"அத்தமக அஞ்சுகமே!

"அத்தமக அஞ்சுகமே !

ஆசையோடு கொஞ்சணுமே !

அருகில் வருவாயோ

ஆனந்தம் கொட்டுவாயோ

அன்பு பொழிவாயோ

ஆதரவு தருவாயோ

அச்சம் விட்டு

ஆடி பாடுவாயோ?"

  

"இன்பம் அனுபவித்து

ஈகையும் செய்வோம்

இல்லறம் அமைத்து

ஈடணம் சேர்ப்போம்

இதயம் இணைந்து

ஈன்றாள் போற்றுவோம்

இணக்கம் சொல்லாயோ

ஈடில்லா அன்பே!" 

 

"உதட்டழகு கருங்குயிலே

ஊடல் வேண்டாம்டி

உருட்டி முழிக்காதே

ஊமையாய் இருக்காதே

உரிமையுடன் அணைப்பேன்

ஊரார் வாழ்த்த

உண்மையாய்ச் சொல்லுகிறேன்

ஊன்றுகோல் நீயே!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

No comments:

Post a Comment