(ஒரு அலசல்)
[தமிழிலும் ஆ
ங்கிலத்திலும்]
தாம் வாழும் நிலமும் நகரமும், அரண்மனையும் ஆலயமும், வயலும் பண்ணையும், மனிதர்களால் பராமரித்து
மேற்பார்வை செய்து,
வழிகாட்டி கட்டுப் படுத்தப் படுவதை சுமேரிய தத்துவ
அறிஞர்கள் அல்லது இறையியலாளர்கள் கண்டார்கள். இந்த மனிதர்களின் கவனமும், முயற்சியும் இல்லை
என்றால் நிலமும் நகரமும், புற்கள் கூட காய்ந்து பாலைவனம் போன்று பாழாகி விடும்.
அரண்மனையும் ஆலயமும் நொறுங்கி விழுந்து அழிவுறும். வயலும் பண்ணையும் பாலைவனமாகவும்
அல்லது காடாகவும் மாறி விடும் என்பதை அனுபவம் மூலம் உணர்ந்தார்கள். எனவே, நிட்சியமாக, அவ்வாறே, பலகோடி அண்டங்களையும்
அதன் பல தரப்பட்ட,
எண்ணிறந்த, அபூர்வமான, ஆச்சரியமான நிகழ்வுகளை
பராமரித்து மேற்பார்வை செய்து, வழிகாட்டி, கட்டுப் படுத்தி, இடைவிடாது இயக்கிக்
கொண்டு இருக்கும் சக்தியும் அல்லது கடவுளும் மனித வடிவமாகவே இருக்க வேண்டும் என
முடிவெடுத்தனர். தாம் வாழும், தமக்கு நன்றாக தெரிந்த; தமது மனித சமுகத்தில்
இருந்து, தமக்கு தெரியாத
ஒன்றை அறிவதற்கு அல்லது அது நிகழ்வதற்கான நியாயங்களை ஊகிப்பதற்கு ஒரு சைகையாக
அல்லது குறிப்பாக தமது முன் அனுபவத்தை பாவித்தனர். எனவே கடவுளை, மனிதப்பண் பேற்ற ஒருவர், ஆனால் தெய்வீகமாணவர் என
அழைத்தனர். ஆகையால்,
சுமேரியரின் கடவுள் பொதுவாக மனித உருவமாகவும் மனித பண்புகளை
பேணுபவராகவும் இருந்தார்.
சுமேரிய கடவுள்கள் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள், கல்யாணம் செய்கிறார்கள்,
தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் சண்டை இடுகிறார்கள்.
சுமேரிய கடவுள் சிரஞ்சீவியாகவும் [அழிவற்றவராகவும்] மிக பலமுள்ளவராக இருந்த போதிலும், அவர்கள் காயம் படக்
கூடியவர்களாகவும் கொல்லப் படக் கூடியவர்களாகவும் தோன்றுகிறார்கள். மேலும் ஒவ்வொரு
கடவுளும் தெய்வீக அதிகாரத்தின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு
தொகுப்புடன் [a
set of rules and regulations of divine authority] தம்மை இணைத்துக்
கொண்ட்டிருக்கிறார்கள். இந்த தெய்வீக உத்தரவு அல்லது கட்டளை "ME" என அழைக்கப் படுகிறது.
இது ஒரு புனித வானுலகினதும் [இறைவனினதும்] பூமியினதும் [மனிதனினதும்] கோட்பாடு
ஆகும். இந்த கோட்பாடு ”ME" , "மீ" என உச்சரிக்கப்படாது. me> மெய் [‘Mai’] எனவே உச்சரிக்கப் படுகிறது. "மெய்" என்பதற்கு சத்தி அல்லது
ஆற்றல் என்றும் பொருளும் உண்டு. இந்த "மெய்" மிகவும் சமூக முக்கியம்
உடையது. ஒவ்வொரு சுமேரிய சமுக வாழ்வின் தன்மையும் இதனால் கட்டுப் பாட்டுக்கு
உட்படுத்தப் படுகிறது அல்லது சீராக்கப் படுகிறது. உதாரணமாக, ரொட்டி சுடும் வெதுப்பகம்
பற்றிய "மெய்" யை, அதாவது நினைவு குறிப்பை ரொட்டி சுடுபவன் பெற, ஆலயத்திற்கு செல்ல
வேண்டும். ஏனென்றால் நாகரிகத்தின் கண்டு பிடிப்பாளரான என்கி கடவுளின் [god Enki] பாதுகாப்பில்
அங்கு, ஆலயத்தில் இதன்
ஆவண மூலப் படிவம் வைக்கப் பட்டிருப்பதால் ஆகும். இந்த குறிப்பிட்ட "மெய்", எப்படி, எப்பொழுது, எங்கே அந்த ரொட்டி சுடும்
தொழிலை செய்வது என்பதற்கான அறிவுறுத்தலை விரிவாக கொண்டிருக்கும். அப்படியே
சுமேரியரின் ஒவ்வொரு வாழ்வின் அம்சமும் அதற்கான "மெய்"யில்
குறிக்கப்பட்டு இருக்கும். "வழிபாடு", "அரசு", "பாலியல் உறவு"
... [Worship, state, sex, ...] இப்படி எல்லா
சுமேரியன் வாழ்வின் கூறுகளும் அங்கு இதே போல் கையாளப்படுகிறது. அவர்களின் புராணக்
கதை கடவுள் மார்கள் பல "மெய்" களை தம்வசம் பெற்றுக்கொள்ள ஒருவருடன் ஒருவர் போர் நடத்தினார்கள் அல்லது ஒருவரிடம் இருந்து
ஒருவர் அதை களவாடினார்கள் என கூறுகிறது. இந்த மெய்யை தெய்வீக உத்தரவு அல்லது
தெய்வீக சக்தி என கூறலாம். இந்த "மெய்" , ஒவ்வொரு கடவுளும் அகிலம்
முழுவதையும் ஒரு திட்டத்தின் படி செயல் படவைப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த
திட்டம் என்லில் [god
Enlil] என்ற கடவுளால் அவர்களுக்கு கொடுக்கப் பட்டது ஆகும்.
சுமேரிய பலகை XV,XVI "எரிதுவில் [Eridu] இருந்து எரக்கிற்கு [Erech / Uruk] நாகரிகத்தின் கலை
மாற்றம் ["The
Transfer of the Arts of civilization from Eridu to Erech [Uruk] "]" என்ற தலைப்பில், அது எமக்கு அற்புதமான
புராணக்கதை ஒன்றை தருகிறது. சொர்க்கத்தின் இராணி ஈனன்னாவும் [Inanna, the queen of heaven] அறிவுக் கடவுள்
என்கியும் சம்மந்தப்பட்ட ஒரு கவர்ச்சி கதை இதுவாகும். இந்த என்கியே, சுமேரியாவின் கலாச்சார
சாதனைகளை கட்டுப் படுத்தும் ஆற்றலுடைய
நூற்றுக்கு மேற்பட்ட
"மெய்" யின் பாதுகாவலரும் ஆவார். எரக்கின் காவல் தெய்வமும்
சொர்க்கத்தின் இராணியுமான ஈனன்னா, தனது நகரத்தின் நலத்தையும் செழிப்பையும்
அதிகரிக்க விரும்பினாள். அப்படி செய்வதால், தனது நகரத்தை சுமேரிய நாகரிகத்தின்
மையமாக்கவும், அதனால் தனது
பதவியையும் புகழையும் உயர்த்த முடியும் எனவும் நம்பினாள். எனவே அவள், சுமேரிய பண்பாட்டின்
பண்டைய, முன்னைய மையமான, எரிது நகருக்கு போக
தீர்மானித்தாள். அங்கே தான் என்கி தெய்வம், அப்சு [watery abyss, the Abzu] என்று அழைக்கப்படும், நன்னீரால் சூழ்ந்த
படுகுழியில் அல்லது ஆழ்கடலில் வாழ்கிறார். இந்த என்கியே நாகரிகத்திற்கு அடிப் படையான
எல்லா மெய்களையும் தனது கட்டுப் பாட்டில் பாது காத்து வைத்திருக்கிறார். எனவே
ஈனன்னா அதை எப்படியாவது, நியாயமான வழி முறையாகவோ அல்லது முறையற்ற ஏமாற்று வழி
முறையாகவோ பெற்று,
தனது அன்புக் குரிய எரிது நகருக்கு கொண்டு வந்தால், அந்த நகரத்தினது மகிமை
கட்டாயம் வரையற்று இருக்கும், அதே வேளை, அவளது சொந்த விருப்பமும் கட்டாயம் நிறைவேறும். அவள் எரிதுவில் உள்ள அப்சுவை
அண்மிக்கும் போது,
அவளின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட என்கி, அவளை வரவேற்று, அவளை உபசரிக்கும்
பொருட்டு, ஒரு பெரு
விருந்து அளித்தார். குடிபோதையில், அவளின் மயக்கத்தில், தன்னை மறந்த என்கி, உணர்ச்சி பொங்கக்
உரக்கக் கத்தினார்: "கள்ளம் கபடம் அற்ற தூய ஈனன்னாவிற்கு, எனது மகளுக்கு, நான் எனது அதிகாரம் மூலம், அன்பளிப்பு செய்கிறேன்
...".அப்படி ஒவ்வொரு முறையும் கூறி கூறி, ஒவ்வொரு முறையும் பல
மெய்களை, மொத்தமாக சுமேரிய
நாகரிகத்தின் பண்பாட்டிற்கு அடிப்படையாக தேவையான கலை, கைவினை, மற்றும் பண்புகளை
உள்ளடக்கிய தொண்ணூற்று நான்கு மெய்களை அல்லது தெய்வீக கட்டளைகளை வழங்கினார்.
என்றாலும் சுயநினைவு திரும்பியதும், கொடுத்த எல்லா மெய்களையும் திருப்பி பெற
முயன்றார். எப்படியாயினும் அவள் பாதுகாப்பாக எல்லா மெய்களுடனும் தனது நகரம், எரக்கிற்கு திரும்பினாள்.
மேலும், ஏறக் குறைய
கி.மு. 2200 வாக்கில்
சார்கோன் (Sargon)
எனும் பேரசனின் புதல்வியாக விளங்கிய "ஏண் உடு அன்னா" [Enhedu anna] எனப்படும் ஓர்
அம்மையார் எழுதிய,
ஈனன்னாவை போற்றி துதி பாடும், ஈனன்னை சீர்பியத்தில்
[ஈனன்னா B][exaltation
of Inana (Inana B)], பாடல் ஒன்றில் பல வரிகளில் "ME " மெய் பற்றி கூறப்
பட்டுள்ளது.
"அனைத்து சக்தி
அன்னை, தெள்ளிய ஒளி
வடிவினள்
மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது;
விண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப்படுகின்றவள்.
ஆண் எனப்படும் மகாதேவனின் நங்கை; சிகையில் பெரும் பெரும் அணிகளை சூட்டியவள்.
மெய்யான அழகோடு விளங்குபவள்; உயர்ந்த பதவிக்கு தகுந்தவள்.
ஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாக) அணிபவள்; [மெய்: சக்தி)]
என் அன்னையே, பெரும் பெரும்
மெய்களை சிரசில் கட்டுபவள் நீயேதான்
அனைத்து மெய்களையும் எடுத்து உடம்பில் அணிகளாய் அணிகின்றாய்:
மெய்களை திரட்டி மெய்யான உன் கவசமாக நெஞ்சில் தைத்துக் கொள்கின்றாய்"
இது தான் அந்த குறிப்பிட்ட முழுப் பாடலாகும். இதை வாசிக்கும் போதே
சைவத்திற்கும் சுமேரியன் சமயத்திற்கும் உள்ள தொடர்பு உங்களுக்கு புரிந்து
இருக்கும்!
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி 08 தொடரும்
"An
analysis of history of Tamil religion’’ – PART07
[In English and Tamil]
Sumerian theologians
took their cue from human society as they knew it and reasoned from the known
to the unknown. They noted that lands and cities, and palaces and temples,
fields and farms - in short, all imaginable institutions and enterprises - are
tended and supervised, guided and controlled by living human beings; without
them lands and cities became desolate, temples and palaces crumbled, fields and
farms turned to desert and wilderness. Surely, therefore, the cosmos and all
its manifold phenomena must also be tended and supervised, guided and
controlled by living beings in human form. Hence they conceived of the gods in
anthropomorphic terms - the gods were like humans but divine. Generally, the gods of Sumer were
human in form and maintained human traits. They ate, drank, married, and fought
amongst each other. Even though the gods were immortal and all-powerful, it was
apparent that they could be hurt and even killed.
Each Sumerian god adhered to a set of rules and regulations of divine authority known as "ME". It is “the holy laws of heaven and earth. "ME" is not ‘Me’ - it is pronounced ‘Mai’. They were of utmost social importance and every aspect of Sumerian social life was regulated by them. E.g. the baker was required to go to the temple. where the scripts, were placed in the custody of the god Enki, inventor of civilization and obtain a "ME" (a meme, or more properly a set of memes) for bakery. That particular ME included instruction on how, when, where to perform his craft. Worship, state, sex, every aspect of Sumerian life were treated similarly. The gods of their mythology waged wars in order to conquer and possess the most "ME", stealing them from each other. It has often been translated as “divine ordinance,” or “divine power,” The "ME" ensured that each god was able to keep the cosmos functioning according to the plans handed down to them by Enlil.
PLATES XV AND XVI , "The Transfer of the Arts of civilization from Eridu to Erech [Uruk] ", Give us a magnificent myth with its particularly charming story involves Inanna, the queen of heaven, and Enki, the lord of wisdom & keeper of over one hundred divine decrees governing all cultural achievements of Sumerian civilization. Inanna, queen of heaven, and tutelary goddess of Erech, is anxious to increase the welfare and prosperity of her city, to make it the centre of Sumerian civilization, and thus to exalt her own name and fame. She therefore decides to go to Eridu, the ancient and hoary seat of Sumerian culture where Enki, the Lord of Wisdom, who "knows the very heart of the gods," dwells in his watery abyss, the Abzu. For Enki has under his charge all the divine decrees that are fundamental to civilization. And if she can obtain them, by fair means or foul, and bring them to her beloved city Erech, its glory and her own will indeed be unsurpassed. As she approaches the Abzu of Eridu, Enki, no doubt taken in by her charms, Welcome her and Inanna and Enki sit down to feast and banquet. After their hearts had become happy with drink, Enki exclaims: "O name of My power, O name of my power, To the pure Inanna, my daughter, I shall present . . .." & He presents, several at a time, a total of ninety-four 'Me' or divine decrees, covering arts, crafts, and attributes which are the basis of the culture pattern of Sumerian civilization. Enki recovers his wits and tries to recover the 'Me' from her, but she arrives safely in Erech with them. Further, In exaltation of Inanna (Inana B), written by Enhedu anna, the Sargon daughter, We find "ME" in many lines as below:
"Lady of all the
divine powers,
resplendent light,
righteous woman clothed in radiance,
beloved of An and
Urac! Mistress of heaven,
with the great
pectoral jewels,
who loves the good
headdress befitting the office of en priestess,
who has seized all
seven of its divine powers! My lady,
you are the guardian
of the great divine powers!
You have taken up the
divine powers,
you have hung the
divine powers from your hand.
You have gathered up
the divine powers,
you have clasped the
divine powers to your breast."
This is a full poem as
mentioned in ancient Sumerian plate. When you read it, you will understand the
connection it has to Shaivism and the Sumerian era.
[Kandiah
Thillaivinayagalingam,Athiady, Jaffna]
Part 08
Will follow
{பி கு / NB: படங்கள்
என்கி + என்லில், ஈனன்னா, எரிது, எரக்
[உருக்] & கி மு 2600 ஆண்டு
பெண்,
ஆண் சுமேரிய இறை வழிபாட்டாளர்கள்./ Pictures of Enki &
Enlil, Inanna, Eridu, Erech [Uruk] and Statue of a female & male Sumerian
worshipers [2600 BC]}
No comments:
Post a Comment