‘’தமிழர் சமயமும் அதன் வரலாறும்’’ பகுதி: 13

[ஒரு அலசல்- தமிழிலும் ஆங்கிலத்திலும்]



சங்க காலத்தில் தமிழர் சமயத்தில் கடைப் பிடிக்கப் பட்ட இன்னும் ஒரு சிறப்பியல்பு [அம்சம்] வெறியாட்டம் ஆகும். மனிதர் மேல் தெய்வம் ஏறி வருவதுண்டு என்ற நம்பிக்கையில் இருந்து உருவானதே இதுவாகும். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இந்த வெறியாட்டம் வழக்கில் இருந்துள்ளது. உதாரணமாக "வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும்" என தொல்காப்பியத்தில் புறத்திணையியலில் மிகத் தெளிவான முறையில் விளக்கியுள்ளார். அதாவது ஆநிரைகளை மீட்க வந்த வீரர்களிடம் வெறியின் இயல்பறிந்த வலிமையான நுனியுள்ள வேலேந்திய வேலன் வெறியாட்டு ஆடி அதனால் அவனணிந்த காந்தள் மலர் மாலை கசங்கியது என்கிறது. பொதுவாக அவனுடைய உடம்பில் தெய்வ ஆற்றல் அல்லது மலையில் உறைந்த கடவுளான "முருகு" என்ற ஆவி வந்த போது, அவன் ஆடினான். இன்னது நிகழும் என ஒன்றிரண்டு சொற்களால் பயனும் கூறினான். இந்த வெறியாட்டம் ஆண், பெண் இருபாலரும் ஆடினார். சங்க இலக்கியத்தில் காணப்படும், வேலன் வெறியாடலின் மூலம் பெண்ணை அணங்கிய [வருந்தல், வருத்துதல், நோயுறுதல்] முருகனை ஆற்றுப் படுத்தும் சடங்கு, புராதன சமயம் சார்ந்தது ஆகும். முருகு, பிற்காலத்தில் முருகன் எனக் உருவகஞ் செய்யப் பட்டார். சங்க காலத்தைப் பொற் காலம் என்று சொல்ல ஒரு காரணம் அங்கு மதச் சண்டைகளே இல்லை. அவன் வணக்கியது  திணை நிலங்கள். அகம் - புறம் தான் அவனின் மதம்.உதாரணமாக, அகம் என்பதற்கு வீடு, உள்ளம், மெய் என்ற அர்த்தங்களும் உண்டு. ஆகவே உள்ளத்தால் ஒருத்தரை ஒருத்தர் விரும்பியவர்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது அகம் என்பதுடன் அந்த குடும்பமே மெய்யும் ஆகிறது. ‘உயர்திணை என்மனார் மக்கள் சுட்டேஎன்று தொல்காப்பியர் கூறுகிறார். அதாவது எவன் மனிதன் என்று சுட்டிக் காட்டப் படுகின்றானோ அவன் தான் மனிதன் என்கிறார். உயர்வுக்கு எதிர்பதம் தாழ்வு. ‘தாழ்திணைஎன்று தான் வைத்திருக்க வேண்டும். ஆனால் தொல்காப்பியர் அஃறிணை என்று வைத்தார். உயர்வு அல்லாத மற்ற திணைகள் என்பது பொருள்.தாழ்ந்ததைக் கூட தாழ்ந்ததென சொல்லக் கூடாது என்ற தமிழ்ப் பாண்பாட்டின், மதத்தின் விளைவு இது வாகும். பண்டைய  தமிழரின் கடவுளாரில் மிகவும் போற்றிப் பாராட்டி வணங்கிய தமிழரின் தெய்வமாக சேயோன், முருகன் ஆதி காலம் தொடங்கி இருக்கிறார். தமிழ் அகராதியில் சேய் = மகவு: சிவப்பு: இளமை என்று குறிக்கிறது. மேலும் புறநானுறு 56, முருகனை சேயோன் என்று அழைக்கிறது. இயற்கை வழிபாட்டின் படி, சேயோன்முருகன்குறிஞ்சிக் கடவுள் அல்லது குறிஞ்சி நிலத் தலைவன் ஆனான்!.ஆகவே, திருமால் / முருகன் = இவர்கள் நிலத்தின் தலைமக்கள். இவர்கள் பூர்வகுடி - இயற்கை வடிவினர் ஆகும்? அது போல தொல்காப்பியர் குறிப்பிடும் மற்ற நிலத் தெய்வங்களும் [வேந்தன், வருணன், கொற்றவை] அந்த அந்த நிலங்களுக்குரிய வீரர் வீராங்கனை ஆக இருந்திருக்கலாம்?.என நாம் கருதலாம்.


பிந்திய காலத்தில்  தான் சமயம் என்ற சொல் தமிழர்களிடம் பொதுவான வழக்காற்றில் வந்தது. அதுவரை அவர்களிடம் இருந்தது தர்மவழி அல்லது அறவழி மாத்திரமே. இது வன்முறையையோ அல்லது மற்றவர்களுக்கு தீங்கு இழைப்பதையோ போதிக்கவில்லை, இதனால், இந்த அறவழி, மற்ற சில சமயத்தில் இருந்து வெளிப்படையாக, அப்பட்டமாக  மாறுபடுவதை காண்கிறோம். உதாரணமாக, சில மதம் தாம் அகிம்சையையே போதிப்பதாக கூறினாலும், உண்மையில் தமது மதத்தை பரப்ப அதற்கு எதிர்மாறாக செயலாற்றுகிறார்கள். வேறு சில மதம், வெளிப்படையாகவே தம் மதத்தை பின்பற்றாதவர்களை கொல்லலாம் என்கிறது. ஆனால் அறவழி அப்படி அல்ல. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்கிறது. மேலும் அப்படியான எந்த தீங்கையோ வன்முறையையோ தம்மை பின்பற்றுபவர்களிடமோ அல்லது புற சமயத்தை பின்பற்றுபவர்களிடமோ அது அனுமதிக்க வில்லை. கத்தோலிக்க வரலாற்றில், கலீலியோ கலிலி [Galileo Galilei] க்கு எதிரான வழக்கு விசாரணை மிக மோசமான மற்றும் இக்கட்டான தருணங்களாக கருதப்படுகிறது. நிக்கோலாஸ் கோப்பர்னிக்கசின் [Nicholas Copernicus] கோட்பாட்டிற்கு ஆதரவான கலீலியோவின் சூரிய மைய வானியல் கொள்கையும் [heliocentrism], அவர் அதற்கு ஆதரவாக முன்வைத்த வாதங்களும் அவரை கத்தோலிக்கத்தின் திரிபுக் கொள்கை விசாரணையின் [‘இன்குயி சிஷனின்’ / Inquisition] கரங்களில் சிக்கவைத்தது. அவரின் நடவடிக்கைகள் கட்டுப் படுத்தப் பட்டு போப் ஆண்டவரால் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். ஆனால், இதற்கு எதிர்மாறான நிலையை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, சங்க இலக்கியத்தில் காண்கிறோம். அங்கு மக்கள் சடங்குகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களை அல்லது தர்க்கங்களை கேள்வி கேட்க முடியும் என்பதை காண்கிறோம். அது மட்டும் அல்ல அதை நையாண்டி செய்வதையும் காண்கிறோம். அகநானூறு 22, குறுந்தொகை 263 - போன்ற கடவுளை ஏளனம், நையாண்டி செய்யும் கருத்துள்ள பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் பிரபலமாக, புகழ் பெற்றதாக இருகிறது. மேலும் இவை பண்டைய தமிழர் கலாச்சாரம், பண்பாட்டு வளர்ச்சி பற்றிய ஆய்விற்கு மிகவும் முக்கியமாகிறது. அது மட்டும் அல்ல, இதனால், அந்த காலத்தில் தமிழர் மத்தியில், சமயச் சார்பற்ற, உலகியல் சார்ந்த சமுகம் இருந்ததாக ஊகிக்க முடிகிறது. மேலும் இது ஆரியரின் செல்வாக்கிற்கு உட்பட்ட பக்தி காலத்தில் [கி.பி 700- இலிருந்து கி.பி 1200- வரையுள்ள காலம்] கேள்விகள் ஒன்றும் இல்லாமல் கடவுளை நம்பியதற்கும் முரணாகும். அத்துடன் சங்க கால மக்கள் தெய்வத்துவம் அல்லது கடவுட்டன்மையை பற்றிய இரு மாறுபட்ட குணாதிசயங்களை அறிந்து இருந்தார்கள். ஒன்று அனைவற்றுக்கும் அப்பாற் பட்ட கடவுள், மற்றது எல்லாவற்றையும் உள் இருந்து இயக்கும் இயவுள் [இய + உள்].`கட- வுள்அதாவது கடந்து செல் உன் உள்ளே, அல்லது வெளி "கட" ந்தால் "உள்" அதாவது கடவுளைக் கோவிலுக்குச் சென்று தேடுவதை விட, தன்னுள் தேடிக் கண்டு, தேறுவதே மெய்யறிவாகும் எனவும் கொள்ளளாம்.

 

"அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்

கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்

மணம் கமழ் வியன் மார்பு அணங்கிய செல்லல்

இது என அறியா மறுவரல் பொழுதில்,

படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை  5

நெடுவேள் பேண தணிகுவள் இவள்என

முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற,

களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி,

வள நகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து,

உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,  10

முருகு ஆற்றுப்படுத்த உருகெழு நடுநாள்,

ஆரம் நாற அரு விடர்த் ததைந்த

சாரல் பல் பூ வண்டுபடச் சூடி,

களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்

ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல  15

நல் மனை நெடுநகர்க் காவலர் அறியாமை,

தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,

இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து

நக்கனென் அல்லனோ யானே, எய்த்த

நோய் தணி காதலர் வர ஈண்டு  20

ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?  21"

 

[அகநானூறு 22]

 

"மறிக் குரல் அறுத்துத் தினைப் பிரப்பு இரீஇச்

செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்கத்

தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா

வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்திப்

பேஎய்க் கொளீஇயள் இவள்எனப்படுதல்  5

நோதக்கன்றே தோழி, மால் வரை

மழை விளையாடும் நாடனைப்

பிழையேம் ஆகிய நாம் இதன் படவே."

 

[குறுந்தொகை 263]

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

பகுதி: 14 தொடரும்……

  ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக/Click to read from the beginning


*அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக/CLICK TO READ NEXT PART, 

இணைத்த படங்கள்:

கலீலியோ கலிலிக்கு எதிரான வழக்கு விசாரணை,வெறியாட்டம்,குறிஞ்சி கடவுள் சேயோன்,குறுந்தொகை - பாடல் 263

 

 An analysis of history of Tamil religion – PART:13

 [In English and Tamil]

 

Another feature / rituals found during Sangam era is "Veriyattam" or Veriyattu [வெறியாட்டம் / வெறியாட்டு], the dance of the priest possessed by Murukan. The great number of references to this dance in Cankam literature reveals the importance it had in that culture. In order to appease the God, the Murukan priest or priestess is invited to offer the sacrifices of the blood of rams, roasted rice grains, and red flowers to the accompaniment of a vigorous and frenzied ritual. The priest or priestess generally entered into a trance and sang as he danced in the open space of the village common or before the temple of Murukan.  The contexts described in the poems indicate that Veriyattu was performed by the Velan to find out the ailment of the lady love whose body lost its lustre because of her anxiety regarding her lover. Here Under the influence of the god, He or She  sang and danced, but also read the dim past, predicted the future, diagnosed diseases. Velan is a reporter and prophet endowed with supernatural powers. Veriyatal had been performed by men as well as women.

 

Tolkappiyar in his first verses of Purattinaiyiyal [புறத்திணையியல்] explains about vetchi [வெட்சி / Stealing away of the cattle of the enemies] or cattle raiding. In Tolkappiyam there are 14 turais (sub-situations) describing seizures and 21 describing recovery of the cattle. Here under 'The ramifications of vetchi theme', We found 'Velan' involvement again in different aspect. It says: 'danced by the ripe, prophetic - tongued velan, the priest who is expert in worship of Muruhan and holds the spear, Vel, wearing kantal flowers (gloriosa superba), ... '

 

Here, the word Tolkāppiyam is a attribute-based composite word, with tol meaning "ancient, old", and kappiyam meaning "book, text, poem, kavya"; together, the title has been translated as "ancient book", "ancient poem", or "old poem".

 

The most venerated god of the Tamizhs was known by the two names Seyon and Murugan since the time of their known history. In Tamizh lexicon, the term chEy indicates: redness. Thus, chEyOn refers to one who is young, having a ruddy complexion Purananuru 56 calls Murugan as cheyyOn -- the red one: Also, As per nature worship, Seyon → Murugan→ Kurinji land’s ruling deity or Warrior of the  Kurinji land. Hence, Mayon / Seyon ..... May be the warriors of the respective land divisions ? Similarly, all other deities also may be the warriors of the respective land divisions?

 

Sangam era is also called as the "golden age" is because there were no religious wars at that time. The basis of their unity was their land [Thinai] which includes flora and fauna, inhabitants, deities and social organisation which characteristic of that said landscape. Their identity was defined by their external surroundings, not their religion. For example, the word "agam" refers to the interior of a house, while the word "puram" refers to the exterior. Therefore, people who shared the same land lived together, and their community identity was defined by their land and not by the religion. The Tamil poet Tholkappiar, under the Kilavi Akkam, When he pointed out about Human & Non.Human classes, He says: 'Words go in two classes, Uyartinai & Akartinai, The former designate the Human generic class, and the latter the Non - Human generic class'. Please note that Uyartinai means High division, so opposite must be low division [‘தாழ்திணை’], But He mentioned as Akartinai, means they are other division besides high-division, rather than saying they are low division! This is the meaning of Tamil culture or religion at that time!!

 

The word Samayam seems to have entered common usage in the later period only. For long it was Dharma vazhi or Ara vazhi [The way of truth or reality] only, which does not preach violence or harm to others. This is one stark difference between the 'ara vazhi' and some other religions. For example, some, though they claim to preach the non-violence, actually used violence and harmful methodology to propagate their religions, and some religion openly tell its followers to kill those who do not follow that religion. But Ara vazhi does not allow such harms to anyone of its own following or of others' religion. The trial of Galileo Galilei is one of the most infamous and embarrassing moments in Catholic history. His discovery called heliocentrism, which is, Sun is at the center of the solar system, and Earth, like everything else nearby, orbits Sun and his opinion that Nicholas Copernicus was right, The Earth is not the center, brought him before an Inquisition. In contrast to this, people of Sangam age have allowed to question various logics of rituals. Akanaanuru 22, Kurunthokai 263 and other similar poems are very important in history of Tamil culture since it shows the secularism prevailed in those days. Since they are so many poems in same motif, this genre of poems must have been popular. A popular motif which mocks the rituals made to god surely makes us infer the secular society of those days. Unlike Bakthi period, after the ariyan influence, where god was accepted without any question, Also, Sangam Tamil people understood two distinct characteristics of Godhood. God who is beyond all (Tamil : கடவுள், Kadavuḷ ) and the God who sets things in motion (Tamil: இயவுள்,Iyavuḷ ).

 

"He’s from the country where gods live

in tall mountains and forests abound

with waterfalls.

I am sad when I don’t hug his fragrant,

wide chest.  Those around me do not

understand this.  The diviner women

with wisdom say, “If we pray to Murukan

of great fame and large arms, who ruins

those who do not submit to him, her

sorrow will vanish”.

 

A pavilion is well erected, a spear is

garlanded, and our big house reverberates

with loud music.  Ritualistic offerings of

beautiful red millet mixed with blood are

given to Murukan, to appease him, in the

middle of the fierce night,

 

when my lover comes through the harsh

mountain slopes with sandal fragrance,

wearing a garland with many bee-swarming

clusters of flowers from caves so hard to reach,

slyly dodging the guards of our rich mansion,

like a tiger hiding to take down an elephant.

He comes with a desire in his heart, and that

is also my desire.  Whenever he hugs me, my

affliction goes away and I am very happy.

I laugh whenever I think of the vēlan and the

veriyāttam ritual, and how others believe it!"

 

[Akanaanuru 22]


"A young goat’s neck is slit,

offering of millet is given,

and many instruments are played

in the river islet, with prayers to

many big gods.

These are nothing but appearances,

which will not heal your affliction.

To hear them say that you are

possessed by a spirit hurts me,

O friend.

 

There is no fault in our conduct

with the lord of the mountains,

where clouds play on tall peaks."

 

[Kurunthokai 263]

 

 

 

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

 

Part 14 Will follow...

 

[Pictures attached:The trial of Galileo Galilei, "Veriyattam" or Veriyattu, Seyon, Kurinji land’s ruling deity or Warrior Kurunthokai 263]

 

 

 


1 comment: