''விஞ்ஞான விபரீதம்''&"கற்காலம்"

 

‘’விஞ்ஞான விபரீதம்"


"பொத்தானை அழுத்தி, மறுகரையில் காதலிப்போம்

ஜன்னலைத் திறந்து, புதியவானம் தொடுவோம்

உலகம் சுருங்கி இணையத்தில் இணையுதோ

விஞ்ஞான விபரீதம் தொழில்நுட்பத்தால் விளையுதோ?"

 

"நாளாந்த வாழ்வில், பலபல மாற்றங்கள்

ஒன்றாய் அனுபவிக்கிறோம் மனிதம் இழக்கிறோம்

ஆண்டாண்டு மாசுபடுத்தி சூழலை கெடுத்துவிட்டோம்

நெருக்கடி வந்தபின்பே மாற்றுவழி தேடுகிறோம் "

 

"மதிநுட்ப சிந்தனையாளனா நாம் மரத்துப்போனவனா

இன்றைய நிலையை எப்போது சிந்திப்போம்

கண்மூடித்தனமாக அழிவை நோக்கி பயணிக்கிறோம்

தொழில்நுட்பம் எம்மை முட்டாள் ஆக்குதோ!"

 

👱👱👦👧👨👩👶👼

 

"கற்காலம்"

[அந்தாதி கவிதை]


"கற்காலம் மனிதனை ஆத்திகன் ஆக்கியது

ஆக்கிய கல்லில் தெய்வத்தை படைத்தான்

படைத்த தெய்வத்தை தனக்கே தலைவனாக்கினான்

தலைவா என்று விழுந்து வணங்கினான்

வணங்கிய கடவுளுக்கு குடும்பம் அமைத்தான்

அமைத்த குடும்பத்துக்கு புராணம் சொன்னான்

சொன்ன கதைகளால் மனிதனை ஏமாற்றினான்

ஏமாற்றிய மனிதர்களை கும்பிட வைத்தான்

வைத்த கட்டளைகளை தானே பின்பற்றினான்

பின்பற்றி மீண்டும் போகிறான் கற்காலம்!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/அத்தியடி, யாழ்ப்பாணம்]


No comments:

Post a Comment