சிரிக்க...சில நிமிடம்...


சர்தார்ஜி ஜோக்ஸ்


📱மிஸ் கோல்

சர்தார்ஜி: மிஸ், நீங்கள் எனக்குக் கோல் பண்ணி இருந்திங்களா?

டீச்சர்: நானா? , இல்லையே ஏன்?

சர்தார்ஜி:நேற்று என்னுடைய மொபைல் போனிலை ''மிஸ் கோல்'' என்று இருந்ததே!!

 

பஞ்சாப்பின் தலைநகரம்

 சர்தார்ஜியின் மகன்:கடவுளே, எப்படியாவது நியூயார்க்கை பஞ்சாப்பின் தலைநகரமாக மாத்திவிடு!

அப்பா சர்தார்ஜி: ஏண்டா கடவுளிட்ட அப்பிடி வேண்டுறாய்?

சர்தார்ஜியின் மகன்: ஏன்னா, நான் அப்பிடித்தான் பரீட்ச்சையில எழுதியிருக்கேன்!

 

👶கடவுளே இது போதும்

அமைச்சருடைய குடும்பத்தில் நான்காவது பிள்ளை பிறந்தது.

 சர்தாரை அழைத்து குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

 

 முன்னாள் பிறந்த மூன்று பையன்களுடைய பெயர் என்ன? என்று கேட்டார் சர்தார்.

 

 ஒருவன் ரஹ்மத் இலாஹி (கடவுளின் அன்பு) அடுத்தவன் பர்கத் இலாஹி (கடவுளின் கருணை) மூன்றாம் அவன் ம்ஹ்பூப்  இலாஹி (கடவுளின் அன்புக்குரியவன்).

 

 சர்தார் சற்று நேரம் யோசித்து விட்டு சொன்னார், 'பாஸ்கர் இலாஹி (கடவுளே இது போதும்) என்று பெயரிடுங்கள்'

 

🐜எறும்புப்  பவுடர்

விற்பனையாளர்: சார் இந்தாங்க எறும்புப்  பவுடர்.

 சர்தார்ஜி: வேணாம், வேணாம். அதுகளுக்கு பவுடர் போட்டால், நாளைக்கு லிப்ஸ்டிக் கேட்கும்.

 

🏢ஜென்ம விரோதிகள்

சந்தா சிங்கும்  பந்தா சிங்கும் ஜென்ம  விரோதிகள்.

 

  சந்தா சிங் கட்டடத்தின் முதல் தளத்தில் வசிக்கிறார். பந்தா சிங் கட்டடத்தின் 7வது தளத்தில் வசிக்கிறார்.

 

 ஒருநாள் கட்டிடத்தில் லிப்ட்  ஏதோ கோளாறாகி வேலை செய்யவில்லை.

 

இது பழிவாங்க நல்ல சாக்கு என்று நினைத்த பந்தா சிங், சந்தா சிங்கை  தன் வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டாராம்.

 

  லிப்ட் வேலை செய்யாததால்  7 மாடி நொங்கு லொங்குன்னு, களைக்கக்  களைக்க 7 மாடிப்படி ஏறி வந்தாராம் சந்தா சிங்.  வந்து பார்த்தால் வீட்டில் ஒரு பெரிய போட்டு தொங்குதாம்.

 

 அதுக்கு பக்கத்தில் ஒரு பேப்பர்ல, ''நல்லா ஏமாந்தியா? ஹா..ஹாஹ்ஹா'' ன்னு எழுதி இருந்ததாம்.

 

 இதை பார்த்த சந்தா சிங்குக்குக்  கோவம் வருது, ஆனால் அவர் மட்டும் சளைச்சவரா  என்ன,

 

 அவரும் அதே பேப்பரில் எழுதிவைச்சாராம்  ''நான் இங்கே வரவே இல்லையே''

 

 

🚄பஞ்சாப் எக்ஸ்பிரஸ்

ஒரு நாள் திடீரென்று படியாலா  ரயில்வே நிலையத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த 50 சர்தாஜிக்களும் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர்!

 

 அனைவருக்கும் ஒரே ஆச்சரியம்.... என்ன நடந்தது? எதனால் அந்த பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைத்து சர்தார்ஜிக்களும் இறந்துவிட்டனர் என்று!

 

 அந்த பிளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த ஒரே ஒரு எஞ்சிய சர்தாரை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாகக்  கேட்டனர்.

 

 அதற்கு அந்த சர்தார்ஜி, 'ரயில் வருவதற்காக அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைத்து சர்தாஜிக்களும் இறந்துவிட்டனர்' என்றார்.

 

 அப்படி என்ன தவறு என்று நிருபர்கள் கேட்டதற்கு, சர்தார்ஜி சொன்னார். 'எல்லாரும் பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அறிவிப்பாளர் ''பஞ்சாப் எக்ஸ்பிரஸ் மூன்றாவது பிளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது'' என்று அறிவித்தார். உடனே அனைத்து சர்தார்ஜிக்களும் பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர்.ரயில் அனைவரையும் அடித்துவிட்டது.

 

 உடனே நிருபர்கள் 'என்ன முட்டாள்தனம்?! ஆனால் நீங்க மட்டுமாவது புத்திசாலித்தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே?! எப்படி? என்றனர்.

 

 அதற்கு எந்த புத்திசாலி சர்தார், 'நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து இருந்தேன். அறிவிப்பை கேட்டுவிட்டு பிளாட்பாரத்தில் ஏறிப்  படுத்துக் கொண்டேன். ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக, தாண்டவாளத்தில் வந்து விட்டது.'' என்று கூறினாரே பார்க்கலாம்.

..........................................................தொகுப்பு:செ. மனுவேந்தன்

0 comments:

Post a Comment