நகைச்சுவை/காமெடி/ஜோக்ஸ்
01-
அப்பா: டேய்
உலகத்திலேயே காசுதான்டா முக்கியம். காசு இல்லைன்னா எதையுமே வாங்க முடியாதுடா.
மகன்: ஏன் கடன்
வாங்கலாமே....
02-
நண்பர்01: பொண்ணு
வீட்டுக்காரங்க ஏன் கல்யாணத்தை தள்ளி தள்ளி வைத்துக் கொண்டே போறாங்கள்?
நண்பர்02: ஆயிரம்
பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை முடிக்கணும்னு பெரியவங்க சொன்னதை சீரியஸா
எடுத்துட்டாங்களாம். அதனால இன்னும் 300 பொய் சொன்ன பிறகுதான் கல்யாணமாம்.
03-
போலிஸ்: ஒவ்வொரு
நாளும் போலீஸ் ஸ்டேசனில வந்து ரெண்டு வேளையும் கையெழுத்து போட்டுவிட்டுப் போகணும், தெரியுதா?
திருடன்:
கையெழுத்து போட்டுவிட்டு நான் வழக்கம் போலத்
திருடப் போகலாமுங்களா ஐயா?
04-
வேலு:
யாரது ஒவ்வொருநாளும் ராத்திரி ரெண்டு
மணிக்கு வந்து உன்னை கூட்டிக்கிட்டு போறது?பாலு: என்
நண்பன் தான். அவனுக்கும் தூக்கத்தில்
நடக்கிற வியாதி. எனக்கும் அதே வியாதி. அதனால் தான் நான் ஒரு கம்பெனிக்காக அவனை
வந்து என்னை எழுப்ப சொல்லி இருக்கேன்.
05-
ராமு: நிலம், எங்கட மாமனார்
சீதனமாய் தந்தது. மச்சானாவை வெளிநாட்டில
இருந்து அனுப்பின காசில வீடு கட்டினது. வீட்டில இருக்கிற சாமான் எல்லாம் ,மனுசி வேலை செய்யிற
ஆபிஸில லோன் போட்டு வாங்கினது..... எப்பிடி இருக்கு என் வீடு?
சோமு:என்ன இது...
உன் வீடா?
06-
ராமு:
அவரு வியாபாரத்தில படிப்படியா உயர்ந்தவரு.
சோமு:எப்படி?
ராமு:
முதல்ல செருப்பு வியாபாரம் பண்ணி, அப்புறம் பெல்ற் வியாபாரம்
செஞ்சாரு. இப்போ தொப்பி வியாபாரம் பண்ணுறாரு.
07.
கமல்:குடி
குடியைக் கெடுக்கும் எண்டு சொல்லுறது சரியாய் போச்சு.
விமல்:எப்பிடி?
கமல்: எனக்குக்
கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னைக் குடிக்கக் கூடாது என்று சொல்லிட்டா.
08.
ராமு:நீ
சினிமா டைரக்ரர் ஆவதுக்கு முன்னே ஊரில ரைஸ் மில் வைச்சு இருந்தது பத்திரிகைக்
காரங்களுக்கு தெரிஞ்சிருக்கு போலிருக்கு.
சோமு:ஏன்
...என்ன ஆச்சு....?
எப்பவுமே
அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டு இருக்கார் எண்டு விமர்சனம் எழுதுறாங்களே....!
09.
தாதி01: அந்த பேஷண்ட் ரஜனி ரசிகர்
எண்டு நினைக்கிறன்.
தாதி 02: எப்பிடிச் சொல்லுறாய்?
தாதி 01:நான் ஊசி போட்டதும் 'என் வலி தனி வலி'எண்டு சொல்லுறாரே.
10.
அமலா:அவர்
கோயிலுக்குப் போகும்போது பாய்ந்து பாய்ந்து தான் போவார்.
விமலா:
ஏன்?
அமலா:அவர்தான் பக்திமான் ஆச்சே!
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment