சர்தார்ஜி ஜோக்ஸ் நகைச்சுவை
👳நான் சாகப் போவதில்லை....
ஒரு சாரதாஜி
விமானத்தில் போய்க்கொண்டிருந்தார். திடீரென விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக
கேப்டனிடம் இருந்து அறிவிப்பு வந்தது.
எல்லா பயணிகளும் பதறி அடித்துப் பயத்தோடு, அவரவர் கடவுளை
பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
சாரதாஜி மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல், ஜாலியாகப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில்
இருந்த பயணி சர்தார்ஜியை பார்த்து, ''என்னங்க எல்லாரும் சாகப் போகிறோமே.....
உங்களுக்கு உயிர் மேல் பயமே இல்லையா?'' என்று கேட்டார்.
''நான் சாகப்
போவதில்லை.... நம்ம பல்வீர் சிங் தான்
சாகப் போகிறார்'' என்றார் சாரதாஜி.
பக்கத்து சீட்றுக்காரருக்கு ஒன்றுமே
புரியவில்லை. ''எப்படி?... என்ன சொல்லுறீங்க
நீங்கள்'' என்று கேட்டார்.
''உண்மையிலேயே இது
பல்வீர் சிங்கினது டிக்கெட். அதில் நான் பயணம் செய்கிறேன் அவ்வளவுதான்! என்று
சிரித்துக் கொண்டார் சர்தார்ஜி.
👳வாஷ்
பேசின்
ஒரு சர்தார்ஜி
ஹோட்டலுக்கு சாப்பிட போனார்.
சாப்பிட்டு முடிந்ததும் கை கழுவுற இடத்துக்கு
போனார். அங்கே கையை கழுவாமல் வோஷ் பேசினை
கழுவ ஆரம்பித்துவிட்டார்
ஹோட்டல் முதலாளி ஓடி வந்து ''சர்தார்ஜி, சர்தார்ஜி, எதுக்குங்க
வோஷ் பேசினை கழுவிக்கொண்டு இருக்கீங்க'' என்று
கேட்டாரார்.
அதற்கு சர்தார்ஜி பதில் சொன்னாரார். ''என்னை என்ன
கேணையன் எண்டு நினைச்சியா?... நீதானெய்யா இந்த
இடத்திலே -வோஷ் பேசின்- எழுதிப் போர்டும்
மாட்டி வைச்சிருக்கிறாய்!!’’ அப்படிச் சொன்னார்.
👳யூரின்
ரெஸ்ட் [urine test]
இரண்டு சர்தார்ஜிகள்
ஒரு பரிசோதனை கூடத்து வாசலில் வாசலில் உட்கார்ந்து இருந்தார்களாம்.
அதிலே ஒரு
சர்தார்ஜி அழுதுகொண்டு இருந்தாராம்.
இரண்டாவது
சர்தார்ஜி அதைப்பார்த்து
''ஏம்பா அழுவுறே'' என்று
கேட்டாராம்.
அதற்கு முதல் சர்தார்ஜி சொன்னாராம், ''நான்
பிளட்-டெஸ்ட்டு(blood-test) க்கு வந்தேன்.
அவர்கள் விரல் நுனியை கீறி ரத்தம்
எடுத்தார்கள். அதுதான் பயங்கரமாக வலிக்குது. அதுதான் அழகுறேன்'' என்று
கூறினாராம்.
இதைக் கேட்டு
இரண்டாவது சர்தார்ஜி ஓவென்று சத்தம்
போட்டு அலறி அழ ஆரம்பிச்சிட்டாராம்.
முதலாமவர் கேட்டாராம்,''நீ ஏனப்பா ,இப்பிடி
அழுகிறாய்?''
அதற்கு இரண்டாவது சர்தார்ஜி சொன்னாராம். ''நீயாச்சும் பிளட்
டெஸ்ட் தான் எடுக்க வந்தாய். நான் யூரின் டெஸ்ட் எடுக்க வந்தேன். அதுதான் நினைக்க
நடுக்கமாய் இருக்கு'' என்றாராம்.
👳தற்கொலை
ஒரு சர்தார்ஜி
வாழ்க்கை வெறுத்துப் போய் ,தற்கொலை செய்யும்
எண்ணத்தில் ஆற்றில் குதிக்கப் போனாராம்.
ஆற்றில் இறங்கிய
அவர், ஆற்றில் ஓடிக்கொண்டிருந்த மீனைப் பார்த்து ''நான்தான் சாகப்போகிறேன்
,நீயாவது பிழைத்துக்கொள்'' என்று கூறியவாறு, மீனைத்
தூக்கிவந்து ஆற்றுக்கு வெளியில் போட்டாராம்.
வெய்ட்டான
(weight)படிப்பு
சர்தார்(கவலையுடன்):
வெய்ட்டான படிப்புப் படிச்சும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கலையே....!
நண்பர்:அப்படி
என்ன படிப்புப் படிச்சீங்க?
சர்தார்:LKG(Lகிலோ),UKG(Uகிலோ), SKG(Sகிலோ) எல்லாம் படிச்சு
இருக்கோமல்லா...
👳சரியா
தூங்க முடியவில்லை
சர்தார்: நேற்று
ரயிலில் சரியாத் தூங்க முடியவில்லை.
நண்பர்:ஏன்?
சர்தார்: மேல்
பர்த் (UPPER BERTH) தான் கிடைத்தது.
நண்பர்: கீழ்
உள்ளவருடன் பேசி,இடத்தை
மாற்றிக் கொண்டிருக்கலாமே?
சர்தார்:செஞ்சிருக்கலாம்தான்.
ஆனால் கீழே யாரும் இல்லையே!!
👳தொகுப்பு: செ.மனுவேந்தன்/S.Manuventhan
No comments:
Post a Comment