[தமிழிலும் ஆங்கிலத்திலும்]
ஈனன்னா, முதன்மை சுமேரிய பெண் தெய்வம் ஆவார். இவர் உருக் நகரத்தின்
காப்பாளராகவும், பெண் தெய்வமாகவும் இருந்தார்.
இவரின் மற்றும் ஒரு பெயர் இஷ்தார் [Ishtar]
ஆகும். இவர் போர், காதல் தெய்வமும் ஆகும். ஏண் உடு அன்னா (அண்ணா?) ஒரு பெண்குரு,
எழுத்தர், பெண் கவிஞர்,
இளவரசி ஆவார்.
இவரின் தந்தை பேரரசன் சார்கோன் (Sargon)
ஆகும்.‘ உளுகள்
அண்ணா’[Lugal-Ane] எனும் ஒருவன் வஞ்சித்து
ஏண் உடு அன்னா (அண்ணா?) வை சிறையில் தள்ளினான்.
அப்பொழுது, ஈனன்னையின் அருளை
வேண்டிப் பாடிய பாடலே The
Exaltation of Inanna / ஈனன்னை சீர்பியம் [ஈனன்னா B / சீர்பியம் - சீராக இயம்பியது] ஆகும். இதன்
காலம் கி.மு 2300 ஆண்டு ஆகும். வேத
காலத்திற்கு ஓர் ஆயிரம் ஆண்டுகள் முற் பட்டதாகும் . இதன் பல வரிகளில் "ME " மெய் பற்றி கூறப் பட்டுள்ளதை முன்பு நாம்
எடுத்துக் கூறினோம். மேலும் அதன் முதல் வரியே இன்றளவு சைவத்தின் ஓர் கூறாக
இருக்கும் மெய்ஞானத்தை விளம்புகின்றது என்பதை இனி விரிவாகப் பார்ப்போம். இப்ப இதன்
முதல் இரண்டு வரிகளைப் பாருங்கள்.
1]nin-me-sar-ra u-dalla-e-a
[நின் மெய் சர்வ உள் தெள்ளிய]
Lady of all the Me's resplendent
light
2]mi-zi me-lam gur-ru
ki-aga-an-uras-a
[மை-சீ மேளம் கூறு காங்க வான் ஊரஸ்ய]
Righteous woman clothed in radiance,
beloved of heaven and earth
[Nin / நின்: உயர்ந்து நிற்றல், Me / மெய்: தத்துவம்,
சத்தி, ஆற்றல், Ul /
உள்: >
ஒள்> ஒண்< ஒளி, Dalla-e-a / தெள்ளிய: சுத்தமான, அழுக்கற்ற தூய]
இவள், அன்னையாகிய நின்னா, சர்வ மெய்களின்
தலைவி என்பதொடு தெள்ளிய ஒளியினாள் என்றும். சீர் மிகு பெண் என்பதொடு தூய
வெள்ளொலியையே அணிந்திருப்பவள் என்றும் பூவுலகாலும் வானுலகாலும் விரும்பப்
படுகின்றவள் என்றும் பொருள் படும்.
‘சர்வ மெய்களின் நின்னா’ என்பதை இன்று ‘தத்துவ
நாயகி” என்றும் ‘தெள்ளிய ஒளி’ என்பதை ‘பரஞ்சுடர்’ என்றும் ‘பராபரை”[The Divine Energy of Siva] அல்லது சிவசக்தி
என்றெல்லாம் கூறலாம்.
சீர் மிகு
மங்கையாகிய இவள் தூய வெள்ளொளியையே ஆடையாக அணிகின்றாள் என்று கூறும் போது, அவள் ஒளிப் பிரகாசமாய் அன்றே கண்களுக்கு காட்சி தந்துள்ளது
என்பது மெய்யாகிறது. இதுவே நின்னாவை அழகு மிக்கவளாக, ஆகவே உலகிலும் விண்ணிலும் உள்ள அனைவராலும் விரும்பப்
படுகின்றவளாகவும் ஆக்குகின்றது. எல்லா தத்வங்களின் நாயகியாக விளங்கும் அம்மை
பரஞ்சுடராக தூய வெள்ளொளியில் தெள்ளிய ஒளியில் சுடரும் அவளை எல்லோரும்
விரும்புகின்றார்கள் என்றால் என்ன பொருள்? இந்த ஞான
தரிசனத்தைப் பெற்று உய்ய வேண்டும் என்ற வேட்கை எல்லா உயிர்களிடமும் இருக்கின்றது
என்பதே இங்கு அம்மையார் விளம்பும் மெய்ஞானக் கருத்து ஆகும் என்கிறார் முனைவர்
கி.லோகநாதன். இதனையே சிவன் மேல் ஏற்றிக் கூறுகின்றார் ஏறக்குறைய 2800 ஆண்டுகளுக்குப் பிறகு திருமூலர் நான்காம் தந்திரத்தில், பாடல் 889 இல். மேலும் இங்கு
கொற்றவையே 'ஈனன்னா' [Inanna] எனப் படுகின்றார் என முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு பல சான்றுகளுடன் கூறுகிறார். கொற்றவை ஒரு
சுயாதீனமான தெய்வம் என்றும், பின்னர் சிவாவுடன்
இணைந்தார் / விவாகம் செய்யப்பட்டார் என்றும் கற்றறிவாளர்கள் கூறுவார்கள். அத்துடன், அஸ்கோ பர்போலா [Asco
Parpola.] என்ற அறிஞர் தமது
புத்தாகத்தில் துர்காவிற்கும் [காளிக்கும்] ஈனன்னாவிற்கும் தொடர்பு இருப்பதை
எடுத்து காட்டியுள்ளார். தமிழரின் சைவ சமயத்தில் சிவனை தத்துவன் எனவும்
அழைக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதன் பொருள் எல்லா சக்திகளினதும்
தலைவர் என்பது [Siva,as lord of all
powers] ஆகும்.
"தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும்
தானே அகர்
உகரமாய் நிற்கும்
தானே பரஞ்சுடர்
தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத்
தராதலம் தானே"
சிவன் என்றாலும்
பரஞ்சுடர் என்று தான் பொருள் படும்.‘ உள் (ஒள்) தெள்ளிய” என்பதும் அது தானே ‘சர்வ
மெய்களின் அன்னை’ என்றாலும் ‘தானே தத்துவமாய் நிற்கும்’ என்பதும் ஒன்றுதானே? அவளே எல்லா தத்துவங்களின் தலைவி எனும் போது, தானே மண்ணிலும் விண்ணிலும் நடக்கும் எல்லா தத்துவக்
கூத்துகட்கும் தராதலமாக அமைகின்றாள். [தராதலம் - தாங்குகின்ற இடம். தத்துவக்
கூத்து - தத்துவங்களை ஆக்குகின்ற கூத்து]
"துமுழி" (Dumu Zi /அல்லது "தம்முசி" அல்லது தம்முஸ் / Tammuz)) என்ற சுமேரிய தெய்வத்தின் கதை, சுமேரிய பழங்குடியியினர் மத்திய ஆசியாவிற்கு பரவி, பின் தமிழ் நாகரிகமாக மாறியதை எடுத்துக் காட்டுகிறது.
திராவிட மொழியின் ஒலிப்பு விதி [the
phonetic laws], துமுழியில் இருந்து - துமுழி, தம்முசி, தம்முஸ் - என்றெல்லாம் மாறிய சொல், தமிழ் ஆகியிருப்பதற்கான வாய்ப்புகளுக்கு இடம் கொடுக்கிறது.
அது மட்டும் அல்ல, சிவ ஆலயங்களில், இன விருத்தி ஆற்றல் மற்றும் செழிப்பு வேண்டி, அன்னை பார்வதியின் கல்யாணமும் [மீனாட்சி கல்யாணம்] இதை
திறம் பட உறுதிப் படுத்துகிறது. இந்த கல்யாணம், துமுழி - ஈனன்னா புனித கல்யாணத்துடன் ஒப்பானதாக உள்ளது.
தெலுங்கர் திராவிடரை / தமிழரை அரவாலு அல்லது இரைச்சல் போடுபவர்கள் என்று கூறுவர்.
பாபிலோனியாவில், தம்முஸ் தெய்வத்தின்
இறப்பை, அவரின் சரித்திரத்தை பாடி
ஒப்பாரி வைப்பது போன்று, இன்றும் தமிழர்களின்
செத்த வீடுகளிலும், இறந்தவரின் நற்பண்புகளை, செயல்களை குறிப்பிட்டு ஒப்பாரி வைக்கும் மரபு உண்டு. அந்த
ஒப்பாரி இரைச்சல், இப்படி அவர்கள் கூற காரணமாக இருக்கலாம்? ஆகவே சுமேரிய தெய்வம் துமுழி, தமிழர்களின் மதிப்புக் குரிய, உயரிய மூதாதையராக இருக்கலாம்? இவரே சிவன் என்ற பெயரில் மாற்றப் பட்டிருக்கலாம் என சிலர், சிவா-பார்வதி கல்யாணத்தை ஒப்பிட்டு வாதிட்டாலும், வேறு சிலர் இவரை,
தம்முஸ்
தெய்வத்தின் உருவம் "முருகனை" போலவே இருப்பதாலும், மேலும் தம்முஸ் சொல் திரிவடைந்து தமிழ் என்ற சொல்
ஏற்பட்டவாறே, முருகனை தமிழ் கடவுளாக
அழைப்பதாலும், இவர் தமிழ் கடவுள்
முருகனே என வாதிடுகின்றனர்? ஈராக்கில் இருந்து இந்தியா நோக்கி குடிபெயர்ந்த தமிழர்கள், அங்கிருந்த சிவபெருமானையும் அல்லது முருகனையும் தம் மோடு
காவிக் கொண்டு வந்து விட்டார்கள் போலும். இவர் தொடக்கத்தில் உருக் நகரத்தின்
அரசனாகும். "ஈனன்னா துமுழியின் களவொழுக்கம்" [’courtship of Inanna and Dumuzi’] என்ற கதையே பிற்பாடு கி
மு 700 முதல் கி பி 300 வரையான சங்க இலக்கியத்தின், ஆணும்,பெண்ணும் ஒருவரை யொருவர்
கண்டு, காதலித்து, மணம் புரிந்து,
இல்லறம்
நடத்துவதோடு தொடர்புடைய அகம் பாடல்களுக்கு வித்திட்டு இருக்கலாம். இங்கு இந்த
தெய்வங்கள் தலைவன் தலைவியாக மாற்றப் பட்டு இருக்கலாம்?
தமிழில்
கிறிஸ்துக்கு முற்பட்ட காலப் பகுதியில்,
473 புலவர்களால்
எழுதப்பட்ட காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளை எடுத்துரைக்கும் 2381 பாடல்களைக் கொன்ட செவ்வியல் இலக்கியமான சங்க
இலக்கியங்களில் காணப் படுகின்ற இயற்கை வழி பாட்டு முறைகளே, சங்க காலத்திற்கு முன் இருந்தோரின் அல்லது எம் முன்னோரின்
வழிபாட்டின் தொடக்க நிலையாக அமைந்திருந்தன என நாம் கருதலாம். அத்துடன் இவ் வியற்கை வழிபாட்டு முறைகள், காலந்தோறும் வளர்ச்சியடைந்து வந்துள்ளன என்பதும்
குறிப்பிடத் தக்கது. பொதுவாக அன்பின் அடிப் படையிலும், அச்சத்தின் அடிப் படையிலும் இந்த வழிபாடு ஏற் பட்டது
எனலாம். இந்த முன்னைய சங்க காலத்தில் பிறையைத் [சந்திரனை] தெய்வமாக தொழுது
வணங்கினர் என்பதை,
‘‘வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச்
செவ்வாய் வானத்
தையெனத் தோன்றி
இன்னம்
பிறந்தன்று பிறையே’’
என்று
குறுந்தொகை - 307 கூறுகிறது.
அதாவது, கன்னி மகளிர் தொழும்படி செவ்வானத்தில் திடீரென்று தோன்றிய
பிறைச் சந்திரன் என்று குறுந் தொகைப் பாடல் விளக்குகிறது. இதனால் நமது முன்னோர்கள்
இயற்கை ஆற்றலை தெய்வமாக வழி பட்டார்கள் என்பது தெளி வாகிறது. அது போல மரம், கல், நீர், நட்சத்திரம்,
கிரகங்கள் வழிபடப்
பட்டுள்ளன. மேலும், "சமய உணரை்வயும் தமிழையும்
பிரிக்க முடியாது" என்ற உண்மையை முதல் முதல் எடுத்து இயம்பியது தொல்காப்பியம்
ஆகும். தூய ஆன்மிக நெறியோடும், பக்தி உணர்வோடும்,கடவுள் வழி பாட்டு வழியை, நாட்டின் நிலப் பகுப்போடு இணைத்து, கீழ்கண்டவாறு,
காட்டுகிறது இந்த
தொல்காப்பியம்.
‘‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை
உலகமும்
வேந்தன் மேய
தீம்புனல் உலகமும்
வருணன் மேய
பெருமணல் உலகமும்"
என்ற இந்
நூற்பாவின் மூலம் கடவுளர் பற்றிய தொன்மங்களைப் பதிவு செய்கிறார். அதாவது
தொல்காப்பியர் நிலத்தைப் பற்றிக் கூறும் போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும்
இணைத்துக் கூறுகின்றார் என்பது குறிப்பிடத் தக்கது. சங்க காலப் பாடல்கள்
இயற்கையின் சித்திரங்களையே தங்கள் கவித்துவத்துக்கான ஆதாரமாகக் கொண்டவை. சங்கப்
பாடல்களில் பொதுவாக, இயற்கையே மனித மனமாக
தோற்றம் அளிக்கிறது. சங்ககாலத்து விழாக்கள் இன்றய இறைவனுடன் நேரடியாக
தொடர்புடையவையாக இல்லை, அவை இயற்கையுடன் தொடர்புடையவை ஆகும். இயற்கை
தமிழரின் முக்கியமான வழிபடு பொருள் என்பதை இன்றும் தமிழரின் மத வழிபாட்டு
முறைகளைக் கொண்டு சொல்லி விட
முடியும். நம்முடைய ஆலயங்கள் அனைத்துமே மரங்களின் அடியில் சிறிய திட்டைகளாக
இருந்திருக்கின்றன. அங்கிருந்து தான் அவை பேராலயங்களாக எழுந்தன என்பது குறிப்பிடத்
தக்கது.
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி
10 தொடரும்
An analysis of history of Tamil religion - PART :09
[In English
and Tamil]
In Sumerian literature, Inanna is the
ancient Sumerian goddess of love, procreation, and of war who later, became
identified with the Akkadian goddess Ishtar, The goddess appears in ancient
Mesopotamian myths in which she brings knowledge and culture to the city of
Uruk. Enheduanna, the daughter of Sargon of Akkad, and high priestess of the
moon god Nanna (Sîn) in her holy city of Ur, who lived 4300 hundred years ago,
depicts Inanna as disciplining mankind as a goddess of battle. She is the
world's oldest known author whose works were written in cuneiform approximately
4300 years ago. Two of her known works are hymns to the goddess Inanna, The
Exaltation of Inanna and In-nin sa-gur-ra. In her Nin-me-sara, Enheduanna calls
on Sin [Nanna], the moon god, in the Mesopotamian mythology of Akkad, Assyria
and Babylonia and Inanna, the Sumerian goddess of love, fertility, and warfare
for help because she has been dislodged from her position by a rebelling
Sumerian king, Lugal-Ane. Now I am giving below the line 1 & line 5 of the
first songs of 'The Exaltation of Inanna' in details, which says about
"ME".
In the exaltation of Inana (Inana B)
songs 1, line1, says:
nin-me-sar-ra u-dalla-e-a :
Lady of all the ME's [divine powers],
resplendent light.
Similarly, line 2 in song 1 says:
mi-zi me-lam gur-ru ki-aga-an-uras-a
:
Righteous woman clothed in radiance,
beloved of heaven and earth
Here, Inana is believed to be the
godess Korravai [Kali] by Dr K. Loganathan, Universiti Sains Malaysia (retd).
Further Scholars explain that Korravai is an independent deity, later merged /
married to Shiva and Also Parpola in his book has a chapter on Durga and her
relation to Mesopotamian goddess - Inana / Ishtar. In 'The Exaltation of Inanna' [may called "Sirbiyam"
in Tamil], we find "The Sakti as
Light" & also the exordium
begins with these arresting lines
"nin-me-sara [Lady of countless cosmic powers]," the substance of which is still retained as
part of Saiva metaphysical thinking. Even Thirmular, who lived nearly 2800
years after Enheduanna too mentioned same but instead of mother goddess, he
mentioned god Siva as below in his thirumanthiram 889 ["தானே பரஞ்சுடர்
தத்துவமாய் நிற்கும்"]:
"He is the Cosmic Light
He is Tattvas all;
He stands as Letters A and U
He is the Light Divine for Tattva Dance;
He is for Himself the Support
All.".
The Sumerian story about Tammuz /
Dumuzi records the expansion of the Sumerian tribe from Mesopotamia into
central Asia, which later become the Tamil civilization. the phonetic laws
operative in Dravidian offer no problem in deriving Tamil from dumuzi, nor the
the marriage of the Dravidian cult goddess parvati, in Siva temples, to insure,
effectively the fecundity and prosperity of the Dravidian people, which is
analogous to the holy marriage of Dumuzi and Inanna, the Sumerian
mother-goddess. The Telugu called the Dravidians aravaalu, or noisemakers. this
noise made by the Tamils, may have been ritual wailing [ஒப்பாரி], which was one of the major features of the Dumuzi
cult in Sumer. The Sumerian god Dumuzi,
may be a great ancestor of the Tamil. Dr K. Loganathan has suggested that the
word Tamil, may be an evaluate of Dumuzi, a Sumerian shepherd-god and the
consort of Inanna. Originally Tammuz / Damuzi was supposedly a king of Uruk.
Sometime after the second millennium B.C. when Sumer was sacked by Hammurabi
and taken over by the Semitic speaking people who lived initially in Akkad, a
substantial number of Sumerians came to India particularly the extreme South
and today constitute the basic population of the speakers of Tamil, Malayalam,
Kannada, Telugu, Tulu and other South Dravidian languages and were probably the
people who established the Sangam Culture around the period 700 B.C to 300 A.D
. Also, The tale of In-Anna and Dumu-zi appears to be very very ancient and
related to the celebration of sexuality. The kind of love literature
surrounding these figures might have become the sources of the Akam Literature
in Tamil with these deities replaced simply with Talaivan and Talaivi [தலைவன் & தலைவி]. There was a general conception among the early Tamil /
Dravidian people that the godly element was actively at work in places of
natural beauty, as such trees were sacred to the ancient Tamils and so,
worshipped places were situated under the tree on a little hillock. These
sacred grove has a residing deity and folklore associated with it. Generally
they are dedicated to village gods and Shaivite gods. The village sacred groves
are generally dedicated to Amman, the goddess of fertility and good health. The
next most worshipped deity is Ayyanar. Also in those earlier days, during the
Sangam periods too, Tamil people worshipped nature. For example, In Kurunthokai
307, It clearly mentioned that Tamils worshipped moon or nature as below:
"The crescent moon worshipped
by many appeared suddenly in the
red sky, like a broken conch
piece."
Kurunthokai 307
Further, from Tholkapiyam, Porul -
Akaththinai – 05, we find the five - fold division of land into Kurinchi,
Mullai, Marudham, Neydhal and Palai and a closer study of these Tinais (land
divisions) proves the fact that Sangam Tamils also closely followed the roots
of nature worship:
“Mayon [Tirumal,] over the region of
forests,
Seyon [Murugan] over the region of
hills
Ventan [Indran] over the townships
[Plain Lands for Cultivation and those region], and,
Varunan [Varunan] over the sea coast”
(Tholkapiyam. Porul-Akaththinai – 05)
We should note that since palai is a
region of waste and parched [Dried out with heat] lands, Tholkapiyam does not
explicitly mention it in the above verse, nor identify its deity "Kotravai" [Sakti], the mother goddess.
[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]
Part 10 Will follow
பி
கு / NB: இணைத்த
படங்கள் / Pictures attached: ஏண் உடு அன்னா, ஈனன்னா+ துமுழி, தம்முஸ் [துமுழி], இயற்கை வழிபாடு, & திருமூலர் / 'Enhudu Anna, In-Anna and Dumuzi, Tammuz [Dumu-zi], nature worship and
Thirmular
0 comments:
Post a Comment