"அன்பின் இலக்கணம்
அன்னை ஆகி
அகிலத்தில் அவளே உயர்வு ஆவாள்!
அல்லல் பொறுக்கும் தியாகி ஆகி
அனைவரையும் அணைக்கும்
ஆண்டவன் ஆவாள்!"
"பாதிக்கும் இடர்களை தானே தாங்கி
பாரம் என்று பிள்ளைகளை எண்ணாள்!
குமையாள்; கொதியாள்; குலுங்காமலே நடப்பாள்
குழவி கொஞ்சுகையில் துன்பம் மறப்பாள்!"
"நடைதவறி
வீழ்கையில் துணை நின்று
நமதவறுகள் மன்னித்து ஒன்று
சேர்ப்பாள்!
கடையன் என்று பிறர் சொலினும்
கைதடுத்துக் காத்து துணிவு ஏற்றுவாள்!"
"வானும் கடல்மலையும்
கானகமும் விந்தையில்லை
வான்நிலாவும் மலரும்
மழைவெயிலும் அதிசயமில்லை
வானவன் படைத்ததிலே
எதுவுமே புதுமையில்லை
தாயைப் படைத்தானே
அதற்கு இணையேயில்லை!"
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment