்வை'க் கொண்டது. மிக மெல்லிய பொருளால் செய்யப்பட்ட தோல் போன்ற அமைப்பைத் தொட்டால், அந்த தொடுதலின் அழுத்தம் மற்றும் வெப்ப மாறுபாடுகளை மின்னணு தோல் உணர்ந்து, அந்த உணர்வை மின்னணு சமிக்ஞையாக மாற்றுகிறது....

மின்னணு தோலை, ஒரு எலியின் மூளையுடன் விஞ்ஞானிகள் இணைத்து ஆராய்ச்சி செய்தனர் அமெரிக்காவின் ஸ்டான் போர்டு பல்கலை விஞ்ஞானிகள். மின்னணு தோலைத் விரலால் தொட்டபோது, மின்னணு சமிக்ஞை பாய, யாரோ விரலால் அழுத்தியதுபோல உணர்ந்த எலி, தன் கால்களை அசைத்தது. இதுபோன்ற மின்னணு தோலை, செயற்கை கால் மற்றும் கைகளை அசைத்தது. அணிந்துள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக  இருக்கும் என ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
一一一一一一一一一

📡நினைவாற்றலை அதிகரிக்கும் காளான்!...

 மனித மூளையில் உள்ள நியூட்ரான்களின் வளர்ச்சியை ஊக்குவித்து நினைவாற்றலை அதிகரிக்கும் சத்துக்களை இயற்கை உணவுகளில் இருந்து பெறுவது குறித்து நீண்ட காலமாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்,'ஹெரிசியம் எரினாசியஸ்' ...
   எனும் ஒருவகை காளானில் உள்ள சில சேர்மங்கள் இதற்கு உதவும் என கண்டுபிடித்துள்ளனர். பலநூறு ஆண்டுகளாக ஆசியாவின் பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் இந்த காளான் பயன்பட்டு வருகிறது. இதனால் இதன் மருத்துவ குணங்களை விஞ்ஞான பூர்வமாக ஆராய ஆய்வாளர்கள் முற்பட்டனர்.

 ஆய்வு கூடத்தில், பிரித்தெடுக்கப்பட்ட மூளை செல்கள் மீது காளானில் உள்ள சேர்மங்கள் செலுத்தப்பட்டு, அதிக சக்தி வாய்ந்த நுண்ணோக்கிகள் மூலம் கண்காணிக்கப்பட்டன.
 செலுத்தப்பட்ட சேர்மங்கள் நியூட்ரான்களின் வளர்ச்சியையும் அவற்றுக்கு இடையேயான தொடர்களையும் ஊக்குவிப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

 மூளை செயல்கள் அழிவினால் ஏற்படும் 'அல்சைமர்' முதலிய நோய்களிலிருந்து காத்துக் கொள்ளவும் அவற்றுக்கு மருத்துவம் செய்யவும் இந்த ஆய்வுகள் பயன்படும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
一一一一一一一一一

📡ஒலிகளை ஏற்படுத்தும் தாவரங்கள் 



இஸ்ரேல்  நாட்டின் 'டெல்அவிப்'  பல்கலைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தாவரங்கள் வெளியிடும் ஒலிகளை பதிவு செய்துள்ளனர்.
 மனிதர்கள் பேசும் ஒலி  அளவிலும், ஒரு சோழ பொரி  பொரிகின்ற  ஒலி  அளவில் இருக்கும் என்றாலும் இவற்றின் அதிர்வெண் மிக அதிகமாக இருப்பதால் மனிதர்களால் கேட்க இயலாது.

 தாவரங்களுக்கு இக்கட்டான சூழல் ஏற்படும் போது இந்த ஒலிகள் வெளியிடப்படுகின்றன.  வெளவால்கள்,எலிகள்,பூச்சிகளால் இவ்வொலிகளைக் கேட்க முடியும். தாவரங்களுக்கு சில நாட்கள் தண்ணீர் ஊற்றப்படாத நிலையிலும்,தண்டுகள் வெட்டப்பட்ட நிலையிலும் பதிவு செய்யப்பட்ட ஒலிகள் ஒவ்வொரு தாவரமும் அதற்கு ஏற்படுத்தப்பட்ட இன்னல்களைப் பொறுத்து ஒவ்வொரு விதமான ஒலிகள்  எழுப்பினதை கேட்க முடிந்தது.

 இந்த ஆய்விலிருந்து தாவரங்கள் வெளியிடும் ஒலிகளை பதிவு செய்வதன் வாயிலாக அவற்றிற்கு ஏற்படும் துன்பங்களை உணர்ந்து, அவற்றை சரி செய்ய முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
一一一一一一一一一

📡கையெழுத்தை டிஜிட்டலுக்கு மாற்றும் பேனா!...

கைப்பட எழுதுவதை, அப்படிேய டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்றும் கருவிகளும் வரத் தொடங்கியுள்ளன. அதில் சிறப்பு கவனத்தைப் பெற்றுவருகிறது 'நுவா பென்' (Nuwa Pen) என்ற டிஜிட்டல் பேனா. நெதர்லாந்தைச் சேர்ந்த 'நுவா'வின் ஆராய்ச்சியாளர்கள், எந்தக் காகிதத்தில் எழுதினாலும், எழுத்தை புரிந்துகொண்டு, டிஜிட்டல் கோப்பாக மாற்றித் தருகிறது. இதற்கு உதவும் வகையில், மூன்று குட்டிக் கேமிராக்கள், அசைவு மற்றும் அழுத்தத்தை உணரும் உணரிகள், மங்கலான வெளிச்சத்தில் கேமிராக்களுக்கு உதவ, கண்ணுக்குத் தெரியாத அகச்சிவப்பு எல்.இ.டி.விளக்கு ஆகியவை பேனாவிலேயே பொறுத்தப்பட்டுள்ளன. கேமிராக்களும் உணரிகளும் சேகரிக்கும் தகவலை, ஒரு மொபைல் செயலிக்கு அனுப்ப, அங்கே கையெழுத்து டிஜிட்டலாக மாறுகிறது.
一一一一一一一一一

📡பழமையைப் பாதுகாக்கும் அணு ஆற்றல்.

அணு ஆற்றலானது மின்சார உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்குப் பயன்படுகிறது. அதைக் கொண்டு கலாசார முக்கியத்துவம் மிக்க பழம் பொருட்களைக் காக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 
1000 ஆண்டுகள் பழைய ஓவியங்களை, கலைப் பொருட்களைச் சிதையாமல் காப்பது என்பது சுலபமானதல்ல. பல நேரங்களில் 1000 ஆண்டுகள் பழைய ஓவியங்களை, கலைப் பொருட்களைச் சிதையாமல் காப்பது என்பது சுலபமானதல்ல. பல நேரங்களில் அவற்றைக் காப்பதற்காகப் பயன்படும் வேதியியல் பொருட்களே கூட, அவற்றுக்கு லேசான பாதிப்பைத் தரக்கூடும்.
அணு ஆற்றல் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. உதாரணமாக, எகிப்திய பிரமிடுகளில் உள்ள சுவர் ஓவியங்களில ஏராளமான கிருமிகள் இருந்தன. அணுக்கதிர் வீச்சு கொண்டு கிருமிகள் அழிக்கப்பட்டு, ஓவியங்கள் மீட்கப்பட்டன. சைபீரிய நாட்டில் 50 ஆயிரம் ஆண்டுகள் பழைய ராட்சத யானையான 'மெமத்' உடல் கிடைத்தது. அதிலிருந்த ஆபத்தான நுண்ணுயிரிகள், கதிர்வீச்சு கொண்டு அழிக்கப்பட்டன. கலை உலகில், அணு ஆற்றல் சமீப காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. பல நேரங்களில் பழைய கலைப் பொருட்களைப் போலவே போலியாக உருவாக்கப்பட்டு, விற்கப்படும் பொருட்களைக் கண்டுபிடிக்கவும் அணு ஆற்றல் பயன்படுகிறது. உலகம் முழுதும் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ள ஏராளமான கலைப் பொருட்களை, பழம்பெருமை கொண்ட பொருட்களை, இந்த அணுக்கதிர் தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்க முடியும்.
一一一一一一一一一
💫தொகுப்பு:செ.மனுவேந்தன் 

No comments:

Post a Comment