"உச்சிவெயில் அடிக்கையிலே"
"உச்சி வெயில்
அடிக்கை யிலே
விற கொடிக்கப்
போற பெண்ணே!
வேகும் வெயிலுக்
குள்ளே போறியே
கால் உனக்குப்
பொசுக்க லையோ?"
"வெற்றிலை
பாக்குப் போட்டு கிட்டுச்
வளை குலுங்கப்
போற பொண்ணே!
திருட்டுத் தனம்
பண்ணா தேடி
ஒருத் தரையும்
வையா தேடி?"
"குறுங் கழுத்து
தளுக்குக் காரி
கோள் குண்டணி
சொல்லா தேடி?
இடுப்புச்
சிறுத்த அழகு மயிலே
இறுமாப்பு நீ
பேசா தேடி?"
"பச்சை மரங்கள்
பழுத்துப் போச்சு
இலைகள் எல்லாம்
உதிர்ந்து போச்சு!
சுள்ளித் தடிகள்
விழுந்து கிடக்குது
பொறுக்கி எடுத்து
தலையில் வைக்கவா?"
"சிவத்த
பாவாடை சித்தம் கலக்குதடி
வெள்ளைச் சூரியன்
கண்ணை குத்துதடி!
அனல் வெயில் உடலை
வாட்டுதடி
அருகில் வந்தால்
உள்ளம் குளிருமடி?"
🧱🧱🧱🧱🧱🧱
வெள்ளாமக் காட்டுக்குள்ள வெக்கப்பட்டு ஓடும்புள்ள"
"வெள்ளாமக்
காட்டுக்குள்ள வெக்கப்பட்டு ஓடும்புள்ள
காலு பொசுக்கலையோ
கற்றாழை குத்தலையோ?
வெருவல் தவ்விட
மச்சான் வந்தாலென்ன
காதோரம் உன்னிடம்
காதல் சொன்னாலென்ன?
வெள்ளிவீதியார் பாடல்
ஞாபகம் இல்லையோ?"
"விரிச்சநெற்றிக்
காரியே வீறாப்பு பேசாதேடி
வெந்த
புண்ணிலே எண்ணெய் ஊற்றாதேயடி?
வளைகுலுங்கப் என்
நெஞ்சும் குலுங்குதடி
இடுப்புச்
சிறுத்தவளே இறுக்கி அணைக்கவாடி?
மச்சான் மடியிலே
அலுப்பு போக்கவாடி?"
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்/-அத்தியடி,
யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment