[தமிழிலும் ஆங்கிலத்திலும் ]
திராவிடர்கள் மற்றும் பல பண்டைய சமூகங்கள் மத்தியில், தாய் அல்லது அன்னை தெய்வ
வழிபாடு மிகவும் தொன்மையானது. பெண்களை தாய்மையின் வடிவமாகவும், வளமையின் குறியீடாகவும்
சக்தியின் வடிவமாகவும் மக்கள் பார்த்தமையினால் தாய்த் தெய்வ வழிபாடு தோன்றியது
எனலாம். எனினும் சில பிற் கால மதங்கள் ஆண் தெய்வத்தை முதனிலைப் படுத்தி, பெண்ணின் தலைமைத்துவ
பங்கை அங்கு இல்லாமல் ஒழிக்க முயன்றாலும், இவைகளை தாண்டி இன்னும் இந்த மரபு தொடர்கிறது.
உதாரணமாக, திராவிட
பண்பாட்டில், கி.மு மூன்றாம்
மில்லென்னியத்தில்,
சுமேரிய பெண்கள், ஆலய கட்டிடத்திற்கு தமது கணிசமான பங்களித்து, சமூக நடவடிக்கைகளில் தாம்
ஈடுபட தமக்கு அங்கு சுதந்திரமான பொருளாதார
நிலையும் அரசியல் உரிமையும் இருந்தன என்பதை வெளிக் காட்டியுள்ளனர். அவர்களின்
பெயர்களுடன் 'ama'
என்ற பின்னொட்டு சேர்ந்து இருந்தன. 'ama' (அமா) என்பது தமிழில் அம்மா
[அம்மை] ஆகும். இந்த சுமேரிய காலத்தில், பெண்ணின் சரியான பெயரின் ஒரு பகுதியாக வந்த
இன்னும் ஒரு சொல் '
anna ' ஆகும். உதாரணமாக, ஏண் உடு அன்னா / ஏண் உடு அண்ணா? (Enhudu Anna / கோயில் தலைவியாக
இருப்போர் இவ்வாறு அழைக்கப்பட்டனர் என்று தெரிகின்றது.) வை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பெயரின் பொருள், பெரிதும் மதிப்பிற் குரிய தெய்வ விண் மீன் ஆகும்.
பிறகாலத்தில் தோன்றிய ஆணாதிக்கம் வருமுன்பு திருக்கோயில்களில் தலைவியாக பெண்கள்
இருப்பதற்கு எந்தத் தடையும் இருந்ததாகத் தெரியவில்லை. இதன் அடியாக பல சொற்கள்
வந்துள்ளன, பல வரலாற்று மாற்றங்களையே விரிக்கின்றன. En> ஏண்> வேண்> வேள் என்றாகி பிற்காலதில்
அரச பெருமக்கள் என்ற பொருண்மை மாற்றம் கண்டுள்ளது, சங்க இலக்கியத்தில்
‘வேண்மாள் [வேளிர்குலப் பெண்], வேண்மான் [வேளிர்குல மகன்]” எனும் சொற்களைக்
காண்கின்றோம். ‘தெய்வீகம்’ என்ற பொருளில் சுமேருத் தமிழ் ஏண்>வேண் விளங்க, பிறகாலத்தில் இது அரசர்கட்கும் உரிய ஓர் சொல்லாக பிறழ்ச்சி
கண்டுள்ளது போலும். ஆயினும் “முருக வேள், கந்த வேள்’ என்ற பெயர்களில் ‘வேள்’ தெய்வம்
என்றே விளங்குகின்றது. எது எப்படியாயினும், இந்த சுமேரிய சொல் அன்னா [anna], ஒருவளின் பெயரில் அப்படி
ஏற்படும் போது, பழந் தமிழில் aNNaa வை அல்லது இன்றைய தமிழில்
அன்னையை குறிப்பதாக இருக்கலாம் என்கிறார் முனைவர் கி.லோகநாதன்.
மேலும் சுமேரியா, தந்தை வழி ஆட்சிக்கு உட்பட முன்பு, அங்கு கண்டு எடுக்கப்
பட்ட நூல்கள் மூலம் அங்கு தாய் வழி சமயம் இருந்தது உறுதிப் படுத்தப் படுகிறது.
உதாரணமாக, லகாஷ் நகர தாய்
தெய்வம் நன்ஷே [Nanshe],
"அனாதைகளை அறிந்தவள், விதவைகளை அறிந்தவள், ஏழைக்கு நீதி வழங்குபவள், நலிந்தவர்களுக்கு
புகலிடம் கொடுப்பவள்" என அங்கு அவள் வழிபடப் பட்டாள். அத்துடன் புது வருட
தினத்தன்று அவளே எல்லா மனித இனத்திற்கும் தீர்ப்பளிப்பவர் ஆவார். அது போலவே தாய்
தெய்வம் நியாப [Niaba]
வும் போற்றப்பட்டார்.
ஆனால், செமிட்டிக் இனமாகிய அக்காத்தியர், அசிரியர் மற்றும் பபிலோனியர் சுமேரியரை வென்று மெசொப்பொத்தேமியாவை ஆளுகையில், தந்தைவழி பண்பாடு அங்கு சமயத்தை ஆட்சி செலுத்தியது. உதாரணமாக, பிந்திய சுமேரியர் காலத்தில், ஆண் தெய்வங்கள், தமது மனைவி, பெண் தெய்வங்களை விட பலமும் அதிகாரமும் வாய்ந்ததாக இருந்தது. அதே நேரத்தில், ஆண் வர்க்கத்தால்.பெண்வர்க்கமும் ஒடுக்கப்பட்டன. அங்கு கண்டு எடுக்கப் பட்ட, நெறிப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் இதை நிரூபிக்கிறது. சுமேரியாவில் தான், நாம் உண்மையில் முதல் முறையாக, முழுமுதற் கடவுள் என்ற தகுதியில் இருந்து, குறைந்த தகுதிக்கும் பங்கிற்கும் பெண் அல்லது தாய் தெய்வம், ஆண் தெய்வத்தால் தள்ளப்படுவதை காண்கிறோம். இதன் தொடர்டபாக, பெண்களின் நிலையும் சமூகத்தில் பின்தள்ளப்பட்டதுடன், பெண்களுக்கு எதிரான வன்முறையும் அதிகரித்தன. உதாரணமாக, கி மு 2000 ஆண்டு அளவில், தாய் தெய்வம் நுன்லில் [Nunlil] கற்பழிக்கப்படுகிறாள். மேலும் பெண் தெய்வமும் பெண் மத குருவும் பல அதிகாரங்களைக் தொடர்ந்து வைத்திருந்தாலும், கி மு 450 ஆண்டு அளவில், பாபிலோனிய நகர ஆலயங்கள், ஆண் பூசாரிகளின் அதிகார வரம்பின் கீழ், தேவதாசிகள் மூலம், விபச்சார இடமாக மாற்றப்பட்டன. தேவதாசிகள் இன்பம் - அளிப்பவர்களாகவும், அதே வேளை, பக்தர்ககளுக்கும் தெய்வத்திற்கும் இடையில் இடைத்தரகர்களாகவும் தமது பணியை மேற்கொண்டனர். மேலும் ஆலய விலைமாதுகளின் வருமானம், ஆண் மதகுரு நிர்வகிக்க்கும் இந்த ஆலயத்தின் வருவாயையும் கூட்டியது. பிராமண புராணங்களில் கற்பழிப்பையும் மற்றும் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்று சொல்லப்படும் சமஸ்கிரத சொல் 'தேவதாசி' முறை பெரும்பாலும் தென் இந்தியாவில் ஆறாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முதலே இருந்து காணப்படுகிறது. இரண்டாம் நூற்றாண்டு சிலப்பதிகார மாதவியை ஒரு உதாரணமாக கூறலாம்.
சைவ மதம் பிராமண இந்து மதத்திற்குள் உள் வாங்கப் பட்ட பின், வட மொழியில் எழுதப் பட்ட
ஸ்கந்த புராணத்தின் சில பகுதிகளின் தமிழ் மொழி பெயர்ப்பே கச்சியப்ப சிவாசாரியாரின்
கந்த புராணம் ஆகும். இந் நூல் பெண்ணின் பங்களிப்பு இன்றி பிறப்பு உருவாவதாகக்
காட்டுகிறது. அதாவது பார்வதிதேவியின் துணை இல்லாமலேயே சிவன் தன் நெற்றிக்
கண்ணிலிருந்து வெளிப் பட்ட தீப் பொறிகளின் மூலமாக முருகனைப் பெற்றெடுப்பதாக கதை
பின்னப் பட்டுள்ளது. படைப்பு என்பது பெண்ணுக்குரியது என்பதனை மறுதலிக்கும் வகையில்
பிரம்மன் படைப்புக் கடவுளாக கட்டமைக்கப் பட்டுள்ளார். இத்தகைய உருவாக்கங்கள்
பிறப்பினை மேற்கொள்ளும் செயலால் உயர்ந்தவளாகப் பார்க்கப் பட்ட பெண்ணுக்கு எதிரான
உருவாக்கங்களாகவே காண முடியும். இது மட்டு மன்றி சிவன், சக்தி பற்றிய கதையாடல்கள்
ஆண், பெண் இருவருக்கு
மிடையே ஏற் பட்ட அதிகாரப் போராட்டத்தின் விளைவே ஆகும். தில்லையில் சிவனுக்கும்
சக்திக்கும் ஏற் பட்ட நாட்டியப் போட்டியில் சிவனே வெற்றி கொள்கிறார். இந்தப்
போட்டிகளுக்குப் பிறகே ஏதோ ஒரு சமரசப் போக்கு ஏற்பட்டுள்ளது, சிவன் தன் ஒரு பகுதியாக
பார்வதியை ஏற்றுக் கொள்கிறார். எனினும் புராணங்கள் பொதுவாக ஆண் அதிகாரம் வலுப்
பெற்ற நிலையினைக் காட்டும் கதைகளாக வெளிப் பட்டு நிற்கின்றன. அவை இன்று தமிழரின்
புராணமாக திணிக்கப் பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.
சைவ சமயம் இந்த வியப்புக் குரிய உலகத்தை பெண்ணாக, சிவனின் சரி பாதியாக, பார்க்கிறது. இதுவே
சிவனும், சக்தியும் சரி
பாதியாக காட்டும்,
"அர்த்த நாரீஸ்வரர்" உருவமாகும். அபிராமி அந்தாதி -
பாடல் 18 இதை அழகாக
"வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும்" என
உரைக்கிறது. அதாவது,
உன்னால் கவர்ந்து கொண்ட இடப் பாகத்தைக் கொண்ட இறைவராம்
சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும் என்று
கூறுகிறது. இதுவே,
சைவ மதத்தின் பெண்ணுரிமைக் கோட் பாட்டிற்கு உதாரணமாக
எடுத்துக் காட்டப் படுகின்றது.
"சிவனின்றி சக்தி இல்லை. சக்தி இன்றி சிவன் இல்லை." என்ற தத்துவமும் அப்போது தோன்றியது. அதாவது
இங்கு சக்தி புவனேஸ்வரியாக பார்க்கப்படுகிறது. அதன் பொருள் உலகின் தாய் [Goddess of earth / World Mother]. எனினும் சிவனை
(சக்தியையும்) அர்த்த நாரீஸ்வரராக வழி பட்ட சைவர்கள் இன்று பொதுவாக இல்லை. சுமார்
மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய அந்தக் கால கட்டம் மாறி விட்டது. இன்றுள்ள
சைவர்கள், பிராமண - இந்து
மதத்தின் பிரிவாகவும் கீழ்ப்படிந்து நடப்பதால் நிலைமை மாறி விட்டது. ஈனன்னா [In-anna / ஈன்அன்னா /
ஈன்-அன்னை] வின் உட்குறிப்பாக இந்த கருத்தே உள்ளது என்பது குறிப் பிடத் தக்கது.
அதாவது தமிழில் ஈன்-அன்னை, என்றால் எல்லா வெளிப்பாடுகளையும் பிறப்பிக்கும் /
தோற்றுவிக்கும் பெண் ஆகும். தமிழில் ஈன் அல்லது ஈனல், ஈனுதல், ஈன்றல், என்பது பிள்ளைபெறல்
என்பதை குறிக்கும்.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி 09 தொடரும்...
பி கு / NB: இணைத்த படங்கள் /
Pictures
attached: அன்னை தெய்வம், அர்த்த நாரீஸ்வரர், ஏண் உடு அன்னா, ஈனன்னா+ துமுழி, தம்முஸ் [துமுழி], இயற்கை வழிபாடு, மெசொப்பொத்தேமியா
தேவதாசிகள் / Mother
Goddess, Ardhanarishvara, 'Enhudu Anna, In-Anna and Dumuzi, Tammuz [Dumu-zi],
nature worship and Mesopotamian temple prostitutes
‘’An analysis of history of Tamil religion’’ –(Part:08)
[In English and Tamil]
The worship of Mother Goddess is very ancient not only among
the Dravidians but also many people in the world and continues to this day
despite many attempts by some of later religions to wipe it out and along with
that the place of leadership of women in religious culture. For example, in the
third millennium B.C itself, we find in Sumeria women contributing
significantly to temple building showing that they had independent financial
means as well as political rights to participate in social activities of the
community. Their names include the suffix
'ama' (Tamil: amma: woman). One
of the words coming down from this earlier period and as part of the proper
name is "anna" as in the name
of 'Enhudu Anna' that literally means the Divine star (Tamil: udu / உடு: star) of the heavens (anna; Tamil:
vaanam). However it may be possible that the Sumeria: anna as it occurs in
proper names is the archaic form of Tamil: aNNaa (or Tamil: annai: mother) a
name still retained. Further, the oldest texts recovered from Sumeria, well
before Sumer’s shift to androcracy, For example, tell us that the Goddess
Nanshe of Lagash was worshiped as “She
who knows the orphan, knows the widow, seeks justice for the poor and shelter
for the weak” On New Year’s Day it was
She who judged all of humankind. Similarly, the Goddess Niaba was known as “The Learned of the Holy Chambers, She who
teaches the Decrees. But, after the Semitic speaking peoples, Akkadians,
followed by Assyrians took over Sumer, androcratic cultures found ruled their
religion. For example, by the late Sumerian period, male gods held higher power
over consort goddesses; Simultaneously, man was emerging more powerful over
woman, and their written codification of laws exemplified this. It is in Sumer
that we can literally trace the shift from the female deity being supreme to
being over-run and forced to a lesser role by the male gods and the
corresponding lowering in the status of women and violence against women as a
result. By the 2nd millennium B.C, the Goddess Nunlil was raped and Although
the Goddess and her human priestesses continued to hold a lot of power (power
shared with male gods), by about 450 B.C.
in the city of Babylon, the temple, now under jurisdiction of male
priests, had become a place of prostitution with the temple prostitutes. They
worked both as skilled pleasure-givers and as intermediaries between customers
or worshippers and temple deities. Further, the prostitutes’ earnings added
greatly to the temple’s revenues managed by male priests. In Brahmanic purana
too we see raping incidents and also We find Devadasi system at least from
sixth centuries from south India. The typical example is Mathavi from second
century Silappathikaram.
After Shaivism was integrated into the Vedic / Brahmanic
Hinduism, Sanskrit Skanda Purana was translated as Kantha Puranam in Tamil by
Kachiappa Sivacharyar. Here. Lord Siva created a son called Skanda for himself
without the aid of his consort, Parvati and further we found Lord Brahma as a
creator. All of these neglect the female involvement in the birth and indicate
the male domination over female. Further, Shiva and Shakthi's dance competition
story, tell us that, Once a war of words was triggered between Goddess Shakthi
& Lord Shiva on who among them was a superior, They decided on a simple
dance competition, wherein each had to replicate the other’s steps. The ensuing
competition was aggressive and finally as a masterstroke, Shiva raised his leg
and touched his ears. But, Shakthi had to give up as it was not possible by her
and as such she lost the competition. Out of anger, she burnt herself to ashes.
This again clearly shows the male dominant in Hindu Shaivism, However, as a
compromise, Lord Shiva brought her back to life and agreed that she was an
integral part of the functioning in the form of “Ardhanareeswara”; This form
has two halves – one half of Shiva & the other half of Shakthi; Generally,
Hindu mythology or puranic stories reveals the patriarchy, the idea that men
are superior to women and these were now given to Tamil Shaivites as their own
religious stories!
Saivism saw the phenomenal world as the Woman, the equal half
of Siva and which is retained in the notion of Siva as Ardhanari, Being as Man
- Woman, the Androgynous reality. For example, Abhirami Anthaathi [அபிராமி அந்தாதி]
/ poem 18, beautifully
says: "Your form as Ardhanareeswara, where you and my Father Siva are in
one form, that form's beauty". Thus
Sakti was seen as Puvaaneswari, the World Mother which is also implicit in the
notion of In-anna, that is. Tamil: iin annai [ஈன்-அன்னை]: the Woman who gives birth to
everything manifest (Tamil: iin [ஈன்]: to give birth to).Thus implicit in this notion is also the
biological activity of giving birth to by a process where the man conjugates
with the woman and hence being as the source of both the death and rebirth of
all.
[Kandiah
Thillaivinayagalingam,Athiady, Jaffna]
Part 09 Will follow
No comments:
Post a Comment