சிரிக்க.... சில நிமிடம்....

நகைச்சுவை-காமெடி-ஜோக்ஸ் 


01::

மாப்பிள்ளை:மாமா,உங்க வீட்டோட மாப்பிள்ளையா வர எனக்கு தன்மானம் இடம் கொடுக்காது.

மாமா:சரி,என்ன செய்யலாம்?

மாப்பிள்ளை:உங்க வீட்டை விற்று பணத்தை என்கிட்டை குடுத்திடுங்க.அந்தப் பணத்தில் வேற வீடு வாங்கிக் குடி போயிடலாம்.

மாமா:!!!

 

02::

தொண்டர்01: ''தலைவர், சலூன் போகும்போதெல்லாம் எதுக்கு அனாவசியமாய்த் தொண்டர்களையும் கூட்டிட்டுப் போறார்.''

தொண்டர்02: ''அதுவா!நான் நினைக்கிறன், முடி வெட்டுறத்துக்கு முதல்ல தோளிலை துண்டு போர்த்துவிடுவான்கள் அல்லவா, அந்த நேரத்தில கை தட்டுறத்திற்காக இருக்கும்.

 

03::

நீதிபதி:பார்த்தால், ஒரு அப்பாவியாய் நீ தெரியுறே!! நீயா பிக்பாக்கெட்? நம்பவே முடியலையே?

குற்றவாளி:உங்களை மாதிரியுங்க சார் , எல்லோருமே என்கிட்ட ஏமாந்துர்றாங்கள்.

 

04::

ராணி:தலையில இருந்து முடி கொட்டுறதிற்கு காரணம் என்ன என்று தெரியுமா?

வேணி:தெரியலையே...என்னது?

ராணி: தலையில முடி இருக்கிறதுதான் காரணம்.

 

05::

டொக்டர்: உங்க மனைவி  உங்ககிடட  ரொம்ப அன்பு போலிருக்கே?

நோயாளியின் கணவர்: எப்படிச் சொல்லுறீங்க?

டொக்டர்:ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது ,தன்னுடைய இதயத்துக்குள்ள இருக்கிற தன் கணவருக்குக் காயம் படாமச் செய்யச் சொன்னாரே!

 

06::

பாபு: கவுண்டர் தன் காரை, ஏன் ரிவர்ஸ்சிலயே  ஓட்டியிட்டுப் போறார்?

கோபு:காரை விக்கும்போது கி.மீ குறைவா இருந்தா ,விலை கூட விக்கலாமாம். அதான்...!

 

07::

செந்தில்:டொக்டர் ,எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வந்துகிடடே இருக்கு.

டொக்டர் கவுண்டன்: நீங்க சொல்லவே வேண்டாம்.என்கிட்ட நீங்க வந்ததை வைச்சே புரிஞ்சுக்க முடியும்.

 

08::

நண்பர் 1:இதோ தர்றேன் தானே. அவசரப்படாதீங்க! எல்லாருக்கும் உண்டு பயப்படாதீங்க! அப்பிடிச் சொல்லிச் சொல்லி, 100, 200 ரூபாய்களை அள்ளி அள்ளி வீசுறாரே..!!! அவர் என்ன பெரிய கோடிஸ்வரரா??

நண்பர் 2: அட,நீ வேற! ஆளை விடட வாங்கிடமுடியாதெண்டு, வாங்கின கடனை திருப்பி வாங்க ஆபிசுக்கே  வந்தவங்களை 100,200 ஐக் கொடுத்து சமாளிச்சுக்கிட்டு இருக்கிறார்.

 

09::

சீதா: அந்த சலூன் கடைக்காரரை ஏன் கைது செய்தாங்க?

வேதா:முடி வெட்டப் போனவனை ,கடைசியாய் தலையைச்  சீவி விடுற என்று சொல்லிப்போட்டு கழுத்தோட தலையையே சீவிட்டாராம்.

 

10::

கோபு: 20 வருஷத்துக்கு முன்னாடி நீங்க எழுதின கதையைப் படிச்சதும், நீங்களா இப்படி எழுதினீங்க, என்று ஆச்சரியமாக இருந்தது.

பாபு: பரவாயில்லை,உங்களுக்காவது ஆச்சரியமாக இருந்தது. எனக்குச் சந்தேகமாக  இருந்தது.

 

11::

ரமணன்:என்னது!! நம்ம பத்திரிகை ஆபிஸிலேந்து திருடிக்கிட்டுப் போனவன் , திருப்பிப் பார்சல் அனுப்பியிருக்கானா?

குமணன்:அதை ஏன் கேட்க்கிறீங்க? எங்க பத்திரிகைக்கு வந்த கதையெல்லாம் படு கண்றாவியா இருக்குதுன்னு திருப்பி அனுப்பிவிட்டான் சண்டாளன்.

 

12::

மனநல ஆசிரியர்:தம்பி,அங்க பாரு! பெடியன்களெல்லாம் பந்தை உருட்டி அங்கையும்,இங்கையும் ஓடி விளையாடுறாங்கள். நீ மட்டும் தனியா ஒரே இடத்தில நிக்கலாமா சொல்லு.

மாணவன்: ஐயோ, நான்தான் கோல் கீப்பர் சேர்!!

 

13::

செந்தில்:சீக்கிரமே பணத்தைப் பெருக்க ஒரு வழி சொல்லுங்கண்ணை

கவுண்டன்:ம், சொல்லுறன்.கிடக்கிற பணத்தை முற்றத்தில போட்டுட்டு, ஒரு விளக்குமாறு எடுத்து சீக்கிரமே பெருக்கு. பெருக்குப்படும்.

 

14::

கோபு: ஒடடப்பந்தயத்தில தங்க மெடல் வாங்கினவனை செக் பண்ணி ஊக்கமருந்து உண்டதென்று கண்டுபிடிச்சுத் தடை செஞ்சாங்கள், சரி பார்வையாளராய் வந்தவர்களையும் ஏன் செக் பண்ணுறங்கள்.

பாபு: தூங்கி வழிஞ்ச இவங்கள் ஏதாவது தூக்க மருந்து சாப்பிட்டு இருப்பாங்களோன்னுதான்.

 

15::

ஆசிரியர்:பாடசாலைச் சட்டையில லோகோ எதுவும் போட்டிருக்கக் கூடாது என்று ஒரு ரூல்ஸ் இருக்கு தெரியுமெல்லா?

மாணவி: யூஸ் குடிக்கேக்கை சட்டையில சிந்திடுச்சி சேர்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment