"தமிழர் சமயமும் அதன் வரலாறும்’’/பகுதி: 12

 [ஒரு அலசல்- தமிழிலும் ஆங்கிலத்திலும்]


கால் நடை மந்தை மேய்ப்பு கொண்ட ஒரு பண்பாடு புதிய கற் காலத்தில் [Neolithic] தென் இந்தியாவில் கிறிஸ்துக்கு முன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தன. கிறிஸ்துக்கு முன், முதல் ஆயிரம் ஆண்டின் நடுப் பகுதியில், அங்கு மிகவும் நன்கு வளர்ந்த நாகரிகம் வெளிப்பட்டது. இது ஆரியரின் இந்து மதத்திற்கு முற் பட்ட சிவ பக்தர்களைக் கொண்ட [Saivaites] ஒரு பண்பாடாகும். இவை பற்றிய சில முன்னைய விவரங்களை, நாம் தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியத்திலும், பத்துப்பாட்டு, எடுத்தொகை போன்ற சங்க இலக்கியத்திலும், மற்றும் திருக்குறளிலும் காணலாம். இவை எல்லாம் கிறிஸ்துக்கு முற் பட்டவை யாகும். இன்று எமக்கு கிடைத்த நூல்களில் மிகவும் தொன்மையான பண்டைய நூலான தொல்காப்பியத்திலும், சுமேரியர்கள் போல, பல தெய்வங்கள் அங்கீகாரப்படுத்தப் பட்டுள்ளதை காண்கிறோம். "ஓர் இனத்தின் வாழ்க்கை முறையும், நம்பிக்கைகளும்,

குண நலன்களும், பண்பாட்டுக் கூறுகளும் அந்த இனம் சார்ந்திடும் நிலத்தன்மை, தட்ப வெட்ப நிலை ஆகியவற்றின் பின்னணியில் தான் அமையும்" என குரோஸ் ஹோட்ஜ் (Grose Hodge) எனும் நிலவியல் அறிஞர் குறிப்பிடுவார். இக் கூற்று பண்டைத் தமிழர்களுக்கும் முற்றிலும் பொருந்தும். ஐந்து வகை நிலப்பாகு பாட்டுடன் வாழ்ந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கை, அவ்வாறே மாயோன் [திருமால்], சேயோன் [முருகன்], வேந்தன் [இந்திரன்], வருணன், கொற்றவை ஆகிய தெய்வங்களை கொண்ட ஒரு நிலப்பாகுபாடாக காணப்பட்டது. என்றாலும் பிற்காலச் சைவத்தின் பரம்பொருளாகிய சிவனைப் பற்றிய குறிப்போ அல்லது அவருக்கான நிலப்பாகுபாடோ அங்கு காணப்படவில்லை. இது எமக்கு ஆச்சரியமாக உள்ளது?. எது எப்படியாயினும், சிவனைப் பற்றிய குறிப்புகளை தொல்காப்பியத்துக்குப் பிந்திய கடைச் சங்க இலக்கியங்களில் காணக் கூடியதாக இருக்கிறது. இங்கு சிவனை தலைமையான கடவுளாகவும் முருகனை மக்களால் கொண்டாட்டப் படும் கடவுளாகவும் காண்கிறோம். அது மட்டும் அல்ல, முருகனின் தலைமை பணி வேட்டையாடுதலும் தேன் சேகரிப்பும் ஆகும். அப்படியே மாயோனின் பணி கால் நடை வளர்ப்பும் பால் சம்பந்தமான பொருட்களுடன் கையாளுவதும் ஆகும் எனவும் அறிகிறோம். ஆகவே சங்கத் தமிழர்களின் வாழ்விலும் அவர்களின் மூதாதையர் சுமேரியன் போல, இயற்கையுடன் அமைந்த பல தெய்வ வழிபாட்டை காண்கிறோம். இவை எந்த எந்த வரத்தை தெய்வங்களிடம் இருந்து கேட்கிறோம் என்பதை பொறுத்து இருந்தது. உதாரணமாக போரில் வெற்றியடைய கொற்றவையும் கால்நடை  நிறைய பால் தர திருமாலையும் வழிபட்டனர். இப்படித் தான் பல தெய்வங்கள் பண்டைய தமிழர் நாட்டில் தோன்றின. மேலும், கொற்றவை வழிபாடு பற்றிய விரிவான விளக்கங்கள் சிலப்பதிகாரத்து வேட்டுவ வரியுள்தான் முதன் முதலில் பதிவாகி உள்ளன. ஆறலைக் கள்வர்கள் என்று சுட்டப்படும் எயினர்கள் ஆநிரை கவர்ந்து வரக் கொற்றவையை வழி பட்டதாகவும் ஆநிரை கவர்தல் போரில் எயினர்க்கு வெற்றி தருபவள் கொற்றவை என்ற குறிப்பும் அங்கு காணப்படுகிறது. உதாரணமாக, சிலப்பதிகாரத்தில், இரண்டாவது மதுரைக் காண்டத்தில், வேட்டுவ வரியில்,

 

 

"கலையமர் செல்வி கடனுணின் அல்லது

சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்"

(வேட்டுவவரி,வரி 16-17)

 

"புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை

கருதிப் போகுங் காலைக்

கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும்

கொடுமரமுன் செல்லும் போலும்"

(வேட்டுவவரி,வேறு,பாடல்,13)

 

 

மேலே காட்டப்பட்ட முதல் மேற்கோளில், கொற்றவைக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக் கடன்களைச் செலுத்த வில்லையென்றால் அவள் உங்கள் வில்லுக்கு வெற்றியைத் தரமாட்டாள் என்றும் இரண்டாம் மேற்கோளில், வீரர்கள் கையில் வில்லை ஏந்தி,பறவைகள் தம்மைத் தொடர்ந்து வர, பகைவரது ஆநிரையைக் கவரப் போகும் போது, தான் கைக் கொண்ட சிங்கக் கொடியினை எடுத்து உயர்த்திக் கொற்றவையும் அவன் வில்லின் முன்னே செல்வாள் போலும் என்று கூறுகிறது.

 

 

ஆரம்பத்தில் முருகன் உருவ மில்லாத மலை கடவுளாக இருந்ததுடன் அவரை ஆவியாகவே / சத்தியாகவே வழி பட்டார்கள். பின் மரத்திலும் கல்லிலும், இறுதியாக மனித வடிவத்திலும் வழிபட்டார்கள். சிந்து வெளி நாகரிகத்தில், குறிப்பாக ஹரப்பா, மொகெஞ்சதாரோ நகரங்களில் இவர் 5000 வருடங்களுக்கு முன்பே "ஆமுவான்" ["Ahmuvan"] என்ற மரக் கடவுளாக வழிபடப் பட்டுள்ளார். அது மட்டும் அல்ல சிவனை "பசுபதி"யாகவும் அங்கு காண்கிறோம். பசு = உயிரினங்கள் + பதி = தலைவன் = பசுபதி. அப்படியே பெரும் தாய் தெய்வத்தையும் அங்கு காண்கிறோம். மேலும் பண்டைய தமிழரிடம் காவல் தெய்வங்களையும் காண்கிறோம். உதாரணமாக அமைதியான அல்லது சாதுவான தெய்வமாக மாரி அம்மனையும் போர் தெய்வமாக ஐயனார் அல்லது கருப்பசாமியையும் காண்கிறோம். பொதுவாக, கருப்பசாமி நீதிக்கான தெய்வமாகவும் ஐயனார் தமது கிராமத்தின் பாதுகாப்பு தெய்வமாகவும்

வழிபட்டார்கள். தமிழில் மாரி என்பது மழையை குறிக்கிறது. அது போல அம்மன் என்பது தாயை குறிக்கிறது [மாரி அம்மன்]. என்றாலும் இங்கு தாய் பண்பை அல்லது இயல்பையே அது சுட்டிக் காட்டுகிறது எனலாம். மேலும் பொதுவாக "மழை","கருவுறு தன்மை" ஆகிய செழிப்பு வேண்டியும் நோயை குணப் படுத்தவும் அவளை வழிபட்டார்கள். பண்டைய தமிழர்கள் மத்தியில் நிலவிய தாய்த் தெய்வ வழிபாட்டு மரபு, அங்கு பெண்மைக்கு மதிப்புக் கொடுத்து போற்றிப் பாராட்டப்பட்டதை எடுத்துக் காட்டுகிறது. உதாரணமாக, சூலி, கொற்றி அல்லது கொற்றவை என்ற மாற்று பெயர்களையும் கொண்ட செல்வி என்ற தாய்த் தெய்வம் அல்லது பூர்வீகத் தாய் - காடுறை தெய்வமாக, மலையுறை தெய்வமாக, கடல் உறை தெய்வமாக, மொத்தத்தில் இயற்கை அன்னையாக, தொன்ம நாயகியாக, சங்க இலக்கியத்தில் - அகம் 345, 370, குறுந்தொகை 218, கலித்தொகை 89 போன்ற பல பாடல்களில் காணப் படுகிறார். மேலும் சங்க கால மதுரை கோயில்கள் பெரும் பாலும் தாய்த் தெய்வத்தை கொண்டிருந்ததுடன் அங்கு பெண் மத குருமாரும் இருந்துள்ளனர். ஆண் பெண் படைப்பின் அடிப்படை நோக்கம் உயிர் உற்பத்தி என்பதை அறிந்த ஆதி கால மனிதன், அப்படி தாய்மை அடைந்த பெண்களை பெருமைபடுத்தி மதித்தான். அன்று ஒரு இனக் குழுவாக வாழ்ந்த மனிதனை தாய்மையடைந்த பெண் அரவணைத்து வழிநடத்தி சென்றாள். இதனால் அவள் போற்றப்பட்டு அவளை தெய்வமாக வழிபட்டான். இதுவே

கால போக்கில் மழையை மாரி அம்மனாகவும் நீரை கடல் அம்மாவாகவும் [உதாரணமாக காவேரி அன்னை], சிறு தெய்வ வழிபாட்டிற்கு வழிசமைத்தது எனலாம். எனினும்

இடைப் பட்ட நிலையில் தோன்றிய பெரும்பாணாற்றுப்படையில் முருகனின் தாயாகவும், பிந்திய இலக்கியமான திரு முருகாற்றுப் படையில், முருகனின் தாயாகவும் சிவனின் மனைவியாகவும் செல்வி என்னும் தொன்மம் படிமலர்ச்சி அடைந்துள்ளது. இது படிப் படியாக தந்தை வழி சமுகம் ஆரியர் வருகைக்கு பின் தோன்றியதை எடுத்து காட்டுகிறது. இதை மேலும் உறுதிப் படுத்துவது போல அங்கு சிவன் - பார்வதிக்கு எந்த மகளைப் பற்றிய செய்தியும் இல்லை. ஆனால் முருகனுக்கு வள்ளி தெய்வானை, பெருமாளுக்கு பூதேவி, சீதேவி என்று இரு மனைவிகளை ஏற்படுத்தி ஆணாதிக்க சிந்தனைக்கு மேலும் வலுவூட்டினான். தொல்காப்பியர் காலம் போலவே சங்க காலத்தில் தமிழ் மக்களிடையே வேரூன்றி இருந்த வழிபாடு நடுகல் வணக்கமாகும். இந்த பண்பாடு அதிகமாக  கி பி பதினோராம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. போரில் துணிவு காட்டி வீரச் சாவு அடைந்த போர் வீரனின் நினைவாக நடுகல் எழுப்பப் பட்டன. இந்த வீரச் சாவு அடைந்த தலைவர்களை மற்றும் தியாகிகளை சங்க பாடல்கள் போற்றுகின்றன. உதாரணமாக மறக்குடி பிறந்த மக்கள், விழுப்புண் பட்டு வீழ்ந்த வீரனது பெயரும் பீடும் [பெருமையும் வலிமையையும்] எழுதி நட்ட கல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுதலன்றி நெல் சொரிந்து வழிபடும் தெய்வங்கள் வேறு இல்லை என்று புறம் 335 கூறுகிறது.

 

"ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவின் அல்லது

நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே."

 

[புறநானூறு 335]

 

[கந்தையாதில்லைவிநாயகலிங்கம்,/அத்தியடி,யாழ்ப்பாணம்]

 

பகுதி 13 தொடரும்….

 *ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக/Click to read from the beginning


*அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக/CLICK TO READ NEXT PART, 

(இணைத்த படங்கள்:

நிலப்பாகுபாடு,கொற்றவை,காவல் தெய்வம்,

"ஆமுவான்",நடுகல்)

 

An analysis of history of Tamil religion [ In English and Tamil]

A Neolithic cattle - herding culture existed in South India several millennia prior to the Christian era. By the mid of the first millennia, before Christ, a relatively well - developed civilisation had emerged, still largely

pre-Hindu and called Saivaites. It is described in some detail in Tamil texts such as the Ancient Tamil grammatical works Tholkappiyam, Sangam literature: the ten anthologies - Pathuppāṭṭu, and the eight anthologies -Eṭṭuttokai as well as Thirukkural.  Tholkappiyam, the oldest piece of Tamil literature now existing, allots number of deities such as Murugan, Korravai [Kali], Thirumaal, Indran and Varunan, to the five parts or division of the Tamil land. The absence of the 'phallus' or 'Siva' in the above list is surprising? However, we found few references of 'Siva' in the latter Sangam literature, Here Sivan was mentioned as the supreme God, and Murugan was as the one celebrated by the masses. So, We find Sangam Tamils too worshipped, like Sumerians, different kind of gods, based on the kinds of boons asked from them. For example, 'Korravai' will have to be satisfied with blood - shed to grant victory in a war, while 'Thirumal' will be happy with the offer of milk produce, in order to grant good milk production. This is how many gods came to be worshipped in the Tamil land. For example, though the earliest references to Korravai are found in the ancient Tamil grammar Tolkappiyam, Only in Silappathikaram. mathurai kandam, Vettuva vari we have earliest references in details to goddess Korravai [or selvi]. Eyinar, the community inhabiting the palai [desert or barren area] region, seems to have sustained themselves through systematic thieving & robbery. Before they plunder and cattle lifting, they usually worship Korravai for their success. It was mentioned in vettuva vari [THE hunters’ song] of Silappathikaram,16-17:

 

'Unless you render what is due to the goddess riding on the stag,

She will not send victory to attend your bows,

O ye that live by robbery If you desire to live merrily drinking toddy,

render your dues.'

 

"கலையமர் செல்வி கடனுணின் அல்லது

சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்"

 

[வேட்டுவவரி, வரி 16-17]

 

And Vettuva vari others, poem 13 says:

 

'The soldiers, holding their bow and arrow in their hands,

followed by birds, advance towards the enemy's fortress

for Cattle looting  As they cover the enemy's territory,

Goddess Korravai too raise her lion flag high and

proceed forward to their bow and arrow'

 

"புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை

கருதிப் போகுங் காலைக்

கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும்

கொடுமரமுன் செல்லும் போலும்"

 

[வேட்டுவவரி, வேறு, பாடல்,13] 

 

in details. However, from the supreme position of Korravai seems to have waned gradually as she had been associated with Murugan as his mother.

 

 

'Murugan' was originally a formless Dravidian god of the hills and worshiped as a spirit, then later in the form tree & stone, finally as a human form god. He may be probably worshiped in ancient Indus valley civilisation cities like Harappa & Mohenjo-Daro 5000 years ago as Tree god - "Ahmuvan" & also we found Siva as "Pasupathi" along with great mother goddess there. Other than above, We find Tamil Village Guardian spirits, known as "Kaval Theivam" such as peaceful gods like Mariamman or warrior gods, like Ayyannar or Karuppaswamy. Karuppaswamy is the god of justice & Ayyannar is Guardian deity of village protection. In Tamil, the word mari would mean rain & Amman mean mother, but here it is more like mother nature. She was worshipped to bring prosperity, this includes bring rain & fertility and curing disease. The cult of the mother goddess is treated as an indication of a society which venerated femininity. The temples of the Sangam days, mainly of Madurai, seem to have had priestesses to the deity, Like Enheduanna, high priestess of the moon god Nanna (Sīn) in the Sumerian city-state of Ur in the reign of her father, Sargon of Akkad, which also appear predominantly a goddess. Further, among the early Tamils the practice of erecting memorial stones (nadukkal) had appeared, and it continued for quite a long time after the Sangam age, down to about 11th century. It was customary for people who sought victory in war to worship these hero stones to bless them with victory and Sangam Literature sang the praises of these deities. For example Purananuru 335,Says

 

"There are no gods, other than the 

memorial stones of heroes who blocked enemies,

killed their elephants with lifted,

shiny tusks and got killed,

to be worshiped with rice showerings."

 

 

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

 

Part 13 Will follow

 

(Pictures attached: five parts of the tamil land, Korravai, Village Guardian gods,"Ahmuvan",  memorial stones)

0 comments:

Post a Comment