சிரிக்க...சில நிமிடம்

 நகைச்சுவை-காமெடி-ஜோக்ஸ்



👳நாமராத்திரி நேரமே போவோம்


இரண்டு சர்தார்ஜி  மாணவர்கள் அமெரிக்க விண்வெளி வீரர்களைப்  பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

 

 ஒருத்தர் சொன்னாராம், ''என்னையா நிலாவிலும் இறங்குவது என பெரிய விஷயமா.... அமெரிக்காக்காரன் பெரிசா  என்னத்தைச்  சாதித்து விட்டான்? நாம சர்தார்ஜிக்கள். நாம நேரடியா சூரியன்ல போய் இறங்குவோம்.'' அப்படின்னு சொன்னாராம்.

 

 அதற்கு இரண்டாவது சாரதார்ஜி சொன்னாராம்.  ''சூரியனிலிருந்து 13 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும் போதே  நாம  பொசுங்கி விடுவோமே'' என்றாராம்.

 

 அதற்கு முதல் சர்தார்ஜி, ''இருந்துட்டு போகட்டுமே... அதுக்கு என்ன? நாம ராத்திரியில  போவோம்'' அப்படி என்று சொன்னாராம்.

 

👳ஏங்க என்னஆச்சு?

நாலு சர்தாஜிக்கள் ரயில்வே பிளாட்பாரத்தில் 'பஞ்சாப் மெயில்' என்கிற வண்டிக்காக காத்துகிட்டு இருக்கிறார்கள்.

 

 அப்போது ரயில் காலதாமதாவாக ஓடிக்கொண்டிருக்குது. அதுவந்து சேர  இன்னும்  இரண்டு மணி நேரம் ஆகும் என்று ஒரு அறிவிப்பு பண்ணுகிறார்கள்.

 

 அதுதான் இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கே, வெளியில் போய் எங்கேயாச்சும் சுத்திக்கிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரலாம் என்று நாலு பேரும் கிளம்பி வழியே போயிடுறாங்கள்.

 

 அவங்க சுத்திகிட்டு திரும்பவும் ஸ்டேசனுக்கு வந்து பார்த்தால், பஞ்சாப்மெயில் வேகம் எடுத்துக்  கிளம்பிக் கொண்டு கொண்டிருந்தது.

 

ரெயிலைப் பிடிக்க  தலைதெறிக்க ஓடின நாலு பேருல ஒருத்தர் ஓடிப்போய் ஒரு பெட்டியில் ஏறிக்கிறார்.

 

 இன்னொருத்தரும் அதே மாதிரி  கடைசிப் பெட்டியில் ஏறிக்கிறார்.

 

மத்த ரெண்டு பேரும் ஏற முடியாமல் நின்றுவிடுகிறார்கள்.

 

ரயிலில்  ஏறிய இருவரும் ஒருவரை ஒருவர் சந்திச்சதும் ,ஒருவரை ஒருவர் பார்த்துப் பயங்கரமாய் சிரிக்க ஆரம்பிச்சிடறாங்கள்.

 

 அப்ப அங்கு பக்கத்தில் இருந்தவர், ''ஏன் என்னாச்சு? ஏன் இப்படி சிரிக்கிறீங்க?'' என்று கேட்டாராம்.

 

அதற்கு ஒரு சர்தார் சொன்ன பதில் ''வழியனுப்ப வந்த நாங்கள் ரெண்டு பேருமே ஏறி விட்டோம். பஞ்சாப் மெயில் ஏறி ஊருக்கு போக வேண்டிய இரண்டு பேரும் கீழேயே நிக்கிறானுங்கள்'' என்று சொன்னாராம்.

 

👳சோக்லேட் கடையில்..

நியூயோர்க் நகரில் ஒரு சர்தாஜியும்அவருடைய பிரெண்ட் ஒரு அமெரிக்கரும், ரொம்ப பிஸியான ஒரு சோக்லேட் கடைக்குள் நுழைந்தனர்.

 

கடைக்குள் அமெரிக்கர் யாருக்கும் தெரியாமல் 3 சோக்லெட் பார்களையும் தனது உடுப்பின் பாக்கட்டுக்குள் போட்டுக்கொண்டார்.சிறிது நேரத்தின்பின் இருவரும் கடைக்கு வெளியில் வந்தனர்.

 

அமெரிக்கர் தான் களவெடுத்த 3 சோக்லேட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்துச் சர்தாஜியிடம் காட்டி '' நாம எல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி...! யாருக்கும் தெரியாம 3 சோக்லேட் பார்களையும் எடுத்துக் கொண்டு வந்திட்டேன் பார்த்தியா?'' என்று பெருமையடித்தது மட்டுமல்லாமல், ''உன்னால இத விட பெருசா ஏதாவது செய்ய முடியுமா? என்று சவால் வேறு விட்டார் சர்தாஜியிடம்.

 

விடுவாரா நம்ம சர்தாஜி....''உள்ள வா.... உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன்னு'' என்று சொல்லி அமெரிக்கரை சோக்லேட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.

 

விற்பனைக்  கவுண்டரில் இருந்தவரிடம் சென்ற சர்தார்ஜி, அவனிடம் கேட்டார், ''ஒரு மேஜிக் காட்டுறேன் பாக்குறியா''

 கடைக்காரரும் சரி என்று தலையாட்ட கவுண்டரில் இருந்து ஒரு சோக்லேட் பார் எடுத்து அதனைத்  தின்று முடித்தார். அடுத்து இன்னொரு சோக்லேட் பார் எடுத்து அதனையும்  தின்று தீர்த்தார். பிறகு மூன்றாவதாக ஒரு சோக்லேட் பார் எடுத்து அதனையும் தின்று  முடித்துவிட்டு, கவுண்டரில் இருந்த கடைக்காரரை ஏறிட்டுப் பார்த்தார்.

 

 கவுண்டரில் இருந்தவர், ''எல்லாம் சரி, இதில் மேஜிக் எங்கே இருக்கிறது?'' என்று கேட்டார்.

 

சர்தார்ஜி  அமைதியாகப்  பதிலளித்தார் ''என் பிரண்டுடைய பாக்கெட்டில் செக் பண்ணி பாரு, நான் சாப்பிட்ட மூன்று சோக்லேட் பாரும் இருக்கும்.''

பதிவு:செ.மனுவேந்தன்


No comments:

Post a Comment