அறிவியல்=விஞ்ஞானம்
சிக்கனமாய் பறக்கும் விமானம்
ஜெட் விமானங்கள் அளவில் பெரிதாக இருப்பதால் அதிக
எரிபொருளை குடித்து ஏகப்பட்ட புகை மற்றும்
ஒலி மாசினை வெளியிடுகின்றன. எனவே தான்
வரும் 2030க்குள்
மாசுபடுத்தும் விமானங்களை ஓய்வு பெற செய்து விட்டு, எரிபொருளை குடிக்காத குறைவான மாசினை கக்கும் விமானங்களை தயாரிக்க ஆராய்ச்சிகள்
நடக்கின்றன.
அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள 'ஜெட் ஜீரோ' என்ற புத்திளம் நிறுவனம், இப்போதுள்ளதை விட 50 சதவீதம் குறைவாக எரிபொருளை பயன்படுத்தி பறக்கும் ஜெட்
விமானங்களை தயாரிக்க முன் வந்துள்ளது.
புதிதாக வடிவமைத்துள்ள ஜெட் ஜீரோ விமானம்
தோற்றத்திலும் புதுமையாகவே இருக்கிறது. இரண்டு இயந்திரங்களும் இறக்கைக்கு அடியில்
இருப்பதற்கு பதிலாக வால் பகுதியின் மேலே
அமைந்துள்ளன.
சலவை இயந்திரத்தில் புரட்சி
துவைக்கும் இயந்திரத்தில் இதோ ஒரு புதுமை
வந்திருக்கிறது. அமெரிக்காவில் இண்டிகோ இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
ஈவா(Eeva),, தண்ணீர்
குழாய் இணைப்பு இல்லாமல் 11 லிட்டர் நீர் குறைவான மின்சாரத்தைப்
பயன்படுத்தி 90 நிமிடங்களில் 3.5 கிலோ எடையுள்ள அழுக்குத் துணிகளை சலவை
செய்து உலர்த்தித் தந்து
விடுகின்றது, ஈவா.
அது மட்டுமல்ல குறைந்த இடத்தை மட்டுமே அடைத்துக்
கொள்ளும் ஈவாவிலிருந்து நீராவியோ, ஈரமோ வெளியே
கசியாது. அந்த அளவுக்கு எல்லாம் இந்த
சிறிய இயந்திரத்துக்குள்ளேயே நடந்து முடியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும்
அக்டோபரில் சந்தைக்கு வரவிருக்கும் இந்த அருமைச் செலவை இயந்திரத்தின் விலை ரூபா 75 ஆயிரம் இந்தியன் ரூபா.
இந்த இயந்திரத்தைக்கென்று உருவாக்கப்பட்டுள்ள
சோப்புத்தூளிலும் பாதி மகிமை இருக்கிறது. எனவே ஈவாவின் தயாரிப்பாளர்கள் தரும்
சோப்புத்தூளை தான் பயன்படுத்த வேண்டும்.
பருவநிலை மாற்றத்தை தடுக்க மின்சாரத்தையும்
தண்ணீரையும் மிச்சப்படுத்த கோரும் இந்த யுகத்திற்கு ஏற்ற இயந்திரம் இது.
டியூன் போடும் சேர்க்கை செயற்கை நுண்ணறிவு
எழுத்து, காட்சி என்று கலைத்துறையில் ஏ.ஐ எனப்படும் செயற்கை
நுண்ணறிவு தொழில்நுட்பம் தன் கைத்திறனை காட்டி அசத்தி வருகிறது.
இப்போது அது இசை துறையிலும் காதினை
நுழைத்திருக்கிறது. கூகிள் அண்மையில் பல
புதிய சேர்க்கை நுண்ணறிவு நுட்பங்களை அறிவித்தது. அதில் ஒன்றுதான் மியூஸிக்
எல்.எம்.(MusicLM).
உங்களுக்கு வேண்டிய இசைத்துணுக்கு எப்படி இருக்க
வேண்டும் என்று ஆங்கிலத்தில் சில சொற்களில் விவரித்தால் போதும். அந்த விவரிப்பை
வைத்துக்கொண்டு, அசத்தலான இசைத் துணுக்கை தந்து விடும்
மியூசிக் எல்.எம்.
செயற்கை நுண்ணறிவு மென்பொருள்
இணைய இசை பதிவுகளை உள்வாங்கி சற்று வேறுபட்ட இசையை தருகிறது. சிலது உங்களுக்கு புரியாது. சிலது
பிடிக்காமலும் போகலாம். ஆனால் உங்களை கவரும் விதத்தில் சில டியூன்களை போட்டுத்
தரவும் செய்கிறது. இசைக்கோப்பாளருக்கு முற்றிலும் புதிய கோணத்தில் இசையை கோர்க்க
உந்துதலாக பல துணுக்குகளை மியூசிக் எல் எம் மென்பொருள் போடுகிறது.
காப்புரிமைச் சிக்கல் வரக்கூடாது என்பதால் இந்த மென்பொருளின் திறனை வெகுவாக
குறைத்து பொதுமக்களுக்கு இணையத்தில் கொடுத்திக்கிறது கூகிள்.
மடிக்கணினியின் மாயத்திரை
எவ்வளவு பெரிய மடிக்கணினியாக இருந்தாலும்
அதனுடன் வரும் திரை நம் தேவைக்கு குறைவான அளவிலேயே இருக்கும் இந்தக் குறையை போக்க 'சைட்புல்' நிறுவனத்தின் ஆராச்சியாளர்கள் உருவாக்கிய தீர்வு மிகவும்
அழகானது.
ஆக்மெண்டெட் ரியாலிட்டி எனப்படும்
மேம்படுத்தப்பட்ட மெய்நிகர் தொழில்நுட்பத்திற்கு பயன்படும் கண் கண்ணாடியை
அணிபவருக்கு, சற்றுத் தள்ளி நூறு அங்குல டிஜிட்டல்
திரை இருப்பது போன்ற பிம்பம் தெரியும்.
இந்த பிம்பத்தினுள் நீங்கள் மடி கணணியில் வேலை
செய்யும் வேலைகளை பார்த்துக் கொள்ளலாம். இந்த திரை, மெய்நிகர் கண்ணாடியை அணிபவருக்கு மட்டுமே தெரியும்.
எனவே விமானம் நெரிசல் மிக்க பொது இடங்கள் என்று
எங்கும் இந்த டிஜிட்டல் மடி கணினி திரையை பார்த்து நீங்கள் வேலை செய்ய முடியும்.
மூளைப் புற்றுக்கு முடிவு!...
ப்ளட் -ப்ரெயின் பேரியர்' என்பது நமது மூளையை நோய் கிருமிகள் தாக்காத படி காத்து
நிற்கும் ஒருவகை திசுக்களாகும். ஆனால் இவையே மூளையில் ஏற்படும் கட்டிகளை
அழிக்கவும், கட்டிகளை நீக்கியபின் செலுத்தப்படும் மருந்துகள் மூளையை அடைய விடாமல் தடுத்து
நிறுத்தவும் செய்கின்றன.
இதை தற்காலிகமாகத் திறந்தால் மூளையின் பாதித்த பகுதிக்கு
மருந்துகளை செலுத்த முடியும். சோதனை முறையில் இத்திசுக்களை திறக்க கொலம்பியா
பல்கலை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். 'க்லியோப்ளாஸ்டோமா' என்பது ஒரு வகையான மூளை புற்றுநோய். இந்நோய் பாதித்து
கட்டிகளை நீக்கப்பட நோயாளிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
நோயாளிகளின் மூளைக்குள், நுண் குமுழிகள்
அடங்கிய திரவம் ஒன்று 30 நொடிகள் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 'அல்ட்ரா ஒலி' அலைகள் அனுப்பப்பட்டன. இதன்பின் மருந்து செலுத்தப்பட்டது.
சோதனை முடிவில் அடங்கிய திரவம் செலுத்தப்பட்ட பகுதிகளில் செலுத்தப்பட்ட
மருந்து நன்றாக சென்றடைந்தது தெரிய வந்தது
இந்த முறையில் பல்வேறு மூளைக் கட்டிகளைக்
குணப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தொகுப்பு:செ. மனுவேந்தன்
No comments:
Post a Comment